அனலிலிட்ட புழு போல என்பது பழமொழி. கம்ப்யூட்டர் இல்லாத ப்ளாகர் போல என்பது புதுமொழி. பத்து நாளா கம்ப்யூட்டர் இல்லாம, நான் பட்ட பாடு இருக்கே?!
எங்கே பிரச்சினை ஆரம்பிச்சுதுனா,
“டேய் என்னடா இது, மானிட்டர்ல, எல்லாமே போட்டோ நெகடிவ் மாதிரி தெரியுது திடீர்னு” ஒரு நாள் போனில் என் தம்பியிடம் சொன்னேன்.
“கொண்டா அக்கா சிஸ்டத்த. எதுவானாலும் பார்த்துக்கலாம்.” கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் வைத்திருக்கும் தம்பி சொன்னான்.
அது ஒரு பெரிய கதைங்க. என்னன்னா, என் பி.ஸி ய அப்கிரேட் பண்ணினேன். வந்தது வினை. ஒரு ஸ்பீக்கர் தான் கேட்குது. ஒரு ஸ்பீக்கர்ல சவுண்டே வரல. சரி, ஸ்பீக்கர்ல தான் ப்ராப்ளம் போல இருக்குதுன்னு வேற ஸ்பீக்கர் வாங்கினேன். வீட்டுக்கு வந்ததும், அதை கைதவறி, கீழ போட, உள்ள என்னமோ கலகலனு ஆடுச்சு. பார்த்தால், இதிலும் ஒரு ஸ்பீக்கர் அவுட். அப்புறம், கொஞ்சம் நல்லதா, காஸ்ட்லியா இன்னொரு ஸ்பீக்கர் என் தம்பி கடையில போய் வாங்கினேன். அதிலும் ஒன்னுல தான் சவுண்ட் வந்தது. அப்ப தான் எனக்கு சந்தேகம், மதர் போர்டு மேல வந்தது.
தம்பிகிட்ட சொன்னேன். சரி, வேற மதர் போர்டு மாத்திக்கலாம்னு சொன்னான். சரி, அவன் கடையில சிஸ்டத்தை கொண்டு போய் கொடுக்கலாம்னு இருக்கையில, அவன் கடை ஷிஃப்ட்டிங்கில் பிஸி. அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது தான், மானிட்டர்ல எல்லாம் வெள்ளை வெள்ளையா நெகடிவ் மாதிரி மாறிவிட்டது. மறுபடியும் தம்பிக்கு போன் போட்டேன்.
“சரி அக்கா, நீ ஒரு இரண்டாயிரம் ருபாய் கொடு, நான் வேறு மதர் போர்டு போட்டு தரேன். சப்போஸ் பழைய போர்டு சரியாகி விட்டால், காச திருப்பி கொடுத்து விடுகிறேன். இல்லாட்டி ஒன்னும் பண்ண முடியாது” உடனே கையில 2000 கொடுத்து, சிஸ்டத்தையும் கொடுத்தேன்.
மாற்றினான் மதர் போர்டை. ஆனா, இங்கே வீட்டுக்கு வந்து பார்த்தா, திடீர் திடீர்னு ஆஃப் ஆகுது. இப்போ, எஸ்எம்பியூஎஸ் மாற்றிக் கொடுத்தான். மறுபடியும் ஸ்வாகா. சிஸ்டம் ஆன் ஆகவே மாட்டீங்குது. மறுபடியும் படை எடுத்தேன். போர்டு மாற்றணும். ஸ்டாக் இல்லை, வேறு போர்டு. அதனால இன்னும் 2 நாள் ஆகும்னு சொன்னான் அருமை தம்பி. 2 நாள் 4 நாளாச்சு.
“டேய் போர்டு கிடைக்காட்டி, என்னுடைய பழைய போர்டையாவது சர்வீஸ் பண்ணி போட்டுக்குடுடா...” கெஞ்சாத குறையா சொன்னேன்.
