தனக்கென ஒரு ப்ளாக் வேண்டும் என்று என் மகள் ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருந்தாள். படிப்பு பாதித்து விடும் என்று நான் அனுமதிக்காமலே இருந்து வந்தேன். ஆனால், இப்போது, லீவு நாட்களில் மட்டும் பதிவு போடுகிறேன் என்று அவள் கூறியதால், அவளுக்காக ஒரு ப்ளாக் உருவாக்கித் தந்துள்ளேன்.
இது, என் ஆறு வயது மகன், மற்றும் 13 வயது மகளின் டீம் ப்ளாகாக இருக்கும். அவன் டைப் செய்ய தெரியாவிட்டாலும், அவனுக்காக என் மகள் டைப் செய்வதாக சொல்லி இருக்கிறாள்.
இது நிச்சயமாக 100% அவர்களுடைய சொந்த பதிவுகளாக இருக்கும். டெக்னிகல் உதவி, பிழை திருத்தம் தவிர, வேறெதிலும், நான் தலையிட போவதில்லை. கருத்துக்கள், கற்பனைகள் எல்லாம் அவர்களுடையதாகவே இருக்கும்.
தமிழ் கூறும் பதிவுலகின் குட்டி ப்ளாகர்ஸ் ஆகிய சுட்டி பசங்களுக்கு, அவ்வப்போது ஊக்கம் தந்து உற்சாகப் படுத்துங்கள்.
அவர்களின் ப்ளாக் முகவரி : http://sutties.blogspot.com
நன்றி!
-சுமஜ்லா.
Tweet | ||||
14 comments:
வாழ்த்துக்கள் தோழி
வாழ்த்துக்கள் தோழி
வாழ்த்துக்கள் தோழி
வாழ்த்துக்கள் சுஹைனா , லாபிரா, லாமின் கலக்குங்க கலக்குங்க குடும்பத்தோடு கலக்குங்க
தாய் எட்டடி என்றால் குட்டிகள் 16 அடியா????...
வாங்க.. வாங்க..
குடும்பத்தோட பிளாக் படிக்க ரொம்ப ஆவலாக உள்ளோம்
ரெண்டு குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள், அம்மா சொன்னதுப்போல் ஸ்கூல் திறந்தவுடன் இதை மறந்து படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்....
லாபிரா, லாமின் வாழ்த்துகள்.
சுஹைனா சுட்டிஸ் கலக்குறாங்க...ரொம்ப பொருமை உங்க பெண்னுக்கு.
வாழ்த்துக்கள்...
மாஷா அல்லாஹ்!
நல்ல ஊக்கம்.
I appreciate your efforts. But even the elders seem not to have enough control on blogging. They are so young and kids. Try to develop some practice on the timings for blogging and restrict them from using otherwise. Let them play and enjoy now.
Sorry, I am taking too much of your space. It is purely my personal opinion.
--vidhya
என் பிள்ளைகளுக்கு வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் கோடி நன்றிகள்!
அவர்களின் வலையில் எழுதப்படும் கமெண்ட்டுக்கு என் மகள் தான் பதில் தருவாள். அதுவும் லீவு நாளில்!
வித்யா, ஒரு சகோதரியின் பாசத்தோடு தாங்கள் குறிப்பிட்டமைக்கு நன்றி!
என்னுடைய அனுமதியில்லாமல், ஒரு நிமிடம் கூட அவள் சிஸ்டத்தில் அமர முடியாது. அதோடு, இது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி போலத் தானே?! என்னுடைய ஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் அண்ட் சென்சார் இருக்கும், எல்லாவற்றிற்கும்...
பொதுவா, சிறுவர்களுக்காக, சுட்டி விகடன், சிறுவர் மலர் போல் உள்ளது, ஆனால் ப்ளாகில் அது போல் இல்லை. அதனால் தான் இந்த முயற்சி! என் மகளை, ஒரு பத்திரிக்கைக்கே பதிப்பாசிரியர் ஆக்கியது போல எனக்கு ஒரு மனநிறைவு.
நானும் என்னவரும், நிறைய யோசித்து, அதன் சாதகபாதகங்களை கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுத்தோம்.
இன்னும் சொல்லப்போனால், சில சமயம் அவள் பேப்பரில் எழுதித் தருவதை, அவளுக்காக நான் டைப் செய்து தருவேன். ஆனால், கருத்துக்களும், என்ன எழுதுவது என்பதும், 100% அவர்கள் ஒரினினலாகத்தான் இருக்கும்.
வாழ்த்துக்கள் சகோதரி, உங்களுக்கும் உங்கள் கண்மணிகளுக்கும்
அடடே, வாழ்த்துக்கள் இருவருக்கும்.
வாழ்த்துகிறேன்!
வரவேற்கிறேன்!!
அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை, 'பத்திரிகை'.
இதை 'பத்திரி(க்)கை' என பயன்படுத்துவது சரியன்று.
[ஒரு பத்திரிக்கைக்கே பதிப்பாசிரியர் ஆக்கியது போல எனக்கு ஒரு மனநிறைவு.]
வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி!
நன்றி நிஜாம் அண்ணா, இது போன்ற தவறுகள் எப்போது நேர்ந்தாலும் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்.
(பொதுவா, எனக்கு மொழிப்பற்று உண்டு; ஆனாலும் சில சமயம் பேச்சு மொழியில் டைப் செய்யும் போது, இது போன்ற பிழைகள் வந்து விடுகின்றது)
Post a Comment