Thursday, January 31, 2013

நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்?

உண்மை என்ன, உரைப்பது என்ன, நம் தன்மை என்ன, தனித்துவம் என்ன...

(என் பேஸ்புக்கில் இருந்து...) விஸ்வரூபம் பற்றி இது வரை நான் இங்கே வாய் திறக்கவில்லை, காரணம் என் பேஸ்புக் பக்கத்துக்கு மதச்சாயம் பூசுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. இப்போது சொல்ல நினைப்பதும் நடுநிலையான கருத்து தான்.

நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக் கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை. (பேஸ்புக்கில் இப்பதிவும் கமெண்ட்ஸும்: http://www.facebook.com/sumazla/posts/585331091482190)

உங்களுக்குப் பிடிக்காவிட்டால் படத்தைப் பார்க்காதீர்கள். புறக்கணித்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்து அடுத்தவர் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறீர்கள்? தண்ணீருக்குள் பந்தை வைத்து அழுத்தினால் தான் அது வேகமாக வெளியே வரும். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தை நீக்க நீங்கள் பாடுபடும் அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் போராட்டக்காரர்கள் என்ற சாயல் படிந்துகொண்டிருக்கிறது. என் மக்களை மதம்பிடித்த போராட்டக்காரர்களாக இந்த சமுதாயம் பார்ப்பதை சத்தியமாக நான் விரும்ப மாட்டேன்.

பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாக்கப்படும் இஸ்லாத்தின் கண்ணியம் ஒரு படத்தினால் பாழ்படும் என்றால்.... எம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பல கோடி இந்து, கிறுத்துவ நண்பர்கள் ஒரு படத்தினால் தம் இஸ்லாமிய சகோதரர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கத் துவங்குவார்கள் என்றால்... அது முழு முட்டாள்தனம்! குறுகிய மனப்பான்மை!! உன் மார்க்கம் புனிதமான மார்க்கம் என்று நம்பினால், ஒரு சாதாரண திரைப்படம் அதை கெடுத்துவிட முடியுமா? அது என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா?

என்னைப் பொறுத்தவரை, இந்த ஆர்ப்பாட்டங்களே போதும் விஸ்வரூபத்துக்கு விளம்பர செலவை மிச்சப்படுத்த என்பேன். அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது என்று தான் தோன்றுகிறது.

மதவெறி கொண்டவர்கள் எல்லா மதத்திலும் உண்டு... ஆனால் அவ்வாறு வெறி கொள்ள அவர்கள் மதம் சொல்கிறதா என்றால், இல்லை என்பேன். அப்படி சொல்லும் மதம் சரியான மதமாகவும் இருக்க முடியாது. மற்றபடி இந்துக்கள் என்றென்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழர்கள் தான். அவர்கள் இப்படத்தைப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, எம்மை ஒரு போதும் தவறாகவோ, தீவிரவாதிகளாகவோ பார்க்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்!


என் கருத்துக்கள் சரி என்றால், இப்பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்கள், முடிந்தவரை ஷேர் செய்து மதநல்லிணக்கத்தை உருவாக்குங்கள். நன்றி!

- சுமஜ்லா

36 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

well said

James said...

Thanks. I appreciate you.

SUMAZLA/சுமஜ்லா said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
well said//

Thanks Bro...

ராஜ நடராஜன் said...

// உன் மார்க்கம் புனிதமான மார்க்கம் என்று நம்பினால், ஒரு சாதாரண திரைப்படம் அதை கெடுத்துவிட முடியுமா? அது என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா?


அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது என்று தான் தோன்றுகிறது.//

இதுபோன்ற சுய சிந்தனைகள் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளிடம் வெளிப்படுவதை வரவேற்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்கிறேன்...

ஷர்புதீன் said...

how are u mam! long time no see!

SUMAZLA/சுமஜ்லா said...

//how are u mam! long time no see!// fine Thank you. Velli Nila from Kovai? Busy with my works... Hope you are fine too.

மட்டை ஊறுகாய் said...

