எல்லாரும் காலேஜ் பஸ்ஸில் ஏறி, அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இருந்த மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சென்றோம். 5 நிமிட தூரம் தான் என்றாலும், அதற்குள் பஸ்ஸில் ஆட்டம் பாட்டம் ஆரம்பமாகி விட்டது.
அங்கு, ஹாஸ்பிடல் இன் பேஷண்ட்ஸுக்குக் கொடுக்க, பழங்களும், பிரட் பாக்கிட்களும், காலேஜ் சார்பாக எடுத்துக் கொண்டோம். ஆனா, பாருங்க, ஒரு இன் பேஷண்ட் கூட அன்று இல்லை. நாங்க வருவோம்னு பயந்து போய், எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டாங்க போலிருக்குது:)
அங்கு தலைமை டாக்டர் ரமணி அவர்கள் சிறிது நேரம் உரையாற்ற, பிறகு இரண்டு பெண் மருத்துவர்கள், எங்கள் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்கள்.
அடுத்ததாக, அங்கிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரம் வரை எய்ட்ஸ் ஒழிப்புப் பேரணி போனோம். கையில் சின்னச் சின்னதாக பேனர் ரெடி பண்ணி எடுத்து வந்திருந்தார்கள்.
ஆட்களே இல்லாத இடத்தில், ‘நிலா’ வெளிச்சத்தில் சூப்பர் பேரணி! ஒழிப்போம் ஒழிப்போம், எய்ட்ஸை ஒழிப்போம்....காப்போம் காப்போம் வருமுன் காப்போம்.... என்று கோஷங்கள் வேறு!
அப்படியே ஜாலியா போயிட்டு, பஸ் ஏற வந்தப்ப, மேடம் என்கிட்ட, ‘உங்களுக்கு இது வித்தியாசமான அனுபவமா இருக்குமே’னு கேட்க, ‘ஆமாங்க மேடம், ரொம்ப ஜாலியா இருந்துச்சு’ அப்படீனு சொல்லிட்டே, விழுந்தேன் கீழே!
கால் மடங்கியவுடன், சுதாரித்து எழுந்து, ஒரு வழியா காலேஜ் வந்தாச்சு! கைவசம் இருந்த ஐயோடக்ஸ் தடவிக் கொண்டேன்.
அடுத்ததா பாட்டுப் போட்டி. ஒரு சிறு சலங்கை வைத்த மேளத்தைத் தட்டிக் கொண்டே நானே எழுதிப் பாடிய பாட்டு:
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!!
மலைகளில் பிறந்து தென்றலில் தவழும் பண்ணைப் பாடுவோம்!
அலைகளின் ஒளியினில் நிலவிடும் சுதியுடன் இணைந்து பாடுவோம்!!
மலைகளில் பிறந்து தென்றலில் தவழும் பண்ணைப் பாடுவோம்!
அலைகளின் ஒளியினில் நிலவிடும் சுதியுடன் இணைந்து பாடுவோம்!!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!!
கல்விப்பாதையில் காவியம் படைத்திடும் கலையைப் பாடுவோம்!
கற்பித்தல் பணியினைப் பாங்காய் கற்கும் அழகைப் பாடுவோம்!!
கல்விப்பாதையில் காவியம் படைத்திடும் கலையைப் பாடுவோம்!
கற்பித்தல் பணியினைப் பாங்காய் கற்கும் அழகைப் பாடுவோம்!!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!!
வைகறைப் பொழுதின் உதய ராகத்தில் உருகிப் பாடுவோம்!
புதுப் புது நினைவுகள் மலர்ந்திடும் வேளையில் கூடிப் பாடுவோம்!!
வைகறைப் பொழுதின் உதய ராகத்தில் உருகிப் பாடுவோம்!
புதுப் புது நினைவுகள் மலர்ந்திடும் வேளையில் கூடிப் பாடுவோம்!!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!!
புதுமைப் பெண்களைப் பாரினில் படைத்திடும் பொறுப்பைப் பாடுவோம்!
ஒளியாய் சோதி வீசும் சாரா புகழைப் பாடுவோம்!!
புதுமைப் பெண்களைப் பாரினில் படைத்திடும் பொறுப்பைப் பாடுவோம்!
ஒளியாய் சோதி வீசும் சாரா புகழைப் பாடுவோம்!!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!!
வானவில்லின் வர்ண ஜாலத்தில் திளைத்துப் பாடுவோம்!
துளியாய் சிதறும் மழையின் சிலிர்ப்பில் மகிழ்ந்து பாடுவோம்!!
வானவில்லின் வர்ண ஜாலத்தில் திளைத்துப் பாடுவோம்!
துளியாய் சிதறும் மழையின் சிலிர்ப்பில் மகிழ்ந்து பாடுவோம்!!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்!!
