Tuesday, August 11, 2009

மாலை இன்பம்


கவிதை எழுதிக் கவிதை எழுதி காலம் போனது
...வாழ்க்கை இங்கே வாழும் போது புதுமையானது.
இந்த இணைய பாசம் நட்புப்பாலம் உறுதியானது
...என் பாடல்களில் எதிரொலிக்கும் சுருதியானது!

வானம்பாடி கானம் நூறு பாடுகின்றது
...காற்றினிலே கவிதை வந்து தழுவுகின்றது
குன்றின் மேலே குயிலமர்ந்து கூவுகின்றது
...அந்த குரலும் கூட கவிதையாகி நெஞ்சம் நிறைந்தது!

சோதரர்கள் போல நாங்கள் பழகிடும் விதம்
...காலம்கால மாகமனதில் நிற்குமே நிதம்!
மயில்தன் தோகை யைவிரித்து ஆடும் போதிலே
...அழகு மாலை இன்பம் அருகில் வந்து பாடும் காதிலே!

-சுமஜ்லா.
.

9 comments:

நட்புடன் ஜமால் said...

இந்த இணைய பாசம் நட்புப்பாலம் உறுதியானது

சோதரர்கள் போல நாங்கள் பழகிடும் விதம்
...காலம்கால மாகமனதில் நிற்குமே நிதம்!]]


அழகு.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஜமால்!

பள்ளி பாசம், சோதரிகள் என்று எழுதிய கவிதை இது, பள்ளி நாட்களில், சூழ்நிலைக்கு தக்க சிறு மாற்றம் செய்தேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சரியாக சொன்னீர்கள்

SUFFIX said...

உண்மையான கவிதை!!

சுசி said...

நல்ல கவிதை.
//இந்த இணைய பாசம் நட்புப்பாலம் உறுதியானது//
அருமை.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி அனைவருக்கும்...

//உண்மையான கவிதை!!//

கண்ணுக்கு மையழகு! கவிதைக்கு பொய்யழகு!

இது பாடல் வரி என்று நினைக்கிறேன். ஆனால், இதை ஆரம்ப வரிகளாக வைத்து ஒரு கவிதை நான் எழுதினேன். அதை இன்னொரு நாள் வெளியிடுகிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

என்ன ரொம்பச் சின்னக் கவிதையாய் இருக்கிறதே,
சின்ன வயதிலே எழுதியதாலோ...???

ஆனாலும் அதே கவிதையை இணைய நட்பிற்கு
மிகப் பொருத்தமாய் மாற்றி விட்டீர்களே...!!!

அரங்கப்பெருமாள் said...

நல்ல கவிதை....
எனக்கு ஒரு சந்தேகம்
//நெஞ்சம் நிறைந்தது!//

"நிறைகின்றது" என்று இருக்க வேண்டாமா?
(கிறு,கின்று,ஆநின்று - இவை நிகழ்காலம்), இந்த இடத்திலும் அப்படித்தானே வரவேண்டும்.(நான்,முழுமையாக இலக்கணம் படித்ததில்லை, எதற்கும் தமிழ் கற்றோரைக் கேட்கவும்)

SUMAZLA/சுமஜ்லா said...

அரங்கண்ணா,

கொஞ்சம் இருங்க, எதுக்கு 12 வயது சுஹைனாவை கேட்டு சொல்கிறேன். அட, இது அப்ப எழுதியதுங்க. இதில் என் முதல் பின்னூட்டத்தை பாருங்க.


தமிழுக்கு இலக்கணம் இருக்கு! புது கவிதைக்கு இலக்கணம் இல்லை! நீங்க சொன்னபடி போட்டு வாசித்து பாருங்கள். ரிதம் வராது. நிறைகின்றது என்றால் நிறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் இன்னும் முழுசா நிறையலைனு அர்த்தம். ஆனா நிறைந்தது, என்றால், நிறைந்து விட்டது எனலாம்.

இலக்கணம் தெரியாது, ஆனா,

நேர் நேர் - தேமா
நிறை நேர் - புளிமா
நிறை நிறை - கருவிளம்
நிறை நிறை நிறை நிறை - கருவிளநறுநிழல். கற்றது நல்லா நினைவிருக்கு! ஆனா, இந்த நிறைக்கும் அந்த நிறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.