Sunday, June 28, 2009

ஒரு ருபாய் அரிசி“ஒரு ருபாய்க்கு கலைஞர் அரிசி கொடுக்கிறது, சரியா? தப்பா?” அரிசி மண்டிக்காரரும், அரிசி மில்லுக்காரரும் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

அதில் மண்டிக்காரர் சொன்னார்,

“ரேஷன்ல, அரிசி வாங்காதவங்களுக்கு தனி கலர்ல கார்டு கொடுத்தாங்க. அப்ப, அரிசி விலை வெளி மார்க்கட்டில் குறைவு. அதோட, ரேஷன் அரிசியும் மட்டமா இருந்தது. அதனால, நிறைய நடுத்தர மக்கள், அரிசி வேண்டாம்னு எழுதிக் கொடுத்திட்டாங்க”

அதைக் கேட்ட மில்காரர் சொன்னார்,

“ஆனா, பாருங்க, இப்ப, கொஞசம் சன்ன ரகம் போடறாங்க. அத சலிச்சு, குருணைய இட்லிக்குப் போட்டுக்கிட்டு, அரிசிய சாதம் வடிச்சுடறாங்க. அதனால, இப்ப வெளி மார்க்கட் சேல்ஸ் குறைஞ்சிடுச்சு”

“என்ன அண்ணாச்சி பண்ணுறது நடுத்தர மக்களுக்குத் தான் கஷ்டம். விக்கற விலையில, என்னத்த பண்ணுறதுன்னு கேக்கறாங்க. 1500 நு வித்தப்பவும் அதே மார்ஜின், 2500 நு விக்கறப்பவும் அதே மார்ஜின் நம்மளுக்கு. ஆனா, என்னமோ நாம கொள்ளையடிக்கறாப்புல நினைப்பு மக்களுக்கு”

“சரியா சொல்றிங்க! விவசாயிங்க, கவன்ர்ன்மெண்ட்டுக்கு கம்மி விலையில நெல்லக் கொடுத்துப்புட்டு, அந்த நஷ்டத்த ஈடு கட்ட, நம்ம கிட்ட விலை சேர்த்தி வெச்சுக்கிறாங்க. ஆனா, விலை ஏறும்னு தெரிஞ்சு தான் ரேஷன்ல குறைவா போட ஆரம்பிச்சாங்கனு வெளிய பேச்சு!”

“என்ன தான் பண்ணுறது நாம?”

“ரேஷன்னா, கொஞ்ச நாளைக்குத் தான். பாருங்க, கேஸ் கூட மானிய விலையில கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப கொஞ்சம் கொஞ்சமா மானியத்த குறைச்சிட்டே வராங்க. அந்த மாதிரி இதுவும் இருந்தா பரவாயில்லை”

“ஆமா அண்ணாச்சி! ஒரு ருபாய்க்கு அரிசி வாங்கித் தின்னுக்கிட்டு, பத்தாததுக்கு இலவச கலர் டி.வி. வேற குடுத்திருக்காங்க. அதைப் பார்த்துக்கிட்டே மக்கள் சோம்பேறி ஆகிட்டாங்க”

“ஆகிட்டாங்கன்னு சொல்லாதிங்க. ஆக்கிட்டாங்கன்னு சொல்லுங்க. இதனால, மில்லுக்கு பொம்பளைங்க யாரும் சரியா வேலைக்கே வர்ரதில்ல! தொழிலே நசுஞ்சிடுமாட்டம் இருக்குங்க!”

“அட, நடுத்தர மக்களுக்கு வேற கலர் ரேஷன் கார்டுங்கறதால, அவங்களாலயும் ரேஷன்ல அரிசி வாங்க முடியலையே! வெளி மார்க்கட்ல அதிகமா காசு கொடுத்து வாங்கித் திங்கவும் முடியாம, திங்காம இருக்கவும் முடியாம, எவ்ளோ கஷ்டம்?”

