Saturday, July 11, 2009

இலவச டெம்ப்ளேட் 5

இந்த டெம்ப்ளேட் என் அருமைத்தோழி, அருசுவை அரசி, தன் சமையல் குறிப்புகளால், நெட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ஜலீலா அக்காவுக்காக உருவாக்கப்பட்டது.

முதலில், கீழே இருக்கும் VIEW HTML CODE லின்க்கை க்ளிக் செய்தால் கிடைக்கும் Codeன் மீது மவுஸை வைத்து, Ctrl+A, Ctrl+C கொடுத்து, DASHBOARD --- LAY OUT --- EDIT HTML போய், அந்த html code மீது மவுஸ் வைத்து, Ctrl+A, Ctrl+V கொடுங்கள். அதற்கும் முன் உங்கள் சைடு பார் விட்ஜெட்ஸை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போ, html codeன் கீழே, //Edit this page (if you have permission) Google Docs -- Web word processing, presentations and spreadsheets. //இவ்வாறு தோன்றும். இதை delete பண்ணி விட்டு, save செய்யுங்கள். அவ்வளவு தான்.

VIEW HTML CODE

இதன் சேம்பிள் பார்க்க இங்கே சுட்டவும்: சமையல் ராணி (தனி விண்டோவில் திறக்கும்)

-சுமஜ்லா.

16 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என்னமா கலக்குறீங்க நீங்க முடியல...

நல்ல டெம்ப்ளேட்டலாம் கொடுக்குறீங்க

எனக்கொன்று உருவாக்க கூடாதா ...

வாழ்த்துக்கள்

வாங்க என் பக்கம்

Jaleela said...

சுகைனா எனக்காகவா? அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் உடனே பயன் படுத்த முடியாது, வருந்துகிறேன். ஊருக்கு போறேன், வந்து தான் ரொம்ப நன்றி இன்னும் பார்க்கல நீங்கள் போட்டுள்ளதை பார்த்துட்டு மறுபடி பதிவு அப்பரம்போடுகீறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

ஊருக்கு வரீங்களா? எப்ப அக்கா? உங்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன் பாருங்கள்.

THANGAMANI said...

எனது TEMPLATE ஐ மேம்படுத்துவது பற்றி சொல்லுங்களேன்.

நட்புடன் ஜமால் said...

can you teach

how to develop a new template


from scratch

asiya omar said...

இரவு பகல் காட்சியை பார்க்க ஓடோடி வந்தேன்.சூப்பர்.உங்கள் பதிவை மின்னஞ்சலில்(ரீடரில் )படிக்க மிகச் சந்தோஷம்,அருமை.ஆனாலும் உங்கள் ப்ளாக்கிற்கு என் வருகை நேரம் கிடைக்கும் போது நிச்சயம் இருக்கும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//can you teach

how to develop a new template


from scratch//

Really I dont know! Read the article டெம்ப்ளேட் மாற்றம் under the heading பதிவர்களுக்கு!You will know the basic of it.

And you should know photoshop(I use it) for designing the picture, which is the essential part of it.

//எனது TEMPLATE ஐ மேம்படுத்துவது பற்றி சொல்லுங்களேன்.//

உங்க டெம்ப்ளேட் சிம்பிளா மட்டுமல்ல, நன்றாகவும் உள்ளது. அதோடு, ப்ளாகுக்கான கருப்பொருள் அருமை.

//இரவு பகல் காட்சியை பார்க்க ஓடோடி வந்தேன்.சூப்பர்.உங்கள் பதிவை மின்னஞ்சலில்(ரீடரில் )படிக்க மிகச் சந்தோஷம்,அருமை.ஆனாலும் உங்கள் ப்ளாக்கிற்கு என் வருகை நேரம் கிடைக்கும் போது நிச்சயம் இருக்கும்.//

எனக்குத் தெரியும் அக்கா. ஈமெயில் ரீடர்ஸ் லிஸ்ட்டில் உங்க பெயர் இருப்பதைப் பார்த்தேன்.

பிரபா said...

இன்னும் கொஞ்சம் brightaa தரமுடியாதா?
நேரமிருந்தால் எங்க பக்கமும் வாங்க .

