Monday, July 6, 2009

என் இதயக்கனி


என் மகளின் பிள்ளை பிராயத்தில் அவளுக்காக நான் எழுதியது!

நிலவு வந்து உன்னைக் கெஞ்சும்
...நீலவானில் இருந்த எந்தன்
கலரை ஏன் நீ கவர்ந்து சென்றாய்
...கறுப்பாய் நானும் மாறிவிட்டேனே!

கதிரும் வந்து கையேந் தியதே
...காலை நேரமென் ஒளியை காணோம்
புதிதாய் உன்முக வொளியைக் கண்டு
...புதிருக்கிப்போ விடை கண்டேனே!

மலர்கள் கூட மருகியத தனால்
...மணத்தை நீயும் கொண்டதினாலே
புலரும் பொழுதில் மணமில்லாமல்
...பூக்களின் இதயம் சருகாகியதே!

கிளிதன் மொழியில் இனிமை சேர
...கண்ணே உன் மொழி கடன் தாவென்று
களிப்புடனென் கண்மணி அருகே வந்து
...கெஞ்சி கெஞ்சி வேண்டி நின்றதே!

மானினம் குளத்தில் குனிந்தே சொன்னது
...மீனும் நானும் விழியழகிழந்தோம்
தேனே உன்விழி அழகின் முன்னே
...தோற்றுத் துவண்டு அழுகின்றோமே!

கன்னல் அமுதே கரும்பின் சுவையே
...காரிருள் வானில் தோன்றுமந்த
மின்னலை மிஞ்சும் சிரிப்பழகோடு
...மழலையில் மனதைக் கொள்ளையிட்டாயே!!!

-சுமஜ்லா

12 comments:

SUFFIX said...

இயற்க்கையோடு இழைந்தோடும் அழகிய வரிகள். மான், மீன், மலர்கள் ஒப்பீடு..சூப்பர்.

SUMAZLA/சுமஜ்லா said...

ஷஃபி, பூக்கள் கொட்டுவது எப்படி இருக்கிறது? படிக்க சிரமமாக இருக்கிறதா?

SUFFIX said...

Wow...so cute!! பூக்கள் கொட்டுவதில் சிரமம் என்ன இருக்கப்போவுது, மிகவும் அழகாக இருக்குங்க, முடிந்தால் பூக்களின் சைஸ் சிறிதாக ஆக்குங்களேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

அது தான் நானும் நினைத்தேன் ஷபி! இது சும்மா டெஸ்டிங் தான். அளவை சிறிதாக்கி, நேரத்தையும் எண்ணிக்கையையும் குறைத்தால், அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு, பூ, முழுப் பக்கத்துக்கும் கீழே வராமல், அந்த விண்டோவோடு நின்று விடுவது போல அமைத்தால் இன்னும் அழகூட்டும்.

SUFFIX said...

கலக்குங்க..கலக்குங்க..கலக்கிகிட்டே இருங்க‌

S.A. நவாஸுதீன் said...

நிலவு வந்து உன்னைக் கெஞ்சும்
...நீலவானில் இருந்த எந்தன்
கலரை ஏன் நீ கவர்ந்து சென்றாய்
...கறுப்பாய் நானும் மாறிவிட்டேனே!

அதை நினைவுகூரத்தான் மாசா மாசம் அமாவாசை வருதோ.

S.A. நவாஸுதீன் said...

கவிதை முழுவதும் அழகிய வார்த்தைகள் மட்டுமல்ல அளவில்லா பாசமும் தெரிகிறது

அதிரை அபூபக்கர் said...

நன்றாக உள்ளது... அப்புறம் அந்த ரோஜா பூக்கள் விழுவதும் கூட... அதற்கு எப்படி கோடிங் எழுதினீர்கள்..?

SUMAZLA/சுமஜ்லா said...

தேங்க்யூ, நவாஸ், ஷஃபி & அபுபக்கர்!
ஜாவா ஸ்க்ரிப்ட் கோடிங் தான். எனக்கு இதெல்லாம் தெரியாது, நெட்டில் தேடித் தேடி பழகிக் கொண்டேன்.

இராஜகிரியார் said...

அழகிய கவிதை.

"உழவன்" "Uzhavan" said...

அழகு மகளுக்கு அம்மாவின் அழகு வரிகள்.. அருமை.

//நிலவு வந்து உன்னைக் கெஞ்சும்//
இதுதான் சூப்பர்..
அமாவாசை அன்று கவிதை எழுதினீர்களோ :-))

SUMAZLA/சுமஜ்லா said...

அப்போ என் மகளுக்கு 2 வயது தான் இருக்கும். கொழு கொழு வென்று கொள்ளை அழகாக இருப்பாள். நானும் என்னவரும் கொஞ்சம் கலர் கம்மி, ஆனா அவ, பாட்டி தாத்தா மாதிரி கலரா இருப்பா. அதான் அவ அழகில் மயங்கி அன்று அப்படி எழுதினேன்.