காலங்காத்தால நல்ல தலைவலி..., முதல் நாள் ராத்திரி கண்ணு முழிச்சுப் படிச்சதுனால வந்த வினையோ என்னவோ, தைலத்தை எடுத்துத் தடவிக்கிட்டே உட்கார்ந்து இருந்தேன்...!
செகண்ட் பீரியட் ஒன்னும் முடியல. எங்க இங்கிலீஷ் சார்கிட்ட சொல்லிட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைத்தேன். சார் வேற டெஸ்ட்னு சொல்லியிருந்தார். டெஸ்ட்ல இருந்து நான் தப்பிக்கிறேன்னு பிள்ளைங்களுக்குப் பொறாமை...!
ரொம்ப முடியலைனு சொல்லிட்டு போய் கடைசி பெஞ்சில படுத்திட்டேன். பாவிப் புள்ளைங்க, “சார் சுஹைனாக்கா வேற படுத்திட்டாங்க (மொத்த இங்கிலீஷ் மேஜர் ஸ்டூடண்ட்ஸே 8 பேர் தான்)... அதனால, நாளைக்கு எல்லாரும் ஒன்னா டெஸ்ட் எழுதறோம், இன்னிக்கு நாங்க ரெக்கார்டு எழுதறோம்”னு பர்மிஷன் வாங்கிட்டு எழுதிட்டிருந்தாங்க...
சார் போயிட்டார். எல்லாரும், மாற்றி மாற்றி, என்னை எழுப்பி, எதாவது ஒன்னு கேட்டுட்டே இருந்தாங்க... அப்ப, சிந்துன்னு ஒரு பொண்ணு, “அக்கா, உங்க பேனாவுல இருந்து கொஞ்சம் இங்க் ஊத்திக்கிட்டுமா அக்கா?”னு கேட்டா!
“இல்ல சிந்து என் பேனா ஹீரோ பேனா...டேங்க் சின்னது...அதனால, நீ வேணா என் பேக்ல இருந்து, என் பேனாவ எடுத்து எழுதிக்கோ”னு நான் சொல்லிட்டு தூங்கிட்டேன்.
பீரியட் முடிஞ்சு பெல் அடிச்சாச்சு.
சிந்து என் பேனாவுல எழுதிட்டு இருந்தா...
“சிந்து, பேனாவக் கொடுப்பா”
“அக்கா, நா எழுதணும்க்கா”
பாரு, என் பேனாவக் கேட்டா தரமாட்டேங்குறா...அட என்கிட்ட ஒன்னு தான் இருக்கு, நான் எழுத என்ன செய்றது?
“கொடு சிந்து...பீரியட் முடிஞ்சுதுல்ல, இப்ப மேம் வந்திருவாங்க...அப்புறமா எழுதறப்போ நீ வாங்கிக்க” எழுதிக் கொண்டிருந்த பேனாவை விடாப்பிடியாக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.
மேத்ஸ் சார், என்கிட்ட எக்ஸலில் ஒரு சின்ன சாஃப்ட்வேர், டெஸ்ட் அண்ட் மெஸர்மெண்ட் ரெக்கார்டுக்காக செய்துட்டு வரச் சொல்லி இருந்தார். என் பென் ட்ரைவில் இருந்த அந்த ஃபைலை, அவருடைய சிஸ்டத்தில் காப்பி செய்துவிட்டு, அதை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கிவிட்டு, நான் மீண்டும் வகுப்பறைக்கு வந்தேன்.
சிந்து என்னைப் பார்த்து முறைத்தபடியே, “அக்கா, எனக்கு பேனா வேணும்க்கா...நான் எழுதணும்” என்றாள்.
எனக்கோ கோபமே வந்து விட்டது. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “சிந்து இந்தா வேணும்னா ரெண்டு சொட்டு இங்க் வாங்கிக்க, பேனா இல்லாம நான் எப்படி நோட்ஸ் எடுக்கறது?” என்றேன்.
“அக்கா....அது என் பேனாக்கா....நான் உங்க பேனாவ எடுக்கவே இல்லக்கா, தோ இவகிட்ட அப்பவே இங்க் வாங்கிட்டேன்” என்று சொல்ல,
அசடு வழிந்தேன்...!
