Wednesday, July 14, 2010

குழந்தை பாடல் - காதல் ரோஜாவே...

என் மகள் லாஃபிராவின் குழந்தைப் பருவத்தில் எழுதியது

லாஃபு கண்மணியே ஆசை நடைபோடு
உள்ளம் குளிர்ந்ததடி கண்ணே
கண்ணுக்குள் நீதான்
கருத்துக்குள் நீதான்
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
தேனானதே உன் வார்த்தைகள் சொல்...சொல்... (லாஃபு கண்மணியே)

கன்னம் குழிய பேசினால், கன்னல் சாற்றின் ஞாபகம்
சின்ன விழிகள் பார்க்கையில் மின்னல் தோன்றும் ஞாபகம்
தன்னை மறந்த ராகத்தில் ஜோதியாகும் பூமுகம்
தென்றல் வந்து வீசயில் தழுவி பார்க்கும் தேன்சுகம்


வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
பூவில்லாமல் போனால் வாசமில்லை கண்ணே
பூப்போலத்தான் உன் நேசமும் நில்...நில்...(லாஃபு கண்மணியே)

வீசுகின்ற தென்றலும், உன்னை வாழ்த்தி வீசுமே
பேசுகின்ற வெண்ணிலா உன்னை போற்றி பேசுமே
பூமி பார்க்கும் வானமும் பூமழையாய் தூவுமே
தாவுகின்ற மானினம் உன்னை கண்டு பாடுமே

வாழுகின்ற வாழ்வில் வசந்தங்களும் வீசும்
லாஃபிராமா கண்ணே ராகங்களும் பாடும்
முத்தங்களும் தந்திடவா சொல்...சொல்...(லாஃபு கண்மணியே)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)

கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

வீசுகின்ற தென்றலே ,
வேலையில்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா ,
பெண்மயில்லை ஓய்ந்து போ!
பூ வளர்த்த தோட்டமே ,
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே ,
புள்ளியாக தேய்ந்து போ!

பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை?
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

10 comments:

சீமான்கனி said...

//வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
பூவில்லாமல் போனால் வாசமில்லை கண்ணே
பூப்போலத்தான் உன் நேசமும் நில்...நில்...//

அழகிய வார்த்தை கோர்வை அக்கா...வழக்கம் போலவே கலக்கல்...

ஜெய்லானி said...

நல்லாதான் இருக்கு..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகான வர்ணனைகள்;
அருமையான வார்த்தைகள்.

தூயவனின் அடிமை said...

அருமை.....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வழக்கம் போல் அருமை ..
வேலைக்கு எப்படி போகிறது அக்கா ..

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

ramadan kareem.சுஹைனா நலமா?நோன்பு எப்படி போகுது?டீச்சிங் எப்படியிருக்கு?என் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ramadan kareem.சுஹைனா நலமா?நோன்பு எப்படி போகுது?டீச்சிங் எப்படியிருக்கு?என் வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

PLEASE COME TO POST SOME ARTICLES
IN BLOGSPOT.