இவ்வாறு சந்தோஷமும் சங்கீதமும் நிறைந்திருந்த வேளையில், ஒரு நாள் லேசாக மழை தூற ஆரம்பித்தது. விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், அவ்வப்போது மட்டும் சுண்டெலி தலை காட்டிக் கொண்டிருந்தது. அதனால், அதை எதிர்பார்த்திருந்த அதன் நண்பர்களும் ஏமாற்றமடைந்து தாம் வருவதைக் குறைத்துக் கொண்டன. பின்பு தூறல், சாரலோடு கலந்த பெருமழையாக மாறியது. அதனால், சுண்டெலி போய், தன் பொந்தில் பதுங்கிக் கொண்டது. அதன் நண்பர்களும் வேறு நண்பர்களைத் தேடி போய் விட்டன.
ஒரு வழியாக மழை ஓய்ந்து விட்டது. கிழக்கு வெளுத்து விட்டது. வெளிச்சம் தெரிய ஆரம்பித்தவுடன், சுண்டெலி தன் இடத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால், அங்கு யாருமே இல்லை. ஆனாலும் அது மீண்டும் தன் விளையாட்டை ஆரம்பித்தது. எப்படியும் தன் நண்பர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை அதற்கு!
கதை அவ்வளவு தான்...நெருங்கிய நண்பர்களுக்கு அர்த்தம் புரிந்திருக்கும். புரியாதவர்கள் தலைப்பை ஒரு முறை மீண்டும் படிக்கவும்!
(படிப்பு எல்லாம் நல்லபடியாக முடிந்து ஸ்....அப்பாடா என்று இருக்கிறது. நேற்று தான் (22.6.10) ப்ராக்டிகல்ஸ் (வைவா) முடிந்தது.... அதுவரை பயங்கர அலைச்சல், டென்ஷன்...ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாத நிலைமை! பதிவுலகில் என் மறுபிரவேசம் இன்று...இனி வழக்கம் போல வருவேன்...எழுத நிறைய விஷயங்கள் மலை போல குவிந்திருக்கின்றன....அதோடு, நண்பர்களின் வலைப்பூக்களுக்கும் சென்று பார்க்கணும்...படிக்கணும்...ரசிக்கணும்...! என்னை மறவாமல் அவ்வப்போது வந்து பின்னூட்டமிட்ட(நான் உருப்படியாக எதுவும் எழுதாத போதும்...)நண்பர்களுக்கு நன்றி!!!)
-சுமஜ்லா.
Tweet | ||||
17 comments:
ஓ படிப்பு முடிந்துவிட்டதா..நல்லது.. எழுதுங்கள் ..
மீண்டு(ம்) வந்து தொடர வாழ்த்துக்கள் தோழி
:-)
வலைப்பூ உலகில் நடந்துமுடிந்த சண்டையை நாசூக்காக சொல்லி இருக்கிறீர்கள்.
அழகான பதிவு.
தொடர்ந்து பதிவுகளை தாருங்கள்.
வாழ்த்துக்கள்.
//உருப்படியாக எதுவும் எழுதாத போதும்...)//
என்னதான் நீங்கள் இப்படி சொன்னாலும்
இரசிக்கும் நாங்கள் தொடர்ந்து வந்து
கொண்டேயிருப்போம், இன்ஷா அல்லாஹ்.
தொடர்க...
படிப்பு நல்ல படியாக முடிந்ததற்கும் வாழ்த்துகள்!!!
congrats suhaina!!
மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி...( படிப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள் )
தோழர் தோழிகளைப் பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது! மீண்டும் வந்தது உண்மையில் மீண்டு வந்தாற் போலத்தான்!
//வலைப்பூ உலகில் நடந்துமுடிந்த சண்டையை நாசூக்காக சொல்லி இருக்கிறீர்கள்.//
ஐய்யையோ...நான் அப்படியெதுவும் சொல்லலையே??? எனக்கே தெரியாம இதுல உள்குத்து கண்டுபிடிக்கிறீங்களே?!
//( படிப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள் )//
ரிசல்ட் வந்தா கண்டிப்பா உங்களோட பகிர்ந்துக்கிறேன்.
இப்போதுதான் உங்க தளத்தை பார்வையிட்டேன்.. பின் தொடர்ந்தும் விட்டேன்.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்,,
ஹாய்...சுண்டெலி அக்கா சலாம் நலமா??அதிரடி ஆரம்பம்...
வாழ்த்துக்கள்...பரிட்சைல பாஸ் ஆயடுவீங்கதானே...எப்பாடு பட்டாவது...தம்பி மானத்த காப்பாத்திடுங்க ஓகே வா..
நன்றி ரியாஸ்!
//ஹாய்...சுண்டெலி அக்கா சலாம் நலமா??அதிரடி ஆரம்பம்...
வாழ்த்துக்கள்...பரிட்சைல பாஸ் ஆயடுவீங்கதானே...எப்பாடு பட்டாவது...தம்பி மானத்த காப்பாத்திடுங்க ஓகே வா..//
அட, அட, அட! நலம் தான் தம்பி...பரிச்சையிலா, ம் பார்ப்போம்! சந்தோஷம் இவ்ளோ பேர் உடனே வந்ததற்கு!
சுஹைனா மீண்டும் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.இந்த அர்த்தமுள்ள பதிவு அருமை.
ஹை வந்தாச்சா! மழை வந்தாலும் குடை பிடிச்சாவது வந்துடணும் சரியா?
பரிட்சை நல்லபடியா எழுதினது சந்தோஷம். பிள்ளைங்க நலமா?
போதும் போதும் படிச்சது. இனிமே பிளாக் பக்கம் உங்க சேவையை தொடரவும். திடீர்ன்னு அடுத்த படிப்பு படிக்க போறேன்னு போக கூடாது இனிமே!(யப்பா படிப்புன்னா எட்டிக்காயா இருக்குது)
//சுஹைனா மீண்டும் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.இந்த அர்த்தமுள்ள பதிவு அருமை.//
நன்றி ஆசியா அக்கா!
//ஹை வந்தாச்சா! மழை வந்தாலும் குடை பிடிச்சாவது வந்துடணும் சரியா?//
ஓக்கே மேடம்!!! இன்னிக்கே போய் புது குடை ஒன்னு சுண்டெலி வாங்கிவிடும்...
பிள்ளைகள் நலம். செம்மொழி மாநாடு லீவில் ஜாலியா இருக்காங்க!
//போதும் போதும் படிச்சது. இனிமே பிளாக் பக்கம் உங்க சேவையை தொடரவும். திடீர்ன்னு அடுத்த படிப்பு படிக்க போறேன்னு போக கூடாது இனிமே!(யப்பா படிப்புன்னா எட்டிக்காயா இருக்குது)//
அட, நீங்க வேற இன்னும் எம்.ஏ.(eng) முடியல....ஆனால் எனக்கும் இப்ப அதே ஃபீலிங் (எட்டிக்காய்) தான்! படிச்சு படிச்சு தலை வழுக்கையாகாதது தான் மிச்சம்!
welcome back! :)
Post a Comment