“ப்ச், பேசாம, அதுக்கு கலைஞர் மூணு நேரமும் இலவச சாப்பாடு போட்டுடலாம். யாரும் வேலைக்கே போக வேண்டியது இல்ல”

யோசிக்க வேண்டிய விஷயம் தான். யாராவது நம்ம கலைஞர் காதுல போடுங்கப்பா!!!!!!!!!!!!!!!

-சுமஜ்லா.

10 comments:

Anonymous said...

கலைஞர் செவியிழந்து நாட்கள் பல ஆயிற்று...ஆம் இலங்கை அழுகுரல் கேட்காத போது தான் நானும் அறிந்தேன்.. நல்ல பதிவு பதிய வேண்டியவரின் மனங்களில் பதிந்தால் சரி.....

S.A. நவாஸுதீன் said...

மிடில் கிளாஸ் குடும்பம் எப்பவுமே மத்தளம் மாதிரித்தான். ரெண்டு பக்கமும் அடி வாங்குவாங்க.

அபுஅஃப்ஸர் said...

நடுத்தர மக்களின் நிலமையை அழகா ஒத்த ரூவாயிலே சொல்லிப்புட்டீங்க‌

ஷ‌ஃபிக்ஸ் said...

யாருக்குப்புரியும் இந்த அரசியல் விளையாட்டு!! காண்பதோ வட்டவடிவ ஒரு ரூபாய்த்தான், இதன் பின்னனியில் எத்தனை கோடி ரூபாய் திட்டங்களோ. சிந்திக்க வேண்டிய பதிவு, என்ன செய்யப்போகிறார்களோ பொறுப்பில் உள்ளவர்கள்.

" உழவன் " " Uzhavan " said...

ஓ.. நீங்க அரிசி மில் வைச்சிருக்கீங்களா.. ரொம்ப சந்தோசம்.
ஒருநாள் சென்னைக்கு வாங்க.. கோபாலபுரம் போயி கலைஞர் காதுல உங்க ஐடியாவை போட்டுறலாம் :-)

SUMAZLA/சுமஜ்லா said...

எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு?! நோபல் பரிசு தருகிறேன். வாங்கிக்கொள்கிறேன்.

பதிவு சிறிசுன்னாலும், இதுக்காக, ஒத்தை ருபாயில், அரிசியை வெச்சு, போட்டோ ஷாப்பில் ஒரு மணி நேரம் மெனக்கெட்டு...

கோபாலபுரம் என்ன உங்க பக்கத்து வீடா?

ஷ‌ஃபிக்ஸ் said...

//பதிவு சிறிசுன்னாலும், இதுக்காக, ஒத்தை ருபாயில், அரிசியை வெச்சு, போட்டோ ஷாப்பில் ஒரு மணி நேரம் மெனக்கெட்டு...

கோபாலபுரம் என்ன உங்க பக்கத்து வீடா?//

அக்கா நீங்க காயின் மட்டும் தானா? இல்ல நோட்டும் அடிக்கிறீங்களா?

SUMAZLA/சுமஜ்லா said...

வேணா சொல்லுங்க ஷபி, ஆயிரம் ருபாய் நோட்டுல, காந்தித்தாத்தா போட்டோவுக்கு பதில் உங்க போட்டோவைப் போட்டுத் தரேன். அப்புறம் அதை பிரிண்ட் எடுத்து, கள்ள நோட்டுனு என்னை போட்டு தந்துவிடக் கூடாது.

ஷ‌ஃபிக்ஸ் said...

போடுறத புதுவிதமா பத்தாயிரம், இருபதாயிரம் நோட்டா போடுங்க‌

juli said...

அடிக்கற வெயில்ல மண்ட காய்ஞ்சா இப்படித்தான்..போங்க,போயி பொளப்ப பாருங்க..1 ரூபாயிக்கு அரிசி போடரது தெரியுது..17600000 கோடி அடிச்சது தெரியுதா.?அதுதான் அரசியல்...(யாரு பெத்த புள்ளயோ,..நாம திட்டரது எல்லாத்தையும் வாங்க்கிது )