Saturday, June 27, 2009

கவிதைப் போர்


நான் எழுதிய கவிதையெனும் சிறுகத்திக்கு எதிராக கூரம்பு வீசிவிட்டார் தம்பி ஷபி! போரிடவெல்லாம் நமக்கு தெம்பில்லை! ஆனால், தடுக்க ஒரு கேடயமாவது வேண்டாமா?

இதோ நானெழுதிய முதல் கவிதை:

பிரயத்தனம்
நீ கோபமாய் இருப்பதை
எனக்குக் காட்ட
பகீரத பிரயத்தனம் செய்வது
புரிகிறது புருஷா!

தட்டி எழுப்பாமல்,
காதருகே
அலாரம் வைக்கப்பட்ட‘செல்’லை
விட்டு செல்வதும்,....மேலும் படிக்க....

தம்பி ஷஃபி வீசிய கூராயுதம்:

<> 'ம்' என்றால்..
கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான்
அந்த 'ம்' இல்லயாம், இப்போ இது வேறாம்.

உப்பு குறைவென்று உண்மைத்தான் சொன்னேன்
கடலை கறியும் கடலாய் மாறியது!!... மேலும் படிக்க...

இதோ மீண்டும் என் தற்காப்புக் கேடயம்:

ஏன் இப்படி?

படுக்கையறையில் ஆங்காங்கே வட்டக்கோலம்-
நீ கழட்டிப்போட்ட கைலி!!!

ஏனென்று கேட்டால்,
“அது என்ன பண்ணியும் வட்டமாத்தான் வருது!”

கட்டில் கம்பிக்கு திரையாய் மாறியது-
நீ துவட்டிப் போட்ட துண்டு!!!

ஏனென்று கேட்டால்,
“சரி, இனி முந்தனையே போதும், துண்டு வேண்டாம்!”

கரைந்த சோப்பு சொல்லாமல் சொல்லுது,
தரையில் மீனான ரகசியம்!!!

ஏனென்று கேட்டால்,
“சினூண்டு சோப்புல நீ ஏன் கஷ்டப்படணும் பாவம்!”

‘நல்லா இருக்கா?’ ஆர்வமாய் சாப்பிடும் போது கேட்க,
‘நல்லாத்தான் இருக்கு!’ சலிப்பான பதில்!!!

ஏனென்று கேட்டால்,
“என்ன கேட்ட? சமையலையா?”

சுட்ட தின்ற தோசை ஜீரணமாகி இருக்கும்;
மிச்ச மாவில் விழுந்த பல்லியும் மோட்சமாகியிருக்கும்!

ஏனென்று கேட்க,
“என்ன செய்யுறது? அதுக்கு ஆயுசு முடிஞ்சு போச்சு!”

மிச்சமிருப்பது கரண்டியும் சட்டியும் தீசல்களும்
நானே சுட்டுத் தின்றேன் என்ற பெருமிதமும்!

ஏனென்று கேட்க,
“சட்டி சுட்டதடா! கை விட்டதடா!!!”

சிரிக்காமல், சிரிக்கவைக்கும் தந்திரம்;
கோபத்தை மாற்ற நீ போடும் மந்திரம்!

எல்லாமே இப்படி, நாங்கள் அருகிலிருந்தால்,
ஆனால்,
ஊருக்குப் போய் திரும்பும் நாளன்று,
எல்லாமே ஒழுங்காக இருப்பது மட்டும் எப்படி?!

-சுமஜ்லா.

18 comments:

SUFFIX said...

அக்கா வந்துட்டேன்...

SUFFIX said...

//படுக்கையறையில் ஆங்காங்கே வட்டக்கோலம்-
நீ கழட்டிப்போட்ட கைலி!!!

ஏனென்று கேட்டால்,
“அது என்ன பண்ணியும் வட்டமாத்தான் வருது!”//

1) வட்டமும் ஒரு வடிவம் தான், வாழ்க்கை ஒரு வட்டம் அதை சிம்பாளிக்காக சொல்கிறோமோ?

