இதை தங்கள் குட்ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்ட, யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி!
உங்களுக்கு ஒரு பதினாறு ப்ளாக் பிடித்திருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவ்வளவு பேரையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, ஃபேவரிட்ஸில் ஆட் பண்ணனும். அப்படி ஆட் பண்ணினால் ஆபீஸ் சிஸ்டத்தில் அது இருக்காது.
அது மட்டுமல்ல, உங்களுக்கு விருப்பமான ப்ளாகில், புது பதிவுகள் போடப்பட்டுள்ளதா? என்று ஒவ்வொரு முறையும் ஓபன் பண்ணிப் பார்ப்பீர்கள். ஒரு சில ப்ளாக் அட்ரஸை மறந்து கூட போய் விடுவீர்கள்.
இதற்கெல்லாம் சுலபமான ஒரு தீர்வு இருக்கிறது. நீங்கள் ப்ளாகை ஓபன் செய்யாமலே, அதில் புது பதிவு போடப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் அந்த பதினாறு ப்ளாகுகளின் அனைத்து புது பதிவுகளின் தலைப்புகளும் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளலாம். என்ன புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.
ஒரே தீர்வு, அந்த ப்ளாகை ஃபாலோ பண்ணுவது தான். இதோ இந்த ப்ளாகில், ரசிப்பவர்கள் என்ற தலைப்பில் அது இடம் பெற்றிருக்கிறது. பிளாக் எழுதும் பிளாகர்ஸ் தவிர, மற்றவர்களுக்கு அது பற்றி சரியாக தெரிவதில்லை. அதற்காகத்தான் இந்த பதிவு.
பல பேர் நினைப்பது போல, இது சும்மா, நம்ம பெயரை, நாம் அவர்களுடைய ஃபேன் என்று காட்டுவதற்காக இணைத்துக் கொள்வதல்ல. இது, நமக்கு எத்துணை ப்ளாகுகள் விருப்பமோ, அத்துணையின் பதிவுகளையும் மிஸ் பண்ணாமல் படிக்க உதவுகிறது.
இதற்கு, gmail அக்கவுண்ட் வேண்டும். இல்லாதவர்கள், http://www.gmail.com/ ல் ஒன்று க்ரியேட் செய்து கொள்ளவும். அடுத்து, வலதுபுறம், ‘ரசிப்பவர்கள்:’ என்று இருக்கும் தலைப்பின் கீழ் உள்ள FOLLOW என்பதைக் க்ளிக் செய்யவும். இப்போ கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் கூகுள் (Google) என்று இருப்பதின் மேல் வைத்து க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது கீழே காணும் படியான இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் உங்க gmail யூஸர் ஐடி மற்றும் password கொண்டு sign in பண்ணிக் கொள்ளுங்கள். இப்பொழுது கீழே இருக்கும் விண்டோவைப் பார்க்கலாம். இதில், பெயர் என்ற இடத்தில், உங்கள் பெயரை அல்லது புனைப் பெயரைக் கொடுங்கள். கவலை வேண்டாம், பிடிக்காவிட்டால், பெயரை பின்பு மாற்றிக் கொள்ளலாம். அல்லது போட்டோ அப்லோடு செய்யலாம் அல்லது பின்னர் செய்து கொள்ளலாம். இப்போ, Follow this blog என்று இருப்பதை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது, உங்கள் ஸ்கிரீனின் தோற்றம் இவ்வாறு இருக்கும்: ஒரு நிமிஷம், இப்போ Close கொடுப்பதற்கு முன், View Blogger Dashboard என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் விருப்பப்பட்டால், உங்க ஃபிரெண்ட்ஸையும் இந்த ப்ளாகில் இணையும்படி, மெயில் அணுப்பலாம், Invite your friends என்ற லின்க் மூலம். சரி, இப்போதைக்கு View Blogger Dashboard என்பதை க்ளிக் பண்ணி இருக்கீங்க. இப்போ இந்த விண்டோ ஓபன் ஆகும்.
இது தான் டாஷ்போர்டு என்பது. இதில் கீழ் பாதியில் பாருங்கள். Reading List என்று இருக்கும். அதன் கீழே Blogs என்பதன் கீழ், All blog updates - ‘என்’ எழுத்து இகழேல் என்று நீங்கள் ஃபாலோ பண்ணிய ப்ளாகின் பெயர் உள்ளது. அடுத்து, Items ன் கீழ், ‘கொடிவேரியில் காவேரியா?’ என்ற பதிவும், அது எந்த ப்ளாகுடையது என்பதும், பதிவு போட்ட நேரமும், முதல் சில வரிகளும் இருக்கிறது. இதை அப்படியே ஸ்க்ரோல் பண்ணிப் பார்த்தால், கடைசியாக போட்ட ஒரு சில பதிவுகள் இருக்கும்.
