Saturday, July 25, 2009

காவியமாய் சில ஓவியங்கள்

என்னுடைய பல முகங்களில் ஒன்று, ஓவியம் வரைவதும் வர்ணம் தீட்டுவதும். தற்சமயம் வேலைப் பளுவின் காரணமாக இதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. என்றாலும், என் திருமணத்துக்கு முன்பு நான் வரைந்த சில ஓவியங்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

25.5.1995 ல் என் திருமணம். பெற்றோர் பார்த்து நிச்சயித்தது தான். அந்த சமயத்தில், என் உள்ளத்தை ஓவியமாக்கினேன். இப்போ, காலத்தின் வேகத்தில், அந்த ஓவியங்கள் செல்லரித்து, பழுப்பேறி விட்டன. ஆனாலும், அந்நினைவுகள் என்றென்றும் என் உள்ளத்தில் பசுமையாய்!

ஒவ்வொரு ஓவியத்திலும், நாலுவரி கொட்டேஷன் எழுதியிருக்கிறேன். (சொந்த கொட்டேஷன் அல்ல)! அவற்றையும், அவற்றின் தமிழ் பதத்தையும் தருகிறேன், இதோ!!!


மேலே காணும் ஓவியம் வரையப்பட்ட தேதி: 6.4.1995.

ஓவியத்தின் வாசகம்:

“The Hours I spent with thee, dear heart,
Are as strings of pearls to me;
I count them over, every one apart,
My Rosary, My Rosary"

வாசகத்தின் பொருள்:

‘உன்னுடன் கழிந்த மணித்துளிகள், என்னுயிரே,
முத்தாரம் போல் எனக்குக் காட்டுமே!
அவற்றை ஒவ்வொன்றாய் எண்ணுகிறேன்,
என் ரோஜாப் பூவின் தோட்டமே!!”

(Rosary என்பதற்கு, தஸ்பீஹ் மணி அல்லது ஜப மாலை என்ற இன்னொரு அர்த்தமும் உள்ளது)


மேலே காணும் ஓவியம் வரையப்பட்ட தேதி: 2.4.1995.

ஓவியத்தின் வாசகம்:

“Absense is to Love,
What Wind is to Fire!
It Extinguishes the Small,
It Enkindles the Great!!"

வாசகத்தின் பொருள்:

பிரிவுக்கும் அன்புக்கு உள்ள உறவு,
காற்றுக்கும் நெருப்புக்குமான தொடர்பு!
சிறுதீயை காற்று அணைத்துவிடும்!
பெருந்தீயோ, ஜுவாலையாய் கொழுந்துவிடும்!!


மேலே காணும் ஓவியம் வரையப்பட்ட தேதி: 23.4.1995

ஓவியத்தின் வாசகம்:

“Across the gateway of my heart,
I wrote "no thoroughfare"1
But Love came laughing by and cried,
I enter everywhere!"

வாசகத்தின் பொருள்:

‘என் இதயவாசலிலே எழுதி வைத்திருந்தேன்,
உள்ளே யாருக்கும் இடமில்லையென்று!
காதல் வந்து கதவைத் தட்டி, மெல்ல நகைத்தது,
நான் நுழையாத இடமே இல்லையென்று!!”


மேலே காணும் ஓவியம் வரையப்பட்ட தேதி: 27.3.1995

ஓவியத்தின் வாசகம்:

“When Special people touch our lives,
Then suddenly, we see -
How Beautiful and Wonderful,
Our World can really be!"

வாசகத்தின் பொருள்:

‘அன்புக்குரியவர் வாழ்வில் இணையும் போது தான்,
நாம் உணர்கிறோம், சட்டென்று!
எவ்வளவு அழகாக, அற்புதமாக,
இந்த உலகம் இருக்கிறதென்று!!”


மேலே காணும் ஓவியம் வரையப்பட்ட தேதி: 30.3.1995

ஓவியத்தின் வாசகம்:

"Now the Heart is so full,
That a drop overfills it!
We are happy now, because,
God Wills it!!"

