Monday, June 8, 2009

மகிழ்ச்சியான செய்தி


இனிய வாசகர்களுக்கு,

அடுத்தடுத்து, சில மகிழ்ச்சியான செய்திகள். போன மாதம், ஃபாலோ பண்ணுங்க என்ற என்னுடைய பதிவு, யூத்ஃபுல் விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளிவந்தது. இந்த மாதம், பிளாக் எழுதுபவர்களுக்கு என்ற பதிவு, அதே பகுதியில் வெளிவந்திருக்கிறது. விகடனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல, நான் வட்டார மொழியில், உண்மை சம்பவ தொடராக எழுதி வரும், சாயபு வீட்டு சரித்திரமும், http://www.tamilkudumbam.com/ என்ற தளத்தில், வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் வெளியான பின்பு தான் என் ப்ளாகில் போடுகிறேன். அது எங்கள் உறவுகளின் பூர்வீகக் கதையாகும்.

அடுத்ததாக, நான் இதில் எழுதி வந்த, அரபு சீமையிலே... என்ற தொடர், வசன காவியம், பழம் பெரும் இதழான நர்கிஸில் தொடராக வெளிவரப் போகிறது. அதனால், அதை தற்காலிகமாக, ப்ளாகில் நிறுத்தி வைத்திருக்கிறேன். நர்கிஸில் வெளியான பின்பு, அதை என் ப்ளாகில் படிக்கலாம்.

என் முதல் பதிவு போட்டு, இதுவரை நான்கு மாதங்களே ஆகியிருக்கும் இக்குறுகிய காலத்தில், எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து இந்தளவுக்கு எழுதத் தூண்டிய வாசகர்கள் அனைவருக்கும், குறிப்பாக, பின்னூட்டத்தின் மூலம், என் குறை நிறைகளை சுட்டிக்காட்டும், என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இன்னும் தொடர்ந்து நிறைய எழுத இறைவன் அருள் புரிய வேண்டும்.

நட்புடன்,
சுமஜ்லா.

20 comments:

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!

கலையரசன் said...

இன்னும் தொடர்ந்து நிறைய எழுத இறைவன் அருள் புரிய வேண்டும்.

கண்டிப்பாக புரிவார் சுமஜ்லா!
வாழ்த்துக்கள், யூத் விகடனில் வந்ததற்க்கு!

தேவன் மாயம் said...

நீங்க சொல்றதைப் பார்த்தா ஒரு நாள் 5 மணிநேரம் எழுதுவீக போல!!

தேவன் மாயம் said...

சிறுகதைப்போட்டிக்கு கதை அனுப்புகிறீர்களா?

தேவன் மாயம் said...

வெற்றிகள் குவிக்க வாழ்த்துகிறேன்!!

ப்ரியமுடன் வசந்த் said...

இமய வெற்றி பெற வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

///நீங்க சொல்றதைப் பார்த்தா ஒரு நாள் 5 மணிநேரம் எழுதுவீக போல!!///

காலைல கண்ணு முழிச்ச உடனே நேரா சிஸ்டம் முன்னாடி தான். அப்புறம் பெண்ணா பிறந்துவிட்டால், வீடு, குடும்பம், குழந்தைங்க எல்லாமே இருக்கே! இடையில டைம் கிடைக்கும் போதெல்லாம், கம்ப்யூட்டர் முன்னாடி தான்.

எல்லாவற்றிற்கும் வீட்டார் சப்போர்ட் தான் காரணம்.

டைப் பண்ண, ஓரிரு மணி நேரங்கள் தான் ஆகும். அதுவும், நான் ஃபாஸ்ட் டைப்பிங் செய்வதால்! அது போக, பின்னூட்டத்துக்கு பதில் போடுவது, மெயிலுக்கு ரிப்ளை பண்ணுவது, இத்யாதி, இத்யாதி!

நான் வீட்டில் சமையல் முதலான வேலைகள் செய்யும் நேரம் தான் என் கற்பனை குதிரை பறக்கும் நேரம். கை பாட்டுக்கும் வேலை செய்து கொண்டிருந்தாலும், மனம் வேறு பக்கம் பயணம் செய்து கொண்டிருக்கும்.

நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம், பதிவு போட்டு draft ஆக சேமித்து விடுவேன். நான் புதிதாக எதுவும் எழுதாவிட்டாலும், தினம் ஒன்றாய் போட்டாலே, இந்த draft ஒரு மாதத்துக்கும் மேல் வரும். வாசகர்கள் படிக்க கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும் என்பதால், எழுதும் வேகத்தில் பதிவதில்லை.

தற்சமயம், B.A. ஆங்கில இலக்கியமும், M.Com மும் முடித்து விட்டு, M.A. ஆங்கில இலக்கியம் படித்து வரும் நான், B.Ed படிக்க காலேஜில் சேர்ந்து விட்டேன். September ல் காலேஜ் ஓப்பனிங். அப்போ இவ்ளோ எழுத முடியுமா தெரியவில்லை.

ஏதோ நான் கிறுக்கிக்கொண்டிருப்பதையும், மதித்து வாசகர்கள் படித்துக் கொண்டிருப்பதால் தான், உற்சாகத்துடன் எழுத முடிகிறது. நன்றி!

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் அக்கா! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

கடைக்குட்டி said...

இதெல்லாம் ஒரு விஷயமா??

வருங்கால சந்ததிகள் நம்மளப் பத்தி பேச வேணாமா????

இன்னும் நிறைய உழைத்து பதிவிடவும் :-)

சிகரங்கள் நோக்கி....

Jaleela Kamal said...

சுகைனா உங்கள் அனைத்து வெற்றிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உலகெங்கிலும் உள்ள எழுத்து மக்களை போய் சேர வாழ்த்துக்கள்.
துபாயில் உள்ள தமிழ் தேருக்கு எழுதும் சிறு கதைக்கும் என் வாழ்த்துக்கள்.

SUFFIX said...

"Detailed and Disciplined" ன்னு சொல்லனும்னா உங்களைத்தான் சொல்லனும். வெற்றிகளை வென்றெடுக்க வாழ்த்துக்கள்.

தமிழ் said...

வாழ்த்துகள்

Unknown said...

வாழ்த்துக்கள்!

SUMAZLA/சுமஜ்லா said...

தமிழ் பிரியன், கடைக்குட்டி, நசரேயன், ஜலீலாக்கா, ஷஃபி, திகழ்மிளிர், ரவிஷங்கர் எல்லாருக்கும் நன்றி!

இந்த பதிவு போட்டதற்கு காரணம், அரபு சீமையிலே... தொடர், என் இயலமையின் காரணமா நின்று விட்டதாக யாரும் நினைத்து விடக் கூடாது என்பது தான்!

///"Detailed and Disciplined" ன்னு சொல்லனும்னா உங்களைத்தான் சொல்லனும்.///

ஷஃபி, உங்கள் இந்த கமெண்ட்டை இன்னொரு விருதாக நான் மதிக்கிறேன். நன்றி!

S.A. நவாஸுதீன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

மகிழ்ச்சி.. மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!!
இந்த வலையுலகில் தங்களின் நட்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன். எதிலும் வெற்றி பெற்றிட இந்தச் சின்னவனின் பிரார்த்தனைகள்.
அன்புடன்
உழவன்

Biruntha said...

சுஹைனா இப்போதான் உங்களின் இந்தப் பதிவைப் பார்க்கின்றேன். என்ன ஒரு திறமையான பெண் நீங்கள். உங்கள் எழுத்துக்கள் மூலம் நான் உங்களை சந்திக்க நேர்ந்ததையிட்டுப் பெருமையடைகின்றேன்.
எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் திறமையை வெளிக் கொண்டுவாருங்கள்.
இறையருளால் மேன்மேலும் உங்கள் திறமைகள் வளர/வெளிவர மனதார வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
பிருந்தா

SUMAZLA/சுமஜ்லா said...

நாவாஸ், உழவன், பிருந்தா, வாழ்த்து கூறியமைக்கு நன்றி!

பிருந்தா உங்களைப் போன்று, படித்தவுடன் உடனே கமெண்ட் கொடுத்து, ஊக்கப்படுத்தும் வாசகி கிடைத்தது என் பாக்கியமே!

"உழவன்" "Uzhavan" said...

உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள இந்த சுட்டியைப் பார்க்கவும்.
http://tamiluzhavan.blogspot.com/2009/06/blog-post_14.html

அன்புடன்
உழவன்