Wednesday, August 5, 2009

மயங்கும் இதயம்

வேப்பமர அசைவில் நான் பார்ப்பதென்ன
.....வேகம்போகும் காற்று காதில் சொல்வதென்ன!

காலம் நல்ல காலம் இனி எந்நாளுமே
.....கடந்துபோன சோகம் யாவும் பறந்தோடுமே!

பறக்கும் காகம் சிறகை ஆட்டி கரைவதென்ன
.....பாடும் குயிலின் பாட்டிலுள்ள அர்த்தமென்ன!

மழையின் தூறல் குளிரும் சாரல் ஊதலென்ன
.....மண்ணின் வாசம் நெஞ்சின் ஆழம் இனிப்பதென்ன!

தூறல் பட்டு பறவை யாவும் தூங்கப் போனதோ
.....மரத்தின்கைகள் மழையின்சுகத்தில் ஆட்டம் கொண்டதோ!

வெள்ளைக்கொக்கு தொல்லையென்று கூட்டைத் தேடுதோ
.....எல்லாம் இனிமேல் இன்பம் இன்பம் ராகம் பாடுதோ!

தென்றல் சுகத்தில் மயங்கும் இதயம் துணையைத் தேடுதே
.....கைகள்கோர்த்து நெஞ்சில்சாய்ந்து கதைகள் பேசுதே!

கன்னத்திலே இதழ்கள் பேசி காதல் செய்யுதே
.....எண்ண மெல்லாம் இனிமைபொங்கி நிரம்பி வழியுதே!

கண்ணில் நிறைந்த காதல்மச்சான் நெஞ்சம் சேருதே
.....காதல்குயிலின் கானம் கேட்டு உள்ளம் மயங்குதே!

சிலுசிலுவென்று தழுவும் காற்று சிந்தை யள்ளுதே
.....சிரிப்பு இனிமேல் நிரந்தரமென்று என் மனம் பாடுதே!

-சுமஜ்லா

30 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அட நல்லாருக்கே......

. said...

கவிதை அழகா இருக்குங்க...!!

SUFFIX said...

//சிலுசிலுவென்று தழுவும் காற்று சிந்தை யள்ளுதே
.....சிரிப்பு இனிமேல் நிரந்தரமென்று என் மனம் பாடுதே//

அருமையா இருக்கு!! இதனை படிக்கும்போது எங்களுக்கும் ஆனந்தம் தான். வாழ்த்துக்கள்!!

NIZAMUDEEN said...

கவிதையின் வார்த்தைகளின் கோர்வையில்
என் இதயம் மயங்குது.

நட்புடன் ஜமால் said...

தென்றல் சுகத்தில் மயங்கும் இதயம் துணையைத் தேடுதே
.....கைகள்கோர்த்து நெஞ்சில்சாய்ந்து கதைகள் பேசுதே!

கன்னத்திலே இதழ்கள் பேசி காதல் செய்யுதே
.....எண்ண மெல்லாம் இனிமைபொங்கி நிரம்பி வழியுதே!

கண்ணில் நிறைந்த காதல்மச்சான் நெஞ்சம் சேருதே
.....காதல்குயிலின் கானம் கேட்டு உள்ளம் மயங்குதே!

சிலுசிலுவென்று தழுவும் காற்று சிந்தை யள்ளுதே
.....சிரிப்பு இனிமேல் நிரந்தரமென்று என் மனம் பாடுதே!

]]

இவை ரொம்ப அருமை.

அப்துல்மாலிக் said...

குறிப்பிட்ட அனைத்துக்கும் மயங்கா இதயம் எது?

அருமை வாழ்த்துக்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

நல்லா இருக்குனு பாராட்டிய எல்லாருக்கும் நன்றிங்க!

ஜமால் நீங்க பின் பாதியை எடுத்திருக்கீங்க!

