Sunday, July 19, 2009

ப்ளாகில் நம் குரல்.

ஏற்கனவே நான் சொன்னபடி, இது என்னுடைய 100 வது பதிவு.

நாம் பல பேர் பாத்ரூம் பாடகர்களாக இருப்போம். நம் குரல் ப்ளாகில் ஒலித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போருக்கு ஒரு இலவச வசதி இருக்கிறது. சுலபமாக நம் குரலை ஒலிபரப்பலாம். இதோ முதலில் என் குரலைக் கேட்டு விட்டு, தொடர்ந்து படியுங்கள்.



முதலில், உங்கள் பாட்டையோ பேச்சையோ, விண்டோஸ் சவுண்ட் ரெக்கார்டர் மூலமாக ரெக்கார்ட் செய்து கொள்ளுங்கள். நான் பார்த்தவரை இதில் செய்தால் தான், அப்லோடுக்கு ஏற்றபடி குட்டி ஃபைலாகக் கிடைக்கிறது.

அடுத்து, http://www.archive.org/ சென்று ஒரு கணக்கு துவக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் தளம் ஆகும். அதில் லாகின் செய்தால், கீழே காணும் விண்டோ தோன்றும். open id url எனப்படும், உங்க ப்ளாக் ஐடி கொடுத்தும், உள்ளே நுழையலாம்.

இதில் Audio என்று இருப்பதைக் க்ளிக் செய்யுங்கள். இப்போ கீழே காணும் விண்டோ தோன்றும்.

மேலே கண்ட விண்டோ தோன்றியவுடன், அதில் கீழே இருக்கும், contribute your audio என்று இருப்பதை க்ளிக்குங்கள். இப்போ கீழே காணும் படி டைட்டில் கேட்கும். இப்போ, ஏதாவது ஒரு பெயர் கொடுங்கள். அது ஏற்கனவே கொடுக்கப்பட்டிருப்பதாக இருக்கக்கூடாது.

கவனம் இதில் உங்களுக்கென்று ஒரு பக்கம் எல்லாம் தர மாட்டார்கள். அதனால், ஒரு naming convention ஐ பின் பற்றுங்கள். அதாவது, sumazla என்றால், ஃபைல் பெயருக்கு sumazla 1, அல்லது sumazla A போல தந்தால், பின்னால் தேடி எடுக்க சுலபம்.
நெக்ஸ்ட் என்பதை க்ளிக்கினால், கீழ் கண்ட படி தோன்றும், இதில், title ல் அதே title, description என்ற இடத்தில், ஏதாவது ஓரிரு வார்த்தைகள், keywords என்னும் இடத்தில், உங்கள் ஒலிபரப்பு சம்பந்தமாக ஏதேனும் ஓரிரு வார்த்தைகள், அடுத்து author என்ற இடத்தில் உங்கள் பெயர் ஆகியவை கொடுத்து விடுங்கள். அடுத்து choose liscence என்று சிவப்பு நிறத்தில் இருப்பதை க்ளிக்குங்கள்.
அதாவது, உங்க work பொது என்றால், யார் வேண்டுமானாலும் மாற்றலாம். அதனால், திறக்கும் விண்டோவில், இரண்டு ஆப்ஷனுக்கும் no, no என்று கொடுத்து, உங்கள் நாட்டுப் பெயரைத் தேர்ந்தெடுத்து, select a liscence என்று இருப்பதை க்ளிக்குங்கள்.

இப்போ, அது மறைந்து, மீண்டும் பழைய விண்டோவில் நிற்போம். இப்போ browse செய்து, சேமித்து வைத்திருக்கும், ஃபைலை எடுத்துக் கொள்ளுங்கள். type என்பதில் ஆடியோ என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இது சோதனைக்காக செய்து பார்ப்பதென்றால், (remove after 30 days) என்று இருப்பதை டிக் செய்து கொள்ளுங்கள். ஒரு முறை அப்லோட் செய்து விட்டால், அது அழியாது. அதனால் இதைத் தேர்ந்தெடுத்தால், 30 நாட்கள் முடிந்தவுடன் தானே அழிந்து போகும்.

