Friday, July 17, 2009

பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்!

இந்த பதிவை குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி!

இது என்னுடைய 99 வது பதிவு. அடுத்த பதிவு டெக்னிக்கலா இருக்க வேண்டுமென்று, இதில் நான் என் இனிய வாசக நண்பர்களிடம் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சுஹைனா என்ற என் பெயர், மஜ்ஹர் என்ற என்னவர் பெயர், இனிய செல்வங்கள், லாஃபிரா மற்றும் லாமின் ஆகியோரின் கூட்டுப் பெயர் தான் சுமஜ்லா.

என் ப்ரொஃபைலில் On Blogger Since March 2008 என்று இருந்தாலும், நான் இத்தளத்தில் பதிவிட ஆரம்பித்தது, March 2009 ல் தான். இதில் நான் 100 வது பதிவை எட்டி இருந்தாலும், என் அனைத்துத் தளங்களிலும் சேர்த்தால், மொத்த பதிவு, 300ஐ தாண்டி நிற்கும்.

இதுவரை நான் என் ப்ரொஃபைலில் உருவாக்கிய ப்ளாக்களின் எண்ணிக்கை, 39. இதில், பல ப்ளாக்கள், கூகுள் ஆட்சென்ஸுக்காக போன வருடம் ஆங்கிலத்தில் ஆரம்பித்து, அப்டேட் செய்யாமலே விட்டுவிட்டேன். அப்போதெல்லாம் எனக்கு தமிழ் யூனிகோட் டைப்பிங் தெரியாது.

இந்த ப்ளாகை ஆரம்பித்ததே, ஒரு கதை. நான் ஒரு சமையல் தளத்தில், என் ஹஜ் பயண அனுபவங்களை எழுத ஆரம்பிக்க, மத சகிப்புத்தன்மையற்ற சிலர் அதை எதிர்க்க, நிர்பந்தத்தால், அதை என் ப்ளாகில் எழுத ஆரம்பித்தேன். என்னுடைய எழுத்தை இகழ்ந்து விட்டார்களே என்ற வேகத்தில், ஆத்திசூடியின் எண் எழுத்து இகழேலை சற்று மாற்றி வைக்கப்பட்ட தலைப்பு தான், ‘என்’ எழுத்து இகழேல்.

பதிவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பது, எனக்கு மிக்க மனநிறைவைத் தருகிறது. ஒரு சில குறைகளும் உண்டு.

ஆதங்கமான சில விஷயங்களை முதலில் சொல்கிறேன். அதாவது, நான் ஆசைப்பட்டு நடக்காதவை அவை. 32 கேள்விகள் தொடருக்கு நான் பதில் எழுதி வைத்தும், யாரும் அழைக்காததால், அதை பதிவிட முடியாமல் போனது. சென்ற வாரத்தில் ஒரு சில பதிவுலக நண்பர்களோடு தோன்றிய கருத்து வேறுபாடுகள் முதலானவை.

100 வது பதிவை எட்டும் முன் என் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 100 தாண்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், ஒரு சிலர், அவர்கள் தம்மைத்தாமே பிரபலமாக்குவதற்காக, சகட்டுமேனிக்கு, எல்லா ப்ளாகில் தம்மை இணைத்துக் கொள்வதைப் பார்க்கும் போது, இந்த ஆசை .
போயே விட்டது.

அப்புறம், இந்த சினிமாவும் அரசியலும் நமக்கு ரொம்பவே தூரம். எப்பவுமே அதன் பக்கம் போவதில்லை. ஆனா, இதையெல்லாம் தாண்டி சில பதிவர்கள் அடித்துக் கொள்வது, ரீடரில் படிப்பவருக்காகவே எழுதுவது(எழுதிய உடன் நீக்குவது), பெண்களைத் தாக்கி ஆண்களும், ஆண்களைத் தாக்கி பெண்களும் பதிவிடுவது, என் கட்சி, உன் கட்சி என்று தாக்குவது எல்லாம் எனக்கு புதிய விஷயங்கள். இருந்தாலும், இன்று வரை தமிழ் கூறும் பதிவுலகம், ஓரளவுக்கு கண்ணியமான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது, ஒரு சில களைகளைத் தவிர!

ஒரு சிலருடைய வலைப்பதிவுகளில், 100க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பார்க்கும் போது, வாயைப் பிளந்து வியந்திருக்கிறேன். அதே சமயம், ‘வாழ்த்துக்கள்’, ‘நன்றி’, ‘அருமை’ ஆகிய வார்த்தைகள், தமிழில் இல்லாமல் இருந்திருந்தால், நிறைய பேருக்கும் நிறைய பின்னூட்டங்கள் மிஸ் ஆகி இருக்கும் என்று தோன்றும்.