ஆனா, நாங்க அப்ப, வாடகை வீட்டில் குடியிருந்தோம். பெரிய திண்ணை தொலாகட்டை தார்ஸ் உடைய பழைய காலத்து பெரிய வீடு!பக்கத்து வீட்டு வேப்பமர குப்பை எப்பவும் எங்க வீட்டில் தான். ரொம்ப பழமையான பெரிய அந்த மரத்தில் பல வகைப்பட்ட பறவைகள் இருக்கும்.

என்னவருக்கு உடல் நிலை சரியாகி, கொஞ்சம் கொஞ்சமாக அப்பதான் தேறி வந்தார். அப்ப ஒரு நாள் மழை வர மாதிரி இருந்தது.

காத்து சிலுசிலுனு முகத்தில் அறையற மாதிரி வீசிக்கிட்டு இருந்தது. பறவைகள் எல்லாம் மரத்தில் வந்து அடைந்து கொண்டிருந்தன. காற்றின் வேகத்துக்கு மரம் அசைந்தாடிக்கிட்டிருந்தது. இந்த சிச்சுவேஷன் போதாதா, ஒரு கவிஞருக்கு???

ஏன், நம்ம சொந்த கதை மாதிரி தெரியணும்னு, ‘காதல்மச்சான்’ என்று வரும் இடத்தில் வார்த்தகளை மாற்ற முடியன்றேன், ஏனோ பொருத்தமான வார்த்தையும் கிடைக்கல, மாற்ற மனசும் வரல. சரி மச்சான் என்பது பொது வார்த்தை தானே என்று அப்படியே விட்டு விட்டேன்.

ஊடலுக்கு ஒரு கவிதை, கூடலுக்கு ஒரு கவிதைனு எழுதற பைத்தியகாரி நான். நிறைய கவிதைகள் இது மாதிரி இருக்கு! அப்பப்போ போடறேன்!

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, பாலோவர்ஸ்ல add பண்ணி இருக்கீங்க! ஆனாலும், போட்டோ இல்லாததால், கடைசிக்கி போயிருச்சு. நெக்ஸ்ட் நெக்ஸ்ட் க்ளிக் பண்ணி பார்த்தால் தெரியும். (என்ன தான் போய் உள்ள ஒளிஞ்சிக்கிட்டாலும், என் பார்வைக்கு தப்பாதுங்க! நான் ரொம்ப ஷார்ப்!)

nila said...

//சிலுசிலுவென்று தழுவும் காற்று சிந்தை யள்ளுதே
.....சிரிப்பு இனிமேல் நிரந்தரமென்று என் மனம் பாடுதே!//

எங்கள் விருப்பமும் அதுதான்... keep smiling forever...அனைத்துமே அழகான வரிகள்............

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதைகள் நல்லா இருக்கு

அரங்கப்பெருமாள் said...

கலக்கிட்டீங்க... ரொம்ப நல்லா இருக்கு...

//தென்றல் சுகத்தில் மயங்கும் இதயம் துணையைத் தேடுதே//
//நெஞ்சில்சாய்ந்து கதைகள் பேசுதே!//

காதல் வழியுது போங்க...

Anonymous said...

madam kavithi superb. jaffer

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கே. மெட்டுப் போட்டு பாடினால் இன்னும் நல்லா இருக்குமோ

இப்னு அப்துல் ரஜாக் said...

सबाश

Anonymous said...

அன்பு மகளே!
உன் எழுத்துப்பணி ஜாதி மத வேறு பாடற்ற சமுதாயம் உருவாக பயன்பட வேண்டும் என 58 வயதான, மனத்தளவில் இளைஞரான நான் ஆசைப்படுகிறேன். இதுபற்றி விரிவாக உனக்கு எழுத விரும்புவதால் உன் இ மெயில் ஐ டி எனக்கு வேண்டும்.
திரவிய நடராஜன்,
சென்னை.
e mail id: thiravianatarajan@gmail.com

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி நிலா, ஸ்டார்ஜன், ஜாபர்.

அய்யோ அரங்க பெருமாள் அண்ணா, நீங்க சொன்னத கேட்க எனக்கே வெட்கமா போச்சுங்க.

