Wednesday, July 22, 2009

விடுகதை புலிகள்(விடைகள்)

எத்துணை நாளைக்குத் தாங்க, ‘ஊள மூக்கன் சந்தைக்கு போற’ பழைய விடுகதையையே பேசிட்டு இருக்கிறது? அதான், இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி, நான் விடுகதைகள் புனைந்திருக்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. பிறக்கும் போது பெரியவன்,
வளர வளர சிறியவன்; நான் யார்?

2. காதோடு தான் நான் பேசுவேன்;
உதடோடு தான் உறவாடுவேன்; நான் யார்?

3. நதியிருக்கும் நீர் இல்லை;
நகரிருக்கும் மக்கள் இல்லை; அது என்ன?

4. அண்ணன் ஓடுவான்;
தம்பி நடப்பான்; அது என்ன?

5. மண்டை இருந்தாலும், மூளையில்லை;
தலைக்குமேல் இருந்தாலும், தலைக்கனம் இல்லை; அது என்ன?

6. ‘தூ’னு துப்பினாலும் கோபம் வராது;
மழையாய் பொழிந்தாலும் மகிழ்ச்சி தராது; அது என்ன?

7. விட்டுக் கொண்டிருந்த மூச்சை நிறுத்தினாலும்
வளைந்து நெளிந்து ஓடும் இந்த பாம்பு; அது என்ன?

8. யாரும் வாசிக்காத புல்லாங்குழல்;
பற்றி எரியும் ஊதாங்குழல்; அது என்ன?

9. திருப்ப திருப்ப குறையும் எனக்கு,
இரு பக்க பாதுகாப்பு சுவர் உண்டு; நான் யார்?

10. வட்டமாக இருக்கும் தோசையல்ல;
நடுவில் ஓட்டை இருக்கும் வடையல்ல; அது என்ன?

இந்த பத்து விடுகதையையும் முதலில், என் கணவரிடம் கேட்டேன். 50 மார்க் வாங்கினார். பிறகு அவர் போனஸாக ஒன்று சொன்னார்;

11.வளர வளர தேய்வான்;
வருடம் ஒரு முறை இறப்பான்; அது என்ன?

முதல் பத்து விடுகதைக்கும் சரியான விடை சொல்பவருக்கு, “விடுகதை புலிகள்” விருது வழங்கப்படும். போனஸ் விடுகதைக்கும் சரியான பதில் தருபவருக்கு, இது ஆடி மாதம் என்பதால், இலவசமாக, “விடுகதை சிறுத்தைகள்” விருதும் சேர்த்து வழங்கப்படும்.

புரியுது, புரியுது, எல்லாரும் விருதுக்கு பயந்து கொண்டு, சரியான பதில் தெரிந்தும் கூட சொல்லலைனு. நானே சொல்லிவிடலாம்னு தான், இந்த போஸ்ட்டை அப்டேட் செய்கிறேன்.

1. செல்போன்
2.ஹெட் போன் & மைக்
3.மேப்
4.கடிகார முட்கள்
5.சீலிங் பேன்
6.வாஷ்பேசின்
7.புகைவண்டி
8.ட்யூப் லைட்
9.நோட் புக்
10.சிடி
11.காலண்டர்.

உங்க விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

-சுமஜ்லா.

27 comments:

ஐந்திணை said...

எனக்கு ஜீரோ மார்க்!

புரட்சிகர தமிழ்தேசியன் said...

இன்றைய தேவை சுயசார்புள்ள பொருளாதார கட்டமைப்பு,இனஉணர்வுள்ள சமுதாயமே!!

உலகின் பல தேசிய இனங்கள் தோல்வி அடைந்த வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் ஒடுக்கும் தேசிய இனங்கள் தமது எதிரியாக கருதும் தேசிய இனங்களை ஒடுக்கும் போது அவர்கள் முதலில் கைவைப்பது அந்த இனத்தின் வாழ்வாதரத்தில் தான் உதாரணம் நம் கண்முன்னே உள்ளது சிங்கள இனவாத அரசானது போரில் வெற்றி கொள்ளபட்டதாக தானே அறிவித்து கொண்டு அம்மக்களை
மாக்கள் போல் முட்கம்பி வேலிகளில் அடைத்துள்ளது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களவரை அந்த பகுதியில் குடியேற்றி குடும்பதிற்கு 2 ஏக்கர் நிலம் தோட்டம் அமைக்க 1 ஏக்கர் நிலம் என பங்கிட்டு கொடுக்கபோகிறார்களாம்..யார் வீட்டு நிலம் நம்முடைய உறவுகளுடையதல்லவா? நம் பாட்டன் முப்பாட்டன் வளமையாக வாழ்ந்த நிலமல்லவா? ஏகாதிபத்தியங்கள் எப்போதும் ஒரே மாதிரியே சிந்தித்து வருகின்றன.