இதில் ஆனந்தமான விஷயம் என்னவென்றால், எவ்வளவு நேரம் இருந்தாலும் போரே அடிக்காது. நேரம் போவதே தெரியாது. சொல்லப்போனால், நம் நேரத்தைத் திருடிக் கொள்கிறது. டெம்ப்ளேட் விஷயமாக நிறைய கற்றுக் கொண்டேன். இப்போ, இதில் என் பழைய டெம்ப்ளேட்டையும் இணைத்திருக்கிறேன். ரொம்ப ப்ரைட்டா இருப்பதாக நினைப்பவர்கள் அதில் படித்துக் கொள்ளலாம்.

பல நல்ல எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல நட்புக்களும் உருவாகி இருக்கிறது. தமிழில் இவ்வளவு பதிவர்கள் இருப்பதே எனக்கு நாலைந்து மாதம் முன்பு வரை தெரியாது. எனக்கு மிகவும் பிடித்த பதிவர்கள் ஒரு நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் பதிவைப் பார்த்து வியந்து நின்றிருக்கிறேன். அது யார் என்று கூற விரும்பவில்லை. காரணம், ஒவ்வொரு நண்பரும் தாமே என்று எண்ணி ஆனந்தப்பட வேண்டும்.

சில பதிவுகளுக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறேன். ஆனால், பாராட்டி வரும் பின்னூட்டங்கள் தான் பலமே! எல்லா மெனக்கெடல்களுக்கும் ஒரு அர்த்தம் இருப்பதாகத் தோன்றும்.

நண்பர் உழவனிடமிருந்தும், முனைவரிடமிருந்தும் கிடைத்த பட்டாம்பூச்சி விருதுகள், தமிழரசி வழங்கிய INTERESTING BLOG AWARD ஆகியவை என் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள். மூவருக்கும் என் நன்றி!

சுமஜ்லா என்ற பெயரை பதிவுலகில் ஒரு முத்திரையாக பதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் வேக வேகமாக பதிவுகள் போட்டேன். நான் புரிந்து கொண்ட ஒன்று என்னவென்றால் நாம் ஓடினால், பின்னால் ஒரு பத்து பேர். சிறிது தூரத்துக்குப் பின் இன்னொரு பத்து பேர். இப்படியாக ஒரு கூட்டம் ரெஸ்ட் எடுக்க, அடுத்த கூட்டம் பின்னால் வரும். ஆனால் நாம் மட்டும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், மூச்சிரைத்தாலும் சரி! ஆனால் அதில் தான் என்ன ஒரு ஆனந்தம்!!!

இனி, 100 வது பதிவுடன் சற்று என் வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். காரணம், M.A. ஆங்கில இலக்கியம் புத்தகங்கள் வந்து விட்டது. படிக்க வேண்டும். செப்டம்பர் 14 முதல் B.Ed வகுப்புகளும் தொடங்கப் போகின்றன. அடுத்த மாதம் புனித ரமலான் வருகிறது. இதை எல்லாம் விட, இப்போது நான் வெப் டிசைனிங் பக்கம் என் கவனத்தைத் திருப்பி உள்ளேன். அது என் கிரியேட்டிவிட்டிக்கு தீனி போடுவதாக உள்ளது. இதோ, முதல் முறையாக என் தம்பிக்காக நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் இணைய தளம்: http://www.magesticpoint.com/ சென்று பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

என் பலமே என் வாசக அன்பர்கள் தான். தினமும் பதிவிட்டாலும், பதிவிடாவிட்டாலும், என் வாசகர்களை இழந்து விட மாட்டேன் என்ற நம்பிக்கை உள்ளது. என் எழுத்துக்களின் தரப்பரிசோதகர்கள் நீங்கள் தானே!!

என்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்,

சுமஜ்லா.

71 comments:

நிகழ்காலத்தில்... said...

//எனக்கு மிகவும் பிடித்த பதிவர்கள் ஒரு நாலைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் பதிவைப் பார்த்து வியந்து நின்றிருக்கிறேன். அது யார் என்று கூற விரும்பவில்லை. காரணம், ஒவ்வொரு நண்பரும் தாமே என்று எண்ணி ஆனந்தப்பட வேண்டும்.//

என்னைப் பற்றி எழுதியதற்கு ஆனந்தப்படுகிறேன் !!!

கிரி said...