இனி அப்லோட் ஃபைல்ஸ் கொடுத்தால், உங்களுக்கான பக்கம் உருவாகிவிடும். கவனமாக அதை, ஓரிடத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஃபைலை அது பல வடிவங்களில் மாற்ற, சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதனால், விண்டோவை இனி மூடிவிடலாம். இனி, ஒரு மணி நேரம் கழித்து, நாம் காப்பி எடுத்து வைத்திருக்கும் urlஐ பிரவுசரில் கொடுத்தால், கீழ்காணும்படி நமக்கான பக்கம் தோன்றும்.

அதில் தெரியும் ப்ளேயரை முதலில் பாட விட்டு, பின், கீழே தெரியும் embed this என்பதை க்ளிக்கினால், கோடிங்ஸ் தெரியும். அதைக் கீழ் காணும் படி, காப்பி செய்து, நம் பதிவின் இடையே பேஸ்ட் செய்தால், வேலை முடிந்தது.

இதற்கு இன்னொரு குறுக்கு வழியும் இருக்கிறது. அதாவது, நமக்கான பக்கம் உருவானவுடனே, அதை நோட் செய்து கொள்ளுங்கள். உதாரணமாக: http://www.archive.org/details/sumazla என்பதாக உள்ளது அல்லவா? இதில் details என்பதை download என்று மாற்றிக் கொள்ளுங்கள். நான் அப்லோட் செய்த ஃபைலை கம்ப்யூட்டரில் உருவாக்கும் போது சேமித்த பெயர் varuga எனபதாகும். இப்போ, அதனோடு, _vbr.mp3 என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போ, இது தான் உங்க நேரடி லின்க்.

http://www.archive.org/download/sumazla/varuga_vbr.mp3


இனி, கீழே காணும் code ஐ பத்திரப்படுத்திக் கொண்டு, அதில் சிவப்பு நிறத்தில் தெரிவதற்கு பதிலாக உங்க நேரடி லின்க் கொடுத்தால் வேலை முடிந்தது.

<embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" width="300" height="52" type="application/x-shockwave-flash" flashvars="valid_sample_rate=true&amp;external_url= http://www.archive.org/download/sumazla/varuga_vbr.mp3" wmode="transparent" allowscriptaccess="always" quality="high"></embed>


மேலே காணும் கோடை உங்க பதிவின் இடையேவோ, அல்லது add a gadget - html/java script மூலமாகவோ புகுத்தி, வழிய விடுங்கள், உங்கள் பாடலை!

இதில் ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட் என எல்லா விதமான ஃபைலையும் அப்லோட் செய்யலாம், இலவசமாக!

பாடலோ, கவிதையோ, பேச்சோ, உங்கள் குரலைப் பதிந்துவிட்டு, எனக்குச் சொல்லுங்களே பின்னூட்டத்தில் வழியாக, நானும் கேட்கிறேன்.

-சுமஜ்லா.

59 comments:

சென்ஷி said...

100வது பதிவிற்கு முதல் வாழ்த்து என்னுடையது :))

சென்ஷி said...

தொழில் நுட்பப் பதிவு - அசத்தல்!

முனைவர் இரா.குணசீலன் said...

100வது பதிவுக்கும் பயனுள்ள செய்திக்கும் வாழ்த்துக்கள்....
இருவரும் ஒரே நேரத்தில் 100வது பதிவு எழுதியிருக்கிறோம் மிக்க மகிழ்ச்சி.....

Thamiz Priyan said...

100 க்கு வாழ்த்துக்கள் அக்கா!

Thamiz Priyan said...

பதிவைப் படிக்கிற தண்டனை போதாதுன்னு குரலை வேற கேக்கனுமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்






















சும்மா லுலுவாயிக்கு.. நல்ல டெக்னிகல் போஸ்ட்.. நன்றி!