உங்கள் ஆதங்கம் நான் உணருகிறேன்...
RSS /BJP போன்ற கட்சிகளை எதிர்த்தவன்..
என் உற்ற நண்பன் பீர்மொஹம்மத், 30 வருட பழக்கம்..
இது போல சில சம்பவங்கள் எங்களை பிரித்து விடுமோ என்று பயமாக உள்ளது.
என்னையும் மதவெறிக்கு ஆளாக்கிவிடுவார்களோ என அச்சமாக உள்ளது.
நீங்களும் PJ போன்ற மதவியபரிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்...
நாகரிகமாக பேச சொல்லுங்கள்...
மனிதம் தழைக்கட்டும்.
மிக அழகாக எழுதி உள்ளீர்கள்.
இந்த எண்ணம் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் வர வேண்டும்.
நன்றி

வாகை said...

//நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக் கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை.// தெளிவான சிந்தனை... இது போன்ற சிந்தனை சமூக நல்லிணக்கத்திற்கு அவசியம்... நான் பிறப்பால் இரு இந்து.. ஆனால் இந்து என்று எப்போதும் சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை அதில் எனக்கு பெருமையும் இல்லை. இஸ்ஸாத்தைப் பொறுத்தவரை அது மதம் அல்ல மார்க்கம் என்ற வகையில் எனக்கு பிடித்தமானது. ”என் மக்களை போராட்டக்காரர்களாக இந்த சமுதாயம் பார்ப்பதை சத்தியமாக நான் விரும்ப மாட்டேன்.” இது சரியானது என்று எனக்குத் தோன்றவில்லை. போராட்டம் என்பது மனிதனுக்கு அவசியம் வேண்டும்... ஆனால் எதற்குப் போராட்டம் என்பதில் தெளிவு வேண்டும்....

செங்கோவி said...

வரவேற்கத்தக்க பதிவு..சுற்றிலும் வெறுப்புகளே கொட்டப்படும் நிலையில், எங்களுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது இந்தப் பதிவு..நன்றி சகோ.

Doha Talkies said...

அருமை சகோதரி..
இந்த நல்லிணக்கத்தை தான் நாங்களும் விரும்புகிறோம்..
மிக மிக நல்ல பதிவு...
பகிர்ந்து கொள்கிறேன் எனது நண்பர்களுடன்..
உங்களது பார்வை முஸ்லிம் சகோதரர்களுக்கும் இருந்தால்,
மனிதம் தழைக்கும்..

Unknown said...

Well said.People like you should come out and express yourself like this. Ray of hope.

With regards,
Nalina

R.Puratchimani said...

உங்கள் பதிவை நான் வரவேற்கிறேன்.

அஹோரி said...

நபிகளின் (PBUH) மார்கத்தை பின்பற்றுவது வார்த்தைகளில் தெரிகிறது. அருமையான கருத்துக்கள்.

UNMAIKAL said...

சினிமாகாரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம்.

அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’.
இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாக சொல்வார்கள்.

நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தன்னை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாக சொல்வார்கள்
.
அசல் 10 சதவிகிதம் என்றால் பப்ளிசிட்டி 150 சதவிகிதமாக இருக்கும். ஞானி.
SOURCE: http://www.gnani.net
===============

வே. மதிமாறன்: விஸ்வரூபத்தை அரசு தடை செய்யாமல் இருந்து,

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு மட்டும் தீவிரமாக இருந்திருந்தால்,

பிரச்சினை இந்நேரம் மதக் கலவரமாக வடிவம் பெற்றிருக்கும்.

விஸ்வரூபம் தடை விவகாரத்தில் அரசின் பங்களிப்பு முக்கியமாக இருந்த போதும் ஊடகங்கள் இஸ்லாமியர்களையே குறிவைத்து தாக்கின என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஊடகங்களின் ஆதரவு தனக்கு நெகிழ்ச்சியளிப்பதாகவும் அவைகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார் கமல்.

‘விஸ்வரூபத்திற்கு பாதுகாப்பு’ என, இந்து சார்பு கொண்ட அரசும், காவல் துறையும் இறங்கி இருந்தால்,
இந்நேரம் துப்பாக்கிச்சூடு.. என்று கோதாவில் இறங்கி.. விளையாடியிருக்கும்.

மாறாக, அரசின் தற்காலிக தடையே அதை தடுத்தது.

பல பார்ப்பன அறிவாளிகளும், இந்து அமைப்புகளும் ஜெயலிலிதா அரசின் நடவடிக்கை என்பதினாலேயே அமைதிக்காக்கிறா்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

வே. மதிமாறன் ஜனவரி 31ஆம் தேதி எழுதியது
SOURCE:http://mathimaran.wordpress.com/2013/01/31/611/

============
ஒரு மோசமான சினிமாவால் இரு நட்பு நாடுகளுக்கு இடையில் போரைக் கூட உருவாக்க முடியும்
=============

படத்தின் தடை நீங்குவது இஸ்லாமிய கூட்டமைப்பின் முடிவில் தான். -‍ ஜெ.