// 32 கேள்விகள் தொடருக்கு நான் பதில் எழுதி வைத்தும், யாரும் அழைக்காததால், அதை பதிவிட முடியாமல் போனது.//

அட! இதுக்கெல்லாம் வருத்தபடாதீங்க.. வரலையேன்னு சந்தோஷப்படுங்க

//தம்மைத்தாமே பிரபலமாக்குவதற்காக, சகட்டுமேனிக்கு, எல்லா ப்ளாகில் தம்மை இணைத்துக் கொள்வதைப் பார்க்கும் போது, இந்த ஆசை .
போயே விட்டது.//

:-)

//அதே சமயம், ‘வாழ்த்துக்கள்’, ‘நன்றி’, ‘அருமை’ ஆகிய வார்த்தைகள், தமிழில் இல்லாமல் இருந்திருந்தால், நிறைய பேருக்கும் நிறைய பின்னூட்டங்கள் மிஸ் ஆகி இருக்கும் என்று தோன்றும்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இதை விட்டுட்ட்டீங்களே :-D)


மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள் (உங்கள் மன நிறைவிற்கு) திறமை உள்ளவர் என்றும் மற்றவர்களால் அறியப்படுவார்...

என்ன தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்யாம அதை அடைவதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும் அவ்வளவே ..slow and steady :-)

வாழ்த்துக்கள்

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், என் ப்ளாக்குக்கு வந்தமைக்கு நன்றி! கவைதை வாழ்த்துக்கு நன்றி!
உங்க 100வது பதிவுக்கு அட்வன்ஸ் வாழ்த்துக்கள்.
சில டவுட்கள்
1. அகலமான ப்ளாக் டெம்ப்ளேட் எங்கு கிடைக்கும்?
2. //உங்க ப்ரொஃபைலில் ஒரு மெயின் ப்ளாக் மட்டும் டிஸ்ப்ளே இருந்தால், புதியவர் வருகைக்கு உதவுமே?!// என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா பயனிருக்கும்!

வாழ்த்துக்கள்

மதுவதனன் மௌ. said...

செஞ்சுரிக்கான பரபரப்புத் தெரிகிறது... தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

சென்ஷி said...

வாழ்த்துக்கள்!

கதிர் said...

100 என்ற மாய எண் உங்களை வேகமாக செலுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி!

பிரபு,
அகலமான டெம்ப்ளேட் free three column templates என்று கூகுளில் தேடுங்கள். நிறைய கிடைக்கும். நான் ஒரு நாலைந்து டெம்ப்ளேட்ஸ் போட்டேன். ‘பதிவர்களுக்கு’ என்ற தலைப்பின் கீழ் பாருங்கள். பிடித்திருந்தால், உபயோகித்துக் கொள்ளுங்கள்.

அதாவது, உங்கள் ப்ளாக் சிலவற்றில் எந்த பதிவும் இல்லை. உங்க பெயரைச் சுட்டினால், உங்க ப்ரொஃபைல் வரும். அதில் உங்க ப்ளாகின் பெயர்கள் வரும். அதன் மூலம் தான் நான்(புதியவர்கள்) வருவார்கள்.

உங்க ப்ளாக் டேஷ் போர்டு போய், edit profile என்று இருப்பதைக் க்ளிக் செய்து, select blogs to display என்பதை திறந்து, நான் விரும்பும் ப்ளாகுகள் மட்டும் டிஸ்ப்ளே ஆகும் வகையில் மாற்றிக் கொள்ளவேண்டும். பல ப்ளாகுகள் ஆக்டிவ்வாக இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இணைப்பு லின்க் கொடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக, சைடில் இருக்கும் ‘நான் வளர்க்கும் வலைப்பூக்கள்’ போல.

jothi said...

//32 கேள்விகள் தொடருக்கு நான் பதில் எழுதி வைத்தும், யாரும் அழைக்காததால், அதை பதிவிட முடியாமல் போனது.//

:((((

எழுத்துகள் படிக்கத்தான்.
வெளிவிடுங்கள் நண்பரே,..

//ஒரு சிலருடைய வலைப்பதிவுகளில், 100க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பார்க்கும் போது, வாயைப் பிளந்து வியந்திருக்கிறேன். //

நன்றாய் பாருங்கள், அது போன்ற பதிவுகளில் அனைவருக்கும் நன்றி என ஒற்றை வரியில் முடித்து, அடுத்த பதிவை தொடங்கி இருப்பார்

SUMAZLA/சுமஜ்லா said...

//என்னைப் பற்றி எழுதியதற்கு ஆனந்தப்படுகிறேன் !!!//

அட, உங்க ப்ரொஃபைலில் உள்ள மொட்டைத்தலை குட்டியே சொல்வது போல் உள்ளது.

SUMAZLA/சுமஜ்லா said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இதை விட்டுட்ட்டீங்களே :-D)//

இதுக்கு என்னங்க அர்த்தம்? அர்த்தமில்லாத எதையும் நான் எழுதறதில்லையாக்கும்!