சரினு சொல்லிட்டு, மறுபடியும் 2 நாள் கழித்து போன் பண்ணினால், போர்டு ஸ்டாக் வந்து விட்டது. ஆனா, நீதான உன்னுடைய போர்டையே சரி பண்ணி போட்டுத் தர சொன்ன?னு கூலா சொல்லறான். அட என்ன ஒரு எஸ்கேப்பிஸம் பாருங்க, என்னுடைய அவசரம் புரியாம.
ஒரு வழியா வந்து சேர்ந்தது சிஸ்டம். என் சிஸ்டம் சரியாகி விட்டது, ’இனி வழக்கம் போல் பதிவுகள் வரும்’ என்று அம்மா வீட்டில் இருந்து ஒரு பதிவு போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்தா, நெட் கனெக்ட் ஆக மாட்டேங்குது. 678 எர்ரர்.
சாமி வரம் கொடுத்தாலும்... கதையா என்ன இது சோதனைனு BSNL க்கு போன் செய்தால், எல்லாமே சரியா இருக்கு; போர்ட்டும் ஓக்கேனு சொல்றாங்க. நான் லைன் கிடைக்கலைனு சொல்ல, அதிகாரிகள் எல்லாரும் வீட்டுக்கே வந்து செக் பண்ணி பார்க்கிறாங்க. அவங்களுக்கு ஒன்னுமே புரியல.
மோடமை ரீ கான்ஃபிகர் பண்ணியாச்சு. மோடமும் பிங் ஆகுது. லைனும் கரெக்டா இருக்கு. எதுக்கும் இருக்கட்டும்னு பாஸ்வோர்டும் ரீ செட் பண்ணியாச்சு. BSNL ஆஃபீஸ்ல இருந்து எங்க லைன கனெக்ட் பண்ணினா கிடைக்குது. ஆனா, இங்க மட்டும் கிடைக்க மாட்டேங்குது. ஒயரிங் ஃபால்ட்டோ என்னமோனு, புதிதா ஒரு லைன் இழுத்தாங்க. ம்...ஹூம்... எனக்கு ஒரே தவிப்பு.
அவங்களும் என்ன என்னமோ பண்ணிவிட்டு, நாளைக்கு வந்து வெர்ட்டிகல் மாத்துகிறோம், இது தான் கடைசி முயற்சி என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள். நான் என் தம்பிகிட்ட, எதுக்கும் இன்னொரு ஈதர்னெட் கார்டு, வேற மோடம் எல்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு வர சொன்னேன்.
வந்தான். அவன் போட்ட உடனே கனெக்ட் ஆயிருச்சு. எனக்கு ஒரே ஆச்சரியம். போயிட்டான். மறுபடியும் எனக்கு அதே 678 எர்ரர். திரும்ப வந்தான்.
“டேய் எதுக்கும் ஈதர்னெட் கார்டை மாத்திப் பாருடா!”
“அட! கார்டும் பிங் ஆகுதே! கார்டுல ப்ராப்ளம் இருக்காது. இது BSNL லைன் ப்ராப்ளம் தான்”
“நீ கார்டை மாத்து. அப்புறம் பார்த்துக்கலாம்”
“இதுல இன்பில்ட்டா இருக்கும் அக்கா. மாற்ற முடியாது. வேணா அடிசனலா இன்னொன்று போடலாம்” என்று சொல்லி, எக்ஸ்ட்ரா போட்டான்.
என்ன ஆச்சரியம். கிடைத்து விட்டது லைன். தீர்ந்து விட்டது பிரச்சினை. என் தம்பியை செல்லமாக குட்டினேன்; திட்டினேன்.
அடுத்த நாள் BSNL அதிகாரி போன் செய்தார்.
