பாக்கு முட்டாய் ஜவ்வு முட்டாய் எழந்தவடை ஐட்டமெல்லாம்
பம்பாய் முட்டாய் 'வாச்சு' கட்டி நக்கி தின்ன நாட்களெல்லாம்
பாவாட, சட்ட போட்டு பல்பக் குச்சி தின்னபோது
அம்மாட்ட சொல்வேன்னு தம்பி 'லஞ்ச' முட்டாய் கேட்க
பத்து அஞ்சு பைசாவை புதையலாக பாதுகாத்து
பம்பரத்தில் கொண்டை வைத்து சாட்டையிலே எலிபிடித்து
எச்சில் தொட்டு சிலேட் அழித்து டீச்சரிடம் கொட்டு வாங்கி
சிகரெட் அட்டை சோடாடப்பி சேர்த்து வைத்த சீக்ரெட்டெல்லாம்
ஆழ்மனதின் நினைவலைகள் அம்பலம் ஏறுதடா
அறியாதப் பருவத்துக்கு அடிமனது ஏங்குதடா
-சுமஜ்லா
Tweet | ||||
2 comments:
கந்தசாமி படத்துல மூச்சு விடாம பாடுவார் விக்ரம்.. அந்த பாட்டுக்கு இந்த வரிகள் பொருத்தம்.
ஓட்டு போட்டாச்சு :-)
எந்த படத்தின் எந்த பாடல்னு இனி தான் ஆராயணும்.
///ஓட்டு போட்டாச்சு :-) /// தேங்க்ஸ்ங்க!
Post a Comment