Sunday, July 26, 2009

பாட்டு கேட்க வாங்க

கொஞ்ச நாளைக்கு ஒரு முறை மூச்சு விடாம பாடி பேர் வாங்கணும்னு நினைக்கறது, இப்ப, தமிழ் பட உலகத்துல பேஷனாயிருச்சு. அதிலயும் பாருங்க, இந்த பாட்ட கேட்டு அதிர்ந்து போயிட்டேன். எப்படி இவருக்கு இவ்வளவு தமிழ்(!) வார்த்தைகள் கிடைத்தது?

இதுல சிலது கேட்கும் போது, எனக்கு பழைய நினைவுகள் வந்தது. அத மட்டும் சொல்கிறேன். இதோ முதல் பாரா....

“கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுன்டகஞ்சி, சுட்டவடை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரிதண்ணி, இளநி, இராதொக்கு, உப்புகண்டம், பழையசோறு, டிகிரிகாப்பி, இஞ்சிமொறப்பா, கடலமுட்டாய், கம்மர்கட்டு, வெள்ளரிக்கா, இழந்தபழம், குச்சிஐசு, கோலிசோடா, முறுக்கு, பஞ்சுமுட்டாய், கரும்புசாறு, மொளகாபஜ்ஜி, எள்ளுவடை, பொரிஉருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத்தண்ணி, ஜவ்வுமுட்டாய், கீரவடை, கிர்னிபழம், அவுச்சமுட்டை, ஆஃப்பாயில், பல்லிமுட்டை, பப்பாளி, புகையிலை, போதைபாக்கு, புண்ணாக்க்கு..

இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு”

என்னுடைய பொழிப்புரை:

கூழு - மோர் விட்டு, வெங்காயம் கடிச்சு அதிகாலை குடிக்கும் ராகி கூழ்.

சுண்டலு - தேங்கா, மாங்கா பட்டாணி சுண்டல்.

வேர்கடலை - பேப்பர் கோன் மட்டும் பெரிசா இருக்கும், உள்ள சரக்கு கொஞ்சூண்டு.

வத்தகறி - தெரியாது.

வடுமாங்கா - அய்யர் வீட்டு அம்புஜவல்லி, பள்ளி நாளில் கொண்டு வருவது.

சுண்டகஞ்சி - தெரியாது.

சுட்டவடை - ரம்ஜான் மாசம் மட்டுமே கிடைக்கும், ‘பூ(boo)’ சுடும் தட்டப்பயிறு வடை.

மக்காசோளம் - எனக்கு தெரிஞ்சது கார்ன் புளோர் மாவு.

நீர்மோரு - மிளகு, இஞ்சி தட்டிப் போட்டு, நறுக்கிய வெள்ளரியுடன் கொத்துமல்லி தூவி குடிச்சா, அடடா அமிர்தம்.

பேட்டரி தண்ணி - தெரியாது்(சாராய ஊரலில், பழைய பேட்டரி போடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். அதுவா?)

இளநி - பொள்ளாச்சியில் குடிச்ச டேஸ்ட் எங்கயும் குடிச்சதில்லை.

இராதொக்கு - தெரியாது.

உப்புக்கண்டம் - பக்ரீத்தில் போட்டு, ஒரு வருஷம் வரை பதப்படுத்தி, சுத்தியலில் தட்டி, பொரித்து சாப்பிடுவது.

பழைய சோறு - சின்ன வெங்காயத்தோடு சாப்பிட, இன்னிக்கும் என் பேவரிட்.

டிகிரிகாப்பி - டேஸ்ட் பண்ணியதில்லை.

இஞ்சிமுறப்பா - இப்பொழுதெல்லாம் பாக்கெட்டில் வேல்யூ ஏடட் ப்ராடக்டாக வருகிறது.

கடலமுட்டாய் - 10 பைசாக்கு 2 கிடைக்கும் சின்ன வயசில்.

கமர்கட் - ஆடிக் கொண்டிருந்த பல், இதைக் கடிக்க விழுந்த கதை மறக்க முடியாதுங்க.

வெள்ளரிக்கா - இளசா இருந்தா, சூப்பர். முத்தினால் தோல் சீவி சாப்பிட அருமை.

இலந்தபழம் - இலந்த பழம், இலந்த பழம், ஹூம் செக்க சிவந்த பழம்....

குச்சிஐசு - இன்னிக்கும், மாமனார் தயவில், வீட்டுல் எல்லாருக்கும் சப்ளை ஆகும், குறிப்பா பால் ஐஸ்.

கோலிசோடா - இப்ப இத கண்ணுலயே காணோம்.

முறுக்கு - மாப்பிள்ளை முறுக்கு அல்லங்க, இது ஒரிஜினல் கறுக்கு முறுக்கு...

பஞ்சுமுட்டாய் - பெரிய பாட்டியின் வெள்ளை முடியில், ரோஸ் பவுடர் கொட்டி, ரொம்ப நாள் நாங்க பஞ்சு முட்டாய்னு கேலி செய்த நினைவு வருது.