2) அல்லது வட்டமாக உன்னையே சுற்றி சுற்றி வருவேன்னு......

SUFFIX said...

பாவம் அந்த பல்லி...இப்படியும் ஒரு தோசை மாவா?

SUFFIX said...

//எல்லாமே இப்படி, நாங்கள் அருகிலிருந்தால்,
ஆனால்,
ஊருக்குப் போய் திரும்பும் நாளன்று,
எல்லாமே ஒழுங்காக இருப்பது மட்டும் எப்படி?!//

அதை புரியவக்கத்தான் நாங்க வாழ்க்கை முழுதும் போரடுகிறோம்!! ஆனால் எங்கே புரியப்போவுது

S.A. நவாஸுதீன் said...

படுக்கையறையில் ஆங்காங்கே வட்டக்கோலம்-
நீ கழட்டிப்போட்ட கைலி!!!

ஏனென்று கேட்டால்,
“அது என்ன பண்ணியும் வட்டமாத்தான் வருது!”

என்ன கலர் கட்டுவது என்ற குழப்பத்தில் கலைத்துப் போடப்பட்டிருக்கும் புடவை குவியலின் அருகே பரிதாமாய் ஒரு ஒளிவட்டம்தானுங்க அது

S.A. நவாஸுதீன் said...

கரைந்த சோப்பு சொல்லாமல் சொல்லுது,
தரையில் மீனான ரகசியம்!!!

ஏனென்று கேட்டால்,
“சினூண்டு சோப்புல நீ ஏன் கஷ்டப்படணும் பாவம்!”

இது சோப்பு போடுறது இல்லைங்க. நிஜமான அக்கறைதான்

S.A. நவாஸுதீன் said...

‘நல்லா இருக்கா?’ ஆர்வமாய் சாப்பிடும் போது கேட்க,
‘நல்லாத்தான் இருக்கு!’ சலிப்பான பதில்!!!

ஏனென்று கேட்டால்,
“என்ன கேட்ட? சமையலையா?”

இப்பதானே புரியுது ஆம்பளைங்க சாப்பிட்டதுக்கப்புறம் ஏன் இவங்க சாப்பிடறாங்கன்னு.
டெஸ்டு கண்ணா டெஸ்டு

S.A. நவாஸுதீன் said...

சுட்ட தின்ற தோசை ஜீரணமாகி இருக்கும்;
மிச்ச மாவில் விழுந்த பல்லியும் மோட்சமாகியிருக்கும்!

ஏனென்று கேட்க,
“என்ன செய்யுறது? அதுக்கு ஆயுசு முடிஞ்சு போச்சு!”

"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் said...

பாவம் அந்த பல்லி...இப்படியும் ஒரு தோசை மாவா?

ரிப்பீட்டேய்

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே இப்படி, நாங்கள் அருகிலிருந்தால், ஆனால், ஊருக்குப் போய் திரும்பும் நாளன்று,எல்லாமே ஒழுங்காக இருப்பது மட்டும் எப்படி?!

இப்ப க்ளியரா தெரியுது. யார் இந்த வேலையெல்லாம் பண்றதுன்னு

SUFFIX said...

//S.A. நவாஸுதீன் said...
படுக்கையறையில் ஆங்காங்கே வட்டக்கோலம்-
நீ கழட்டிப்போட்ட கைலி!!!

ஏனென்று கேட்டால்,
“அது என்ன பண்ணியும் வட்டமாத்தான் வருது!”

என்ன கலர் கட்டுவது என்ற குழப்பத்தில் கலைத்துப் போடப்பட்டிருக்கும் புடவை குவியலின் அருகே பரிதாமாய் ஒரு ஒளிவட்டம்தானுங்க அது//

இந்த இடத்தில் கூவி ஒரு 'ரிப்பிட்டேய்'

SUFFIX said...

//S.A. நவாஸுதீன் said...
கரைந்த சோப்பு சொல்லாமல் சொல்லுது,
தரையில் மீனான ரகசியம்!!!