இஸ்லாமிய கூட்டமைப்புகள் எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும்? அவர்கள் சிறிய குழுவா?

கமல்ஹாசனும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக் காட்சிகளை நீக்க அவர் முன்வரவும் இல்லை

இஸ்லாமிய அமைப்பினருடன் கமல் சமரசமாகப் போய்விட்டால், படத்தை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை

விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது.

ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.


CLICK >>>>>>> அனைத்து பிரச்சினைகளுக்கும் கமல் தான் காரணம் - முதல்வர் ஜெயலலிதா புகார். .

.

ennamoetho said...

ஒரு திரைப்படம் என்பதை திரைப்படமாகவே பார்க்கவேண்டும். விரும்பினால். நான் திரைப்படம் பார்த்து நான்கு ஆண்டுகட்கு மேல் ஆகின்றன. காரணம் பல படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் நிலையில் இல்லை. படம் பார்க்கும் நமக்கே சே விடுங்கடா என்று சொல்லும் அளவுக்கு வன்முறை.அல்லது காதல். இதில்லாமல் படம் ஏது. இது மட்டும் தான் வாழ்க்கையா என்ன?

Darren said...

It is good to know that you have brain. Good post.

SHAM RIAZ said...

இப்படியே பிடிக்க வில்லை என்று படத்தை பார்க்காமல் விட்டதால் தான் தொடர்ந்து இஸ்லாமியரை தாக்கி படம் வந்துகொண்டு இருக்கிறது. வீதியில் செல்லும்போது தீவிரவாதி போகுது பார் என்று சொல்லும் அளவிற்கு கொண்டு சென்று விட்டது. (பர்தா போட்டுக்கொண்டு போகும் போது எனக்கு நிகழ்ந்தது. சொன்னது RSs / PJB சேர்ந்தவர்கள் அல்ல, ஒரு சாதாரண இந்திய/ தமிழ் மகன், ஒரு முறை, இரு முறை அல்ல பலமுறை.)

Aashiq Ahamed said...

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

Anonymous said...

Bold indeed...Hopefully you feel the same at heart...


//பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாக்கப்படும் இஸ்லாத்தின்//

Just one correction....

I believe the prophet himself was born in 570...

So it should be just a shade under 1.5K...-:)

SUMAZLA/சுமஜ்லா said...

//Just one correction....

I believe the prophet himself was born in 570...

So it should be just a shade under 1.5K...-:)//

For your information, Islam existed even before the birth of Prophet Muhammed(sal) from the time of Adam :)Time to time many such prophets including Ibrahim, Ismail, Noah, Moosa, etc. emerged for its renaissance and Prophet Muhammed (sal) is the last one of them. It is not said anywhere that Prophet Muhammed (sal) is the founder of Islam.

Anonymous said...

Having said that...there were a couple of scenes in the movie,which were borderline...

Even I got uncomfortable when I saw those scenes...

Normally I am not for killing art or creativity...but always there should be a tradeoff in life...

When in doubt...people should use commonsense...Wish Kamal had used it for the same....

வேகநரி said...

இஸ்லாமிய தீவிர பக்தர் ஒருவர் தமிழ்மணத்தில் இப்படி எழுதி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

SUMAZLA/சுமஜ்லா said...

//வேகநரி said...
இஸ்லாமிய தீவிர பக்தர் ஒருவர் தமிழ்மணத்தில் இப்படி எழுதி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.//

தீவிர பக்தர் என்ற சொல்லாடலில் ஒருவித கிண்டல் தொனிப்பதால் இந்த பதில்: என் பக்தி என்னோடு தான். அது என் தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் என் சுதந்திரம் அடுத்தவர் மூக்குவரை தான் என்பதை நான் எப்போதும் அறிந்தே வைத்திருக்கிறேன்.

Anonymous said...

இஸ்லாமை இருவேறாக காணும் மக்கள் உள்ளார்கள் என்பதை உங்களைப் போன்றோரால் அறிய முடிகின்றது. ஆனால் தீவிரவாத போக்குடையவர்கள் காட்டும் முனைப்பும், பிரச்சாரமும் மிதவாதிகளிடம் இருந்து வருவதில்லையே. தமிழகத்தில் மிதவாதம் சார்ந்த இஸ்லாமிய அமைப்புக்கள் உண்டா, உண்டெனில் அவர்கள் என்ன செய்கின்றார்கள். அறிய ஆவல்.

