இந்தப் பதிவை குட்ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி!
நீங்க ஒரு ப்ளாகர்னு வைத்துக்கொள்ளுங்கள். இப்ப, நீங்க ஊருக்குப் போகிறீர்கள். ஊரில் கம்ப்யூட்டர் இல்லை. என்ன செய்வது? இப்போ, அதுக்கு இரண்டு வழி இருக்கு. முதலாவதாக, நாம் நம் போஸ்டிங்கை செட்யூல் செய்வது. இன்னொன்று நண்பரிடம் பொறுப்பு கொடுத்து விட்டு செல்வது. செட்யூல் செய்வது எல்லாருக்கும் தெரியும். பின்னால் வரும் தேதியைப் போட்டு விட்டால், ஆட்டோமேட்டிக்காக போஸ்டிங் ஆகி விடும். ஆனால், இதில், போஸ்டிங்கில் ஏதாவது மாற்றங்கள் செய்வதென்றால்??
அடுத்து, நண்பரிடம் பொறுப்பு கொடுப்பது. அதிலும் இரு வகை இருக்கிறது. ஒன்று நண்பரே போஸ்டிங் போடுவது போல கொடுப்பது. இன்னொன்று, நாம் போடும் போஸ்டிங்கை, நண்பர் பப்ளிஷ் பண்ணுவது போல கொடுப்பது.
முதலாவது வகை நம் எல்லாருக்கும் தெரியும். இவ்வாறு பல பேர் சேர்ந்து ஒரு ப்ளாக் எழுதுவதை, டீம் ப்ளாக் என்பார்கள். இது போல, ஒரு ப்ளாகுக்கு 100 பேர் வரை author ஆக இருக்கலாம். ஆனால் default admin(அடுத்தவருக்கு நாம் அட்மின் ரைட்ஸ் தந்தால் அன்றி) ஒருவர் மட்டுமே. இதில், authors ப்ளாக் செட்டிங்ஸில் கை வைக்க முடியாது.
இனி எப்படி ஒரு நண்பருக்கு author rights கொடுப்பது என்று பார்ப்போம். Dashboard --- Settings ---- Permissions டேபுக்கு செல்லுங்கள். அதில், ADD AUTHORS என்று இருப்பதைக் க்ளிக் செய்யுங்கள். இப்போ, கீழே காணும் விண்டோ தோன்றும்.
இப்போ, நண்பருக்கு ஒரு ஈமெயில் வந்திருக்கும். அதைத் திறந்து, அதில் இருக்கும் லின்க்கை க்ளிக் பண்ணிலால், கீழே காணும் விண்டோ திறக்கும். இதில், நண்பர், தனது ஜிமெயிலின் பாஸ்வோர்டைக் கொடுத்து, ACCEPT INVITATION பட்டனைக் க்ளிக் செய்தால், வேலை முடிந்தது. இனி, அவருடைய ப்ளாக் டேஷ்போர்டில், அவருடைய ப்ளாகுடன் சேர்த்து, இந்த ப்ளாகும் வந்து அமர்ந்து கொள்ளும். பார்க்க படம்:
ஆனால் பாருங்கள். புதிதாக சேர்ந்த ப்ளாகில், Layout மற்றும் Monetize டேபே இல்லை. இதனால், அவர் லே அவுட்டில் எதுவும் கைவைக்க முடியாது.
இப்போ, நண்பர், அவர் பெயரில் போஸ்டிங் போடலாம். தான் போட்ட போஸ்டிங்கை edit செய்யலாம் அல்லது நீக்கலாம். ஆனால், அனுப்பிய நபரோ, அல்லது மற்றவர்களோ போட்ட, போஸ்டிங்கை, பப்ளிஷ் செய்யவோ, எடிட் செய்யவோ, நீக்கவோ முடியாது.
இப்பொழுது, நீங்கள், அவருக்கு admin rights கொடுத்தால் மட்டுமே நீங்கள் போட்டு வைத்திருக்கும் போஸ்டிங்கை பப்ளிஷ் செய்யவோ, மாற்றவோ முடியும். அதற்கு முன்பு சொன்ன, அதே, Permissions Tabக்கு மீண்டும் போய், அட்மின் ரைட்ஸ் கொடுத்து விடலாம்.
இப்போ நம்ம ப்ளாகுக்கு 2 அட்மின் ஆகி விடுவார். இப்போ, முதலாமவர் கழண்டு கொள்ள வேண்டுமென்றாலும் கழண்டு கொள்ளலாம். அதற்கு, முதலாமவர் பெயருக்கு நேராக இருக்கும் remove எனபதை க்ளிக் செய்தால், கீழே காண்பது போல தோன்றும்.
REMOVE BLOG MEMBER என்பதை க்ளிக் செய்தால், ரிமூவ் ஆகி விடுவார். இதைப் பயன்படுத்தி, நான் ஜிமெயில் ஐடியை ஸ்விட்ச் ஓவர் பண்ண முடியும். அதாவது, நம்முடைய ப்ளாக், xyz@gmail.com என்ற ஜிமெயில் முகவரியில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போ, abc@gmail.com என்ற முகவரிக்கு மாற்ற வேண்டுமானால், மேற்சொன்ன வசதியின் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
அத்தோடு, நண்பர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும், போஸ்டிங் போட இன்னொரு வசதியும் உள்ளது. அது ஈமெயில் மூலமாக போஸ்டிங் செய்வது. Dashboard ----- Settings ----- Email&Mobile என்ற டேபில் கீழே காணும், Posting Options க்கு செல்லுங்கள்.