இதில் உங்களுக்கு விருப்பமான அந்த பதினாறு ப்ளாகுகளை நீங்கள் ஆட் பண்ணிக் கொண்டால், இடது புறம், அந்த பதினாறு ப்ளாகுகளின் லிஸ்ட்டும், வலதுபுறம், அதன் பதிவுகளும் இருக்கும். அதை க்ளிக் பண்ணினால், புது விண்டோவில் அந்த ப்ளாக் ஓபன் ஆகும். பதினாறு என்பது ஒரு உதாரணம் தான். நீங்கள் இவ்விதம் நூறு ப்ளாகுகள் கூட ஆட் செய்து கொள்ளலாம்.
சரி, எல்லாவற்றையும் close பண்ணிவிடுங்கள். இப்ப, எப்படி dashboard க்கு போவது?
http://www.blogger.com/ போங்கள். அதில், உங்க gmail யூசர் ஐடி பாஸ்வோர்டால் sign in பண்ணுங்கள். dashboard வந்து விடும். அவ்வளவு தான். சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.
-சுமஜ்லா
Tweet | ||||
16 comments:
mm
சுஹைனா ரொம்ப அருமையாக சிரமம் எடுத்து விளக்கி இருக்கிறீர்கள்.
பிளாக் போட்டிருப்பவர்களுக்கு இது ரொம்ப பயன் படும்.
This blog is useful one .very nice.
I am also a new blogger.this is my site"http://malarkootam.blogspot.com/2009/05/3.html"
வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது
//வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது// வாழ்த்துக்கள் சுகைனா,உங்கள் பதிவு யூத் புல் விகடனில் வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி.மேலும் உங்கள் எழுத்து நடை தொடர வாழ்த்துக்கள்!!
நல்ல பதிவு
வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது
I am following u ;)
நல்லதொரு தகவல்
எனக்கு வாழ்த்துத் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி! என் மதர் போர்டு ப்ராப்ளம் காரணமாக, என்னால், உடனே பதிவு போட முடியவில்லை.
விகடனில் வெளிவந்தது கூட நீங்கள் எல்லாரும் சொல்லித்தான் இப்போது தெரிந்து கொண்டேன். நட்புடன் நன்றிங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க.
தோ! இப்ப தொடரையும் போட்டு விடுகிறேன்.
எனது ப்ளாக்கில் சில நாட்களாகவே பாலோவர்ஸ் பகுதியில் பாலோவர்ஸின் எண்ணிக்கை மறைந்துவிட்டது என்ன காரணம்?
சொல்லுங்களேன்...
I am sure you should be a teacher!!நன்றி, அள்ளித்தெளித்த அனைது டிப்ஸ்களுக்கும்.
ஹா ஹா ஷஃபி சார்! இருப்பதை சொல்கிறீர்களா? இல்லை இனி நடக்கப் போவதை சொல்கிறீர்களா?
காரணம், நான் இந்த வருடம் தான் காலேஜ் சென்று B.Ed படிக்க போகிறேன்.(சற்று லேட்டாக). இன்னும் காலேஜ் திறக்க ஒரு மாதம் இருக்கிறது. டீச்சர் ஆக வேண்டும் என்பது வெகு நாளைய கனவு.
முனைவர் சார், இன்று தான் உங்க பதிவு பார்த்தேன். ஃபாலோவர்ஸ் லின்க்கில் கொஞ்சம் ப்ராப்ளம், மெயின் சர்வரிலேயே இருக்கும் போல் தெரிகிறது.
ஃபால்லோ பன்னுங்கன்னு சொல்லிட்டிங்கள்ள.......இதோ பின்னாடியே வந்துட்டோம்.
விரைவில் டீச்சராகி என்னை மாதிரி ஜீனியஸ் (ஹீ...ஹீ) நிறைய பேர உருவாக்குங்கள்!! வாழ்த்துக்கள்
அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்..எல்லாம் ஒகே..ஆனா என்னொட ப்ளாக்ல,அவங்க லிஸ்ட் எப்டி வரும்,,எல்லாரோட ப்ளாக்லையும் அது இருக்கே...எனக்கு மட்டும் வரமாட்டுது...கொஞ்சம் சொல்லி குடுங்க....
நட்புடன்
ரஜின்
http://sunmarkam.blogspot.com/
Post a Comment