Thursday, July 16, 2009

இழுநீள்சுட்டி (Drop Down Menu)

என் ப்ளாகில் பதிவின் வலது புறம், Drop Down Menu பார்க்கலாம். எப்படி அதைக் கொண்டு வருவது? இதோ சுலபமான வழி!

(DROP DOWN MENU வின் தமிழாக்கம் தெரியவில்லை; அதான் தமிழுக்கு புது வார்த்தை தரலாம் என்று இதற்கு இழுநீள்சுட்டி என்று பெயரிட்டேன்)

கீழே இருக்கும் கோடை அப்படியே காப்பி பண்ணி, Dashboard - Layout - Add a Gadget போய், அதில் பேஸ்ட் பண்ணி விடுங்கள். இதில் டார்க்காக இருப்பதற்கு பதில் உங்கள், பேஜ் URL கொடுத்து விடுங்கள். அவ்வளவு தான்.

இது போல எத்துணை ஆப்ஷன்ஸ் வேண்டுமானாலும், அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம். உங்க பேஜ் URL தெரியவில்லை என்றால், போஸ்ட் டைட்டில் மேல் ஒரு க்ளிக் செய்யுங்கள். இப்போ, உங்க பிரவுஸரில் தெரிவது தான் உங்க போஸ்ட் URL.

சுட்டப்படும் போது, அதே விண்டோவில் திறக்க செய்ய, கீழே காணும் கோடை பயன்படுத்தவும்.
<select onchange="location = '' +(this.options[this.selectedIndex].value);">
<option value="http://sumazla.blogspot.com/2009/05/blog-post_04.html>ஃபாலோ பண்ணுங்க
<option value="http://sumazla.blogspot.com/2009/06/blog-post.html"/>பிளாக் எழுதுபவர்களுக்கு
</select>சுட்டப்படும் போது, தனி விண்டோவில் திறக்க செய்ய, கீழே காணும் கோடை பயன்படுத்தவும்.
<select onchange="javascript:window.open(this.options[this.selectedIndex].value);">
<option value="http://sumazla.blogspot.com/2009/05/blog-post_04.html>ஃபாலோ பண்ணுங்க
<option value="http://sumazla.blogspot.com/2009/06/blog-post.html"/>பிளாக் எழுதுபவர்களுக்கு
</select>


ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

-சுமஜ்லா.

19 comments:

நட்புடன் ஜமால் said...

நிறைய டெக்னிக்கல் தகவல் பகிர்ந்து கொள்கின்றீர்கள்

நலம். & நன்றி.

மணிவர்மா said...

நல்ல பதிவு. கணினி சார்ந்த அதுவும் எச் டி எம் எல் கோடுகளை அதை அறியாத எங்களுக்கு ஆயத்த ஆடைப்போல தருவது சிறப்பு.

அதிரை அபூபக்கர் said...
This comment has been removed by the author.
அதிரை அபூபக்கர் said...

நல்ல பயனுள்ள கோடிங் தருகிறீர்கள்.... நன்றி...

S.A. நவாஸுதீன் said...

தினம் ஒரு புது விஷயம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நன்றி சகோதரி.

Mrs.Menagasathia said...

நன்றி சுகைனா,நானும் என் ப்ளாக்கில் இதுபோல் செய்துக் கொண்டேன்.

முனைவர்.இரா.குணசீலன் said...

/இழுநீள்சுட்டி/
தமிழாக்கம் நன்றாகவுள்ளது.
தொழில்நுட்பத் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

முனைவர்.இரா.குணசீலன் said...

தங்கள் பணியைப் பாராட்டி
பட்டாம்பூச்சி விருது வழங்கி மகிழ்கிறேன்....

வாழ்த்துக்கள்..

http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_16.html

SUMAZLA/சுமஜ்லா said...

தங்கள் விருதுக்கு மிக்க நன்றி முனைவரே, ஆனால், நண்பர் உழவன் ஏற்கனவே இவ்விருதை எனக்குத் தந்து விட்டார். டெம்ப்ளேட் மாற்றத்தின் போது, அதை மீண்டும் போடாமல் விட்டு விட்டேன்.

க. தங்கமணி பிரபு said...

பிரமாதம், கலக்கறீங்க! என் ப்ளாக் drop down menu levelக்கு வளரல. ப்ளாக் அகலத்தை அதிகப்படுத்த ஏதும் வழியுண்டா?

தமிழரசி said...

உபயோகமான பதிவு..என்னப்பா பண்ண இந்த மண்டுக்கு டெக்னிக்கல் சைட் ஜிரோ நாலேட்ஸ் தான்..எழுத்தோசைக்கு வரவும் இன்று...

SUMAZLA/சுமஜ்லா said...

தங்கமணி பிரபு, தங்கள் சிந்தனி ப்ளாகில் பதில் தந்துள்ளேன்.

தமிழரசி, எனக்கு விருது வழங்கியமைக்கு நன்றிப்பா!

க. தங்கமணி பிரபு said...

நீங்கள் சொல்லிக்கொடுத்தபடி வெற்றிகரமா நானும் என் ப்ளாக்கில் இழுநீழ்சுட்டி போட்டுட்டேன். மகிழ்ச்சி! உங்களுக்கு என் முதல் நன்றி. அந்த பட்டை அகலத்தை குறைக்க ஏதும் வழியுண்டா?

SUMAZLA/சுமஜ்லா said...

//அந்த பட்டை அகலத்தை குறைக்க ஏதும் வழியுண்டா?//

சந்தோஷம்! அதைத் திறந்து, அதன் டெக்ஸ்ட் வியூவில் பாருங்கள், இப்போ அதை க்ளிக் செய்தபடி குறைத்துப் பாருங்கள்.

கதீஜா said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்துமே பயனுள்ள தகவல்.
html codeல் உங்கள் பெயர் இருப்பது பற்றி..விளக்கம் தேவை.முடிந்தால் பதில் தரவும்

கண்ணகி said...

அன்பு சுமஜ்லா....அடுத்தவர்களின் சுட்டியை எப்படி இணைப்பது. மற்றும் வாடாத பக்கங்கள் என்பது போன்றவற்றை எப்படி இணைப்பது..லின்க் தருவது எதுவும் புரியவில்லை. விளக்கினால் நன்றாக இருக்கும்..

asiya omar said...

கீ இருக்கும் கோடை காப்பி பேஸ்ட் add a gadget போய் பண்ணசொல்லி இருக்கீங்க,அதில் எதில் பேஸ்ட் பண்ணனும்,கீ இருக்கும் கோடு என்றால் எது?கொஞ்சம் விளக்க முடியுமா?

SUMAZLA/சுமஜ்லா said...

அக்கா, கீழே என்பதைத் தான் கீ என்று தவறாக டைப் செய்து விட்டேன்.

துர்கா செல்லம்... said...

உங்களுடைய நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம் என்ற புத்தகத்தை வாங்கியவுடன், பிளாக் க்ரியேட் பண்ண ஆரம்பிச்சேன்.. ஆனா, ரொம்ப கஷ்டப் பட்டுட்டேண்... இப்ப கொஞ்சம் ஈஸீயா இருக்கு.. எல்லா புகழும் உங்களுக்கே.. நன்றி சகோதரி...:)

http://karthickdurga9.blogspot.in/

முடிந்தால், நான் செய்தவற்றை வந்து பாருங்கள்.. பூமழைத் தூவ வைக்க முடியவில்லை...:(