அடுத்துவருக்கு வாழ்க்கைக்கு தேவையான டிப்ஸ்களை அள்ளி வழங்குபவர்களுக்கு....
டிப்ஸ் திலகம் அவார்டு
எந்நேரமும் தண்ணியில் மிதந்தபடி பதிவு போடுவதாக டாவடிப்பவர்களுக்கு...
தண்ணியில் தண்ணி விருது
மொக்கையாய் போட்டு, பக்கங்களை நிரப்புபவர்களுக்கு, மைக்ரோசாஃப்ட்டின் மிக உயரிய...
ரீசைக்கிள்பின் அவார்டு
கணினியில் பல்வேறு உபயோகம் குறித்து பயனுள்ள தகவல்கள் தருபவருக்கு...
கணிப்பொறி் விருது
கவிதையால் நெஞ்சைக் கலங்கடிக்கும் கவியுள்ளங்களுக்கு...
கம்ப வாரிசு விருது
அடுத்தவரின் விட்ஜெட்ஸ் மற்றும் இடுகைகளைப் பார்த்து காப்பி அடிப்பவர்களுக்கு...
காப்பி பேஸ்ட் அவார்டு
மாப்பிள்ளே, மச்சான், அண்ணாச்சி என்று ‘பாச’கயிறு வீசும் ரத்தங்களுக்கு...
எருது விருது
பிள்ளைகள் பண்ணும் சேட்டைகளை, வளவளவென்று எழுதும் அம்மாமார்களுக்கு...
டபுள்பபுள்கம் அவார்டு
ரம்பம் போல அறுக்கும் பதிவுகளைப் போடும் பிளேடு பார்ட்டிகளுக்கு...
பிளேடரசர் விருது
கடைசியாக, இந்த எல்லா தகுதிகளும் ஒருங்கே நிரம்பப் பெற்றவர்களுக்கு,
ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி விருது.
அட, முதல் ஆளா, கடைசி விருது எனக்கு தரப் போகும், அன்பு நெஞ்சங்களுக்கு அட்வான்ஸ் விருது... சாரி... நன்றி!
-சுமஜ்லா.
Tweet | ||||
55 comments:
ஹா ஹா ஹா
நல்லா சிந்திக்கிறீங்கப்பா ...
:)
நல்ல விருதுகள்தான்!
உங்களுக்கு உக்காந்து யோசிப்போர் விருது பரிந்துரைக்கப் படுகிறது!
அடடா என்னமா சிந்திக்கிறீங்க. நான் உங்களுக்கு கணிப்பொறி அவார்டுதான் கொடுக்கப் போறேன்.
ஆஹா எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்கப்பா... நல்ல விருதுகள்தான். இதுல உங்களுக்கு எது....
நல்லா காமெடி பண்ணுகிறீர்கள்.... சிரிக்க வேண்டிய பதிவு
ஹி ஹி.
கணிப்பொறி அவார்டு சூப்பர்...
///பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...
உங்களுக்கு உக்காந்து யோசிப்போர் விருது பரிந்துரைக்கப் படுகிறது!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்
//ஹா ஹா ஹா
நல்லா சிந்திக்கிறீங்கப்பா ...//
அட உண்மையிலேயே எனக்கு அஞ்சு பேர் விருது கொடுத்ததனால, போட்டு வெச்சுக்க இடமில்லாம, சைடு பாரில் எப்படி போட்டிருக்கேன் பாருங்க. அதுல வந்த யோசனை தான் இது. அதனால், இந்த பெருமை எல்லாம் எனக்கு விருது கொடுத்த மகானுபவான்களையே சேரும்.
//நல்ல விருதுகள்தான்!//
உங்களுக்கு எது வேணும் சொல்லுங்க.
//உங்களுக்கு உக்காந்து யோசிப்போர் விருது பரிந்துரைக்கப் படுகிறது!//
வேணா இதுக்கு கப்பல் கவிழ்ந்தமாதிரி(கன்னத்தில் கை வைத்து யோசித்ததால்) ஒரு படம் போட்டுறலாம்.