சார்வாகன் said...

ஸலாம் சகோதரி,
அருமை, பாராட்டுக்கள்

மதத்தின் நல்ல கருத்துகளை மனதில் இருத்தி செயலில் மனித நேயம் காட்டினால் யாருமே எதிர்க்க மாட்டார்!!.

அய்யா நாகூர் ஹனிஃபாவின் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது!!

தீன் குலப் க‌ண்ணு எங்கள்
திருமறைக் பெண்ணு


யுட்யூபில் கேட்டு மகிழுங்கள்!!

http://www.youtube.com/watch?v=YHFCtFyku80

நன்றி!!

Tamil Indian said...

//அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது//

True.

Finally a sensible post.
I wish all muslims think practically like this.

வேகநரி said...

//தீவிர பக்தர் என்ற சொல்லாடலில் ஒருவித கிண்டல் தொனிப்பதால்//
இதில் என்ன கிண்டல் தொனிவந்ததென்று புரியல.ஒருவர் நான் எனது இந்து மதபடிதான் வாழுவேன் என்றால் அவரும் தீவிர பக்தர் தானே. உங்க பக்தி,வழிபாட்டு உரிமையில் நான் மட்டுமல்ல ஜனநாயக விரும்பிகள் தலையிடமாட்டார்கள். இஸ்லாமியராக இருந்து கொண்டும் பிறர் உரிமைகளை மறுக்காமல், மதித்து நேர்மையாக சிந்திக்க முடியும் என்பதை உங்களை போன்ற சில நல்லவர்கள் அறிய தருகிறார்கள்.

Anonymous said...

For your information, Islam existed even before the birth of Prophet Muhammed(sal) from the time of Adam :)Time to time many such prophets including Ibrahim, Ismail, Noah, Moosa, etc. emerged for its renaissance and Prophet Muhammed (sal) is the last one of them. It is not said anywhere that Prophet Muhammed (sal) is the founder of Islam.//

I have always read that Prophet had revelations in 610 in Mecca...thereby paving way for Quran...Also there were Pagan and other religious practices then...Only after he tookover Mecca , people started following Islam that too few at a time..and all other religions were banned there and even today it stands like that...

If Islam existed before him, What were the followers following before the arrival of the him?

Not Islamic practices right?

Just curious..since things don't addup...

SUMAZLA/சுமஜ்லா said...

//If Islam existed before him, What were the followers following before the arrival of the him? //

Since you are curious, I am answering, otherwise I wouldn't have. Eesaa (who is called as Jesus by Christians; we call him messenger of God and they son of God and that makes all the difference) was the Prophet sent before Muhammed(sal) and people were following him. When everyone started to forget Islam and turn Pagans, Muhammed(sal) was sent for reestablishment not new establishment.

Please avoid further questions and search in some good Islamic websites for clarification. Sensitive questions may create unnecessary problems.

Anonymous said...

Please avoid further questions and search in some good Islamic websites for clarification. Sensitive questions may create unnecessary problems.
//

Thanks for your response...

Sensitive ???

I will read it as sensible...-:)

SUMAZLA/சுமஜ்லா said...

//இக்பால் செல்வன் said...
இஸ்லாமை இருவேறாக காணும் மக்கள் உள்ளார்கள் என்பதை உங்களைப் போன்றோரால் அறிய முடிகின்றது. ஆனால் தீவிரவாத போக்குடையவர்கள் காட்டும் முனைப்பும், பிரச்சாரமும் மிதவாதிகளிடம் இருந்து வருவதில்லையே. தமிழகத்தில் மிதவாதம் சார்ந்த இஸ்லாமிய அமைப்புக்கள் உண்டா, உண்டெனில் அவர்கள் என்ன செய்கின்றார்கள். அறிய ஆவல்.//

