Sunday, August 9, 2009

தொடரும் விமர்சனம் - யாக்கை

‘யாக்கை’ யை பற்றி எல்லாரும் ‘ரொம்ப’ சொல்ல, அதிலும் RV அண்ணன், பின்னூட்டத்தில் வேறு போட, நானும் இதை ஒரு பின்னூட்டமாகத்தான் போட நினைத்தேன். ஆனால், ரொம்ப வளர்ந்ததால், ஒரு பதிவாகவே போட்டு விட்டேன்.

யாக்கை என்று பெயர் வைத்திருப்பதற்கு பதில் காக்கை என்று வைத்திருக்கலாம் என்று ஒருவர் சொல்லியிருந்தார். யாக்கை என்பதற்கு உடல் என்று அர்த்தம் என்று புரிந்து சொன்னாரா புரியாமல் சொன்னாரா தெரியவில்லை.

எல்லாரும் சொல்லும் யாக்கை கதையை ஏற்கனவே படித்துவிட்டேன். யதார்த்தம் என்ற பெயரில், விரசத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்.

ஒரு வேளை ஆண்கள் சப்ஜக்ட் என்பதால், ஆண்கள் அனைவருக்கும் பிடித்திருக்கோ தெரியவில்லை. எனக்கு என்னவோ ஒரு வித அருவறுப்பு தான் வந்த்து.

நான் பார்த்த வரை எல்லா ஆண்களும் கண்ணியமானவர்கள் தான். யாரும் இந்த அளவுக்கு இறங்கி போவார்கள் என்று தோன்றவில்லை. அந்த கதைக்கு தந்திருந்த ரத்தம் தோய்ந்த ஓவியம், காமம் இந்த அளவுக்கு ஆபத்தானது என்று சொல்லாமல் சொல்லுதோ?

அது மட்டுமல்ல, ஆண்புணர்ச்சியை இஸ்லாம் வெறுக்கிறது. அது பற்றி குரானிலே ஒரு அத்தியாயமே இருக்கிறது. அது இயற்கைக்கு மாற்றமான செயல் மட்டுமல்ல, பெண்ணினத்தை அவமானப்படுத்தும் செயல். பெண்ணின் தேவை இல்லாமல் செய்யும் செயல்! லூத் நபி (அலை) அவர்களின் சமூகத்தை இறைவன் இக்காரணத்தால் தான் அழித்தான்.

الْعَالَمِينَ

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"[7:80 ]إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء

بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."[7:81 ]

வயது முதிர்ந்த ஒரு கிழவியின் மேல் அடிக்கும் வாடையையும், ஒரு பெண்ணின் மேல் வீசும் வாசனையையும், முரண்பட்டு விளக்கியிருப்பது உவ்வேக்!

காம உணர்வுகள் பொதுவானது; சுவையானது; சுகமானது. அதனால் தான் வள்ளுவரே, காமத்து பால் எழுதி இருக்கிறார். ஆனால், அது, தென்றலின் தீண்டல் போல, வெண்ணையில் இருக்கும் முடியை எடுப்பது போல, காதலில் எல்லையாக இருக்க வேண்டும்.

கதையின் நாயகனுக்குள்ளும், உங்களுக்கும், எனக்குள்ளும் ஏன் எல்லாருக்குள்ளும் ஒரு சைத்தான் இருக்கத்தான் செய்கிறான். அது இயற்கையின் நியதி. ஆனால், அந்த சைத்தானே, எப்போதும் வெற்றி கொள்வதாக காட்டுவது, முட்டாள்தனம்.

தெய்வங்களில் கூட காமத்தை காண்பது ஒரு பெண்ணின் பார்வையில் கொஞ்சம் ஓவர்! எல்லா ஆண்களும் இப்படித்தானோ என்று எண்ண தோன்றுகிறது. ஆணினத்தில் மேல் வைத்திருக்கும் மரியாதை குறைகிறது.

ஒரு சில வரிகள் முகம் சுழிக்க வைக்கின்றன. எது என்று சொல்ல விரும்பவில்லை. வெளிப்படையாக சொல்கிறேன் பேர்வழி என்று, வேட்கையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். சில விஷயங்களை இலை மறை காயாக சொல்வது தான் அழகு! அப்பட்டமாக சொல்லும் போது, சொல்லவரும் விஷயம் கூட அதன் வீரியத்தை இழந்து விடுகிறது!

மொத்தத்தில் பசியை போல, காமமும் ஒரு உணர்வு தான். ‘ஆசை தீர நெரிச்சவனும் இல்லை; அழுக்கு தீர குளிச்சவனும் இல்லை’ என்பது பழமொழி! ஆனால், அதுக்கான சரியான வழி திருமணம் தானே தவிர, இது போன்ற செயல்கள் அல்ல.

கதையாக்கத்தில், நிறைய முரண்கள் இருக்கிறது. அதை நடுவரே, தன் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறார்.

பலரும் இதைப்பற்றி பேசுவதால், அவருக்கு பேஜ் வியூஸ் எகிரும். அது ஒன்று தான் லாபம். கதையில் அவர் சொல்லி இருப்பது போல, பலரின் “” க்கு இது உபயோகப்படும்.

தைரியமாக, இந்த சப்ஜக்ட்டை கையாண்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக பரிசு தர வேண்டுமா? என்று நடுவர்கள் நினைத்திருக்கலாம்.

நான் கேட்கிறேன், ஆனந்த விகடன் போன்ற வெகுஜன பத்திரிகையில் இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து தைரியமாக வெளியிடுவார்களா? அப்போ, இணையத்துக்கு மட்டும் தனி நீதியா?

