Tuesday, March 1, 2011

உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா?

பலரும் தங்கள் தளத்தின் இடுகைகளை அடுத்தவர் காப்பியடிக்கிறார்கள் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறுவார்கள். அதைத் தடுக்க ஒரு சில வழிகளை ஒரு சில கையாண்டாலும் காப்பியடிப்பது என்னவோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இதுவும்.

ஆனால், காப்பியடிக்கப்படும் தளத்துக்கு சில நன்மைகள் உண்டு. அதே போல காப்பியடித்ததை வெளியிடும் தளத்துக்கு சில தீங்குகளும் உண்டு. இதை உணர்ந்து கொண்டால், ‘ஐயோ என் சமையல் குறிப்பை காப்பியடிச்சிட்டாங்க’, ‘ஐயோ என் படத்தைக் காப்பியடிச்சிட்டாங்க’ என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வலையுலகம் எவ்வாரு இயங்குகிறது என்று சற்று அடிப்படையில் இருந்து பார்த்தால் தான் புரியும்.
பொதுவாக இன்று உலகமே நெட் மூலமாகத் தான் இயங்குகின்றது என்று எளிதில் கூறிவிடலாம். அதுவும் மேலை நாடுகளில் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் காரைப் பார்க் செய்வதற்கே அலையோ அலை என்று அலைய வேண்டும். அதற்குக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதனால் ஒரு டிசர்ட் வாங்க வேண்டும் என்றாலோ, உணவுப் பொருட்கள் வாங்க வேண்டுமென்றாலோ அவர்கள் நாடுவது இணையத்தைத் தான்.

ஒருவர் நம் இணையதளத்தை அடைய வேண்டுமென்றால் அவர் மூன்று வழிகளில் அடையலாம். ஒன்று நேரடியாக நம் தள முகவரியை பிரவுசரில் கொடுத்து வருவது. இது நாம் சில முக்கியமான தளங்களுக்கு மட்டுமே இவ்வாறு செய்வோம். ஏனென்றால் லட்சக் கணக்கான இணைய தளங்கள் இருக்கும் போது நமக்குத் தேவையான எல்லா தளங்களையும் நினைவில் கொள்வது என்பது சாத்தியமில்லாத விஷயம். நாம் நேரடியாக உள்ளீடு செய்து போகும் தளங்கள் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த பேஸ்புக், கூகுள், ஜிமெயில், டுவிட்டர் போன்ற தளங்கள் தான்.

இரண்டாவது முறை கூகுள் போன்ற தேடல் பொறிகளில் தேடி அதன் மூலம் வேண்டும் தளத்தை அடைவது. நம் தேவையை கூகுளில் உள்ளிட்டால் அது லட்சக்கணக்கான தளங்களைக் காட்டும். அதில் முதல் சில இடங்களைப் பிடிக்கும் தளங்களை நாம் பொதுவாக தேர்வு செய்வோம். இதன் மூலம் நம் தேவையை அடைந்து கொள்வது இரண்டாவது முறை.

மூன்றாவது முறை இன்னொரு தளத்தில் இருக்கும் சுட்டியின் மூலம் அடைவது. அதாவது, இப்போது நான் www.google.com என்று கொடுத்தால் இதை நீங்கள் க்ளிக் செய்து கூகுளை அடையலாம். அது போல என் வலைப்பூவுக்கான சுட்டியை நண்பர்கள் பலரும் அவர்களுடைய வலைப்பூக்களில் கொடுத்திருக்கிறார்கள். இது நம்முடைய போஸ்ட்டின் நடுவிலும் இருக்கலாம், அல்லது சைடு பார் அல்லது ஹெடர் அல்லது ஃபூட்டர் பகுதியிலும் இருக்கலாம். இதுவே நாம் சுட்டி என்கிறோம். இது மூன்றாவது முறையில் ஒரு தளத்தை அடையும் வழிமுறையாகும்.

இப்போது, எந்த முறையில் நம் தளத்தை வாசகர்கள் அதிகமாக அடைகிறார்கள் என்று பார்த்தால் அது தேடல் பொறிகள் மூலமாகத் தான். திரட்டிகளும் குட்டித் தேடல் பொறிகள் தான். ஆக இந்த வகையாக நமக்குக் கிடைக்கும் கூட்டத்தை, டிராஃபிக்கை ஆர்கானிக் டிராஃபிக் என்பார்கள்.

