Friday, July 10, 2009

பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்

லைட் எரியும் வலைதளம் பற்றி எழுதி இருந்தேன். இதோ, இப்போ என் தளத்திலும் இரவும் பகலும் மாறி மாறி வருவது போல வடிவமைத்திருக்கிறேன். வலப்புறம் இருக்கும் பட்டனை அழுத்திப்பாருங்கள் ஒரு முறை!

இதை கொண்டு வருவதற்கு, பல நாட்கள் தூக்கமில்லாத கடினமான உழைப்பு! அதனால் ஏற்பட்ட உடல் அசதி! ஜாவா ஸ்க்ரிப்டும் தெரியாமல், HTML ம் தெரியாமல்...அனிமேஷனும் தெரியாமல்... எல்லாமே நெட்டில் தேடி...தேடி... என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனா என்னவோ சாதித்தது போன்ற திருப்தி!

சில நேரம் சலிப்படைந்து விட்டுவிடலாம் என்று கூட நினைப்பேன். ஆனால், விட மனமில்லை. மீண்டும்...மீண்டும்... கஜினி முஹமது போல படையெடுத்து....

இதை யாருக்கும் இலவசமாக செய்து தர முடியாது. காரணம், என் ப்ராட்பேண்ட் GB டவுன்லோட் லிமிட்டெல்லாம் தாண்டி எங்கோ போகிறது! பில் எகிறுது, கனெக்‌ஷனையே கட் பண்ணிவிடலாம் என்கிறார் என்னவர். கமர்ஷியலாக செய்யும் எண்ணம் இருக்கிறது.

ஆனா, மொத்தத்துல ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதுங்க.....! அதனால, இனி திங்கள் வரை பதிவுக்கு ரெஸ்ட்!

-சுமஜ்லா.

32 comments:

வால்பையன் said...

இரவு டெம்ளெட்டில் ஹெட்டரில் உள்ள உங்கள் பெயர் கூட மாறுது!

சூப்பரா இருக்கு!

kavi.s said...

வாவ் சுமஜ்லா சூப்பர்,எப்பொழுதும்,கடின உழைப்பும் விடாமுயற்ச்சியும் வீணாகாது,வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

கலக்கீட்டிங்க நண்பரே.......
வாழ்த்துக்கள்........

நட்புடன் ஜமால் said...

நல்ல முயற்சிங்க


வாழ்த்துகள்!

சாகவசமா பின்னொரு நாள் சொல்லுங்க

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றிங்க!

வாலு இன்னும் புது டெம்ப்ளேட் போடலை போலிருக்கு!

கவி, ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களைப் பார்க்கிறேன். நலமா?

முனைவரே, உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்.

ஜமால், இதைப் பற்றி சொல்லணும்னா, ஒரு புத்தகம் தான் எழுதணும்.

Mrs.Menagasathia said...

சூப்பர் சுகைனா,பகலிலும்,இரவிலும் டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு.முயற்ச்சிக்கு எப்போழுதும் வெற்றி கிடைக்கும்,வாழ்த்துக்கள்!!

செந்தழல் ரவி said...

வெரிகுட். உழைப்புக்கு என்னைக்குமே மரியாதை உண்டுங்க...

Jaleela said...

சுஹனா ரொம்ப கலக்கலாவும் அசத்தலாகவும் இருக்கு.
இப்போது இரவில் தான் நான் பதில் போட்டு உள்ளேன்.

டக்ளஸ்....... said...

வாழ்த்துக்கள்..!

sarathy said...

சூப்பரா இருக்கு...

Anonymous said...

keep it up

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குங்க... ஆனா ஒரு சின்ன நெருடல்.. அந்த பண விஷயம்.. இதே மாதிரி யாராச்சும் செய்ய சொல்லி கேட்டா அவங்களுக்கு மட்டும் சொல்லி இருந்திருக்கல்லாம்..
மற்றபடி வாழ்த்துக்கள்..

தமிழ்நாட்டுத்தமிழன். said...

நல்ல முயற்சி சகோதரி.
மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//பகலிலும்,இரவிலும் டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு.//

நன்றி, மேனகா!

//வெரிகுட். உழைப்புக்கு என்னைக்குமே மரியாதை உண்டுங்க...//

என் உழைப்பின் களைப்பெல்லாம் போனது போல் இருக்கு உங்க பாராட்டில்!

//இப்போது இரவில் தான் நான் பதில் போட்டு உள்ளேன்.//

முதலில் எனக்கே புரியவில்லை, என்ன சொல்கிறீர்கள் என்று. உங்கள் நாட்டில் இது இரவு போலும் என்று நினைத்தேன். பிறகு தான் புரிந்தது, என் டெம்ப்ளேட்டைச் சொல்கிறீர்கள் என்று!