ஒடுக்கும் தேசிய இனங்கள் எப்போதும் ஒடுக்கபடும் தேசிய இனங்களை
தம்மிடம் கையேந்தும் நிலையையே வைத்திருக்கின்றன.. இன்று ஈழதமிழர்களை அரசியல் தீர்வு.. உணவு ..மருத்துவம் என அனைத்திற்கும் சிங்களத்தினை நோக்கியே கையேந்த வைத்துள்ளன..
இதற்கு சற்றும் குறைவில்லாதது நாம் வாழும் ‘இந்தி’ தேசியம்.. இன்று அடிப்படை வாழ்வாதரமான விவசாயத்திற்கு காவிரிக்கு கன்னடனையும்,முல்லை பெரியாறுக்கு மலையாளியையும்

http://siruthai.wordpress.com/தமிழக-தமிழ்தேசிய-உணர்வாள/

அரங்கப்பெருமாள் said...

5. மண்டை இருந்தாலும், மூளையில்லை;

என்னப் பத்திதானோ? பயந்துவிட்டேன்

நட்புடன் ஜமால் said...

1 - பென்சில்

2 - செல்லிடைபேசி

10 - குறுந்தகடு

SUMAZLA/சுமஜ்லா said...

ஜீரோ மார்க் வாங்கினவங்க தான் கடைசியில சரியா விடைய சொல்லி, ஹீரோ ஆவாங்கன்னு எங்களுக்கு தெரியும்ங்க!

SUMAZLA/சுமஜ்லா said...

ஜமால், செல்லிடை பேசி என்றால் என்ன? உங்க விடை ஒன்று மட்டும் சரி!

Unknown said...

1.பென்சில்
2.செல்போன்
3.
4.கடிகார முள்
5.தேங்காய்
6.பன்னீர்
7.இரயில் வண்டி
8.
9.
10.வளையல்
11.கலண்டர்
சரியா சுமஜ்லா? மீதியினை யோசித்து சொல்கிறேன்.

அதிரை அபூபக்கர் said...

5 ‍ வதுக்கான விடை.... தலைக்கவசம்(HELMET) சரியா ???

11 வதுக்கான விடை..... தேதி காலண்டர்... சரியா??

SUMAZLA/சுமஜ்லா said...

பாயிஜா, மூன்று விடைகள் சரி!
(4,7,11)

அபூபக்கர் உங்களுடையதில் ஒன்று சரி!(11)

இராஜகிரியார் said...

2. தொலை பேசி ரிசீவர் அல்லது Head phone & Mic set.

6. ஸ்ப்ரே சென்ட்.

8. சிகரெட்.

9. புத்தகம்.

10. CD.

ஹை..எனக்கும் 50 மார்க். சரிதானே?

SUMAZLA/சுமஜ்லா said...

ராஜகிரியாரே,
2, 9, 10 சரியான விடைகள். 30% மார்க் தான், தங்களுக்கு! பார்ப்போம், யார் கண்டு பிடிக்கிறார்கள் என்று!

RAGUNATHAN said...

அடச்சே ....தலைப்பை சரியா படிக்காம விடுதலை புலின்னு படிச்சு வந்தா... விடுகதை புலியாம்ல..

இன்னொரு முறை படிச்சுட்டு பதில் சொல்றேன். ஹி ஹி

Naadi said...

௨. தொலைபேசி ரேசெஇவேர்
௩. வேர்ல்ட் மேப்
௪. கடிகாரம்
௭. இரயில் வண்டி
௮. வெண் சுருட்டு
௯. புத்தகம்
௰. CD

Vidhoosh said...

:0 எனக்கும் சீரோ தான்.:(

SUMAZLA/சுமஜ்லா said...

ரகு சார், உங்களை மாதிரி நாலு பேர் உள்ள வந்து மண்டை காயணும்னு தான இந்த மாதிரி தலைப்பையே வெச்சிருக்கோம்!