-சுமஜ்லா.
.
.

10 comments:

சென்ஷி said...

என்ன இப்படி சூடாகறீங்க..!

//
தைரியமாக, இந்த சப்ஜக்ட்டை கையாண்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக பரிசு தர வேண்டுமா? என்று நடுவர்கள் நினைத்திருக்கலாம்.//

இல்லைங்க. அதுக்கு வேற காரணம் சொல்லியிருக்காங்க. அது நிச்சயம் ஏற்புடையதுதான்.

//கதையில் அவர் சொல்லி இருப்பது போல, பலரின் “” க்கு இது உபயோகப்படும்.//

எனக்கு அவரோட கதை நல்லா இருந்தது. கதைன்னு யோசிக்கறப்ப அரைச்ச மாவை திரும்ப திரும்ப அரைச்சுக்கிட்டு இல்லாம புதுசா யோசிச்சு எழுதறதுக்கு ஒரு தில்லு வேணும்னு நான் நினைக்குறேன்.

//எல்லா ஆண்களும் இப்படித்தானோ என்று எண்ண தோன்றுகிறது. ஆணினத்தில் மேல் வைத்திருக்கும் மரியாதை குறைகிறது.//

வெறும் வார்த்தைகளையும் வர்ணனைகளையும் வச்சிக்கிட்டு நீங்க ஒருத்தரை எடை போட்டு மதிப்பிட முடியும்னா மன்னிச்சுக்குங்க அதை விட வேற யாரையும் அசிங்கப்படுத்த முடியாது.

உங்க பதிவை இன்னும் அக்கக்கா விமர்சிக்க முடியும். இருந்தும் எனக்கு நேரம் இல்லை. மன்னிக்க..

முடிஞ்சா இந்த பதிவுல இருக்குற கருத்துக்களை மறுபடி நீங்க டென்சன் ஆகாதப்ப பொறுமையா படிச்சு பாருங்க. நீங்க எழுதியிருக்குற தவறுகள் புரியும்.!

SUMAZLA/சுமஜ்லா said...

//நீங்க எழுதியிருக்குற தவறுகள் புரியும்.!//

அவரவர் கருத்தை முன்வைத்திருக்கிறோம், இது அவரவர் கண்ணோட்டம். அவ்வளவு தான். இதனால், சண்டையோ மனவருத்தமோ கிடையாது.

இது என்னுடைய பார்வை மட்டுமல்ல, ஒரு பெண்ணுடைய பார்வையும் கூட!

////எல்லா ஆண்களும் இப்படித்தானோ என்று எண்ண தோன்றுகிறது. ஆணினத்தில் மேல் வைத்திருக்கும் மரியாதை குறைகிறது.//

இந்த வரிகளை படித்த நீங்கள்,

//நான் பார்த்த வரை எல்லா ஆண்களும் கண்ணியமானவர்கள் தான். யாரும் இந்த அளவுக்கு இறங்கி போவார்கள் என்று தோன்றவில்லை.//

இந்த வரிகளை படிக்கவில்லை. இரண்டாவது தான் என் இயற்கையான எண்ணவோட்டம். முதலாவது, அந்த கதையின் பாதிப்பினால் வந்தது...

Joe said...

No comments, as I haven't read the story.

Can some1 give me the link of the post announcing the winners of the short story contest?

தமிழ் பிரியன் said...

:)

அமைதி ரயில் said...

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56
-----------------------
''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082
------------------------


அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)
----------------------

மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)
the quran

நட்புடன் ஜமால் said...

இப்படி ஒரு கதையை படிக்கவில்லை

தேவையுமில்லை.

குர்ஆனின் வசன மேற்கொள் காட்டியது அழகு.

--------------------------

உங்கள் கருத்தினை சொல்லியருப்பது சரிதான்.

ஆனாலும் இப்படிபட்ட விடயங்களெக்கெல்லாம் கருத்து சொல்லனுமா என்ன - இதையெல்லாம் பதிவு போட்டு ஒரு விளம்பரம் குடுத்த மாதிரி இருக்கு

----- இது என்னோட கருத்து.

NIZAMUDEEN said...

உங்களின் உள்ளக்கருத்தை உரக்க, உரைத்துள்ளீர்கள்.

அவரவர் கருத்தை, அவரே வெளியிட அனைவருக்கும் உரிமையுண்டு.

அப்படித்தான் நீங்களும் செய்துள்ளீர்கள், தவறேயில்லை.

SUMAZLA/சுமஜ்லா said...

ஜமால் நீங்க சொல்வதும் ஒரு விதத்தில் சரி! அதனால் தான் அந்த கதைக்கான சுட்டியை கொடுக்கவில்லை.

நிஜாம் அண்ணா, பலரும் கருத்து கூற தயங்கும் வேளையில், தங்கள் கருத்து கூறியமைக்கு நன்றி!

நிகழ்காலத்தில்... said...

ஒரு வரியில் சொன்னால்

கனியிருக்க காய் கவர்ந்தற்று

ஆணுக்கு பெண் இருக்க ஆண் எதற்கு?

வாழ்த்துக்கள் சுமஜ்லா உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்

Rama said...

என்னடா விரசதத கண்டீங்க, மனிதனின் உள்ளே இருக்கும் மிருகத்தை அவர் எழுதி இருக்கிறார். இது யதார்த்தத்தின் உச்சகட்டம், என்னவோ அவுரு DMKகாரனும் ADMKகாரனும் உடலுறவு கொண்டார்கள் அப்படினா எழுதுனாரு. அய்யா, விமர்சனம் என்பது....சரி வுடுங்க...உங்கள திருத்த முடியாது.