Monday, August 10, 2009

உரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்

சிறுகதை பட்டறை குறித்து, பல பாகங்களாக, மிக நீண்ட பின்னூட்டமிட்டும், என் கருத்து சொல்லல் முழுமை பெற வில்லையாகையால், ஒரு தனி பதிவாக போடுதலே நலம் என்று தான் இந்த பதிவு.

நண்பர் பைத்தியகாரன் சாருக்கும், ஜ்யோவ்ராம் சாருக்கும்,

சிறுகதை பட்டறை குறித்து நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி வரவேற்க தக்கது தான். தன்னலமற்ற ஒரு சிறந்த முயற்சி! ஆனால் என்ன செய்வது, என்னை போன்ற பிற ஊர்வாசிகளாவது பரவாயில்லை, பிற நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என்ன செய்வார்கள்? இந்த கனியின் சுவையை யாவரும் ருசிக்க வேண்டும் என்பது என் பேரவா.

அதன் காரணமாக, அங்கே தங்கள் தளத்தில் பல பாகங்களாக இட்டிருந்த என்னுடைய பின்னூட்டத்தின் சாராம்சம் இங்கே:

சென்னையை சேர்ந்தவர்களுக்கு சரி, மற்றவர்களில் இஸ்லாமியருக்கு, புனித ரமலானுடைய காலத்தில் கலந்து கொள்வது சாத்தியமாகாதே?! அதுவும் வெளியூர் பெண் பதிவர் என்றால், ஒருவர் உடன் வர வேண்டுமே?!

அதை விட, இதற்கென ஒரு தளம் உருவாக்கி, அதில் போஸ்ட் பண்ண, ப்ளாகருக்கான தனி ஈமெயில் பப்ளிக்காக தந்து (ஈமெயில் போஸ்டிங் என்னும், இந்த வசதி தங்களுக்கு தெரியும் என்று எண்ணுகிறேன், தெரியாவிட்டல், என்னை தொடர்பு கொண்டால் விரிவாக விளக்குகிறேன்.) அவரவர் கருத்துக்களை அடுத்தவர் மனம் புண்படாத வகையில் உரையாடலாமே?

அதோடு, தன் உரையையும், விரும்பியவர்கள் பேசி இணைக்கலாமே? தெரிந்தவர் சொல்ல, தெரியாதவர் வினவ, ஆரோக்கியமான கற்றலுக்கு அடித்தளம் அமைக்கலாமே?! அதாவது, இங்கே போடப்போவது பலரின் பின்னூட்டம் அல்ல, பலரின் பதிவுகள். ஆனால், இது ஒரு சிலரின் சொத்தாக டீம் ஆக போவதில்லை.

பின்னூட்டங்கள் மறைந்து போகும், விவாதங்களும் மறந்து போகும், காலச்சூழலில், பதிவுகள் நித்தியமாய் நிற்குமே, பல தலைமுறை எழுத்தாளர்களுக்கு உபயோகமாய்...அதோடு செலவில்லாமல்...வெளிநாட்டவரும் கலந்து கொள்ளும் வகையில்...

பதிவுலகை சாராத எழுத்தாளர்களையும் தொடர்பு கொண்டு, கையேடுகள் எழுதிக்கேட்போம். அதையும் வெளியிடுவோம். பன்முகத்திறமை வாய்ந்தவர்களை பரந்த மனதோடு பாராட்டுவோம். வருட முடிவில், மீண்டும் போட்டிகள் நடத்தி பரிசுகள் கொடுப்போம். அதற்கென ஸ்பான்சர் பிடிப்போம்.

இன்னொரு விஷயம், போட்டிக்கு பரிசு கொடுத்து தான் நடத்த வேண்டும் என்பதில்லை. அங்கீகாரம் போதும். கருக்கேற்ற கதையெழுத, அதை ஒரு சிலர் தம் பார்வையில் விமர்சனம் எழுதலாம். அதிகம் வரும் போது, ஆளுக்கு இருபது கதையாக பிரித்து, அலசி ஆராய்ந்து, திறந்த மனத்துடன் நிறை குறைகளை முன்வைத்து...ஆஹா நினைக்கவே மனமெங்கும் பூக்குதே, சந்தோஷ பூக்கள்...