ஸ்ரீ.... said...

நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல சாதனைகள் நிகழ்த்துவதற்கும்!

ஸ்ரீ....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்

//
தமிழ் பிரியன் said...
பதிவைப் படிக்கிற தண்டனை போதாதுன்னு குரலை வேற கேக்கனுமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

:))

கிரி said...

எதுக்குங்க வம்பு! அப்புறம் நம்ம குரல் கேட்டு வருகிற கொஞ்சம் பேரும் வராம போடுவாங்க ;-)

100 பதிவிற்கு வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

1ooவது இடுகைக்கு வாழ்த்துக்கள் சுஹைனா......

Suresh Kumar said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

அருமையான தொழில்நுட்ப பதிவு சகோதரி. நூறாவது பதிவுக்கு 100 மார்க் போட்டாச்சு.

வாழ்த்துக்கள்

Admin said...

100 பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்...

Admin said...

உங்கள் வலைப்பதிவினை நான் நண்பர் முனைவர் இரா. குணசீலன் மூலமாகத்தான் அறியக்கிடைத்தது.

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

Anonymous said...

புதுமைப் பெண்களடி பூமிக்கு கண்களடி பாரதி சொன்னனே கவி பாரதி சொன்னனே....

வாழ்த்துக்கள் சுமஜ்லா 100வது பதிவு பேசும்படியா போட்டுட்டீங்க....

நட்புடன் ஜமால் said...

வருக வருக! என்று அருமையாக வரவேற்கின்றீர்கள்.

வாழ்த்துகள்! 100க்கு(ம்)

டெக்னிகல் தகவலுக்கு நன்றிகள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

100ஆவது பதிவுப்பூவின் தேனை
பருக வந்'தேனே'!
வாழ்த்துத் தந்'தேனே'!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

SUFFIX said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.

SUMAZLA/சுமஜ்லா said...

//100வது பதிவிற்கு முதல் வாழ்த்து என்னுடையது :))//

முதலாவது வாழ்த்துக்கு முதலாவது நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

//தொழில் நுட்பப் பதிவு - அசத்தல்!//

மீண்டும் நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

//இருவரும் ஒரே நேரத்தில் 100வது பதிவு எழுதியிருக்கிறோம் மிக்க மகிழ்ச்சி.....//

அதானே, யார் யாருக்கு வாழ்த்து சொல்லுறதுன்னு குழப்பமா போச்சு பாருங்க. பரஸ்பரம் சொல்லிக்கலாமே?!

SUMAZLA/சுமஜ்லா said...

//100 க்கு வாழ்த்துக்கள் அக்கா!//

நூறுக்கு வாழ்த்துன்னா ஓக்கே, பேருக்கு வாழ்த்துன்னா நாட் ஓக்கே!

SUMAZLA/சுமஜ்லா said...

//பதிவைப் படிக்கிற தண்டனை போதாதுன்னு குரலை வேற கேக்கனுமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அட, பயந்திடுவீங்கன்னு தான் ஒரே வரியில் முடித்துக் கொண்டேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல சாதனைகள் நிகழ்த்துவதற்கும்!//

நன்றி ஸ்ரீ, வாசகர்கள் தான் என் பலமே!

SUMAZLA/சுமஜ்லா said...

//நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்//

வாழ்த்தோட, தமிழ் பிரியனின் கொட்டுக்கு டிட்டோ வேற கொடுத்திருக்கீங்க, ஓக்கே ஒக்கே கவனிச்சுக்கிறேன், செந்தில்!

SUMAZLA/சுமஜ்லா said...

//எதுக்குங்க வம்பு! அப்புறம் நம்ம குரல் கேட்டு வருகிற கொஞ்சம் பேரும் வராம போடுவாங்க ;-)//

அட, நீங்களுமா? அதுக்குத்தானே, கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல பேசியிருக்கேன்...

SUMAZLA/சுமஜ்லா said...

