காபிர்களின் நிம்மதி குலைந்தது!
சோதி ஒளிர்ந்தது - அந்த
சேதி கிடைத்தது!
நீதி தழைத்தது - அதனால்
பீதி நிறைந்தது!
இஸ்லாத்தின் வளர்ச்சியை
அடக்க வேண்டும்!
அதை முற்றிலும்
அழித்தொழிக்க வேண்டும்!
என்று,
குறைஷிகள் கூடினர்!
அதற்கான
வழிமுறை தேடினர்!!
முடிவாக ஒரு
முடிவும் கண்டனர்!!!
அதன்படி,
நபியவர் சார்ந்திருக்கும்
ஹாஷிம் குலத்தவரை
சமூகப் பிரதிஷ்டம் செய்தனர்!
சொல்லொணாத் துயரம் தந்தனர்!!
கொடுக்கல் வாங்கல்
செய்வதில்லை!
சம்பந்தம் சார்படி
ஏதுமில்லை!
உணவு தண்ணீர்
அனுமதிப்பதில்லை!
எவ்விதத் தொடர்பும்
கொள்வதில்லை!!
இதனால்,
ஒற்றுமை குலைந்து
கோத்திரத்தார்
பிரிந்திடுவர் என்று
மனப்பால் குடித்தனர்!
ஒப்பந்தம் வடித்தனர்!!
ஹாஷிம் குலத்தினர் யாவரும்
தத்தமது உடைமைகளுடன்
அருகிலிருந்த பள்ளத்தாக்கில்
குடியேறினர்!
கொஞ்ச காலத்தில்,
உணவுப் பொருட்கள்
தீர்ந்திட, பசியால்
வாடினர்!
அளவிலாத் துன்பங்களைத்
தாங்கினர்!
பகிஷ்கார நடவடிக்கையால்,
ஏங்கினர்!!
இலை தழை எல்லாம்
உணவானது!
இயல்பு வாழ்க்கையே
கனவானது!
மழலைகள் பசியால்,
கருகினர்!
பண்டமின்றி, பாலின்றி
பெற்றோர்
உருகினர்!!
ஆயினும்
பிரச்சாரம் தொடர்ந்தது!
பிரம்மாதம் நடந்தது!!
இவ்வாராக
மூன்று ஆண்டுகள் கழிந்தது!
காபாவில் தொங்கிய
ஒப்பந்தக் காகிதமும் கிழிந்தது!!
கரையான் அரித்த
காகிதத்தால்,
உடன்படிக்கை
தானாகவே
செத்து மடிந்தது!!
முஸ்லிம்கள் பட்ட துயர்தீர
நல்லதொரு பொழுது
விடிந்தது!!
வெள்ளம் வடிந்து
வெள்ளி முளைக்க,
பள்ளத்தாக்கை விட்டு,
வெளியேறி,
மக்காவை அடைந்தனர்!
என்றும் போல,
வசிக்கலாயினர்!!
இதுவரைக்கும் நபியவர்க்கு
அரணாக இருந்து,
நபித்துவ பத்தாம் ஆண்டில்,
முதுமையுற்ற
சிறிய தந்தை அபூதாலிப்,
மீளா நோயுற்றார்!
மரணம் தன்னை
நெருங்குவதை உணர்ந்தார்!!
அழைத்தார் தமது உறவுகளை!
உரைத்தார் தமது மனக்குரலை!!
(தொடரும்)
-சுமஜ்லா
Tweet | ||||
3 comments:
பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு அருமை அக்கா..நல்ல இருக்கீங்களா ..
Post a Comment