//என்ன தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்யாம அதை அடைவதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும் அவ்வளவே ..slow and steady :-)//

அது என்னங்க தில்லாலங்கடி வேலை?! எனக்கு புரியலைங்க...

SUMAZLA/சுமஜ்லா said...

//செஞ்சுரிக்கான பரபரப்புத் தெரிகிறது... //

அட நீங்க வேற, என் ப்ளாகில் டிராஃப்டாக இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை 150 ஐ தாண்டும். மிக வேகமாக பதிந்தால், பல நல்ல பதிவுகள் படிக்கப்படாமலே போய்விடும்! எதுவும் சூடா இருந்தா தானே நம்மவருக்குப் பிடிக்கும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//100 என்ற மாய எண் உங்களை வேகமாக செலுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்//

கதிர், மேலே சொன்ன அதே பதிலை படித்துக் கொள்ளுங்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//சென்ஷி said...
வாழ்த்துக்கள்!//
நன்றி!

ஹர்ஷினி அம்மா - said...

சுஹைனா உங்கள் அடுத்து வரும் 100வது பதிவுக்கு வாழ்த்துகள்.

முதலில் உங்கள் கவிதைகளை ரசிக்க ஆரம்பித்து பின் கதைகள், பாடல்கள், உங்களின் இனிமையான் பயண அனுபவங்கள், பிளாக் டெம்பிளேட் எல்லாமே மிகவும் அருமை இன்னும் நிறைய சாதிக்க என் இனிய வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

தமிழ் பிரியன் said...

அக்கா, வாழ்த்துக்கள்! நாங்க எல்லாம் முதலில் உங்களோட ஓடி வந்தவங்களில் ஒரு ஆளுன்னு நினைக்கிறேன்.. இப்ப நிறைய பேர் உங்களோட ஓடுவதால்.. கூட ஓட ஆள் இல்லாதவர்களுக்கு துணைக்கு ஓடப் போய்ட்டோம்.. இருந்தாலும் ரீடரில் படிச்சிக்கிட்டு தான் இருக்கோம்.

மீண்டும் வாழ்த்துக்கல்!

தமிழ் பிரியன் said...

//வாழ்த்துக்கல்!///
மன்னிக்கவும்.. வாழ்த்துக்கள்!

gulf-tamilan said...

வாழ்த்துகள் !!!
draftல் வைத்திருப்பதைய்ம் போடவும்.

அபுஅஃப்ஸர் said...

உங்களை பற்றி தெரிஞ்சுக்கிட்டதில் ரொம்ப சந்தோசம், 32 கேள்விக்கணையில் நீங்கள் சிக்காமல் இருந்தது வருத்தம்தான். 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

வாரம் ஒரு முறையேனும் பதிவிட்டால் எந்த பெர்ஸனல் வேலையும் பாதிக்காது

தொடருங்கள் ஆதரவுதர நாங்கள் இருக்கோம்

கே.ரவிஷங்கர் said...

வாழ்த்துக்கள்!

பிளாக் நன்றாக இருக்கிறது.உங்கள் தம்பிக்கு உருவாகும் பிளாக் ஸ்பெல்லிங்
பாருங்கள் “Majestic" "J" வரவேண்டும்.

நன்றி.

ஷ‌ஃபிக்ஸ் said...

சென்ட்ச்சுரி அடிக்கப்போறீங்க!! வாழ்த்துக்கள்! இந்தக்கடிதப்பதிவையும் ரசித்து படித்தேன்.

Mrs.Menagasathia said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுகைனா!!
உங்கள் எழுத்து திறமை கண்டு வியந்திருக்கேன்,எழுத்து நடையும் அருமை.மேலும் 1000 பதிவுகள் எழுத வாத்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்! பெயர்க் காரணம் நன்றாக உள்ளது. மேல் படிப்பில் பிஸியாகி விட்டாலும் அவ்வப்போது பதிவிடுங்கள்!

Sukumar Swaminathan said...

வாழ்க !! மென்மேலும் வளர்க !!

Mrs.Menagasathia said...

சுகைனா உங்களை 32 தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.பதிலளியுங்கள்.
http://sashiga.blogspot.com/2009/07/32.html

கீழை ராஸா said...

சமீப காலமாக ஓரிருமுறை உங்கள் பதிவை பார்க்க நேர்ந்தது..சில டெக்னிக்கல் விசயங்கள் உங்கள் மூலம் கற்றுக்கொண்டேன்.