//1ooவது இடுகைக்கு வாழ்த்துக்கள் சுஹைனா......//

நன்றி வசந்த்! உள்ளபடியே உங்க எல்லா பட பதிவையும் மிகவும் ரசிப்பேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி சுரேஷ்.

SUMAZLA/சுமஜ்லா said...

//அருமையான தொழில்நுட்ப பதிவு சகோதரி. நூறாவது பதிவுக்கு 100 மார்க் போட்டாச்சு.//

அட, பரிச்சையிலேயே 100 மார்க் வாங்கியது போல ஒரு சின்னப்புள்ளத்தனமான சந்தோஷம் வருதுங்க!

SUFFIX said...

தயவு செய்து இதனை இங்கிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்
http://shafiblogshere.blogspot.com/

SUMAZLA/சுமஜ்லா said...

//100 பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்...//

நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்கள் வலைப்பதிவினை நான் நண்பர் முனைவர் இரா. குணசீலன் மூலமாகத்தான் அறியக்கிடைத்தது.//

முனைவருக்கு நன்றி சொல்ல வேண்டும் நான், புது புது வாசகர்களை அறிமுகப்படுத்தியதற்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

//புதுமைப் பெண்களடி பூமிக்கு கண்களடி பாரதி சொன்னனே கவி பாரதி சொன்னனே....

வாழ்த்துக்கள் சுமஜ்லா 100வது பதிவு பேசும்படியா போட்டுட்டீங்க....//

அட, என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை! பாரதி பற்றி பள்ளி நாட்களில் ஒரு கவிதை நானும் எழுதியிருக்கிறேன். ஒரு நாள் வெளியிடுகிறேன்.

பொதுவா சிக்கனமா வாழ்த்தறவங்களுக்கு சிக்கனமா, மெத்தனமா பதில் தர்ரவங்களுக்கு மெத்தனமா, ஆங்கிலத்தில் தருபவருக்கு ஆங்கிலத்தில், இப்படி, அவங்க மனப்போக்கு போல நானும் பதில் தருவேன். இதை நான் ஆனந்த விகடன் மதனிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//வருக வருக! என்று அருமையாக வரவேற்கின்றீர்கள்.//

நீங்க ஒருத்தர் தான் ஜமால், என் குரல் பதிவைப்பற்றி சொன்னது. யாருக்கும் ப்ளே ஆகலையோ என்ற என் சந்தேகம் தீர்ந்தது. நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

//100ஆவது பதிவுப்பூவின் தேனை
பருக வந்'தேனே'!
வாழ்த்துத் தந்'தேனே'!//

இந்த கவிச்சிலேடையை வைத்துப் பார்க்கும் போது, இருவரும் ஒரே நிஜாம் அண்ணா தான் என்று தோன்றுகிறது. உங்கள் பதிலால், நான் மகிழ்ந்‘தேனே’!

SUMAZLA/சுமஜ்லா said...

//எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.//

அக்கா, சகோதரியாகிவிட்டதிலிருந்து ஒன்று தெரிகிறது. என் குரலை வைத்து, என் வயதைத் தெரிந்து கொண்டீர்களோ?! ப்ரொஃபைலில் இருப்பது சரி தான் தம்பி!

asiya omar said...

உங்களின் வலைப்பூவின் தேனை பருகியவர்களில் நானும் ஒருத்தி என்பதே மிக்க மகிழ்ச்சி,நூறு என்பது உங்களைப்பொறுத்தவரை வேகமாக கடந்த சிறிய தொலைவு தான் என்றாலும் இன்னும் பல்லாயிரம் உங்கள் வலைப்பூவில் நாங்கள் உலா வர வாழ்த்துக்கிறேன்.மிக்க நன்றி.

அன்புடன் அருணா said...

100 பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்..+பூங்கொத்து!!!

Menaga Sathia said...