//அடடா என்னமா சிந்திக்கிறீங்க. நான் உங்களுக்கு கணிப்பொறி அவார்டுதான் கொடுக்கப் போறேன்.//
ஏற்கனவே உங்க அன்பு பொறியில் சிக்கியிருக்கிறேன்.
//ஆஹா எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்கப்பா... நல்ல விருதுகள்தான். இதுல உங்களுக்கு எது....//
யோசிங்க யோசிங்க. உட்கார்ந்து யோசிப்போர் விருதுக்கு நீங்களும் தகுதியாயிட்டீங்க சந்ரு!
//நல்லா காமெடி பண்ணுகிறீர்கள்.... சிரிக்க வேண்டிய பதிவு//
இவ்வளவு சீரியஸா சிரிச்ச முதல் ஆள் நீங்க தான் சார். கீப் இட் அப்
//ஹி ஹி.
கணிப்பொறி அவார்டு சூப்பர்...//
நீங்க தான் புது விருதை உருவாக்கினது. எங்கே இதைப் பார்த்து கோபித்துக் கொள்வீர்களோனு நினைத்தேன். நல்ல வேளை தலை தப்பியது(அட, என்னோட தலை தாங்க!)
இது ஆயிரமாவது பின்னூட்டம்.
/////பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...
உங்களுக்கு உக்காந்து யோசிப்போர் விருது பரிந்துரைக்கப் படுகிறது!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்//
தமிழ் பிரியன், நீங்க காப்பி பேஸ்ட் விருதுக்கு தகுதியாயிட்டீங்க. வாழ்த்துக்கள்!
யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ இந்த விருது அம்பூட்டும், எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் உங்க கிட்டே!!
சாரி ரெண்டு தடவை, போஸ்ட் பண்ணிட்டேன் அதுக்கும் ஒரு விருது கொடுத்துடாதிங்க
எருது விருது போட்டோ ரொம்ப நல்லாருக்கு.
சூப்பர் போஸ்ட் சுகைனா,எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க சூப்பர்!!எனக்கு எல்லா விருதும் பிடிச்சிருக்கு!!.
ம்ம் இதுக்கெல்லாம் விருது குடுத்திடாதீங்க,நான் எஸ்கேப் ஆகுறேன்..
//யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ இந்த விருது அம்பூட்டும், எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் உங்க கிட்டே!!//
அட, வாய்விட்டு சிரிக்கறதை விட பெரிய சந்தோஷம் வாழ்க்கையில என்னங்க இருக்கு? அதுக்கு தான்!
//எருது விருது போட்டோ ரொம்ப நல்லாருக்கு.//
துபாய் சார் எல்லாம் நெட்டில் சுட்டது தாங்க! பிடியுங்க ரசனைக்காரர் விருது!
//சாரி ரெண்டு தடவை, போஸ்ட் பண்ணிட்டேன் அதுக்கும் ஒரு விருது கொடுத்துடாதிங்க//
//ம்ம் இதுக்கெல்லாம் விருது குடுத்திடாதீங்க,நான் எஸ்கேப் ஆகுறேன்..//
விருதைக் கண்டு அலறுபவர்களுக்காக இப்பத்தான், ‘விருதோ ஃபோபியா’ நு புதுசா ஒரு விருது உருவாக்கிக்கிட்டு இருக்கேன்.
இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடற எல்லாருக்கும் ஒரு விருது இலவசம்!
எத்துணை தைரியசாலிகள் பின்னூட்டம் போடறாங்க பார்க்கலாம்!
நான் போடலயே!
சூப்பர் விருதுகள்
கொடுத்த ஆளும் சூப்பர்
நல்லா இருக்கு
வாங்க என் பக்கத்துக்கு
ஹா ஹா ஹா கலக்கல்
எனக்கும் ஒரு விருது கொடுத்தால் பெற்றுக் கொள்ள நான் ரெடி.
