Tuesday, June 2, 2009

நான் நானாக...



நான் மலராக இருந்திருந்தால், நீ அணியும் மாலையாக இருந்திருப்பேன்.
நான் நூலாக இருந்திருந்தால், நீ அணியும் சேலையாக இருந்திருப்பேன்.

நான் பொன்னாக இருந்திருந்தால், உன் கழுத்தின் அணியாக இருந்திருப்பேன்
நான் பண்ணாக இருந்திருந்தால், நீ பாடும் பாட்டாக இருந்திருப்பேன்.

நான் வேலாக இருந்திருந்தால், உன்னிரு விழியாக இருந்திருப்பேன்
நான் தோலாக இருந்திருந்தால், நீ அணியும் செருப்பாக இருந்திருப்பேன்.

நான் மணியாக இருந்திருந்தால், உன் மன மகுடத்தை அலங்கரிப்பேன்
நான் கனியாக இருந்திருந்தால், நீ சுவைக்க இசைந்திருப்பேன்.

நான் தேனாக இருந்திருந்தால், உன் நாவில் குடியிருப்பேன்
நான் நானாக இருப்பதனால், இவ்வாறே இனி தொடர்வேன்.

-சுமஜ்லா.

3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்குங்க கவிதை

"உழவன்" "Uzhavan" said...

நாம் நாமாகவே இருப்பதுதான் சிறந்தது. அருமை.

Unknown said...

கலக்குங்க.