Sunday, July 11, 2010

திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...

மணமகள்: சலூஜா
மணமகன்: ஹாமித்
மணநாள்: 23.05.2010

சலுஜாமா பைங்கிளி
இணை ஹாமித் துணையினி
சிரித்தாடும் மலர்கொடி
சாய்ந்தாலே அவன்மடி

இதழ் இரண்டும் கவிமொழி
கனவோடு இவள்விழி
மணம் வீசும் மலர் இனி….

புது வாழ்க்கை இந்நாளிலே, மணம் இனிக்க வருகிறதே!
ஒரு தேவ குமாரனை நினைத்திதயம் உருகியதே!!
புதுகவிதைகள் படித்திடுமே, கனவினிலே, கனவினிலே,
அவனிருவிழி உனையிழுக்க மகிழ்ந்து நின்றாய் நனவினிலே,
பொழியட்டுமே காதல் மழை
அது தான் இனி எந்நாளும் சுவை சுவை!!

கொம்புத் தேனாய் உன் வாழ்வினி இனித்திடுமே கனிந்திடுமே!
மஞ்சம் நோக்கி உன்காலடி தயங்கிடுமே, தவித்திடுமே!!
இரு மணங்களும் இணைந்திடவே பெருகிடுமே காதலலையே,
புது உறவினி மலர்ந்திடவே பனி பொழியும் முதல் முறையே,
மலர்கணைகள் மலர் தொடுக்க,
பூஞ் சோலையில் உலாவி மகிழ்ந்திட!!

- சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

12 comments:

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

ராஜவம்சம் said...

கலக்கிடீங்க!!!

ஜெய்லானி said...

சூப்பர் ...அதே இசையில் வரிகளில் புதுமை...வாழ்க மணமக்கள்..!!

சீமான்கனி said...

வழக்கம் போலவே அழகான வார்த்தைகளை எடுத்து அற்புதமா சேர்த்து ஒரு பாடல் சூப்பர்...கா...வாழ்த்துகள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை.

வாழ்க மணமக்கள்..!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மணமக்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.
அழகான வார்த்தைகளின் அணிவகுப்பு.
பாடல் இனிமை!

Riyas said...

அருமை..

கவிதாயினி தாமரையை விட நல்லா எழுதியிருக்கிங்க..

//இதழ் இரண்டும் கவிமொழி
கனவோடு இவள்விழி
மணம் வீசும் மலர் இனி//

சூப்பர்

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றி!

இது பாடல் வாரம்...

வரிசையாக நான் எழுதிய பாடல்களின் அணிவகுப்பு!

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமை. வாழ்த்துக்கள்

Vijiskitchencreations said...

நல்ல வரிகள் அருமை. எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்களாச்சு.
வாங்க இந்த பக்கம்.

இது தாங்க நம்ம வீடு.

http://vijisvegkitchen.blogspot.com

onlinepaidjob said...

hai

earn money through my site

http://onlineptc.webnode.com

onlinepaidjob said...

how can i write in tamil in this site.

help me