இரு நிபந்தனைகள்:
1. விருது + விரு(ந்)து வேண்டும்.
2. ஒரு விருது பெற்றுக் கொள்ளவேண்டுமென்றால்,
இன்னொரு விருது இலவசமாய்த் தரவேண்டும்.
சம்மதமா?
-நிஜாமுத்தீன்.
நல்லா கொடுக்குறாங்கையா விரு(ந்)து
ரசிச்சேன்
//நான் போடலயே!//
நவாஸுக்கு எஸ்கேப்பிஸம் விருது!
//சூப்பர் விருதுகள்
கொடுத்த ஆளும் சூப்பர்
நல்லா இருக்கு
வாங்க என் பக்கத்துக்கு//
இவருக்கு சொன்ன பேச்சை கேட்காதவர் விருது!
//ஹா ஹா ஹா கலக்கல்//
கிரி, நீங்க சிரிச்ச சிரிப்புல 32 பல்லும் தெரியறதுனால, சிரிப்பரசர் விருது!
//எனக்கும் ஒரு விருது கொடுத்தால் பெற்றுக் கொள்ள நான் ரெடி.
இரு நிபந்தனைகள்:
1. விருது + விரு(ந்)து வேண்டும்.
2. ஒரு விருது பெற்றுக் கொள்ளவேண்டுமென்றால்,
இன்னொரு விருது இலவசமாய்த் தரவேண்டும்.
சம்மதமா?//
ஓக்கே தந்துவிட்டால் போச்சு. வீட்டுக்கு வந்தால் கிடைக்கும்.
நீங்க யாருன்னு இன்னுமே புரியாததனால, உங்களுக்கு மாயமான் விருது.
அதோட, ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசமா கேட்கறதுனால, உங்களுக்கு ஆடித் தள்ளுபடி விருது(50% டிஸ்கவுண்ட், அதாங்க ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்)
//நல்லா கொடுக்குறாங்கையா விரு(ந்)து
ரசிச்சேன்//
அபூ அப்ஸர், உங்களுக்கு ரசிப்பு திலகம் விருது
"இன்னொரு தளத்தின் வாயிலாக ஒரு நிஜாம் அண்ணாவைத் தெரியும்"
என்று நீங்கள் குறிப்பிட்ட அதே ந(ண்)பர் நிஜாம்தான் நான். எனவே,
உங்களுக்கு 'கண்டுபிடிப்பாளர் விருது' தரப்படுது.
எல்லோருக்கும் விருது தருபவர் நீங்கள். அதனால்,
உங்களுக்கு 'விருதளிப்பவர் விருது' வழங்கப்படுது.
ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசமா எனக்கு தந்திட்டீங்க!
நான் என் ப்ளாகை பற்றி எதுவுமே அங்கே சொன்னதில்லை(அது சரியான முறையல்ல என்பதால்),
அட, எப்படிங்க என் ப்ளாகை கண்டு பிடிச்சு வந்தீங்க? அதுக்கு நான் தான் உங்களுக்கு ‘கண்டுபிடிப்பாளர் விருது’ தர வேண்டும்.
"நான் தான் உங்களுக்கு ‘கண்டுபிடிப்பாளர் விருது’ தர வேண்டும்."
-மறுபடியும் விருது;
எனக்கே வருது.
"எப்படி கண்டுபிடிச்சி வந்தீங்க?"
-கேள்வி கேட்கிறதால,
1.'கேட்பவர் விருது'
2.'ஆசிரியர் விருது'
இரண்டும் உங்களுக்கே!
(உங்க பி.எட். எப்ப கம்ப்ளீட் ஆகும்?)
விட்டா நல்லாசிரியர் விருதே கொடுத்திருவீங்க போலிருக்கே!
பி.எட் க்ளாஸ் செப் 14 ஸ்டார்ட்டிங். அடுத்த மே யில் முடியும்.