ஆனால் உணர்வுப்பூர்வமான உங்கள் பதிவைப்பார்ப்பது இதுவே முதல் முறை...எதுகை மோனையாய் பேசுவதை விட இதயத்தில் தோன்றியதை எழுத்தில் வடிப்பவர்கள் தான் பதிவுலகில் சீக்கிரமே வெற்றிபெற முடியும் என்பது என் கருத்து அந்த தகுதி உங்கள் எழுத்தில் நிறையவுள்ளது...

அருமையான பதிவு இது...எத்தனையோ பதிவர்களின் வெளிக்காட்டப்படாத ஆதங்கள் உங்கள் பதிவில் நிரம்பி உள்ளது.

பதிவு என்பது ஒரு பார்ட்டைம் தான் நமக்கு புல் டைம் வேலை நிறைய உள்ளது...

உங்கள் முழு நேர வேலைகளை கவனியுங்கள் அவ்வப்போது இன்ஷா அல்லாஹ் பதிவு பக்கம் வாருங்கள்...

திறமை ஒரு போதும் நிராகரிக்கப்படுவதில்லை...

//32 கேள்விகள் தொடருக்கு நான் பதில் எழுதி வைத்தும், யாரும் அழைக்காததால், அதை பதிவிட முடியாமல் போனது.//

நண்பர் நட்புடன் ஜமால் என்னை நீண்ட நாட்களுக்கு முன் இந்த பதிவிற்கு என்னை அழைத்திருந்தார்.சில வேலைப்பளு காரணமாக என்னால் எழுத இயலவில்லை.இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுதுவேன். அதற்கு முன்பே உங்களை தொடர்பதிவிற்கு அழைப்பதாக எண்ணி தங்களின் 100 வது பதிவை உங்களைப்பற்றி எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

\\\\ சுமஜ்லா என்ற பெயரை பதிவுலகில் ஒரு முத்திரையாக பதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் வேக வேகமாக பதிவுகள் போட்டேன். நான் புரிந்து கொண்ட ஒன்று என்னவென்றால் நாம் ஓடினால், பின்னால் ஒரு பத்து பேர். சிறிது தூரத்துக்குப் பின் இன்னொரு பத்து பேர். இப்படியாக ஒரு கூட்டம் ரெஸ்ட் எடுக்க, அடுத்த கூட்டம் பின்னால் வரும். ஆனால் நாம் மட்டும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், மூச்சிரைத்தாலும் சரி! ஆனால் அதில் தான் என்ன ஒரு ஆனந்தம்!!! //// .


வாழ்த்துக்கள் சுஹைனா,


வைர வரிகள்


100 அல்ல 10000..... பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

ஸ்ரீ.... said...

யதார்த்தமான பதிவு. 100 ஐ நெருங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு பதிவுகள் தருவதற்கும்!

ஸ்ரீ....

jay said...

சச்சின் போல பல சதம் அடிக்க வாழ்த்துக்கள் . ப்லோக் ல கூகிள் ஆட் சென்ஸ் கணக்கு The account associated with publisher ID ca-pub-749480898715051 has been டிசப்லே வருது இதுக்கு ஒரு பதிவு போட்ட என்னை போல புதியவருக்கு உதவிய இருக்கு இது கூட உங்க நூறாவது பதிவ இருக்கலா

jay said...

http://jai-vin.blogspot.com

Mrs.Faizakader said...

சுமஜ்லா உங்களின் 100 வது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்... இன்னும் பல பயனுள்ள குறிப்புகள் தந்து பல 100 பதிவுகள் தரனும் என்று வாழ்த்துகிறேன்...
1மாதம் ஊருக்கு போய் வருவதற்க்குள் உங்கள் ப்ளாக் மிகவும் அருமையாக மாறியிருக்கு.
ரொம்ப நல்லாயிருக்கு.
//32 கேள்விகள் தொடருக்கு நான் பதில் எழுதி வைத்தும், யாரும் அழைக்காததால், அதை பதிவிட முடியாமல் போனது.//
எனக்கு வந்த அழைப்பின் பதில் பதிவில் உங்களையும் தமிழ்பிரியன் அண்ணனையும் அழைக்க நினைத்தேன்.ஆனால் நீங்கள் ரொம்ப பிசியாக பல பயனுள்ள பதிவுகள் தரிங்க இதை ஏற்றுக்கொள்விங்களா என்று சிறு ஐய்யம் அதான் வீட்டேன்..
draft ல் இருக்கும் பதிவை போடவும்.

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு. மனதில் பட்டதை தெளிவாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்

asiya omar said...

சுஹைனா ,உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைப்பதில் உள்ளபடியே சிறந்து விளங்குகிறீர்கள்.

Anonymous said...

