Tuesday, July 14, 2009

திருமணநாள் வாழ்த்து

என் பெற்றோருக்கு இன்று 34 வது திருமண நாள். 2000ம் வருடம் அவர்கள் வெள்ளிவிழா கொண்டாடினார்கள். அதற்கு நானும் என் தம்பியரும் சேர்ந்து சிறு விழாவாக செய்து, கொஞ்சம் கெஸ்ட் எல்லாம் கூப்பிட்டு, அம்மாவுக்கு புது பட்டுடுத்தி அழகு பார்த்தோம். அதற்காக நான் மூன்று பாடல்கள் எழுத, தம்பி அவற்றைப் பாடி பதிவு செய்ய, சர்ப்ரைஸாக அதைப் போட்டு விட்டோம். கேட்ட என் பெற்றோரின் கண்களில் நெகிழ்ச்சியான கண்ணீர். இதோ அப்பாடல்கள்.

1.(ஏதோ ஒரு பாடல் மெட்டு)

ஏதோ ஒரு வாழ்த்து நம் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.
இந்த திருமண நாளினிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
இரு மன ஆழத்திலே சில ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் சுவையாகும்; ஞாபகங்கள் இனிப்பாகும்;
ஞாபகங்கள் தேனூற்றும்; ஞாபகங்கள் நீரூற்றும்.

ஜூலை பதினாளில் கரம் பிடித்திட்ட ஞாபகமே
திங்கள் நிலவினிலே மணம் முடித்திட்ட ஞாபகமே
பலப்பல இடங்கள் ஒன்றாய் சுற்றி வந்தது ஞாபகமே
மலரும் நினைவுகள் மனதில் மலரும் ஞாபகம்
முத்துப்பிள்ளைகள் மூன்றும் தவழ்ந்த ஞாபகம் (ஏதோ)

துன்பம் வந்தாலும் துணை நின்றிட்ட ஞாபகமே
இன்பம் கண்டாலும் இணை சேர்ந்திட்ட ஞாபகமே
கரங்கள் கோர்த்து தடைகள் எல்லாம் தாண்டிய ஞாபகமே
வெள்ளி விழாவிலே இன்று பழைய ஞாபகம்
மறக்க முடியுமா என்றும் அந்த ஞாபகம்(ஏதோ)

ஒரிஜினல் பாடல் இங்கே...

2.(இளைய நிலா பொழிகிறதே மெட்டு)

வெள்ளிவிழா வாழ்த்துக்களே
இதயம் வரை நனைகிறதே - இதைப்
போல என்றும் இணைந்திடவே விழா காணுமே நெஞ்சமே!

வரும் வழியில் வாழ்த்தொலிகள்
இன்பவிழா தினம் தினமும்
ராபியாமா இஸ்பஹானி
தாய் தந்தை மனம் மலரும்
நூறு காலங்கள் நீங்கள் வாழுவீர்
சேரும் வாழ்த்துக்கள் நாங்கள் பாடவே
இனிய விழா நாளினிலே கனவு வரும்(வெள்ளி)

இருமனங்கள் இணைந்ததனால்
இந்த விழா வந்ததம்மா
ஒரு மனமாய் ஆனதினால்
வெள்ளி விழா காணுதம்மா
சுஹைனாமஜ்ஹரும் மஹபூப்சுரைஜுடன்
லாப்புக்கண்ணுமே வாழ்த்துச் சொல்லவே
கண்மணிகள் சூழ்ந்திடவே வாழ்ந்திடுவீர்.(வெள்ளி)

ஒரிஜினல் பாடல் இங்கே...