கரும்புசாறு - சின்ன மிஷின்ல பிழியறது நல்லா இருக்காதுன்னு, பெரிய மிஷின்ல பிழியறத தேடி வாங்கிக் குடிப்போம்.

மொளகாபஜ்ஜி - திருவிழா ஸ்பெஷல். நேற்றுகூட வீட்டில் சுட்டேன்.

எள்ளுவடை - தெரியாது.

பொரிஉருண்டை - ரொம்ப பிடிக்கும்; கலருக்கு ஒன்றாய் வாங்கி சாப்பிடுவேன்.

ஜிகிருதண்டா - இன்னிக்கும் ஜிகிருதண்டா விற்பவரின் ரெகுலர் கஸ்டமர், என்னவர்; பார்சல் வாங்கி வருவார்.

ஜீராத்தண்ணி - கேரளாகாரங்க, கொண்டு வருவாங்களே அதுவா?

ஜவ்வுமுட்டாய் - அஞ்சு பைசாவுக்கு அபிக்கா கடையில நிறைய தருவாங்க.

கீரவடை - தெரியாது (அ) பிடிக்காது.

கிர்னிபழம் - முலாம்பழமா?

அவுச்சமுட்டை - இதுல போண்டா சுட்டா சூப்பர்.

ஆஃப்பாயில் - பள்ளிக் காலத்தில், மதியம் தொட்டுக் கொள்ள தினமும் இதுதான்.

பல்லிமுட்டை - உவ்வேக்

பப்பாளி - இப்ப தான் எங்க வீட்டுல, சின்ன செடியா இருக்குங்க.

புகையிலை - பாட்டிமாருங்க போடுற சமாச்சாரம்.

போதைபாக்கு - பான் பராக்கா?

புண்ணாக்க்கு - இதெல்லாம் படிச்சிட்டு, போடா புண்ணாக்குனு என்ன திட்டுறது கேக்குதுங்க!


மொத்தத்துல, எல்லாத்துக்கும் பொழிப்புரை எழுத தான் உட்கார்ந்தேன், ஆனா இதுக்கே மூச்சு வாங்குதுங்க. மீதிக்கும் எழுதி தமிழை வாழ(!) வைக்க யாராவது முன் வருவாங்க! காத்திருப்போம்!


“அண்ணன், அண்ணி, நாத்தனார், மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுபேத்தி, பேரன், கொள்ளுபேரன், பொண்டாட்டி, வப்பாட்டி, நல்லபுருஷன், கள்ளபுருஷன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு, கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி, அக்காப்பொண்ணு, அத்தைபொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகலை, சம்பந்தி, முறைமாமன், முறைபொண்ணு, தலைச்சன்புள்ள, இளையபுள்ள, இளையதாரம், தொடுப்பு, ஒண்ணுவிட்டது, ரெண்டுவிட்டது, ரத்தசொந்தம், மத்தசொந்தம், ஜாதிக்காரன், பொண்ணெடுத்தவன், பொண்ணுதந்தவன்..

இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு

சோகம், அழுகை, சோம்பல, காதல்தோல்வி, கடுப்பு, எக்ஸாம்பெயிலு, எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், படபடப்பு, பழிவாங்கல், பாவம், போட்டுகுடுத்தல், பொறாமை, கிண்டல், இளப்பம், எச்சபுத்தி, இறுமாப்பு, சகுனிவேல, சதிச்செயல், கோழ்மூட்டல், குறுக்குபுத்தி, ஒட்டுகேட்டல், ஓரவஞ்சனை, பொய், புழுகுமூட்டை, டகுல்வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து, கொள்ளிகண்ணு, குசும்பு, சின்னத்தனம், சின்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேறுமாறு, டிமிக்கி, ஊழ உதாரு, ஒப்பாரி, ஜால்ரா, ஜெர்க்கடித்தல், திருட்டுவேலை, தில்லுமுல்லு, சண்டித்தனம்..

இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு

குப்புசாமி, கோயிஞ்சாமி, முனுசாமி, முத்துசாமி, க்ருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராச்சாமி, கன்னுச்சாமி, கருப்புசாமி, வெள்ளச்சாமி, பழனிச்சாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுச்சாமி, அழகுச்சாமி, அப்பாச்சாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கிடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவச்சாமி, சீறுச்சாமி, சடையச்சாமி, சந்தரசாமி, வெள்ளச்சாமி, குயில்சாமி, குமாரசாமி, கொதண்டசாமி, அங்குசாமி, துரைச்சாமி, பொன்னுச்சாமி, அய்யாச்சாமி, அண்ணாச்சமி, நல்லசாமி...

இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு”

-சுமஜ்லா.
.
.
.

15 comments:

S.A. நவாஸுதீன் said...

இது எந்த படத்துல வர்ற பாட்டு. நிதானமா படிக்கவே மூச்சு வாங்குது. பாடணும்னா மூச்சு நின்னு போயிடும்போல. எப்டிதான் ஒரு வார்த்தை விடாம கேட்டு அதை டைப் அடிச்சீங்கலோ.

S.A. நவாஸுதீன் said...

இந்த பாட்டு கந்தசாமி படத்துலயா இருக்கு. வெளங்கிடும்

நிஜாமுத்தீன். said...

