Wednesday, July 8, 2009

ப்ளாக் முகவரி மாற்றுவது?


ஒரு சிலர், அவசரமாக ஒரு ப்ளாக் கிரியேட் பண்ணும் போது, எதாவது ஒரு முகவரி (url) கொடுத்து விடுவார்கள். பின்னர், இதை மாற்ற வேண்டும், இன்னும் எளிதாக்க வேண்டும் என்று நினைக்கும் போது, எப்படி செய்வது என்று தெரியாது.

இதை மாற்ற முடியாது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

Dashboard போய், உங்க ப்ளாகின் settings டேபை க்ளிக் செய்யுங்கள். இப்போ அதில், publishing என்று இருக்கும் சப் டேபை க்ளிக் செய்யுங்கள். கீழ்காணும் விண்டோ தோன்றும்.
இதில், Blog*Spot Address என்னும் இடத்தில், உங்க ப்ளாகின் பழைய பெயர் தோன்றும்; இதில், அதை நீக்கி விட்டு, புது பெயர் கொடுத்து, Availability செக் பண்ணி, Word Verification கொடுத்து சேவ் பண்ணினால் முடிந்தது அவ்வளவு தான்.

இனி, உங்களுக்கென்று .com என்றோ, .net என்றோ டொமைன் நேம் வாங்கிக் கொண்டால், இதில் மேலே இருக்கும் Custom Domain என்பதை க்ளிக் செய்து, ப்ளாக் பெயரை உங்க டொமைன் நேமுக்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது, ப்ளாகரில் தான் நாம் கணக்கு வைத்திருப்போம், பெயர் மட்டும் .blogspot.com என்று இருப்பதற்கு பதில் .com என்று இருக்கும். ஆனால், இதை விலை கொடுத்து வாங்க வேண்டும்.

-சுமஜ்லா.

17 comments:

ஈரோடு கதிர் said...

Very very useful tips. Thank u very much

Jaleela Kamal said...

அப்ப சுகைனா ரொம்பவே கிரேட் சரியா யோசித்து யோசித்து பதிவு போடுகிறீர்கள், நான் நான்கு ஓப்பன் பண்ணி பதிவு போட்டு வருகீறேன் அதை எப்படி ஒன்றாக மாற்றுவது.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்து போச்சு. ரொம்ப நன்றிங்க

SUMAZLA/சுமஜ்லா said...

அதை ஒன்றாக மாற்ற முடியாது அக்கா. ஒவ்வொரு போஸ்ட்டாக காப்பி பண்ணி மெயில் தளத்தில் போட்டுக் கொள்ளுங்கள். பின் மீதி மூன்றையும் டம்மியாக்கி விடுங்கள். அவ்வளவு தான்.

வேண்டுமானால், Add a Gadget போய் link list ல், தனித் தனியாக ஒவ்வொரு chapterக்கும் லின்க் கொடுத்து விடுங்கள். சிம்பிள்.

SUFFIX said...

அட என்னப்பா இது, பதிவாளர்களின் டெலிபதி!! எப்படிங்க இப்படி? ரொம்ப நன்றி, உபயோகமான பதிவு.

Jaleela Kamal said...

ஓ அப்படியா அது இப்போதைக்கு முடியாது, எல்லாத்திலும் 50 , 50 பதிவு தாண்டி விட்டது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பயனுள்ள தகவல்கள்

வாங்க என் பக்கத்துக்கு

நிலா அது வானத்து மேல!

asiya omar said...

சுஹைனா சேவை எமக்குத்தேவை,நன்றி.

ஷாகுல் said...

மாத்தலாம் ஆணால் தமிழ்மனத்தில் மீண்டும் இனைக்க வேண்டும்.

அப்துல்மாலிக் said...

தேவையான பயனுள்ள பதிவு

நன்றி பகிர்வுக்கு

இக்பால் said...

பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

அட.. அப்படியா.. ரொம்ப நன்றி மேடம் தகவலுக்கு :-)

Tech Shankar said...

Please export all your 4 blogs. YOu will get 4 different .xml files.

then import all .xml into a single blog.

It is possible. I did it b4 to merge more than 3 blog.


//நான் நான்கு ஓப்பன் பண்ணி பதிவு போட்டு வருகீறேன் அதை எப்படி ஒன்றாக மாற்றுவது.

Anonymous said...

பகிர்ந்தமைக்கு நன்றி...

SUMAZLA/சுமஜ்லா said...

இங்கிலீஷ்காரன் தமிழில் பதிவிட்டிருக்கிறார். தமிழ்நெஞ்சமோ, ஆங்கிலத்தில்! பேசாம உங்க பேரை English Heart என்று வைத்துக் கொள்ளலாமே?!

நட்புடன் ஜமால் said...

நான் இதுக்கு தலையை சுற்றி மூக்கை தொடும் விதம் யோசித்து வைத்திருந்தேன்.

இது ரொம்ப எளிதாக இருக்கும் போல

இதோ ட்ரையிங் ...

Anonymous said...

உபயோகமான விஷயம்! தமிழ்மணம் மாதிரியான திரட்டிகளில் திரும்பவும் இணைக்க வேண்டுமே!