SUMAZLA/சுமஜ்லா said...

நாடி, உங்க தமிழ் எண்கள் எனக்கு புரியலையே?!
இருந்தாலும் 50% மதிப்பெண் வாங்கி, விடு புலி (வார்த்தையிலும் 50%) அவார்டு வாங்கி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

nizamudeen/நிஜாமுத்தீன் said...

௧, ௨, ௩, ௪, ௫, ௬, ௭, ௮, ௯, ௰.
இவை தமிழில் இலக்கங்கள் ஆகும். [1 முதல் 10 வரை]

-1, -2 என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால்
இவ்வெண்களைக் காணலாம். [உதவி: யாழ் சுரதாவின் நிரல்]
[நாடி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.]

nizamudeen/நிஜாமுத்தீன் said...

ஜமால் குறிப்பிட்டுள்ள 'பென்சில்' என்பதும்
'குறுந்தகடு' ... என்பதும் சரியான விடைகள்தானே?
செல்ஃபோன் என்பதற்கு தமிழில் 'செல்லிடை பேசி'
என்றும் வார்த்தை உண்டு. தூய தமிழில் பதில்கள் தந்த
நட்பான ஜமால் அவர்களே, பென்சில் என்பதன் தமிழ்
வார்த்தை என்ன?
கரிக்கோல்?
கரியுருளை? [கரி உருளை]

நட்புடன் ஜமால் said...

பென்சில் - தமிழில்


நன்றி நிஜாம் காக்கா.

நட்புடன் ஜமால் said...

புதிர்கள் போடுகையில் கமெண்ட் மாடரேஷன் போடுங்க, 2 நாட்கள் அல்லது தங்கள் விருப்பம் போல் நேரம் அறிவியுங்கள் ...

"உழவன்" "Uzhavan" said...

இதுவேறயா.. ரைட்டு நடத்துங்க

SUMAZLA/சுமஜ்லா said...

//தூய தமிழில் பதில்கள் தந்த
நட்பான ஜமால் அவர்களே, பென்சில் என்பதன் தமிழ்
வார்த்தை என்ன?
கரிக்கோல்?
கரியுருளை? [கரி உருளை]//

பென்சிலுக்கு தமிழில் பலப்பம்?? ஆனா, பலப்பத்துக்கு தமிழில் என்ன என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்! (சின்ன வயசில பலப்பம் தின்ன கதையைச் சொன்னா தனிப் பதிவே போடணும்!)

SUMAZLA/சுமஜ்லா said...

//புதிர்கள் போடுகையில் கமெண்ட் மாடரேஷன் போடுங்க, 2 நாட்கள் அல்லது தங்கள் விருப்பம் போல் நேரம் அறிவியுங்கள் ...//

நட்புடன் நல்ல ஐடியா சொல்லி இருக்கீங்க! இனி நிச்சயம் பின்பற்றுகிறேன். தேங்க்ஸ்.

SUFFIX said...

நன்றாக‌ இருந்ததது, குழந்தைகளுடன் பகிர்ந்து கொன்டேன்!! நன்றி!! உங்களது அறிவார்ந்த யோசனைக்கு மீன்டும் பல வாழ்த்துக்கள்.

SUFFIX said...

//புரியுது, புரியுது, எல்லாரும் விருதுக்கு பயந்து கொண்டு, சரியான பதில் தெரிந்தும் கூட சொல்லலைனு. நானே சொல்லிவிடலாம்னு தான், இந்த போஸ்ட்டை அப்டேட் செய்கிறேன்.//

எங்களையெல்லாம் இன்டெல்லிஜன்ட கொக்கு ஆக்கிட்டீங்க‌

NIZAMUDEEN/நிஜாமுத்தீன் said...

ஒரு சிறு திருத்தம்: (MOBILE PHONE)
செல்(லும்) + இட(ம்) + பேசி = செல்லிடம்பேசி.
எனவே 'செல்லிடைப்பேசி' என்பதை,
'செல்லிடப்பேசி' என்று குறிப்பிடல் பொருத்தம்
என நினைக்கிறேன்.

nizamudeen/நிஜாமுத்தீன் said...

'பென்சில்'-க்குத் தமிழ் வார்த்தையை காண,
நட்புடன் லிங்க் கொடுத்த ஜமால்ஜி!
நன்றி!