நல்ல கருத்துள்ள பாடல்!
நல்ல கருத்தான பொழிப்புரை!
நல்ல, கருத்தான பதிவு!
இது எனது கருத்து!

SUMAZLA/சுமஜ்லா said...

ம்...நாலு பதிவுக்கு ஒரு பதிவு, இப்படி மொக்கை போடணும்னு கொள்கை வெச்சிருக்கியானு, இப்பத்தான் என் தம்பி ஹைதராபாத்திலிருந்து போன் போட்டு திட்டினான்.

coolzkarthi said...

ha ha ha....ரொம்ப கஷ்டம் இவ்வளவையும் கேட்டு டைப் பண்ணுறது....

Arangaperumal said...

காதலன்... பட பாட்டுதானே!!!
லியோனி பட்டிமண்டபத்தில் ஒருமுறை கேட்டேன். "பாட்டையா கேக்குறாய்ங்க எதையாவது எழுதுங்க"... இதுதான் உண்மை.

அப்ப்றம் விட்டுபோன சில வார்த்தைகளுக்கான விளக்கம்


வத்தகறி - உப்புக்கண்டம், இரண்டும் ஒன்னுதான்(நினைக்கிறேன்)

சுண்டகஞ்சி - மொத நாள் வடிச்ச சாதத்துல வரும்ல காஞ்சி அத மூணு இல்ல நாலு நாள் வச்சு குடுப்பாங்க.(பெசன்ட் நகர் குப்பத்துல கிடைக்கும்). போதை தரும் பானம்.

இராதொக்கு - 'இறத்தொக்கு'ன்னு நினைக்கிறேன், ஊறுகாய இருக்கும் போல..

டிகிரிகாப்பி - கும்பகோணம் டிகிரி காப்பி(சங்கீதா-வுல கூட கெடைக்கும்)

எள்ளுவடை - வடையில எள்ளு போட்டா கெடைக்கும்(நான் சாப்பிட்டதில்ல)

நட்புடன் ஜமால் said...

நீங்க எழுதின பாட்டுன்னுல்ல நினைச்சி புட்டேன் :)

SUMAZLA/சுமஜ்லா said...

ஆஹா! அரும்பெரும் தமிழ் வார்த்தைகளுக்கு உங்கள் மூலம் அர்த்தம் கண்டு கொண்டேன், நன்றி அரங்கப்பெருமாள்.

இது கந்த சாமி படப்பாடல்ங்க! படம் இன்னும் ரிலீஸாகலைனு நினைக்கிறேன்!

//நீங்க எழுதின பாட்டுன்னுல்ல நினைச்சி புட்டேன் :)//

அட, இவ்வளவு அழகா(!) எல்லாம் நமக்கு எழுத வராதுங்க!

Anonymous said...

இதான் இன்றைய சினிமாவின் நிலை எதோ ஒன்றிரண்டு தவிர....முதல்ல அப்ளாஸ் உங்க பொருமைக்குப்பா....படிச்ச எனக்கே மூச்சு வாங்குது...

தமிழ் வெங்கட் said...

பாட்டு கந்தசாமி படமுங்க..பாட்டு ஹிட்டு...எப்படி இப்படி எல்லாம்
ஆராய்சி..!டெம்ளெட்டு நல்லயிருக்கு
நைட்மோடு.இப்பத்தான் உங்க
வலைப்பூவில் பாக்குறேன்..!

SUMAZLA/சுமஜ்லா said...

//முதல்ல அப்ளாஸ் உங்க பொருமைக்குப்பா....படிச்ச எனக்கே மூச்சு வாங்குது...//

ஹா ஹா!

SUMAZLA/சுமஜ்லா said...

//பாட்டு கந்தசாமி படமுங்க..பாட்டு ஹிட்டு...எப்படி இப்படி எல்லாம்
ஆராய்சி..!//

அதான் வருதே பாட்டில், கந்தசாமி தான் டாப்புனு! இனி, திருக்குறள் மனனப் போட்டு போல, இந்த பாட்டின் மனனப் போட்டி வெச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல!


//டெம்ளெட்டு நல்லயிருக்கு
நைட்மோடு.இப்பத்தான் உங்க
வலைப்பூவில் பாக்குறேன்..!//

நன்றி! அப்ப, இப்ப தான் முதன் முறையா வர்ரீங்கன்னு நினைக்கிறேன். வரவேற்கிறேன்.

dharshini said...

உங்களுக்கு ரொம்ப பொறுமைங்க... நானும் நீங்கதான் எழுதியிருக்கறீங்க என்று நினைத்தேன்... :)

துபாய் ராஜா said...

இரா தொக்கு - இறால் தொக்கு

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்களுக்கு ரொம்ப பொறுமைங்க... நானும் நீங்கதான் எழுதியிருக்கறீங்க என்று நினைத்தேன்... :)//

ம்...இவ்வளவு அழகா(!) தமிழ் பாட்டு எனக்கு எழுத வராதுங்க!

//இரா தொக்கு - இறால் தொக்கு//

இது தான் சரியென்று நானும் நினைக்கிறேன்.