அதிகமான அளவில் ஆர்கானிக் டிராஃபிக் பெற வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தளத்தின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு ஒவ்வொரு தளமும் பல விதத்தில் முயற்சி செய்கிறது. ஆஃப்லைன் பிசினஸுக்கு பெருக்கும் வழிகளாக விளம்பரம் பயன்படுகிறது. ஆனால் ஆன்லைன் பிசினஸுக்கு பெருக்கும் வழிகள் வேறு மாதிரியானவை. இந்த வழிகளை சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் சுருக்கமாக SEO, தமிழில் சொன்னால் தேடல் பொறி உகப்பாக்கம் என்று சொல்லலாம்.
தேடல் பொறி உகப்பாக்கம் பற்றி சற்று விரிவாகப் பார்த்தால் தான் காப்பியடிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை விளங்கிக் கொள்ள முடியும். அதை அடுத்த பதிவில் காணலாம்.

-சுமஜ்லா.

14 comments:

abdoul razack said...

Welcome after a long break, as usual keep rocking

சீமான்கனி said...

வாங்க அக்கா..நலமா???பிள்ளைகள் மற்றும் வீட்டில் அனைவரும் நலமா??ரெம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல தகவலோடு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...

Jaleela Kamal said...

எப்படி இருக்கீங்க சுஹைனா , பதிவ வந்து படிக்கிறேன்\பிள்ளைகள் நலமா? உங்கள் பொன்னுக்கு போர்ட் எக்சாமா?

உண்மைத்தமிழன் said...

வணக்கம். எப்படியிருக்கீங்க..? மீண்டு வந்தமைக்கு வாழ்த்துகள்..!

asiya omar said...

சுஹைனா நலமா?பகிர்வுக்கு மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதுங்க.

ஜெய்லானி said...

நீன்ன்ன்ன்ன்ண்ட இடைவெளிக்கு பிறகு இங்கே உங்களை பார்ப்பதில் சந்தோஷம் :-)

இளம் தூயவன் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் ,நல்ல தகவல் கொடுத்துள்ளிர்கள் .

அப்பாவி தங்கமணி said...

Useful update... looking to read more in next...thanks

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா! நலமா? நீண்ட நாள் ரெஸ்ட் கொடுத்து பதிவுலகிற்கு மீண்டும் ஆஜர் ஆனது சந்தோஷம் :) இனி தொடர்ந்து வருவீங்கதானே? இன்ஷா அல்லாஹ், கண்டிப்பா வரணும் எனபது என் அன்புக் கட்டளை :) நல்ல பகிர்வுக்கு நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

உங்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி!

நன்றி சீமான்கனி, நாங்கள் யாவரும் நலம்.

ஜலீலா அக்கா, என் மகளுக்கு பப்ளிக் எக்ஸாம் ஆரம்பிக்கப்போகுது. இன்னும் பதினைந்து நாட்களே இருக்குது.

ஆசியா அக்கா, உங்கள் ஆர்வத்துக்கும் என்னை மீண்டும் (அன்போடு) இழுத்து வந்ததற்கும் நன்றி!

வலைக்கும் சலாம் அஸ்மா, மாதம் நான்கு பதிவுகள் போடணும் என்று இருக்கிறேன். மாத ஆரம்பத்தில் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தாலும் மாதக் கடைசியில் பிஸி. அதோடு நண்பர்களின் வலைப்பூக்களையும் படிக்கணும். கருத்துக்களுக்கு பதில் அளிக்கணும். இதெல்லாம் முடியுமா என்று இனிதான் முயற்சிக்கணும்.

என்னை அன்போடு வரவேற்ற மற்ற எல்லா நண்பர்களுக்கும் நன்றிகள்!

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனாக்கா.எப்படியிருக்கீங்க..
பிள்ளைகள் நலமா?

ரொம்ப நாளைகப்புறமாக வந்தாலும் நல்லொரு பதிவோடு வந்திருக்கீங்கக்கா. அடிக்கடி வந்துபோங்க.

வீட்டில்அனைவருக்கும் சலாம் சொல்லவும் ..

NIZAMUDEEN said...

வாங்க...
இதன் விரிவான அடுத்த அத்தியாயங்களை
எதிர்பார்க்கிறேன்.

Jaleela Kamal said...

மீண்டும் உங்கள் பதிவு அதுவும்பயனுள்ள பதிவு இங்கு ஆரம்பித்தது ரொம்ப சந்தோஷம் சுஹைனா.

arun said...

சகோதரியே மிக்க நன்றி