“என்னமோ தெரியலைங்க! திடீர்னு இப்ப கிடைக்குதுங்க! மறுபடியும் பிரச்சினை வந்தா நான் சொல்றங்க” ரொம்ப சமத்தா பதில் சொல்லிட்டேன்.
ஆனா பாருங்க, டெஸ்ட்டிங்குக்காக இழுத்த டெம்ப்ரரி லைனுடைய ஒயர், கீழ ஹாலில, நிலத்து மேலயே போகுது. ரெண்டு நாளாச்சு, இன்னும் வந்து அதை கழட்டிட்டு, கன்சீல்டுல லைன் கொடுக்கல. என்னமோ தெரியல, அவங்களுக்கு போன் பண்ணி வர சொல்ல, எனக்கு கையே வர மாட்டேங்குது.
பி.கு:
எல்லா பிரச்சினையும் ஓய்ந்து மூன்று நாட்களாகி விட்டது. பழைய மதர் போர்டு இன்னமும் சர்வீஸ் முடிந்து வரலை என்கிறது தனி கதை. அதே மாதிரி, இந்த மதர் போர்டுலயும், ஒரு ஸ்பீக்கர் தான் எடுக்குது. என்ன பிரச்சினைனே தெரியல. எல்லா செட்டிங்ஸும் பார்த்தாச்சு.
-சுமஜ்லா.
Tweet | ||||
8 comments:
சுவாரஸ்யமான கதை எல்லாம் சொல்றீங்களே... நல்லவேளை போன வாரம் தப்பிச்சோம் உங்ககிட்ட இருந்து.. Lol.. சும்மா லுலுவாயிக்கு.. :)
மீண்டு(ம்) வந்த இணையத்திற்கு வாழ்த்து(க்)கள்!
இப்போதுதான் முதமுறயா உங்க வலைக்கி வரேன்.. நல்லா இருக்கு இந்தப் பதிவு..
இதைப் படித்ததும் என்னுடைய இந்தப் பதிவின் நடையும் உங்களின் நடையும் ஒன்றாக உள்ளதைப் போன்ற எண்ணம்..
http://kadaikutti.blogspot.com/2008/12/blog-post_16.html
பளாக் எழுத எவ்வளவு ஆர்வம்.சமயத்தில் இப்படித்தான் ஆகி விடுகிறது.
என்னுடைய html textஐ எடிட் செய்தால் நான் சொன்ன பிரசனைகள் வராது என்று சொன்னீர்கள்.
எங்கு போய் என்ன செய்ய வேண்டும்.இங்கேயே சொல்லுங்கள்.
:)
நல்ல பழமொழி ..ஆனா இது உண்மை மொழி..
மேடம் fontகளை எடிட் செய்தேன்.ok.ஆகிவிட்டது.நன்றி.
நல்ல தலைப்புதான்:))!
கடைக்குட்டி சார், நீங்க சொன்னது சரி தான்.
ரவிசார், பாருங்களேன் சோதனையை, மறுபடியும் ப்ராப்ளம். இது கூட அம்மா வீட்டில் இருந்து போடும் பதிவு தான்.
உங்க ப்ராப்ளம் சால்வ் ஆகிவிட்டதா? சந்தோஷம். நான் கூட, முதலில் html என்றால் என்ன என்றே தெரியாமல் தான் இருந்தேன். தற்போது, இந்த ப்ளாக் லே அவுட்டையே வடிவமைக்கும் அளவுக்கு பழகிவிட்டேன். இருந்தாலும், எல்லாமே கூகுளில் சர்ச் பண்ணி தான். நீங்களும் அதை பாலோ பண்ணுங்க. வேறு டவுட் இருந்தாலும் கேளுங்க.
அப்படியா சங்கதி, கணினி வன்பொருள் சம்பந்தமாக ஏதாவது குறை அல்லது சந்தேகம் இருப்பின் என்னை தொடர்பு கொள்ளுங்கள் முடிந்த வரை முயற்சி செய்கிறேன். murli03@gmail.com
Post a Comment