Friday, September 25, 2009

வாழ்வின் இனிமை

பாசமலர் பூவிலே,
பனிபடர்ந்த மலையிலே,
நேசம் கொண்ட உறவிலே,
நாளும் உந்தன் நினைப்பிலே!

பச்சைக் கிளியின் மொழியிலே,
கூவும் குயிலின் ஒளியிலே,
இச்சை கொண்ட பார்வையே,
யாவும் யாவும் இனிமையே!

அன்பன் உந்தன் முகத்திலே,
வழியும் அந்த எழிலையே,
மிச்சம் மீதி இல்லாமல்,
ரசிக்க மனது இனிக்குதே!

கண்ணா உந்தன் குரலுமே,
கவிதையாக தெரியுதே!
மின்னல் போன்ற சிரிப்பென்னை
பித்துப் பிடிக்க வைக்குதே!

நெஞ்சில் சாய கனவுகள்,
மேலே மேலே போகுதே!
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில்
பற்றிக் கொள்ளப் போகுதே!

நீயும் நானும் ஒன்னுதான்
பூவும் மலரும் ஒன்னுதான்!
வாழ்வின் இனிமை காதல் தான்
வாழ்ந்து காட்டி ஜெயிப்பமே!!

-சுமஜ்லா

6 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இரு மனங்களின் சங்கமத்தை

எடுதியம்பிற்று கவிதை!

Menaga Sathia said...

கவிதை அருமை சுகைனா!!

சாயபு வீட்டு சரித்திரம் கதை போடவில்லையா?

R.Gopi said...

இரு மன சுக இணைவை அழகு தமிழில் வடித்து விட்டீர்கள்...


பாராட்டுக்கள் சுமஜ்லா....

பாத்திமா ஜொஹ்ரா said...

கவிதை அருமை.
பாராட்டுக்கள் சுமஜ்லா

நட்புடன் ஜமால் said...

கவிதை அழகு.

------------

படிப்பு நல்லா போயிட்டு இருக்கு போல - வாழ்த்துகள்.

அரங்கப்பெருமாள் said...

கவிதை அருமையை படிப்பதோடு,மட்டுமின்றி கொஞ்சம் அனுபவித்தும் பார்க்கிறேன்.

குரல் கவிதையாய்... இது சரி
ஆண்கள் சிரிப்புக்கு மின்னல்.. புதுசா இருக்கே...