அப்பப்பா எத்தனை திறமை எவ்வளவு பொருமை எத்தனை முயற்சி எவ்வளவு வேகம் ஆர்வம் அக்கறை பொருப்பு...இவையெல்லாம் கலந்த கலவை தான் வியப்புக்குரிய பெண்மணிப்பா நீங்க.....ஆதங்கம் அன்பு பணிவு ..இவையும் கூடா..உங்கிட்ட நான் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளதுபா...என் சோம்பேறி தனம் அவ நம்பிக்கை இதை நான் முதல்ல விடபோறேன்..உங்கிட்ட கத்துகிட்ட பாடமாக.... ஊக்கமளித்த உங்கள் வார்த்தைக்கு நன்றி.....வேலையிருக்கு ரொம்ப ஒதுங்கிடாதீங்க நாங்களும் இருக்கோம் அடிக்கடி இல்லையென்றாலும் முடியும் போது வாங்கப்பா....

SUMAZLA/சுமஜ்லா said...

//எழுத்துகள் படிக்கத்தான்.
வெளிவிடுங்கள் நண்பரே,..//

நிச்சயம் வெளியிடுகிறேன் ஜோதி! ஆனால் அதற்கும் முன் வேறு சில நல்ல பதிவுகள் உள்ளன.

SUMAZLA/சுமஜ்லா said...

ஹர்ஷினி அம்மா..., கோவி கண்ணன்

நன்றிங்க. என்னை நான் புரிந்து வைத்ததை விட நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//நாங்க எல்லாம் முதலில் உங்களோட ஓடி வந்தவங்களில் ஒரு ஆளுன்னு நினைக்கிறேன்.. இப்ப நிறைய பேர் உங்களோட ஓடுவதால்.. கூட ஓட ஆள் இல்லாதவர்களுக்கு துணைக்கு ஓடப் போய்ட்டோம்.. //

உண்மையில் நான் அதை எழுதும் போது, முதலாவதாக உங்கள் நினைவு தான் வந்தது. இருந்தாலும், சரியான நேரத்தில் ஆஜராகி விடுகிறீர்கள்.நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

////வாழ்த்துக்கல்!///
மன்னிக்கவும்.. வாழ்த்துக்கள்!//

என்ன அப்படி சொல்லி விட்டீர்கள். நீங்கள் வீசிய கல் வைரக்கல்லாகக் கூட இருக்கலாமல்லவா?

SUMAZLA/சுமஜ்லா said...

//வாழ்த்துகள் !!!
draftல் வைத்திருப்பதைய்ம் போடவும்.//

நிறைய நல்ல பதிவுகள்(!) ஸ்டாக் டப்பாவில் இருந்தாலும், பசி எடுத்துத்தான் புசிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். வேக வேகமாக போட்டால் படிக்கப்படாமலே உள்ளே போய் விடும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//பிளாக் நன்றாக இருக்கிறது.உங்கள் தம்பிக்கு உருவாகும் பிளாக் ஸ்பெல்லிங்
பாருங்கள் “Majestic" "J" வரவேண்டும்.//

ம்...நன்றாகவே தெரியும். ஆங்கில இலக்கிய மாணவியல்லவா?! ஆனாலும், 'j' கிடைக்கவில்லை; ஏற்கனவே அந்த ஸ்பெல்லிங்கில் வேறொருவர் தளம் உள்ளது.

SUMAZLA/சுமஜ்லா said...

//சென்ட்ச்சுரி அடிக்கப்போறீங்க!! வாழ்த்துக்கள்! இந்தக்கடிதப்பதிவையும் ரசித்து படித்தேன்.//

இன்னும் நிறைய இந்த கடிதத்தில் எழுதி வைத்திருந்து, சென்சார் பண்ணி விட்டேன் ஷபி.

ஒவ்வொரு பதிவின் கீழும் சிலருடைய பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று பார்ப்பேன், அதில் நீங்களும் ஒருவர். உங்க ப்ளாக் டெம்ப்ளேட்டை நிச்சயமாக அகலப்படுத்தித் தருவேன், என்றாவது ஒருநாள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//மேலும் 1000 பதிவுகள் எழுத வாத்துக்கள்.//

உங்க ரெஸிப்பியில் வாத்து பிரியாணி உண்டா மேனகா?!

SUMAZLA/சுமஜ்லா said...

//பெயர்க் காரணம் நன்றாக உள்ளது. மேல் படிப்பில் பிஸியாகி விட்டாலும் அவ்வப்போது பதிவிடுங்கள்!//

இந்த பெயர்க்காரணமும் 32 தொடரில் எழுதி வைத்திருந்தது தான்.

ஓய்வு எடுக்க, தன் பட்டறைக்கே போன தாமஸ் ஆல்வா எடிசன் கதை தான் என்னுடையதும். அவருக்கு பட்டறை, எனக்கு பதிவறை!