டக்ளஸ், சாரதி, என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தியதற்கு நன்றிங்க!

//ஆனா ஒரு சின்ன நெருடல்.. அந்த பண விஷயம்.. இதே மாதிரி யாராச்சும் செய்ய சொல்லி கேட்டா அவங்களுக்கு மட்டும் சொல்லி இருந்திருக்கல்லாம்..//

அட, நீங்க வேற, என்னமோ கால் கிலோ கத்திரிக்காய் கொடுன்னு கேட்கற மாதிரி, நேற்று ஒருவர்(புதியவர் பெயர் சொல்ல விரும்பவில்லை) உங்க டெம்ப்ளேட்(பழையது) ரொம்ப பிடிச்சிருக்கு, எனக்குத் தாங்களேன்னு கேட்கிறார். நான் என்னத்த சொல்ல?!

அதோடு, அனாலிடிக்ஸ் யூஸர்ஸ்க்கு ஆட்வோர்ட்ஸ் 2500 மதிப்புள்ள ஆட்ஸ் ப்ரீயா தந்திருக்காங்க. அத இதுக்கு யூஸ் பண்ணலாம்னு ஒரு ஐடியா.

அதோடு, இதற்கான உழைப்பு வார்த்தைகளில் சொல்ல முடியாது. தினமும் இரவு 1 மணி 2 மணிவரை நெட்டில் தான். இதோ இப்போ கூட பல் பிடுங்கி வலியோடு தான் பதில் போடுகிறேன்.

ஃப்ரீயா எனக்குக் கிடைத்தால், நானும் ஃப்ரீயா தருவேன், ஆனா நெட் பில் ஏறிக்கிட்டே இருக்கு!

ஆனா, நண்பர்களுக்கு பழையபடி, ஃப்ரீ டெம்ப்ளேட் அவ்வப்போது செய்து தருவேன். அது வேறு விஷயம். இது, ஃபாரீனர்ஸை டார்ஜெட் பண்ணி, ஆங்கிலத்தில் ஒரு தளம் உருவாக்கி செய்யலாம்னு...

தமிழ்நாட்டுத்தமிழர் பேர் நல்லா இருக்கு! கூடவே, நாங்கல்லாம் எந்த ஊர் தமிழர்னு ஒரு சந்தேகமும் கூடவே வருது.

மின்னுது மின்னல் said...

good work !!!


வாழ்த்துக்கள் !!
முதலில் பார்த்துவிட்டு போயிட்டேன்
அப்புறம் மனசு குறுகுறுனு இருந்துச்சி :)

MOHAMED SALEEM said...

very good nalla muyarchi

ஷ‌ஃபிக்ஸ் said...

நினைத்ததை சாதித்து விட்டீர்கள், நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள்.

இராஜகிரியார் said...

மப்ரூக்...!!! அதாங்க வாழ்த்துக்கள்...!!!

ஷ‌ஃபிக்ஸ் said...

ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு, எடுத்த காரியத்தில் மனதை ஒருமுகப்படுத்துதல் இவை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையே உங்கள் இந்த புதிய சாதனை நிரூபித்திருக்கிறது. இராஜகிரியார் போல நானும் 'அல்ஃப் மப்ரூக்' சொல்லிக்கொள்கின்றேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க ஈரோட்ல பிராட்பேண்ட் அன் லிமிட்டெட் பிளான் இல்லயா?

Anonymous said...

நல்லாருக்கு. இதை கனினியின் சிஸ்டம் கடிகார நேரத்தை வைத்து தானாகவே டெம்ப்ளேட் மாறும்படி வைத்திருக்கலாமே?

மகேஷ் said...

வாழ்த்துக்கள்! முன்னாடி இந்த டெம்ப்ளேட் முயற்சி பண்றேன்னு ஒரு பதிவு போட்டு இருந்தீங்க!

அதுக்கு அப்புறம் இப்ப தான் வர சமயம் கிடைத்தது. இப்போது வடிவமைத்துவிட்டீர்கள். விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள்

asfar said...

Congradulation:
கடின உழைப்பும் விடாமுயற்ச்சியும் வீணாகாது,வாழ்த்துக்கள்.

Anbu said...

கடின உழைப்பும் விடாமுயற்ச்சியும் வீணாகாது,வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

உங்களது கடின உழைப்பும், விடா முயற்சியும் அசர வைக்கிறது. அசத்துறீங்க போங்க. வாழ்த்துக்கள் சகோதரி.

டெம்ப்ளட் ரொம்ப சூப்பர்

SUMAZLA/சுமஜ்லா said...