வாசகத்தின் பொருள்:

‘இதயக் கோப்பை நிறைந்திருக்கின்றது,
வழியும் விழுந்தால், இனியொரு துளி!
மனதினில் மகிழ்ச்சி ததும்புகின்றது,
எல்லாம் இறைவன் நாட்டப்படி!!’

உங்களுக்குப் பிடித்த ஓவியமும் வாசகமும் எதுவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

-சுமஜ்லா.
.
.
.

27 comments:

S.A. நவாஸுதீன் said...

இன்னும் என்னென்ன திறமைகள் ஒளிச்சு வச்சிருக்கீங்க சகோதரி!!.

எல்லாமே நல்லா இருந்தாலும் இரண்டாவது ரொம்ப நல்லா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

அழகு ஓவியங்களுக்கு நல்லா வார்த்தைகளை தேடி தெரிவு செய்து இருக்கீங்க ...

Mrs.Faizakader said...

ஆயிரம் கலைகள் கற்ற அபூர்வ சிந்தாமனி..யை.. சுமஜ்லா வடிவில் பார்க்கிறேன்..
அனைத்து படங்களும் ரொம்ப அருமையாக இருக்கு..
ஓவியத்தின் வாசகங்கள் மிகவும் அருமை..

பிரியமுடன்.........வசந்த் said...

//
‘என் இதயவாசலிலே எழுதி வைத்திருந்தேன்,
உள்ளே யாருக்கும் இடமில்லையென்று!
காதல் வந்து கதவைத் தட்டி, மெல்ல நகைத்தது,
நான் நுழையாத இடமே இல்லையென்று!!”//

superb drawings all good

நிஜாமுத்தீன் said...

ஓவியர் சுமஜ்லாவுக்கு இன்னும் பல முகங்கள்.
உங்களின் கைவண்ணம், மைவண்ணம்
பாராட்டும்வண்ணம் உள்ளன.

மித்ரா said...

3,4 ரொம்ப நல்லாருக்கு, தமிழாக்கம் அருமை.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி நவாஸ்! ஆனா பாருங்க எல்லாம் பழுப்பேறி போய்விட்டது. ப்ளாஸ்ஷீட் ப்ரேம் போட்டு வைத்திருந்தேன். எல்லாம் கிழிந்து போய் விட்டது.

அந்த இரண்டாவது ஓவியம் தான் எனக்கும் பிடிக்கும், ஆனாலும், பிடித்த வாசகம் மூன்றாவது!

SUMAZLA/சுமஜ்லா said...

//அழகு ஓவியங்களுக்கு நல்லா வார்த்தைகளை தேடி தெரிவு செய்து இருக்கீங்க ...//

பல கொட்டேஷன் புக்ஸ்ல இருந்து எடுத்ததுங்க எல்லாம்!

SUMAZLA/சுமஜ்லா said...

//ஆயிரம் கலைகள் கற்ற அபூர்வ சிந்தாமனி..யை.. சுமஜ்லா வடிவில் பார்க்கிறேன்.. //

பாயிஜா, நீங்க மட்டும் என்னவாம், சலிக்காமல், அழகுப் பொருட்கள் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி வசந்த்! எனக்கும் அந்த வாசகம் தான் பிடித்தமானது.

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, உங்க வரிகள், ‘பால் வண்ணம் பருவம் கண்டு’ என்று தொடங்கும் பழைய பாடலை நினைவு படுத்துகிறது.

SUMAZLA/சுமஜ்லா said...

//3,4 ரொம்ப நல்லாருக்கு, தமிழாக்கம் அருமை.//

நன்றி மித்ரா, வாசகங்கள் இரவல் என்றாலும், தமிழாக்கம் தான் எனக்கு சொந்தம். அதுவும் இன்று தான், இங்கே எழுதுவதற்காக முடிந்தவரை கவிதை வடிவத்தில் அமைத்தேன்.

என் ஓவியத்தை பாராட்டினால், அது 18 வயது சுஹைனாவைச் சேரும். தமிழாக்கத்தை பாராட்டியது தான் உண்மையில் இன்றைய என்னை சேரும்.