உங்களின் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுகைனா.நம் குரல்லாம் ப்ளாக்ல போட்ட வரவங்க கூட வராம போய்டுவாங்களோன்னு பயமா இருக்கு.உங்களின் குரல் நல்லாயிருக்கு.மேலும் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாக உங்களுக்கு அவர்ட் குடுத்திருக்கேன்பா,ஏத்துக்குங்க.
http://sashiga.blogspot.com/2009/07/blog-post_19.html

சாரதி said...

வாழ்த்துகள்...

பீர் | Peer said...

100 வது பதிவுக்கும் குங்குமத்திற்கும் வாழ்த்துக்கள்.

பீர் | Peer said...

100 வது பதிவுக்கும் குங்குமத்திற்கும் வாழ்த்துக்கள்

இராஜகிரியார் said...

வரவேற்பிற்கு மிக்க நன்றி சகோதரி. மென்மேலும் உயர்வு பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

//அதுக்குத்தானே, கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல பேசியிருக்கேன்...//

எனக்கென்னவோ உங்கள் குரலை கேட்கும் போது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல தோண வில்லை. ஏதோ ஒரு ஆடிடோரியத்தில் வந்து அமர்ந்திருக்கும் உணர்வு தான் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்...!!!

எம்.எம்.அப்துல்லா said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா said...

முதலில் என்னுடைய வாழ்த்துகள். அப்படியே உரிமையோடு ஒரு சிறு திருத்தம்...

//என்னுடைய 100 வது பதிவு //

பதிவு என்பது blog. இடுகை என்பதுதான் posting க்கு சரியான வார்த்தை. எனவே ”என்னுடைய 100வது பதிவு” என்பதை 100வது இடுகை” என்று மாற்றிவிடுங்களேன். நல்ல தமிழ் ஆர்வலரான உங்க பதிவில் சொற்பிழை இருக்கலாமா???

:)

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்களின் வலைப்பூவின் தேனை பருகியவர்களில் நானும் ஒருத்தி என்பதே மிக்க மகிழ்ச்சி,நூறு என்பது உங்களைப்பொறுத்தவரை வேகமாக கடந்த சிறிய தொலைவு தான் என்றாலும் இன்னும் பல்லாயிரம் உங்கள் வலைப்பூவில் நாங்கள் உலா வர வாழ்த்துக்கிறேன்.//

மற்ற அனைவரையும் விட, நீங்கள் என் என் நீண்ட நாள் வாசகி என்பதால், உங்கள் வாழ்த்தின் மதிப்பே தனி தான் அக்கா. தேங்க்யூ!

SUMAZLA/சுமஜ்லா said...

//100 பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்..+பூங்கொத்து!!!//

பூங்கொத்துக்கு மிக்க நன்றி அருணா!

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்களின் குரல் நல்லாயிருக்கு.மேலும் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாக உங்களுக்கு அவர்ட் குடுத்திருக்கேன்பா,ஏத்துக்குங்க.//

தேங்க்யூ மேனகா, ஐந்தாவது ஆளாக எனக்கு விருதளித்துள்ளீர்கள். ஏற்கனவே உள்ள மூவரின் பெயரோடு தங்கள் பெயரையும் இணைத்துக் கொள்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//வாழ்த்துகள்...//

நன்றி சாரதி!

SUMAZLA/சுமஜ்லா said...

//100 வது பதிவுக்கும் குங்குமத்திற்கும் வாழ்த்துக்கள்.//

இரண்டு முறை பதிவுக்கும் குங்குமத்துக்கும் வாழ்த்தி, 2*2 = 4 ஆக்கிய பீர் சாருக்கு நான்கு முறை நன்றிகள். Peer is Peerless(ஒப்புவமையற்ற)!

SUMAZLA/சுமஜ்லா said...

//எனக்கென்னவோ உங்கள் குரலை கேட்கும் போது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல தோண வில்லை. ஏதோ ஒரு ஆடிடோரியத்தில் வந்து அமர்ந்திருக்கும் உணர்வு தான் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்...!!!//

“ஒரு வெள்ளை மழை இன்று பொழிகின்றது” , அட, நீங்க வெச்ச ஐஸ் தாங்க, மழையளவுக்கு இருக்கு! வெட்கத்துடன் தேங்க்யூ!