//முதலில் பார்த்துவிட்டு போயிட்டேன்
அப்புறம் மனசு குறுகுறுனு இருந்துச்சி :)//

//very good nalla muyarchi//

//நினைத்ததை சாதித்து விட்டீர்கள், நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள்.//

//மப்ரூக்...!!! அதாங்க வாழ்த்துக்கள்...!!!//

ம்...எல்லாரும் வாழ்த்தறப்ப, ரொம்ம்ம்ம்ம்ப் பெரியா ஆளா ஆயிட்ட மாதிரி குஷியா இருக்கும்! அதோடு, என் உழைப்பின் வியர்வை உலர்ந்து, உடல் அப்படியே லேசான மாதிரி ஒரு ஃபீலிங்!

//மப்ரூக்...!!! அதாங்க வாழ்த்துக்கள்...!!!//

அன்லிமிட்டட் இருக்குங்க. ஆனா, அதுக்கு காசு அதிகம். இதுக்கே, அஞ்சு காசு பிரயோஜம் இல்லாம மணிக்கணக்கா நெட்ல உட்கார்ந்துகிட்டு இருக்கறதா வீட்டிலுள்ளவர்களுக்கு ஒரு நினைப்பு!

//நல்லாருக்கு. இதை கனினியின் சிஸ்டம் கடிகார நேரத்தை வைத்து தானாகவே டெம்ப்ளேட் மாறும்படி வைத்திருக்கலாமே?//

வெகு எளிதாக இதை செய்யலாம் என்றாலும், எனக்கு இது பிடிக்கவில்லை. என் வாசகர்கள் எந்த நிர்பந்தமும் இல்லாமல், அவரவர்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டில் வாசிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

asfar said...
Congradulation:
கடின உழைப்பும் விடாமுயற்ச்சியும் வீணாகாது,வாழ்த்துக்கள்.//

//Anbu said...
கடின உழைப்பும் விடாமுயற்ச்சியும் வீணாகாது,வாழ்த்துக்கள்//

ம்...விடாமுயற்சிக்கு இடையில் அந்த ‘ச்’ வராது. இதுல இருந்து தெரியுது, நீங்க காப்பி அடிச்சிருக்கீங்கனு.

//டெம்ப்ளட் ரொம்ப சூப்பர்//

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.நன்றி!

" உழவன் " " Uzhavan " said...

உங்களின் விடாமுயற்சி எங்களைப் பிரமிக்கவைக்கிறது. நம் உழைப்பை பணமாக மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. அப்படி மாற்றத் தெரிந்தவர்கள்தான் வாழ்வில் ஒரு நிலையை எட்டுகிறார்கள். வாழ்த்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நீங்க இடுகையிடுவது(நன்றி குறும்பன்), மற்ற இருகைகளை பார்வையிடுவது, பிடித்தால் பின்னூட்டமிடுவது, உங்கள் இடுகைகளின் பின்னூட்டங்களுக்கு பதில் இடுவது ஆகிய அனைத்து நிகழ்வுகளிலும் உங்கள் இணைய சேமிப்பு கரையும் என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்..

SUMAZLA/சுமஜ்லா said...

என்னுடைய தேவைக்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் கரைப்பேன். அதற்காக தாங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்தவருடைய விஷயத்தில் தலையிடுவது,

//(நீங்க இடுகையிடுவது(நன்றி குறும்பன்), மற்ற இருகைகளை பார்வையிடுவது, பிடித்தால் பின்னூட்டமிடுவது, உங்கள் இடுகைகளின் பின்னூட்டங்களுக்கு பதில் இடுவது)//

இலவசத்துக்காக அலைவது போன்ற அநாகரிகம் வேறு எதுவும் இல்லை என்பது என் அபிப்ராயம்.

அத்தகைய அநாகரிகமற்றவர்களுக்காக, அப்படி ஒன்றும் என் நேரத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டியதில்லை. எதற்கும் ஒரு விலை உள்ளது, ஒரு பிளாகரைப் பற்றிய மதிப்பீட்டிற்கும்...

உங்கள் பெயரில் மட்டும் தான் குறை ஒன்றும் இல்லை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்லா இருக்கு இது

வாங்க என் பக்கம்

Ravi said...

good work!

one comment on this. You must have heard the saying 'Sometimes, less is more!'

Too much of animation is only an eyesore!

my opinion only. i am not judging your work.

beermohamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்க கண்டுபிடிச்சிங்க நாங்களூம் அனுபவிக்க வேண்டாமா,எங்களுக்கும் பில் எகிற வேண்டாமா,
அடுத்து உங்கள் கண்டுபிடிப்பை நாங்களும் செய்ய காத்திருக்கிறோம் நன்றி

http://beermohamedtamilgroup.blogspot.com