3.(செல்லக்கிளிகளாம் பள்ளியிலே மெட்டு)

வெள்ளிக்கிழமையாம் வெள்ளிவிழா
இல்லத்தில் பூத்ததாம் இன்ப விழா
நம் வாழ்த்தொலிகள் இங்கு ஓங்குதம்மா(2)

இறையின் வழியும் நபியின் மொழியும் கொண்டு வாழும் அப்பா அப்பா
மறையை ஓதி மனங்கள் கூடி ஒன்றி வாழும் அம்மா அம்மா
எங்கள் மனதில் பாசம் கொண்டு உம்மை வாழ்த்த அம்மா அம்மா
சுஹைனா, மஹபூப், சுரைஜு, லாப்பும் வாழ்த்திப் பாட வந்தோமம்மா (நம்)

தந்தை மனமும் தாயின் அன்பும் சேர்ந்து வாழ இல்வாழ்விலே
உங்கள் ஆசி வேண்டி நிற்கும் பிள்ளை மூவர் இந்நாளிலே
பூவும் பொன்னும் பொருந்தி வாழ இறைவன் அருளைத் தந்தானம்மா
நூறு வயது இணைந்து வாழ நல்ல வாழ்த்து தந்தோமம்மா.(நம்)

ஒரிஜினல் பாடல் இங்கே...

-சுமஜ்லா.

14 comments:

ராமலக்ஷ்மி said...

உங்கள் பெற்றோருக்கு என் நல்வாழ்த்துக்கள்!

மெட்டுக்கேற்ப நீங்கள் இயற்றிய பாடிய பாடல்கள் அருமை. நிச்சயம் பெற்றவர்கள் அகமகிழ்ந்திருப்பார்கள்!

Ashif said...

உங்களின் பெற்றோர் பொன் விழா கொண்டாட வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

வாழ்த்துக்கள் உங்கள் பெற்றோர்களுக்கும், உங்களுக்கும்,

உங்களுக்கு எதுக்குன்னு கேக்குறிங்களா!
சீக்கிரமே சினிமாவில் பாட்டெழுத போறதுக்கு!

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்கள் பெற்றோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

பெற்றோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!

Malini's Signature said...

உங்கள் பெற்றோருக்கு என் நல்வாழ்த்துக்கள்!

பாடல்கள் எல்லாம் இனிமை.

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி!!!

//சீக்கிரமே சினிமாவில் பாட்டெழுத போறதுக்கு!//

ஏங்க இருக்கற வேலை பத்தாதா???

SUMAZLA/சுமஜ்லா said...

மேனகா, உங்க பேல்பூரி பதிவில், பதில் கொடுக்க முயன்றேன். லின்க்கே இல்லையேப்பா...

SUFFIX said...

அவர்கள் இல்லறம் மேலும் இனிதே இன்புற என் வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

பொதுவா நான் எல்லோரையும் அழைப்பது இல்லை. நான் விரும்பி படிக்கும் பதிவர்களுக்கு மட்டுமே என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன்.

எனக்கு ம‌ற்றொரு ப‌திவு உண்டு அதில் தான் நான் தொட‌ர்ந்து எழுதுகிறேன். முடிந்தால் வ‌ந்து பாருங்க‌.

http://ensaaral.blogspot.com/

"உழவன்" "Uzhavan" said...

உங்கள் பெற்றோருக்கு என் நல்வாழ்த்துக்கள்!

மெட்டுக்கேற்ப நீங்கள் இயற்றிய பாடிய பாடல்கள் அருமை. நிச்சயம் பெற்றவர்கள் அகமகிழ்ந்திருப்பார்கள்!
 
ரிப்பீட்டு :-)

Menaga Sathia said...

//மேனகா, உங்க பேல்பூரி பதிவில், பதில் கொடுக்க முயன்றேன். லின்க்கே இல்லையேப்பா...//

லிங்க்+கமெண்ட் ஆப்ஷன் இருக்கேப்பா.

SUMAZLA/சுமஜ்லா said...

அப்படியா, ஸ்டார்ஜான்! தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என் கருத்தை சொன்னேன். அவ்வளவு தான்.

மேனகா, நான் க்ளிக்கபிள் லின்க் தேடினேன். கிடைக்கவில்லை, மீண்டும் பார்க்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

சரியாகச் சொன்னீர்கள் உழவன்! அன்று என் தாய் தந்தையரை பொண்ணு மாப்பிள்ளை போல் ஆக்கி சந்தோஷப்பட்டதோடு, எல்லாரும் நினைவுப் பரிசு வழங்கிக் கொண்டோம். நான் வெள்ளி விழாவுக்கு என் தந்தைக்கு அன்பளித்த வெள்ளிப் பேனாவை இன்றும் அவர் பத்திரமாக வைத்திருக்கிறார்.