ஒரே மாதிரியான ரெண்டு பேனாவால் வந்த குழப்பம். என் பர்ஸில் சமத்தாகத் தூங்கிக் கொண்டிருந்த என் பேனாவை எடுத்து சிந்துகிட்ட காண்பித்து, “பாருடா என்னோடதும் இதே மாதிரி...அதான், நீ இதத்தான் எடுத்து எழுதறியோனு நினைச்சிட்டேன். சாரிடா...இந்தா உன்னோட பேனா” என்று கொடுத்தேன்...!
இன்னிக்கு கவர்மெண்ட் லீவு...!சோ, டெஸ்ட் நாளைக்கு...!
இந்த நிகழ்ச்சியால், எனக்கு பாடி வாழ்க்கை முதல் நாளன்று வந்த HRD Trainer ஜாஹிர் உசேன் அவர்கள் சொன்ன குட்டிக் கதை நினைவுக்கு வந்தது...!
இரு ஆண்கள், ப்ளாட்பார்மில் அருகருகே நின்று கொண்டு ட்ரைனுக்காகக் காத்திருகிறார்கள்...! அப்போ, முதல் நபர் பையிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட, இரண்டாமவர் ஒரு பிஸ்கட் கேட்டிருக்கிறார். என்னடா, ஆள் பார்க்க டீசண்டாக இருக்கிறார், இப்படி கேட்டு வாங்கி சாப்பிடறாரே என்று நினைத்தபடியே இவர் பிஸ்கட் கொடுக்க, ரயில் வந்து விட்டது.
ரயிலிலும் அவர் பக்கத்திலேயே அமர, இவருக்கு மனதிற்குள், ‘இவன் இன்னும் என்னென்ன கேட்பானோ’ என்ற எண்ணங்கள்.
கையில் மீதி இருந்த பிஸ்கட் பாக்கிட்டில், “சார், ஒரு பிஸ்கட் கொடுங்கள்” என்று அவர் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட, இவரோ தொல்லை பொறுக்க மாட்டாமல், எழுந்து, கம்பார்ட்மெண்ட் வாசலருகே வந்து நின்று கொண்டு எல்லா பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டு, வந்து தன் இருக்கையில் அமர்கிறார்.
“சே...இந்த விவரங்கெட்ட மனுசனுக்கு விவஸ்தையே இல்லை” என்று மனதிற்குள் திட்டியபடியே, தண்ணீர் பாட்டில் எடுக்க தன் பையைத் திறந்தவருக்கு அதிர்ச்சி!
இவருடைய பிஸ்கட் பாக்கிட் அங்கேயே இருக்கிறது...! இவர் தவறுதலாக அவருடைய பையில் இருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டிருக்கிறார்....! ஆனால், அவரோ பெருந்தன்மையாக எதுவும் சொல்லாமல், பரிதாபமாக இவரிடம் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டிருக்கிறார். இப்போ சொல்லுங்க யாரு ரொம்ப டீசண்ட்னு???
கதையெல்லாம் ஓக்கே தான்...! இங்கே கதையடிச்சிட்டு இருந்தா...நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் டெஸ்ட்டில் நான் அம்பேல் தான்...! விடு....ஜூட்....!
-சுமஜ்லா...
Tweet | ||||
23 comments:
உங்க அனுபவம் சரி! ஆனா அந்தக்கதை ஒரு பிஸ்கட் விளம்பரமில்லையோ?
ஒரு படத்தில் வடிவேலு கூல்டிரிங்ஸ் குடித்த(அடிவாங்கிய ) கதையும் இப்படித்தான். நல்ல தமாசு..
பேனா...பேனா...பேனா...
ஹையோ....
எனக்கு வடிவேலு கூல் ட்ரிங்க்ஸ் காமெடி தான் நியாபகத்துக்கு வருது...
அந்த எக்ஸெல்லையும் இணைச்சிருக்கலாமுல்ல :)
நீங்கள் கேட்டது ரயில். என் இடுகை விமானம். இயன்றால் பாருங்கள்
சுஹைனா சில நேரம் இப்படி தான் ஆகிவிடும்,நாம் ஒன்று நினைத்து செயல்பட அது வேறு விதமாகி தர்மசங்கடமாகிவிடும்.நல்ல பகிர்வு.