//கிரி, நீங்க சிரிச்ச சிரிப்புல 32 பல்லும் தெரியறதுனால, சிரிப்பரசர் விருது//
நல்ல வேளை வசந்துக்கு தந்த இளிச்சவாயன் விருது கொடுக்காம இருந்தீங்களே! ;-)
'குங்குமத்'தில சொன்னாங்க!!!
ஏற்கெனவே இருக்கிற விருதுகள் பத்தாதுன்னு நீங்க வேறயா.... தாங்க முடியல...
முடி...ய...ல.....
//நல்ல வேளை வசந்துக்கு தந்த இளிச்சவாயன் விருது கொடுக்காம இருந்தீங்களே! ;-)//
மன்னிக்கவும், வசந்த்துக்கு நான் அதைத் தந்ததாக நான் சொன்னேனா? அவர் ரொம்ப பெரிய கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்! வேணா அப்படி ஒன்னு உருவாக்கலாம்னு அவர்கிட்ட ஐடியா தான் கேட்டேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சுமா சிரிக்க முடியலைப்பா....சும்மா சொல்லக் கூடாது கலக்கிட்ட....சே மனுஷனுக்கு விருது வாங்கற ஆசையே வாழ்க்கையில் வராதபண்ணிட்டப்பா.... இருங்க இதில் எனக்கு எதுன்னு தேடிக்கிறேன்... நானே தேடிக்கிட்டா கொஞ்சம் கெளரவாமான இருக்கும்..ஹிஹிஹிஹிஹி
பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...
உங்களுக்கு உக்காந்து யோசிப்போர் விருது பரிந்துரைக்கப் படுகிறது!
ஹஹஹ்ஹஹ தலைவா....சுமாவுக்கே விருதா... நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு.....
//ஹஹஹ்ஹஹ தலைவா....சுமாவுக்கே விருதா... நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு.....//
விளையாட்டில் கலந்து கொள்ளாதோர் விருது 'பத்திரைக்கைப் புகழ்' தமிழரசிக்கு பரிந்துரைக்கப் படுகிறது!
அப்ப எனக்கு எந்த அவார்டுங்க? :-)
//அப்ப எனக்கு எந்த அவார்டுங்க? :-)//
உழவன், முதன்முதலில் என்னிடம் நட்புக்கரம் நீட்டியதால், தங்களுக்கு நட்பரசர் விருது!
எல்லாமே செம விருந்துங்க!
ரெண்டாவது விருது எனக்கு தானே!
இந்தாங்க பிடிங்க
'டிப்ஸ் திலகம் அவார்டு'
யார் எந்த விருது கொடுத்தாலும், நாங்க கோச்சுக்க மாட்டம்ல?!
எல்லா விருதுலயும் உங்க பேரும் இருக்கே...காப்பிரைட் இருக்கா?
//எல்லா விருதுலயும் உங்க பேரும் இருக்கே...காப்பிரைட் இருக்கா?//
இது இணையத்தில் நம் கற்பனையை யாரும் காப்பி அடித்து விடக்கூடாது என்பதற்காக போடப்படுவது.
மற்றபடி, நான் காலையில் குடித்த காப்பி ரைட்டா தானே இருந்தது?!
நல்லா எழுதறீங்க..சென்ஸ் ஆப் ஹியுமர் நல்லா இருக்கு உங்களுக்கு
அன்புடன்,
அம்மு.
சிரிக்க மட்டும் இல்லை; சிந்திக்கவும் தான்! நன்றி அம்மு!
அடப்பாவமே..!!!என் நிலை இப்பிடியா ஆகறது. ஹூம் படிக்காத்து என் தப்புதான் ...என் தப்புதான் .....
இப்பிடி லிங்க் குடுத்து தண்ணீகுள்ள முக்கிட்டீங்களே என்னை..
அவ்வ்வ்வ்வ்
Post a Comment