எந்த கதையாயினும், நிறை என்று ஒரு பட்டியல் வரிசைப்படுத்தி, குறை என்று ஒரு பட்டியல் வரிசைப்படுத்தி தந்தால், வரும் காலங்களில் அதை களைய வாய்ப்பாக அமையும். முதலில் வரும் நடுவர்கள், தங்களை கவர்ந்த கதையின் அடிப்படையில் அடுத்தடுத்த நடுவர்களை அறிவிக்கலாம். நடுநிலைமை ரொம்ப முக்கியம். எழுதியவர் யார் என்பது பார்க்காமல், என்ன விதம் என்று பார்த்தால் முதிர்ந்த எழுத்துக்களை தெரிவு செய்யலாம். அதனால் தான் நான் எழுதிய விமர்சனத்தில் முதலில், எழுதியவர் பெயர் தரவில்லை. பின், ஒரு சிலர் கேட்டதால், இணைத்தேன்.

இதற்கு இசைபவர்களை ஒரு கமிட்டியாக இணைத்து, மெம்பராக்கலாம். அவர்களுக்குள் நடத்தும் போட்டியின் வெற்றி பெறுபவரின் இடுகையின் சுட்டி, அனைத்து அங்கத்தவர்கள் வலையிலும் ஒரு வாரம் தெரிய செய்யலாம். மீண்டும் அடுத்த வாரம் அடுத்த ஆக்கமென்று ஆரோக்கியமாக இதை வளர்க்கலாம். சிறுகதை மட்டுமல்லாமல், கட்டுரை, கவிதை போன்ற இன்னும் பல இலக்கிய வடிவங்களையும் பரிசீலிக்கலாம், கொஞ்சம் கொஞ்சமாக!

தோழரே, தோற்றபின் நான், நானாகவே, சிறுகதை பயிற்சி மேற்கொண்டேன், உங்கள் நிகழ்வை படிக்கும் முன்னே...நேற்றிரவு ஒரு மணிக்கு மனதில் தோன்றியது மறைவதற்குள் எழுத்தாக்கும் ஆர்வத்தில், கணினியில் பதிந்தேன், இன்னமும் தலைப்பு தராத அந்த சிறுகதையை!

பயிற்சி தானே என்று, தத்துவார்த்தமாக, இலக்கிய நடையில் எழுத முற்பட்டேன். என் ஆர்வத்தின் விளைவான இக்கதையை, தாங்கள்(அல்லது ஜ்யோவ் சார்) விமர்சித்து, நிறைகுறைகளை அறிவித்து, இந்த சேவையை தொடங்கி வைக்க முன்வந்தால், தயைகூர்ந்து சொல்லுங்கள். அதை என் வலைப்பூவில் வெளியிடுகிறேன்.

இத்தகைய சாயலில் நான் எழுதும் முதல் கதை இது என்பதால், ஒரு விமர்சனமும், நிறை குறை அறிவித்தலும், தங்களைப் போன்ற ஒரு தேர்ந்த வாசிப்பாளனிடமிருந்து அவசியமாக எதிர்பார்க்கிறேன்.

நான் எழுத்துலகில் ஒரு சிறு குழந்தை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஆனால், எழுதும் ஆர்வம் நிறைய இருக்கிறது.

இன்னும் இன்னும் என் மனதின் உதிப்புகள் ஓராயிரம்...ஆறு மாத பதிவுலக அனுபவத்தை வைத்து, ஒரு பெண்ணாகிய நான் இதற்கும் மேல் சொல்ல என்னமோ தடுக்குதே?!

கலைஞர்களின் பெரும் சொத்தே கற்பனை தானே? நான் சொன்னதில் முரணிருந்தால் மன்னிக்கவும் தோழர்களே!

-சுமஜ்லா.
.
.

14 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

//எந்த கதையாயினும், நிறை என்று ஒரு பட்டியல் வரிசைப்படுத்தி, குறை என்று ஒரு பட்டியல் வரிசைப்படுத்தி தந்தால், வரும் காலங்களில் அதை களைய வாய்ப்பாக அமையும்.//

ஆம் சரியான வாதம்

Anonymous said...

பட்டறையும் நடக்கட்டும், கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக, பட்டறை விஷயங்களைப் பதிவாகவும் இடட்டுமே!

அபுஅஃப்ஸர் said...

கருத்துக்களை தெளிவாக எடுத்துச்சொல்லிருக்கீங்க‌

ஆமோதிக்கிறேன்

nila said...

ya u r right.... this s d view of many ppl... though it s a big task.. i think people concerned can consider abt this....

புருனோ Bruno said...

//அதை விட, இதற்கென ஒரு தளம் உருவாக்கி, அதில் போஸ்ட் பண்ண, ப்ளாகருக்கான தனி ஈமெயில் பப்ளிக்காக தந்து (ஈமெயில் போஸ்டிங் என்னும், இந்த வசதி தங்களுக்கு தெரியும் என்று எண்ணுகிறேன், தெரியாவிட்டல், என்னை தொடர்பு கொண்டால் விரிவாக விளக்குகிறேன்.) அவரவர் கருத்துக்களை அடுத்தவர் மனம் புண்படாத வகையில் உரையாடலாமே?
//

வலைப்பதிவு என்பதை விட அதற்கு பொருத்தமானவை விவாத தளங்கள்தானே

அல்லது மின்னஞ்சல் குழுமங்கள்

புருனோ Bruno said...

