ஆசையெல்லாம் ஒன்றாகிப் பெண் வடிவம் எடுத்துவர
நேசமெல்லாம் நிறைவாகி கண் இமையில் கனவு தர
பாசவெள்ளம் கரைதொட்டு கண்மாயைத் தகர்த்துவிட
தாசனுந்தன் தாள்பணியப் பேரின்பப் பரவசமே!
கண்பார்க்கும் காட்சியெல்லாம் உன்னுருவாய் நான் பார்க்க
பெண் இங்கே பேதையென மதிமயங்கித் தள்ளாட
கன்னத்தின் செஞ்சிவப்பு நாணத்தின் மறு உருவாய்
அன்பன் உந்தன் கைசேர முகம் காட்டும் நவரசமே!
சாந்தி கொண்ட மனம் உந்தன் வருகைக்கு வழிபார்க்க
பாந்தமாக அலங்கரித்து பதி மனதை எதிர்நோக்க
ஏந்திழையாள் எண்ணம் போல என்னருகே நீயும்வர
காந்தமென ஒட்டிக் கொள்ள காதலென்றும் தனிசுகமே!
பார்த்த விழி பூத்திடாமல் பாதையில் நீ இணைந்திருக்க
சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் செங்கரும்பாய் இனிமை தர
ஆத்தங்கரை மேட்டினிலே ஆலமர நிழலினிலே
பூத்திருக்கும் பூவைப்போல பூவை மனம் விரிந்திடுமே!!!
- சுமஜ்லா
Tweet | ||||
10 comments:
ஸாலம் நலமா? உங்கள் கவிதை என்றுமே அழகு தான்..
மனதோ(தொ)டு தாலாட்டும் கவித் தென்றல்!
Profile Views 8தானா???
ஸலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஃபாயிஜா! முதலில் யார் என்று தெரியாமல் குழம்பினேன். உங்கள் ப்ளாக் புரொஃபைல் பார்த்துத் தெரிந்து கொண்டேன்! :)
நிஜாம் அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நான் இரண்டு ஜிமெயிலிலும் லாக் இன் செய்யுமாறு செட் பண்ணி வைத்திருக்கிறேன். பழைய ஐடி அதிகம் உபயோகிப்பதில்லை. இரண்டிலும் ஒரே பெயர் தான். அதான் இந்த குழப்பம். வலது புறம் இருக்கும் புரொஃபைல் லின்க் க்ளிக் செய்து பாருங்கள். 5627 என்று காட்டுகிறது. அது தான் ஒரிஜினல் :)
அருமையிலும் அருமை
வார்த்தைகள் உங்களிடன் சேவகம் செய்வதை
கவிதையைப் படிக்க புரிந்து கொள்ளமுடிகிறது
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
அழகிய கவிதை, மேலே படத்தில் உள்ளது போல் ஜொலிக்கிறது...
வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)
கவிதை அருமை,படம் அழகு.
ரமணி, தனபாலன் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
ஆசியா அக்கா... எவ்வளவு நாள் கழித்து பதிவிட்டாலும் தேடி வந்து கருத்துச் சொல்லும் உங்கள் நட்புக்கு ஈடு எதுவுமில்லை :)
அழகான படத்துடன் கவிதையும் அருமை சுஹைனா
Post a Comment