SUMAZLA/சுமஜ்லா said...

//பதிவு என்பது blog. இடுகை என்பதுதான் posting க்கு சரியான வார்த்தை. எனவே ”என்னுடைய 100வது பதிவு” என்பதை 100வது இடுகை” என்று மாற்றிவிடுங்களேன். நல்ல தமிழ் ஆர்வலரான உங்க பதிவில் சொற்பிழை இருக்கலாமா???//

நிச்சயம் மாற்றி விடுகிறேன் நண்பரே! ஆனாலும், இந்த பதிவில், மொத்தம் 35க்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தை கலப்பு இருக்கு! என்ன செய்வது இல்லாட்டி நம்ம மக்களுக்குப் புரியாதே?! அதனால் நல்ல தமிழ் ஆர்வலர் என்ற தகுதி எனக்கு இருக்கா தெரியாது!

அதிரை அபூபக்கர் said...

ப்ளாக் தொடங்கி குறைந்த காலங்களின் நிறையப்பல பயணுள்ள பதிவுகளை தந்து உள்ளீர்கள்...இன்னும் மேலும் நிறைய பதிவுகள் தர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.அக்கா.

Joe said...

அருமையான, பயனுள்ள பதிவு.

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

அடுத்த வாரம் இதனை முயற்சித்து பார்த்து, உங்களுக்கு மீண்டும் ஒரு பின்னூட்டம் இடுகிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//இன்னும் மேலும் நிறைய பதிவுகள் தர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.//

உங்க ப்ரார்த்தனையே பெரிய வாழ்த்து தான். இறைவன் போதுமானவன்.

//அருமையான, பயனுள்ள பதிவு.

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

அடுத்த வாரம் இதனை முயற்சித்து பார்த்து, உங்களுக்கு மீண்டும் ஒரு பின்னூட்டம் இடுகிறேன்.//

கண்டிப்பா சொல்லுங்க ஜோ!

வால்பையன் said...

நூறுக்கு வாழ்த்துக்கள்!

பாட்டு பாடி வலையில வைக்கலாம், ஆனால் இப்போ வர்ற நண்பர்களும் வராம போயிட்டா! அதான் பயமா இருக்கு!

GEETHA ACHAL said...

உங்களுடைய 100வது பதிவிற்கு என்னுடைய வாழ்த்துகள். மிகவும் தெளிவாக அருமையாக சொல்லி தந்து இருக்கின்றிங்க.

Jawahar said...

குரலை டவுன்லோட் செய்து கேட்டு விட்டேன். தலைவரே என்று அட்ரெஸ் செய்தது சரிதானா!

http://kgjawarlal.wordpress.com

SUMAZLA/சுமஜ்லா said...

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எண்ணி கொள்ளுங்கள். என் நெருங்கிய நட்புக்களுக்கு தெரியும் என்னை பற்றி! ‘என்ன தலைப்பு வைப்பது?’ என்ற இடுகையை படித்தால் புரியும்.
பை த பை, ஒரு பெண்ணால் முடியாது என்று நினைப்பது போல் உள்ளது உங்கள் பதிவு.

Jawahar said...

மன்னிக்கணும் தோழி,

உங்க புரொபைலை பார்த்திருந்தேன்னா குழப்பமே இருந்திருக்காது. ஒருக்கால் நீங்கள்
ஆணாக இருந்து என் அட்ரேச்சிங்கை தலைவி என்று மாற்றினால் இன்சல்ட் ஆகி விடுவீர்களோ என்ற பயம்தான் அப்படி எழுத வைத்தது.

நான் பாரதியார் பக்தன். பெண்களை எக்காலத்தும் குறைத்து மதிப்பிடுபவன் இல்லை.

புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

http://kgjawarlal.wordpress.com