Friday, September 26, 2014

நீங்க இன்னும் நல்லா வருவீங்க....

"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"

"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"

"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூடிய லோன் வாங்க மாட்டோம். நிறைய வங்கிகள் எனக்கு போன் செய்து லோன் வேண்டுமான்னு நச்சரிக்கிறாங்க. நாங்க தான் வேண்டாம்னுட்டோம்"

"வட்டி வாங்க தான் கூடாது கொடுக்கவும் கூடாதா?"

"சார்... நாங்க வட்டி வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது, வட்டிக்கு கணக்கெழுதவும் கூடாது"

இந்த உடையாடல் நடந்தது ஈரோடு ஹெல்த் இன்ஸ்பெக்டருடன். எங்க தாஜ் மஹால் மசாலா இஞ்சி பூண்டு சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்ற தரச்சான்றன FSSAI முத்திரை பெறுவதற்காக ஹெல்த் டிபார்ட்மெண்ட்டுக்கு போயிருந்தேன்.
15 நாட்கள் கழித்து அவர் கேட்டபடி எல்லா டாகுமெண்ட்டும் தயார் செய்து கொடுத்த போது, காசு எதுவும் கொடுக்கணுமா என்றேன். அவர் உடனே மறுத்து,

"என்னம்மா நீங்க வட்டி ஆகாதுன்னு லோன் கூட வாங்க மாட்டேங்கிறீங்க, உங்க கிட்ட போய் காசு வாங்குவமா?" என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம் ஞாபகம் வெச்சு இதை சொல்கிறாரே என்று. பாருங்க, நான் எதார்த்தமாக அவரிடம் சொன்ன ஒரு விஷயம் அவருக்கு எவ்வளவு பிடித்து விட்டதென்று...!

நேரில் எங்க ஃபேக்டரிக்கு விசிட் செய்தார். எல்லாமே அவருக்கு ரொம்ப திருப்தி. அப்ளிகேஷனில் என் குவாலிஃபிகேஷன் எழுதி தர வேண்டும். அதை பார்த்துவிட்டு, "இவ்வளவு படிச்சிருக்கீங்களே, டெட் எக்ஸாம் எழுதலாமே?" என்றார்.

நான் சொன்னேன், "சார் நான் இவ்ளோ படிச்சும் எம்ப்ளாய்மெண்ட் ஆஃபீஸ்ல கூட பதியலை சார். நாம இன்னொருத்தர்கிட்ட வேலை பார்ப்பதை விட நாம நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் என்றே நான் ஆசைப்பட்டேன் சார்"

என் பதில் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதே போல வேலை செய்யும் பெண்கள் தலைக்கு ஹிஜாப் போட்டு மறைத்திருப்பது, கையுறை அணிந்து வேலை செய்வது, தூசி உள்ளே வராத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கை, R.O. தண்ணீர் உபயோகிப்பது எல்லாமே அவர் திருப்தியாக உணர்ந்ததால், அப்ளிகேஷனை ஓக்கே செய்து கையெழுத்து வாங்கி சென்றுவிட்டார்.

போகும் போது நீங்க இன்னும் நல்லா வருவீங்க என்று வாழ்த்தியதோடு, உங்க FSSAI சர்டிஃபிகேட் வரும் முன்னாலேயே உங்க எண்ணை ஆன்லைனில் பார்த்து உங்களுக்கு ஃபோன் மூலம் தெரிவிக்கிறேன் என்று சொல்லி சென்றார்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு வாரத்தில் FSSAI நம்பர் வந்துவிடும். இது போல ஒரு கிலோ, அரை கிலோ என பெரிய பேக்கிங்கில் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரசாங்க சுகாதார சான்றிதழுடன் தமிழகத்தில் தயாரிக்கும் முதல் கம்பெனி என்ற பெருமை நமக்கே.

எல்லா புகழும் இறைவனுக்கே!!!

எம் தயாரிப்பு பற்றி அறிந்து கொள்ள, பார்க்க & லைக் செய்க:
http://facebook.com/tajmahalmasala 



டீலர், சப்டீலர் விபரங்களுக்கு: 9488560231 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

11 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ்
வாழ்த்துக்கள் சகோதரி
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் வியாபாரத்தை மேன் மேலும் பெருக்கி பறக்கத் செய்வானாக

முனைவர் இரா.குணசீலன் said...

நீங்க இன்னும் நல்லா வருவீங்க.... சகோதரி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தொழில் வளர,
அல்லாஹ் அருள் புரிவானாக!!!

ப.கந்தசாமி said...

பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

Unknown said...

வளர்க! வாழ்க!

Barari said...

ஆல் போல் தழைத்து வளர வாழ்த்துகிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாங்கள் மேற்கொள்ளும் தொழில் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

Unknown said...

வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தங்கள் வலைப்பதிவிற்கு முதன் முறையாக வருகிறேன்.வலைப்பூவின் தலைப்பே உங்கள் தன்னம்பிக்கையை காட்டுகிறது. உங்கள் பதிவு அதனை உறுதிப் படுத்துகிறது . வளசரத்தின் மூலம் உங்கள் பதிவுகளை அறிய வைத்த குருநாதன் அவர்களுக்கு நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

வலைச் சரத்தின் வழியாக தங்களின் பதிவிற்கு வந்தேன் சகோதரியாரே
நீங்க இன்னும் நல்ல வருவீங்க

”தளிர் சுரேஷ்” said...

வலைச்சரம் மூலம் அறிந்து இன்று முதல் வருகை! இனி தொடர்வேன்! உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்!