அக்பர் said...

நல்ல பயனுள்ள முயற்சி. வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு. கலர் கொஞ்சம் ஓவர் ப்ரைட்டா இருக்குற மாதிரி இருக்கு. அத கொஞ்சம் குறைத்தால் இன்னும் நல்லா இருக்கும்

Jaleela said...

சுஹைனா எனக்காக போட்டுள்ள டெம்ளேட்டை பார்த்தேன் சகோதரர் நவாஸ் சொன்ன மாதிரி ரொம்ப டார்க்காக இருக்கு லைட் ஆக்கினால் போடும் பதிவு தெளிவாக இருக்கும். ரொம்ப நன்றி. அதுவும் பல் வலியோடு போட்டு இருக்கிறீர்கள். உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

ஜமால் எனக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள். பதில் தருகிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

அக்கா, இதன் ப்ரைட்னஸ் குறைப்பது சாதாரண வேலை இல்லை. புது டெம்ப்ளேட் உருவாக்குவது போன்றது.3 டி எஃபெக்ட் வர வேண்டும் என்று என்னவோ போட்டோஷாப்பில் அழுத்தினேன். இவ்வாறு வந்துவிட்டது.


இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது செய்து தருகிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

டெம்ப்ளேட்டுக்கு கோடிங் எல்லாம் எழுத வேண்டியது இல்லை. வேறு டெம்ப்ளேட்டில் இருந்து எடுத்து சில மாற்றங்கள் செய்தால் போதும்; ஆனால், படம் டிசைன் செய்வது தான் பெரிய வேலை. அதை, நான் போட்டோஷாப்பில் செய்கிரேன். கோரல் டிராவில் செய்தால் நன்றாக வரும். ஆனால் எனக்கு தெரியாது. போட்டோஷாப்பில், நம் பைலை flatten செய்யாமல் வைத்திருந்தால், ஒரு பகுதியை மட்டும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். flatten செய்து விட்டால் மாற்ற முடியாது.

அதோடு, படத்தை எதாவது போட்டோ அப்லோடிங் தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும்; படத்தில் மாற்றம் செய்தால், மீண்டும் அப்லோட் செய்யணும். அது தான் மேட்டர்.

Priyanka said...

சுமஜ்லா அக்காவுக்கு,
பிரியங்கா எழுதுவது...
(happaaa.... half an hour aach akka enakku itha type panna... ;) oru vazhiya kathukittean!!)
உங்க template ரொம்ப அழகா இருக்குதுக்கா... ஆசையா இருக்கு பார்கவே... பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு...

ஆனா, ஒரு விஷயம் தான் புரியல.. நீங்க எல்லாருக்கும் பதில் எழுதறீங்க... எனக்கு மட்டும் எதுவும் சொல்லவே இல்ல... :(

எனக்கு பதில் எழுத இஷ்டம் இல்லீங்களா அக்கா உங்களுக்கு? இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு தான் பதில் எழுதுவீங்களா? ஒருவேளை அப்டி இருந்தா உங்கள அக்கானு சொல்லி உரிமை கொண்டடினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க...

SUMAZLA/சுமஜ்லா said...

அட, நீங்க என் டெம்ப்ளேட் கேட்டீங்களா? அதான் மாட்டேன்னு சொன்னா மனசு கஷ்டப்படுமேனு பதில் தரல.

என்னுடைய டெம்ப்ளேட் யுனீக்கா இருக்கணுனு ஆசையில் தான் கொடுக்கல. மற்றபடி, வேண்டுமால் சொல்லுங்கள், நேரம் கிடைக்கும் போது அதே ரோஸ் கலரில் வேறு ஒன்று போட்டுத் தருகிறேன்.

என் ப்ரொஃபைலில் மின்னஞ்சல் லின்க் இருக்கும் பாருங்கள். அதில் ஒரு டெஸ்ட் மெயில் கொடுங்கள். விளக்கம் தருகிறேன்.

கண்டிப்பா எல்லாருக்கும் பதில் தருவேன். எல்லாரும் புதிதாக வந்து பின்பு பழகியவர்கள் தானே?!