என் முக்கால்வாசி கவிதைகள், பாடல் வகையை சார்ந்தது தான்! ஒரு சந்த நயமும், தாள லயமும் இருக்கும்.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி கிராமத்தான் அவர்களே, தங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

// அமைதி ரயில் said...
सबाश//


बहूत शुक्रिया भाई.

आप हिंदी में लिक्था है थो क्या कारण है. मुजको हिंदी अच्छा नै मालुम, थोडा थोडा हीं !

NIZAMUDEEN said...

இந்த பிளாக்கில் இது 1501-ஆவது பின்னூட்டமாயிருக்கலாம்.

நேற்று நான் ஃபாலோவர்ஸ் ஆட் பண்ணலைன்னா நான்
நூறுவரில் ஒருவராய் வந்திருக்கமுடியாதே! (நூத்துல ஒன்னு)

itsSoldier said...

ஒரு மெட்டு போட்டு பாட்டு பாடினால் மயங்கும் மனது மலருமோ, வேப்ப மரம் விழித்து பூ பொழியுமோ. உங்கள் அனுமதி இருந்தால் நான் பாடி youtube போட்டு விடுகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

मुजको थोड थोड मालुम है जी.हिन्थी हमारा राष्टीय बाशा हैं,इसकेलिए,मैं हिन्थी मैं लिक्था हूम जी.आपका हिन्थी अच्छा है जी.बहुत बहुत शुक्रिया जी.

"உழவன்" "Uzhavan" said...

என்ன அழகான பாடல் வரிகள் :-)

SUMAZLA/சுமஜ்லா said...

//நேற்று நான் ஃபாலோவர்ஸ் ஆட் பண்ணலைன்னா நான்
நூறுவரில் ஒருவராய் வந்திருக்கமுடியாதே! (நூத்துல ஒன்னு)//

எப்படியோ, நூத்துல ஒன்னுனு நிரூபிச்சிட்டீங்க! இணைத்துக் கொண்டமைக்கு நன்றி! டேஷ் போர்டில் போய், உங்க ப்ரொஃபைலில் படம் இணைத்தால், முன்னாடி தெரிவீர்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்கள் அனுமதி இருந்தால் நான் பாடி youtube போட்டு விடுகிறேன்.//

தாராளாமாக போடுங்கள். எழுதியவர் பெயரையும் சுட்டியையும், பின் இணைப்பாக கொடுத்து விட்டு சொல்லுங்கள். அதன் லின்க்கையும் இந்த பக்கத்தில் இணைத்து விடுகிறேன். நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி உழவன். நானும், என் மனதில், இதற்கு ஒரு மெட்டு வைத்திருக்கிறேன்.

NIZAMUDEEN said...

//मुजको थोड थोड मालुम है जी.हिन्थी हमारा राष्टीय बाशा हैं,इसकेलिए,मैं हिन्थी मैं लिक्था हूम जी.आपका हिन्थी अच्छा है जी.बहुत बहुत शुक्रिया जी.//

-நல்ல கருத்து அமைதி ரயில்.
(அப்புறம் உங்க எழுத்து என்ன பாஷைங்க?)

SUMAZLA/சுமஜ்லா said...

//-நல்ல கருத்து அமைதி ரயில்.
(அப்புறம் உங்க எழுத்து என்ன பாஷைங்க?)//

என்ன பாஷை என்றே தெரியாமல் எப்படிங்க நல்ல கருத்துனு கண்டு பிடிச்சிங்க?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எனக்கு ஹிந்தி
தெரியும்... ஆனா...
தெரியாது.

itsSoldier said...

மெட்டு போட்டு, பாட்டை பாடி பதிவு செய்துவிட்டேன். மிகுந்த நன்றி உங்கள் அனுமதிக்காக. கேட்பதற்கு http://www.youtube.com/watch?v=R4fN7Oo0_2c

Unknown said...

அணைத்து தமிழ்ச்செய்திகளையும் ஒரே தளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்
http://www.thanthi.co.cc