பொதுவாக எந்த ஒரு வலைதளத்தில் புது விஷயங்கள் பார்த்தாலும், நான் அதன் சோர்ஸ் கோட் பார்த்து, அதைப் பற்றித் தெரிந்து கொள்வேன். பிடித்திருந்தால், என் தளத்திலும் அதைப் புகுத்துவேன். ஆனால், அழகியலோடு, அற்புதமாக என்னைக் கவர்ந்த வலை தளம் ஒன்று உள்ளது. அதைப் போல், என் தளத்தை உருவாக்க, நான் எடுத்த முயற்சி இதுவரை கைகூடவில்லை.
அத்தளத்தில், வலதுபுறம், லைட் ஸ்விட்ச் உள்ளது. அதை ஆன் செய்தால், லைட் எரிவது போன்ற எஃபக்ட் தெரிகிறது. ஆஃப் செய்தால், இரவு போன்ற தோற்றம் வருகிறது. அதிலும், காலை நேர தோற்றத்தில், இலைகள் உதிர்வது போல அமைக்கப்பட்டிருப்பது இன்னும் அழகு.
முனைவர் ரா. குணசீலன், சில வலைதளங்களில் பனி கொட்டுவது எப்படி? என்று பின்னூட்டத்தில் கேட்டவுடன், இத்தளத்தைப் பற்றி ஒரு போஸ்ட் எழுதத் தோணியது.
இத்தளத்தில், இரண்டு டெம்ப்ளேட், இரவுக்கு ஒன்றும் பகலுக்கு ஒன்றுமாக வைத்திருக்கிறார்கள். ஸ்விட்சை அழுத்தினால் மாறிக் கொள்வது போல ஜாவா ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார்கள்.
இதோ நான் கண்டு ரசித்ததை நீங்களும் ரசியுங்கள். Singapore Food Blog.
எனக்கு நேரமில்லாததால், இது போன்ற ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கும் முயற்சியை சற்று ஒத்தி வைத்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் கை கூடும்.
-சுமஜ்லா.
Tweet | ||||
15 comments:
தாங்கள் சுட்டிய தளம் மிகவும் அருமையாகவுள்ளது நண்பரே.....
இவையெல்லாம் வலைப்பதிவில் சாத்தியமா?
மிக அருமையான விஷயம்... தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருந்துச்சு... அந்த லைட் டெம்ப்ளேட்... பகிர்வுக்கு மிக்க நன்றிகள் ..திரி.சுமஜ்லா..
மன்னிக்கவும் திரு.சுமஜ்லா...
நீஙக ரொம்ப ....
ரொம்ப..
பெரிய அறிவாளி...
உண்மையாங்க...
நான் திரு.சுமஜ்லா அல்ல; திருமதி.சுமஜ்லா. என் பெயர் சுஹைனா, என்னவர் பெயர் மஜ்ஹர், என் பிள்ளைகள் லாஃபிரா மற்றும் லாமின்; கூட்டுப் பெயர் தான் சுமஜ்லா.
//இவையெல்லாம் வலைப்பதிவில் சாத்தியமா?//
html, java script இரண்டும் தெரிந்து, கூட கொஞ்சம் பொறுமையும் இருந்தால் சாத்தியமே!
பொதுவாக புத்திசாலிகள் முன்னேறுவதில்லை. முன்னேறியவர்கள் புத்திசாலிகளாக இருப்பதில்லை. நான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் பேரரசரே?!
நான் ஒரு சாதாரண இல்லத்தரசி! அவ்வளவே என் தகுதி!
நான் ஒரு சாதாரண இல்லத்தரசி! அவ்வளவே என் தகுதி! என்னே தன்னடக்கம்...
மன்னிக்கவும் சகோதரி... உங்க பெயர் டைப் பண்ணிணாலே சுஜ்மலா ன்னு வருது...
பொதுவாக புத்திசாலிகள் முன்னேறுவதில்லை. முன்னேறியவர்கள் புத்திசாலிகளாக இருப்பதில்லை. நான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் பேரரசரே?!
இதை என்னாலே ஏற்றுகொள்ள முடியவில்லை...
பணக்காரன் புத்திசாலியா இருப்பதில்லை, புத்திசாலி பணக்காரனா இருப்பதில்லை...
நீங்கள் புத்திசாலியான பணக்காரராக இருக்க வேண்டுமென்பது என் விருப்பம்
சகோதரி,..
ம்ம்ம்ம் அசத்துறீங்க! பூங்கொத்து!
//இதோ நான் கண்டு ரசித்ததை நீங்களும் ரசியுங்கள். Singapore Food Blog.//
நன்றி வித்தியாசமாக,ரசிக்கும்படி இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
THANKS .... GOOD INFORMATION
என்னென்னமோ சொல்றீங்க.. ஒன்னுமே புரியல :-)
உழவன், அங்க உங்களுக்கு போட்டு வெச்சிருக்க டெம்ப்ளேட் பார்க்கலையா?
//நீங்கள் புத்திசாலியான பணக்காரராக இருக்க வேண்டுமென்பது என் விருப்பம்//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி, சகோதரரே! இறைவன் போதுமானவன்.
லைட் எரியும் தளத்தை பார்த்தேன் முயற்ச்சி செய்தேன் முடியவில்லை
தாங்கள் முயற்ச்சி செய்து விளக்கவும் அஸ்ஸலாமு அலைக்கும்
http://beermohamedtamilgroup.blogspot.com
லைட் எரியும் தளத்தை பார்த்தேன் முயற்ச்சி செய்தேன் முடியவில்லை
தாங்கள் முயற்ச்சி செய்து விளக்கவும் அஸ்ஸலாமு அலைக்கும்
http://beermohamedtamilgroup.blogspot.com
Post a Comment