இதில் Email posting options என்பதற்கு நேராக, உங்க ஜிமெயில் ஐடிக்கு அருகில் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் இருக்கும். அதில் ஏதாவது சங்கேத வார்த்தை கொடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, மேலே பாருங்கள். இதில் abc என்று கொடுத்து publish emails immediately என்பதை செலக்ட் பண்ணி, save கொடுத்து விட்டால், oneasyline.abc@blogger.com என்ற ஈமெயிலுக்கு நீங்கள், மெயில் அனுப்பினால், ஆட்டோமேட்டிக்காக போஸ்ட் ஆகிவிடும். யார், அனுப்பினாலும் சரியே! இதற்கு வேறெந்த செட்டிங்ஸும் தேவையில்லை. இது ஒரு உதாரணம் தான். உங்க ஜிமெயில் ஐடி, alpha@gmail.com என்றால், சங்கேத வார்த்தை beta என்று கொடுத்திருந்தால், இப்போ உங்க ஈமெயில் போஸ்டிங் ஐடி, alpha.beta@blogger.com என்பதாகும். beta என்னும் இந்த சங்கேத வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு முறை அனைத்தையும் பரிசோதனை செய்து பாருங்கள். சுலபமாக புரிந்து விடும். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். (இந்த போஸ்டிங் போட காரணமாக இருந்த என் தோழி, மேனகா சத்யாவுக்கு நன்றி.)
உங்க ப்ளாகுக்கு ஷார்ட் & ஸ்வீட்டா பெயர் வேண்டுமா...Ads இல்லாமல், முற்றிலும் இலவசமாக வலைப்பூவுக்கு புது சட்டை
-சுமஜ்லா.
Tweet | ||||
11 comments:
அன்பின் தோழி சுகைனா அவர்களே..
சமீப காலங்களில் ப்ளாக் பற்றிய பயனுள்ள தகவல்களைத் தந்துகொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இந்தப் பதிவு குட்ப்ளாக் பதியில் வருவதற்கு எனது வாழ்த்துக்கள்.
நான் பெரும்பாலும் மின்னஞ்சல் மூலம்தான் போஸ்ட் செய்வேன். ஆனால் அதில் என்ன பிரச்சனையெனில், எந்த படத்தையும் இனைக்கமுடியாது. மற்றும் பதிவிற்கான லேபிளையும் செலக்ட் செய்யமுடியாது. சரிதானே அம்மணி? :-)
அன்புடன்
உழவன்
சுமஜ்லா நீங்கள் எழுதியது நல்ல கருத்து. நண்பர்கள் இல்லாதவர்கள் வேறொரு ஊருக்கு போனால் பதிவை முதலில் எழுதிவிட்டு post option பட்டனை அழுத்தி பண்ணும் திகதி நேரம் என்பவற்றை மாற்றிவிட்டு publish பண்ணினால் அந்த திகதியில் பதிவு உங்கள் பக்கத்தில் வேலை செய்யும்
மின்னஞ்சல் மூலமாக நான் இதுவரை போஸ்ட் செய்ததில்லை ஆதலால், எனக்கு அது பற்றி விரிவாக தெரியாது.
தமிழ், நீங்கள் சொன்னதைத் தான் நான், ஆரம்பத்தில், செட்யூல் செய்வது என்று குறிப்பிட்டேன்.
எனினும் தங்கை மேனகா சத்யா, தான் செட்யூல் செய்தது, ஏதோ காரணத்தால் போஸ்ட் ஆகவில்லை, ஏதேனும் மாற்று இருக்கிறதா என்று கேட்டிருந்தார்.
அத்தோடு, தலைப்பு தான் ஊருக்குப் போனால் என்று கொடுத்தேன், மற்றபடி, இதை யாவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே போட்டேன்.
இப்போதைக்கு படிச்சு வச்சுக்கிறேன், ஊருக்கு போகும்போது நீங்க ஏதெதோ இங்க சொல்லி இருக்கிறத போட்டு வைக்கிறேன்.
no. I have 1 blog with multiple admin.
We can grant or revoke admin privilege.
//ஒரு ப்ளாகுக்கு 100 பேர் வரை author ஆக இருக்கலாம். ஆனால் admin ஒருவர் மட்டுமே.
http://sumazla.blogspot.com/2009/06/blog-post_227.html#ixzz0Joun0V2s&D
Blog post submission is okay. but who will submit our URLs in social book marking sites. who? can u submit other's url (:
//no. I have 1 blog with multiple admin.
We can grant or revoke admin privilege. //
Thank you. I will correct. What I actually meant is by default only one admin.
//Blog post submission is okay. but who will submit our URLs in social book marking sites. who? can u submit other's url (://
This subject is not discussed here.
மிக்க நன்றி சுகைனா எனக்காக இந்த பதிவு போட்டதற்க்கு.,என் லிங்க் குடுத்தற்க்கும்!!.நீங்கள் சொன்ன மாதிரி எல்லாம் செய்தேன் போஸ்ட் ஆனது,ஆனால் படம் வரல.திரும்பவும் நான் படம் ஆட் செய்து நான் போஸ்ட் செய்தேன்.
நல்ல பயனுள்ள தகவல்!!
நல்லதொரு உபயோகமான பதிவு.
நல்ல உபயோகமான பதிவு. நன்றி சுமஜ்லா
பிளாக்கருக்கு இமெயிலில் இருந்து பதிவு போடும் முறை
Post a Comment