//இப்போ சொல்லுங்க யாரு ரொம்ப டீசண்ட்னு???//
கதை(?)யும் ரொம்ப டீஸண்ட்-ஆ இருந்தது.
நல்ல காமெடி அக்கா...
//அந்த எக்ஸெல்லையும் இணைச்சிருக்கலாமுல்ல :)//
எக்ஸல் ஃபைலை எப்படி இணைப்பது? google.doc யிலா?
நான் படிப்பு முடிந்ததும், பி.எட் படிக்கும் மாணவிகளுக்கு வழிகாட்டும் ஒரு ப்ளாக் திறக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அப்போ, அதைக் கொடுப்பேன்...!
என் இடுகையின் லிங்க் திறக்கவில்லையாதலால்
Link for
நடந்ததும் நினைத்ததும் ஓ! உஃப்!!
http://sultangulam.blogspot.com/2008/04/blog-post_3377.html
கதையை படித்து விட்டு சிரிப்பு வந்து விட்டது. இருந்தாலும் ஒரு பேனாவிற்காக நீங்கள் இப்படி பண்ணியிருக்க கூடாது. சிந்து ரொம்பவும் பாவம். அவரை கொஞ்சம் போல்டா இருக்க சொல்லுங்கள்.
நன்றாக சிரித்துவிட்டேன்,நயமாக விவரித்துள்ளீர்கள்.
சுஹைனா உங்களுக்கு ஒரு அவார்ட் த்ந்து இருக்கிறேன்,என் ப்ளாக்கில் பெற்றுக்கொள்ளவும்.
#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.
########
ஆக கதை அப்டி போச்சா.... ஹ ஹ.... பாவங்க சிந்து.... ஒரு பச்சபுள்ளைய இப்டி பரிதவிக்க விட்டுட்டீங்களே.... :-)... நாளைக்கு போறப்ப குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு போங்க மறக்காம... ஹி ஹி... எல்லாம் ஒரு ஆறுதலுக்காக தான்...
//நான் படிப்பு முடிந்ததும், பி.எட் படிக்கும் மாணவிகளுக்கு வழிகாட்டும் ஒரு ப்ளாக் திறக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அப்போ, அதைக் கொடுப்பேன்...!//
ரொம்ப நல்ல முயற்சி. வாழ்த்துகக்ள்.
நீங்க பிஸியா இருப்பீங்க, நேரம் கிடைக்கும் போது வந்து இந்த பதிவை படிகக்வும்.
http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_31.html
பிஸ்கேட் , பேனா, இது போல் நிறைய கதைகள் உள்ளது.
சில நேரம், அப்படி தான்
என் பையன் இரண்டறை வய்து இருக்கும்.
நான் துபாய் வந்த புதிதில் என் அண்ணி எனக்கு நான்கு சேலைகள் வாஙகி வைத்து இருந்தார் கள் அதில் ஒன்று அவர்களுடையது போலவே.
என பையனுக்கு என் டிரெஸ் யார் எடுத்தாலும் போட்டாலும் பிடிக்காது., கை விரல் சூப்பும் பழக்கம் இருந்தது. அதோடு சேலையில் பிளீட்ஸ் எப்போதும் தொங்கிக்கொண்டு இருப்பான்.
அண்ணி அவங்க சேலைய உடுத்தி இருந்தார்கள்,எங்கு போனாலும்
இவன் அவஙக் பின்னாடியே போனான் .
என்னடா என் பின்னாடியே வர ந்னு கேட்டதற்கு இது எங்க மம்மி சேலை கொடுங்க நிங்க போட =க்கூடாது என்றான்,
பழைய ஞாபகம்..
nalla pathivu.. neenga innum padikareengala. valthugal
LK
http://vezham.co.cc
சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html
கதை நல்லா இருந்ததுங்க
உண்மையாலுமேவா
இதுல இருந்து என்ன தெரியுதுனா, எதுவும் அவசரமா செய்ய கூடாது. எதுவும் பொறுமையா செய்யணும். இல்லேனா இந்த மாதிரி தர்ம சங்கடம் தான் ஏற்படும்.
நல்ல காமெடி தான் போங்க.... (அது சரி டெஸ்ட் எப்படி எழுதினீங்க.... உங்க பேப்பர்லயா பக்கத்துக்கு பேப்பர்லயா.....LOL ...)
Post a Comment