சோதரியாக பழகிடும் எங்கள் நட்பைப் பாடுவோம்
சீரிய பணியினில் சாதனை படைத்திடும் கனவைப் பாடுவோம்
சோதரியாக பழகிடும் எங்கள் நட்பைப் பாடுவோம்
சீரிய பணியினில் சாதனை படைத்திடும் கனவைப் பாடுவோம்
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்
வானில் திரியும் பறவைகள் போல இசைந்து பாடுவோம்
மானுட சாதியில் வேற்றுமை இல்லை ஒன்றாய் பாடுவோம்
வானில் திரியும் பறவைகள் போல இசைந்து பாடுவோம்
மானுட சாதியில் வேற்றுமை இல்லை ஒன்றாய் பாடுவோம்
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்
வாருங்கள் வாருங்கள் சேர்ந்து பாடுவோம்
-சுமஜ்லா.
பாட்டுப் போட்டி முடிந்தபின், பட்டிமன்றம் ஆரம்பம். தலைப்பு, செல்போன் உபயோகம், மாணவர்களுக்கு ஆதாயமா? ஆபத்தா? என் கட்சி ஆதாயம்! ஆனா, தீர்ப்பு ஆபத்து! நாங்க எப்பவுமே வீக்கா இருக்கற கட்சி பக்கம் தான சேருவோம்???
இதெல்லாம் முடியறதுக்குள்ள, கால் நல்ல வலி எடுத்து விட்டது...!
அடுத்த போட்டி, பலூன் ஊதி உடைத்தல்! ஆளுக்கு ரெண்டு பலூன் ஊதி உடைச்சிட்டு, ஓடிப் போய் எதிர் சுவரைத் தொடணும்....! அதான் எனக்கு கால் வலியாச்சே, நான் எங்கங்க ஓடறது? கலந்துக்க முடியலைனு ஒரே கவலை!
மாலை டூவீலர் ஓட்டிட்டு வரவரவே வலி ஜாஸ்த்தியாயிருச்சு! இன்னும் ஒரு நாள் கேம்ப் இருக்கு! அதுமில்லாம, பரிசு விவரம் வேற அப்பத்தான் தெரியும்...!
டாக்டர்கிட்ட போனா, டெண்டான்ஸ்ல அடி பலமா பட்டிருக்கு. எலாஸ்டிக் பேண்டேஜ் போட்டுக்குங்க, ஒரு வாரத்துக்கு நடக்கக் கூடாது. நடந்தா, அப்புறம் மாவுக் கட்டு தான் போடணும் என்று சொன்னார்.
ஆனாலும், நொண்டிக்கிட்டே, கேம்ப் கடைசி நாளுக்குப் போயிட்டேன்ல! அது அடுத்த பதிவில்....!
-சுமஜ்லா.
Tweet | ||||
10 comments:
வானில் திரியும் பறவைகள் போல இசைந்து பாடுவோம்
மானுட சாதியில் வேற்றுமை இல்லை ஒன்றாய் பாடுவோம்]]
ஆரோக்கியம் :)
உங்க பாட்டு அருமை
காலேஜ் கலக்கல்ஸ் எல்லாம் சூப்பர்.
பாடல் வரிகள் அருமை, காலை முதலில் கவனிங்க.
சந்தோசம்..
உடல் நலன்தான் முக்கியம்.காலை முதலில் கவனிங்க.
http://asainayagi.blogspot.com/2010/03/blog-post_4572.html
வாய்ப்புக் கிடைத்தால் சென்று வாருங்கள்.
அழகான பகிர்வு அக்கா...
எனக்கு பேரணி போறது ரெம்ப பிடிக்கும் அனால் அது ஸ்கூலோட முடிஞ்சுபோச்சு....
பாட்டு........ சூப்பர்.....
'பாடி வாழ்க்கை'யில் நல்லா
பாடி இருக்கீங்க!
//http://asainayagi.blogspot.com/2010/03/blog-post_4572.html
வாய்ப்புக் கிடைத்தால் சென்று வாருங்கள்.//
ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் தன் ப்ளாகை, கூகுள் ரீடர் போல பயன்படுத்துகிறார். ஈமெயில் சப்ஸ்க்ரிப்ஷனில், தன்னுடைய மெயில் போஸ்டிங் ஐடியை இணைத்திருக்கிறார். இதைப் பயன்படுத்தி நான் அவர் ப்ளாகில் பதிவுகள் போட முடியும். அல்லது, அவரை அன்சப்ஸ்க்ரைப் பண்ண முடியும். அவருடைய மனைவிக்கோ காதலிக்கோ என்னுடைய போஸ்டிங்கை ரீ டைரக்ட் செய்கிறார் என்று விட்டு விட்டேன்.
நான் எங்கங்க ஓடறது? கலந்துக்க முடியலைனு ஒரே கவலை!
கலந்துக்கிட்டா உங்களுக்குத்தான் பரிசு.
Post a Comment