ஏனென்று கேட்டால்,
“சினூண்டு சோப்புல நீ ஏன் கஷ்டப்படணும் பாவம்!”

இது சோப்பு போடுறது இல்லைங்க. நிஜமான அக்கறைதான்//

ரொம்ப அக்கறையா...அப்போ அக்கரைத்தான்!!

Anonymous said...

காதலாய் கவிதை போர் புரிந்துவிட்டு
தற்க்காப்பு கேடயமா? சேச்ச்ச்ச்ச்ச்ச்ச் சூவீட் டா.....

SUMAZLA/சுமஜ்லா said...

//என்ன கலர் கட்டுவது என்ற குழப்பத்தில் கலைத்துப் போடப்பட்டிருக்கும் புடவை குவியலின் அருகே பரிதாமாய் ஒரு ஒளிவட்டம்தானுங்க அது//

எல்லாம் கணவன் என்னும் வர்க்கத்தை சந்தோஷப்படுத்தத்தானே?!

//இப்பதானே புரியுது ஆம்பளைங்க சாப்பிட்டதுக்கப்புறம் ஏன் இவங்க சாப்பிடறாங்கன்னு.
டெஸ்டு கண்ணா டெஸ்டு//

இப்படியெல்லாம் அபாண்டமா சொல்றவங்களை பாவி என்பதா? அப்பாவி என்பதா?

//இப்ப க்ளியரா தெரியுது. யார் இந்த வேலையெல்லாம் பண்றதுன்னு//

அட, அட, அட, எந்த வேலைங்க?

//காதலாய் கவிதை போர் புரிந்துவிட்டு
தற்க்காப்பு கேடயமா? சேச்ச்ச்ச்ச்ச்ச்ச் சூவீட் டா....//

நீங்களும் நம்ம இனம்னு நினைத்தேன்; சரிதானே?!

கவி அழகன் said...

சரியான போட்டி


இலங்கையில் இருந்து யாதவன்

"உழவன்" "Uzhavan" said...

அவ்வளவுதான??? கவிதைப்போர் முடிஞ்சதா? நான் இன்னும் அதிகமா உங்க ரெண்டு பேருட்ட இருந்தும் எதிர்பார்க்கிறேன் :-)

ஆனா.. கைலியிலேயே அழகா கோலம் போடுகிற ஆண்கள் திறமைக்கு முன்னால யாரும் நிக்க முடியாது :-)

SUFFIX said...

//உழவன் " " Uzhavan " said... அவ்வளவுதான??? கவிதைப்போர் முடிஞ்சதா? //

வாங்க உழவர் அண்ணே, அவங்க தான் போரிட தெம்பில்லைனு சொல்லிட்டாங்களே...இது தான் சாக்குன்னு வழக்கம்போல ஆம்பிளையா அடங்கிட்டோம்..ஹீ..ஹீ

SUMAZLA/சுமஜ்லா said...

//வாங்க உழவர் அண்ணே, அவங்க தான் போரிட தெம்பில்லைனு சொல்லிட்டாங்களே...இது தான் சாக்குன்னு வழக்கம்போல ஆம்பிளையா அடங்கிட்டோம்..ஹீ..ஹீ//

எனக்காக பதிலளித்த தம்பிக்கு நன்றி! ஆனா, அது என்ன ‘ஆம்பிளையா அடங்கிட்டோம்’? உங்க மனைவி கொடுத்து வெச்சவங்க!

SUFFIX said...

//எனக்காக பதிலளித்த தம்பிக்கு நன்றி! ஆனா, அது என்ன ‘ஆம்பிளையா அடங்கிட்டோம்’? உங்க மனைவி கொடுத்து வெச்சவங்க!//

இங்க மல்யுத்த போட்டியா நடக்குது, இந்த‌ மாதிரி போர்களில் "அடங்குவது ஒரு அட்ராக்டிவ்"!!. நீங்கள் இன்னுமா கேடயத்தை ஏந்திக்கொன்டு இருக்கின்றீர்கள்?