Mrs.Menagasathia said...

ஒவியங்கள் ரொம்ப அழகா இருக்குப்பா!!எனக்கு பிடித்த வாசகம் 2,3

sakthi said...

அருமையான ஓவியங்கள்
அழகான கவிதைகள்
வாழ்த்துக்கள்

asiya omar said...

சுஹைனா அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் அருமை,ஆனால் என்னை கவர்ந்தது நான்காம் ஓவியம்.

ஷ‌ஃபிக்ஸ் said...

கவித்திறன் மற்றும் அழகிய ஓவியத்திறமை!! அனைத்து படங்களும் அருமை, எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இரண்டாவதும் மூன்றாவதும்!! பாராட்டுக்கள்.

Jaleela said...

சுஹைனா நலமா?

நான்காவது படம் தத்ரூபமாக இருக்கு, வரிகளும் அருமை. இன்னும் உங்களுக்கு எத்தனை முகங்கள் இருக்கு.

ரொம்பவே பிரமிப்பு/

SUMAZLA/சுமஜ்லா said...

//எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இரண்டாவதும் மூன்றாவதும்!! பாராட்டுக்கள்.//

சேம் டு யூ ஷபி!

SUMAZLA/சுமஜ்லா said...

ஜலீலாக்கா, நான் நலம்! நீங்கள் இந்தியா போவதாக சொன்னிங்களே?!

நாலாவது படத்தில், V ஷேப்பில் தெரிவது அழுக்கு; அந்த இடத்தில் மட்டும் பாலிதீன் கிழிந்து கறை போல் ஆகி விட்டது.

இப்போது, எங்க வீட்டு பரணில் தூங்கியதைத் தட்டி எழுப்பி, க்ளிக்கினேன், இங்கே போட!

அதிரை அபூபக்கர் said...

அசத்தலான ஓவியங்கள் .... நன்றாக உள்ளது................

துபாய் ராஜா said...

அழகான படங்கள்.அருமையான வரிகள்.

//என் இதயவாசலிலே எழுதி வைத்திருந்தேன்,
உள்ளே யாருக்கும் இடமில்லையென்று!
காதல் வந்து கதவைத் தட்டி, மெல்ல நகைத்தது,
நான் நுழையாத இடமே இல்லையென்று!!”//

மனதில் பதிந்த மறக்கமுடியாத மணியான வரிகள்.

வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

அதிரை அபூபக்கர் & துபாய் ராஜா, தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

கதிர் said...

ஓவியமும் கவிதையும் அழகின் சிகரம்... வாழ்த்துக்கள்.

" உழவன் " " Uzhavan " said...

‘அன்புக்குரியவர் வாழ்வில் இணையும் போது தான்...
 
இந்த வாசகம் கொண்ட ஓவியம் எனக்குப் பிடித்திருக்கு :-)
 
நீங்க ஆல் இன் ஆல் அழகு ராணியா? :-)) எல்லாத்துலயும் கலக்குறீங்க

SUMAZLA/சுமஜ்லா said...

//ஓவியமும் கவிதையும் அழகின் சிகரம்... வாழ்த்துக்கள்.//

//‘அன்புக்குரியவர் வாழ்வில் இணையும் போது தான்...

இந்த வாசகம் கொண்ட ஓவியம் எனக்குப் பிடித்திருக்கு :-)//

இருவருக்கும் நன்றி!

//நீங்க ஆல் இன் ஆல் அழகு ராணியா? :-)) எல்லாத்துலயும் கலக்குறீங்க//

அட, நீங்க வேற, இது 18 வயசில வரைஞ்சதுங்க.

thalika said...

aaahaa suhainaa superb..enakku ellaame pidichirukku.ungalukku innum ennavellaam thiramai irukku mella mella ovvonnaa veliya varudho??neengal kandippaa oru naal edhaavadhu oru saadhanai seiveengannu enakkoru nambikkai.

SUMAZLA/சுமஜ்லா said...

Thanks Thalika! Happy to see you after a long time in my blog. Hope everything is going on in a fine manner.