SUMAZLA/சுமஜ்லா said...

//வாழ்க !! மென்மேலும் வளர்க !!//

நன்றி சுகுமார்.

SUMAZLA/சுமஜ்லா said...

//சுகைனா உங்களை 32 தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.பதிலளியுங்கள்.
http://sashiga.blogspot.com/2009/07/32.html//

நிச்சயமாக மேனகா! ஆனால், இன்னும் ஒரு வாரம் போகட்டும்.

SUMAZLA/சுமஜ்லா said...

கீழை ராஸா,
மிக நீண்ட உரைக்கு மிக்க நன்றி!
என்னைப் பற்றி எவ்வளவு உயர்வான அபிப்ராயம்?! நன்றிங்க!

இன்ஷா அல்லாஹ், என் ஆயுள் முழுவதும் பதிவு போட்டுக் கொண்டே தான் இருப்பேன்.

32 கேள்வி தொடர்பாக ஏற்கனவே பதில் தந்துள்ளேன் பார்க்கவும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//வாழ்த்துக்கள் சுஹைனா,


வைர வரிகள்


100 அல்ல 10000..... பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்//

நன்றி ஸ்டார்ஜன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//யதார்த்தமான பதிவு. 100 ஐ நெருங்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு பதிவுகள் தருவதற்கும்!//

நன்றி! வாழ்த்தியமைக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

//ப்லோக் ல கூகிள் ஆட் சென்ஸ் கணக்கு The account associated with publisher ID ca-pub-749480898715051 has been டிசப்லே வருது இதுக்கு ஒரு பதிவு போட்ட என்னை போல புதியவருக்கு உதவிய இருக்கு இது கூட உங்க நூறாவது பதிவ இருக்கலா//

என்னுடைய நூறாவது பதிவு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு எழுதப்பட்டு விட்டது!

நீங்கள் ஆட்சென்ஸில் கணக்கு துவங்கும் போது, உங்களுக்கென்று ஒரு எண் தருவார்கள். அது தான் இது. ஒரு ப்ளாகில் வேறு ஒருவருடைய கணக்குக்கான அட்வர்டைஸ்மெண்ட்ஸ் போட்டுக் கொள்ள முடியும்.

அதனால், நீங்கள் ஏற்கனவே கணக்கு துவங்கியாச்சா? இல்லையென்றால், துவங்குங்கள். பிறகு, உங்கள் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.

இப்போ, உங்க ப்ளாகுக்குப் போய் ஆட்சென்ஸ் போடும் போது, பாருங்கள், வேறு எண் என்றால், மற்றொரு எண்ணைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் கீழே வரும். அதில் உங்களுக்கான எண்ணைக் கொடுக்கவும். அவ்வளவு தான்.

SUMAZLA/சுமஜ்லா said...

//1மாதம் ஊருக்கு போய் வருவதற்க்குள் உங்கள் ப்ளாக் மிகவும் அருமையாக மாறியிருக்கு.
ரொம்ப நல்லாயிருக்கு.//

தேங்க்யூ ஃபாயிஜா! ஊரில் எல்லாரும் சுகமா?

32 கேள்வி கண்டிப்பாக போடுகிறேன். ஒரு வாரம் போகட்டும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//நல்ல பதிவு. மனதில் பட்டதை தெளிவாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்//

நன்றி செந்தில்வேலன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//சுஹைனா ,உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைப்பதில் உள்ளபடியே சிறந்து விளங்குகிறீர்கள்.//

அக்கா உங்க வாக்கிய அமைப்பு அழகு! கவிதை போல் இருக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

//எத்தனை திறமை எவ்வளவு பொருமை எத்தனை முயற்சி எவ்வளவு வேகம் ஆர்வம் அக்கறை பொருப்பு...//

என்ன தமிழ்? எனக்கு தெரியாததையெல்லாம் சொல்கிறீர்கள்! என் கணவர் படித்து சிரிக்கப் போகிறார்.

ஒரேடியாக ஒதுங்க மாட்டேன். நேரமில்லாவிட்டாலும் ட்ராஃப்ட்டில் இருப்பதை வெளியிடுவேன்.

S.A. நவாஸுதீன் said...

நான் விடாமல் உங்களின் எல்லா பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் திறமைகளைக் கண்டு வியந்திருப்பவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவன். நீங்கள் நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக எழுதவேண்டும் என்பதே எல்லோரைப்போன்றும் என்னுடைய விருப்பமும்.

கீதா ஆச்சல் said...

வாழ்த்துகள் சுகைனா. உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை.

உங்கள் ப்ளாக் அனைவருக்கும் பெரிதும் உதவுகின்றது.