//இன்னொரு விஷயம், போட்டிக்கு பரிசு கொடுத்து தான் நடத்த வேண்டும் என்பதில்லை. //

வழிமொழிகிறேன்

புருனோ Bruno said...

//பட்டறையும் நடக்கட்டும், கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக, பட்டறை விஷயங்களைப் பதிவாகவும் இடட்டுமே!//

நல்ல யோசனை

நட்புடன் ஜமால் said...

கூல் ...

SUMAZLA/சுமஜ்லா said...

நமக்கு ஏனடா வம்பு என்று விட்டுத் தொலைக்க முடிவு செய்து விட்டேன்.

என் தந்தை சொல்லியிருக்கிறார் என்னிடம், தான் சின்ன வயதில்(17, 18) கவிதை க்ளாஸுக்கு போய் பயிற்சி கூட எடுத்திருக்கேன் என்று!

அதற்கு நான் சொன்னேன், பயிற்சி செய்து எழுதுவது கவிதையல்ல. எண்ணங்கள் அப்படியே யார் தூண்டுதலும் இல்லாமல் ஃப்ளோ ஆக வேண்டும் என்று!

என்னைப் பொறுத்தவரை, கதையெழுதும் ஆற்றலும் கவிதையெழுதும் ஆற்றலும், இலக்கிய தாகமும் இயற்கையாக வர வேண்டும்.

Arangaperumal said...

ஆமென்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முதலில், உங்கள் எண்ணங்களுக்கு எங்களுடைய நன்றிகள். நிச்சயம் கருத்தில் கொள்ள முயல்கிறோம்.

படைப்பூக்கம் என்பது இருந்தாலும், புனைவெழுத்து என்பது தொழில் நுட்பம் சார்ந்த ஒன்றும்தானே. அதற்கு இம்மாதிரியான பயிற்சிப் பட்டறைகள் உலகெங்கிலும் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன.

PEACE TRAIN said...

//நான் எழுத்துலகில் ஒரு சிறு குழந்தை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஆனால், எழுதும் ஆர்வம் நிறைய இருக்கிறது.//

குழந்தைதான்,இருக்கலாம்.ஆனால் ஞானக்குழந்தை.இறைவன் அருள் உண்டாகட்டும்.ஆமீன்.

angaisnet said...

பயிற்சி தானே என்று, தத்துவார்த்தமாக, இலக்கிய நடையில் எழுத முற்பட்டேன். என் ஆர்வத்தின் விளைவான இக்கதையை, தாங்கள்(அல்லது ஜ்யோவ் சார்) விமர்சித்து, நிறைகுறைகளை அறிவித்து, இந்த சேவையை தொடங்கி வைக்க முன்வந்தால், தயைகூர்ந்து சொல்லுங்கள். அதை என் வலைப்பூவில் வெளியிடுகிறேன்.

இத்தகைய சாயலில் நான் எழுதும் முதல் கதை இது என்பதால், ஒரு விமர்சனமும், நிறை குறை அறிவித்தலும், தங்களைப் போன்ற ஒரு தேர்ந்த வாசிப்பாளனிடமிருந்து அவசியமாக எதிர்பார்க்கிறேன்.

நான் எழுத்துலகில் ஒரு சிறு குழந்தை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஆனால், எழுதும் ஆர்வம் நிறைய இருக்கிறது. - சுமஜ்லா

சுமஜ்லாபெஹன்! angaisnet@gmail.com இதற்கு அனுப்புங்கள். அட்டகாசமான விமர்சனம் எழுதியனுப்புகிறேன். நன்றி. - நந்தவேரன்.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி நந்தவேரன்!

எழுதி விட்டேனே தவிர, இக்கதையை என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். என்னவர், இதை விகடனுக்கு அனுப்பு என்றார். இங்கே, என் கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால் அனுப்பலாம் என்றிருந்தேன். நன்றி! என் ப்ளாகிலேயே வெளியிடுகிறேன்.

இதற்கு யார் வேண்டுமானாலும், விமர்சனம் அனுப்பலாம், ப்ரொஃபைலின் கீழ் உள்ள மின்னஞ்சல் லின்க் மூலம். அனைத்தும் தொகுத்து அவரவர் பெயருடன் ஒரு பதிவாக வெளியிட்டு விடுகிறேன். இது என் எழுத்தை செம்மைபடுத்த உதவும்.