மிதவாத அமைப்பென்று ஒன்று இல்லை. ஆனால், இறையச்சத்துடன் வாழும் இன்னொரு கூட்டம் ஒன்று. அவர்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் உலக விஷயத்தில் தீவிரமாக இறங்குவதில்லை. இவ்வுலக வாழ்க்கை கொஞ்சம் காலம் தான், மறுவுலக வாழ்க்கை தான் நிரந்தரமானது என்று அவர்கள் மறுவுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் துறவிகள் அல்ல. நன்கு படித்தவர்கள், குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்பவர்கள், மனிதர்கள் எம்மதத்தினராயினும் மதிப்பவர்கள். அவர்களும் இறைப்பணியாற்றுகிறார்கள். ஆனால் எந்த இயக்கத்திலும் சேர்வதில்லை, தமக்கென்று இயக்கமும் ஏற்படுத்துவதில்லை, மேலும் அதை விரும்புவதுமில்லை. அவர்கள் மாற்றுமதத்தினரிடம் எதுவும் சொல்வதில்லை, மாறாக தம்மினத்தவரில் இறையச்சம் இல்லாமல் கேடான விஷயங்களில் இருப்பவர்களைத் திருத்த முயல்பவர்கள். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் யாரையும் திருத்த முயல்வதில்லை, தம்மைத் தாமே திருத்திக் கொள்ள முயல்கிறார்கள். ஒரு விஷயத்தை பிறரிடம் சொன்னால் தான் அது நம் வாழ்க்கையில் வரும் என்பதற்காக தம்மின மக்களிடம் எடுத்துச் சொல்கிறார்கள், இறைவனுக்கு பிடித்தமான விதத்தில் எப்படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்று!

இவர்கள் வலியுறுத்துவது 6 விஷயங்களை... முதலாவது இறைவனின் மேல் முழு நம்பிக்கை மற்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டியுள்ள அழகிய வாழ்க்கை முறை, இரண்டாவது வணக்க வழிபாடு(தொழுகை), அதாவது எது வேண்டுமென்றாலும் மனிதர்களிடம் கேட்பதை விட்டு விட்டு இறைவனிடம் கேட்பது, அது கிடைக்கும் என்று முழுமையாக நம்புவது, மூன்றாவது இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுவுலக வாழ்க்கைக்கும் தேவையான அறிவைத் தேடிப் பெறுவது, அதாவது எது நல்லது எது கெட்டது என்று அறிந்து செயல்படுவது, நான்காவது விட்டுக் கொடுப்பது, தன்னுடைய தேவையைப் பிற்படுத்தித் தன் சகோதரனுடைய தேவையை முற்படுத்துவது... பெரியவர்களிடம் மரியாதை காட்டுவது சிறியோரிடம் அன்பு காட்டுவது இதில் அடங்கும், ஐந்தாவது எதைச் செய்தாலும் மனிதர்கள் பார்க்கிறார்களே என்று செய்யாமல், இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் உண்மையாக செயல்படுவது, ஆறாவது இந்த ஐந்து விஷயங்களையும் தம்மின மக்களிடம் எடுத்துச் சொல்வது, அவர்களுக்கு போதிப்பதன் மூலம் தம் வாழ்க்கையிலும் அதைக் கொண்டு வருவது.

இக்கூட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், வியாழன் இரவு எதாவது ஒரு மசூதிக்குப் போனால் பார்க்கலாம். இவ்விஷயங்களை செம்மையாக செயல்படுத்துவது எப்படி என்று அன்று கூடி ஆலோசிப்பார்கள், நல்ல இஸ்லாமிய நூல்களை வாசிப்பார்கள். இவர்களுக்கு இயக்கம் கிடையாது, கொடி கிடையாது, கட்சி கிடையாது, ஊர்வலம் கோஷம் கிடையாது! அவர்கள் கூடுவதும் பிரிவதும் இறைவனுக்காகவே இருக்கும். டிகிரி படித்துத் தொழிலதிபராக இருக்கும் என் தந்தை 35 வருடங்களாக இத்தகைய இறைபணியாற்றி வருகிறார்கள். அத்தகைய ஒரு பாசறையில் வளர்ந்தவள் தான் நான்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மையையும் அமைதியையும் நம்பும் இஸ்லாமியர்களின் நிலையைப் பிரதி பலித்து விட்டீர்கள்.தெளிவான சிந்தனை.

தக்குடு said...

பக்குவப்பட்ட,இறையின்பால் நம்பிக்கை கொண்ட,அறிவுள்ள ஒரு இஸ்லாமியரின் கருத்தாக இதை காண முடிகிறது. வாழ்த்துக்கள்!

புதுகை.அப்துல்லா said...

அருமை.

I Love the New England Patriots said...

அறிந்தேன். மகிழ்தென். நன்றி.