அபி அப்பா said...

அட இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்.

" உழவன் " " Uzhavan " said...

ஆஹா.. அழகா தொகுத்து சொல்லிருக்கீங்க தோழி.. 100க்கு வாழ்த்துக்கள்! எம் ஏ மற்றும் பிஎட்டுக்கும் வாழ்த்துக்கள். வெற்றியோடு திரும்புங்கள்.
வலையுலகில் அதிகமான நேரம் செலவிட முடியாவிட்டாலும். அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்துவிட்டாவது செல்லுங்கள்.
 
அன்புடன்
உழவன்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் விருதுக்கு மற்றும் 99ஆம் பதிவுக்கு.

உங்களை ரீடரில் படிப்பவர்களில் நானும் ஒருவன்.

தொடர்க தங்கள் எழுத்து ...

SUMAZLA/சுமஜ்லா said...

//நான் விடாமல் உங்களின் எல்லா பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் திறமைகளைக் கண்டு வியந்திருப்பவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவன். நீங்கள் நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக எழுதவேண்டும் என்பதே எல்லோரைப்போன்றும் என்னுடைய விருப்பமும்.//

இவ்வளவு வேகமாக இல்லாவிட்டால், நிச்சயம் பதிவிடுவேன். ட்ராப்ட்டாக வைத்திருப்பதை எல்லாம் பின்ன என்ன செய்வது?

SUMAZLA/சுமஜ்லா said...

//வாழ்த்துகள் சுகைனா. உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை.

உங்கள் ப்ளாக் அனைவருக்கும் பெரிதும் உதவுகின்றது.//

நன்றி! கீதா வாழ்த்தியமைக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

//வலையுலகில் அதிகமான நேரம் செலவிட முடியாவிட்டாலும். அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்துவிட்டாவது செல்லுங்கள்.//

அட, வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் நான் எப்படிங்க வராமல் இருக்க முடியும்?

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்களை ரீடரில் படிப்பவர்களில் நானும் ஒருவன்.

தொடர்க தங்கள் எழுத்து ...//

நானும் பலருடைய பதிவை நேரமின்மை காரணமாக ரீடரில் தான் படிக்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//அட இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்.//

உங்க எழுத்தை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன், ரீடரில்!

mohd. said...

100ஆவது பதிவிற்காக
முன்னதாக
வாழ்த்துக்கள்!
-நிஜாமுத்தீன்.

இராஜகிரியார் said...

நூறாவது பதிவிற்கும், தங்களுக்கும் நூறாயிரம் வாழ்த்துக்கள்...!!!

SUMAZLA/சுமஜ்லா said...

//100ஆவது பதிவிற்காக
முன்னதாக
வாழ்த்துக்கள்!
-நிஜாமுத்தீன்.//

எனக்கு இன்னொரு தளத்தின் வாயிலாக இன்னொரு நிஜாம் அண்ணாவைத் தெரியும். அவர் தான் நீங்களா? தெரியவில்லை. எனினும் வாழ்த்தியமைக்கு நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

//நூறாவது பதிவிற்கும், தங்களுக்கும் நூறாயிரம் வாழ்த்துக்கள்...!!!//

என் பதிவுக்கு வாழ்த்துவதோடு, என்னையும் வாழ்த்தி இருக்கிறீர்களே? என்ன ஒரு சகோதர பாசம்?! மிக்க நன்றி அண்ணா(தம்பி!)

mohd. said...

"எனக்கு இன்னொரு தளத்தின் வாயிலாக இன்னொரு நிஜாம் அண்ணாவைத் தெரியும். அவர் தான் நீங்களா? தெரியவில்லை."

எனது பெயர் அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
தங்களுடைய "தெரியவில்லை"-க்கு
இப்போது விடை தெரிந்ததா?

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் சார், ரொம்பவும் குழப்பறீங்க என்னை! எந்த நிஜாம்னு நிஜமாவே தெரியல. சொல்லுங்களேன்.

இராஜகிரியார் said...

//என் பதிவுக்கு வாழ்த்துவதோடு, என்னையும் வாழ்த்தி இருக்கிறீர்களே? என்ன ஒரு சகோதர பாசம்?! மிக்க நன்றி அண்ணா(தம்பி!)//

உங்கள் சந்தேகத்திற்குப் பிறகு தான் மெனக்கெட்டு உங்களுடைய Profile க்கு சென்று பார்த்தேனுங்கோ. என்ன ஒரு ஆச்சரியம்...! நான் இரண்டுமே இல்லீங்கோ. ஆனால் சகோதரனுங்கோ...அட நானும் 32 தானுங்கோ...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.