Wednesday, August 12, 2009

வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...

சிறுகதை போட்டியின் விளைவாக நான் எழுதிய பயிற்சி கதையை படித்து, நந்தவேரன் விமர்சனம் எழுத, எனக்கும் புத்தி வந்து கொஞ்சம் கதைய மாத்த, அட, எல்லாத்தையும் இப்பவே சொல்லிட முடியுமா? நீங்களே படிச்சு பாருங்க.

எச்சரிக்கை:
நான் சிரிச்ச வேகத்துல, மண்டை மானிட்டர்ல முட்டி, மஞ்சளா அது நிறம் மாற, அப்புறம் அதை தட்டி கொடுத்து சமாதானம் செய்தேன். அதனால, எல்லாரும் எதுக்கும் கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்குங்க...

முதல் நாள்:

“யாராவது தைரியசாலிங்க இருக்காங்களா? யாராவது திட நெஞ்சுள்ளவங்க இருக்காங்களா?” சுமஜ்லா.

“யாருங்க? எதுக்கு கேக்கறீங்க?”

“இல்லைங்க நா கஷ்டப்பட்டு ஒரு கதை எழுதினேன். அது என்ன கதைனு எனக்கே புரியல. யாராவது படிச்சு பார்த்து அர்த்தம் சொல்ல ஆள் மாட்டுமானு பார்க்கிறேன்”

“ஜ்யோவ் ராம் சுந்தர் சார்....பைத்தியகாரன் சார்”

ஸ்பீக்கரில் அலறல் கேட்டு ரெண்டு பேரும், பாதி தூக்கத்துல அலறி புடைச்சு வெளியே வர்ராங்க...

“சார் எங்கிட்ட ஒரு கதை இருக்கு...”

இது அவர் காதுல உதைன்னு கேக்குது...மிரண்டு பின் வாங்கறார் ஓரடி. ஆனா பைத்தியகாரன் சாருக்கு நல்லாவே புரிஞ்சுது. கதைங்கற வார்த்தையை கேட்டவுடனே, நடுக்கம் வந்து ஓடிப் போய், நல்லா பெட்ஷீட் பொத்தி படுத்தவர் தான், இன்னும் எந்திரிக்கலைனு கேள்வி...

“கதையை படிச்சு பார்த்து விமர்சனம் தரணும் சார்”

அவர் மேலும் கீழும் பார்த்து சொன்னது புரியாத மாதிரி நடிக்க, அங்க எதேச்சையா வர்ரார், நந்தவேரன்.

மேடம் வேணா எனக்கு அனுப்பி வைய்யுங்க...நான் சூப்பரா விமர்சனம் எழுதி தர்ரேன்.(இவங்க பரிசு கிடைக்காம, அப்செட் ஆனத வெச்சு எப்படி காமடி பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். வசமா மாட்டிக்கிட்டாங்க)

“சரிங்க, ரொம்ப தேங்க்ஸ். உங்கள நம்பி தான் நான் என் ப்ளாக்ல இந்த கதையை போடுறேன்.

இரண்டாம் நாள்:

தயவு செய்து இத படிச்சிட்டு வாங்க...அப்பத்தான் முழுசா புரியும்! இன்னமும் சீவப்படாத நுங்கு இந்த லின்க்ல இருக்கறத படிச்சா, உங்களுக்கும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்திரும்.

ரெஸ்டாரண்ட்டுல சாப்பிட்டுட்டு, பக்கத்து ஆத்தங்கரையில காத்து வாங்க வர்ராங்க ஜ்யோவ் சார்! அப்ப பார்த்து அங்க வந்த சுமஜ்லாகிட்ட நல்லா மாட்டிக்கிட்டார்.

“ஜ்யோவ் சார்”

”என்னது யோவ் சாரா?” (அட, எழுத்து யூத்ஃபுல்லா இருந்தாலும், நம்ம வயசுக்காச்சும் மரியாதை தர வேண்டாமா?)

“கோச்சுக்காதிங்க ஜ்யோவ் சார்...வந்து என்னோட கதை...”

(வசமா மாட்டிகிட்டோம், இன்னிக்கு தப்பிக்க முடியாது போல இருக்கே. அந்த அருவாள் வேற அவர் கண்ணுக்குள் வந்து தொலைச்சுது. நல்லவேளை இன்னிக்கு கிரெடிட் கார்டு கூட கொண்டு வரலைனு ஒரு ஆறுதல் வேற)

“எங்கேம்மா கதை?”

“அதென்ன அவ்வளவு சுலபமா எங்கே கதைன்னு கேட்டுட்டீங்க, அதோ, அது அந்தரத்துல தொங்கிக்கிட்டிருக்கு, நீங்க தான் தேடி பிடிக்கணும்...கதை தான் அந்தரத்துல, ஆனா பாருங்க என் கால் பூமியில தான் பாவிக்கிட்டிருக்கு...”

என்ன சொல்ல வர்ராங்கன்னு அவருக்கு சுத்தமா புரியல.

(ஆண்டவா...இந்த வயசுல இப்படி பங்கி ஜம்ப் பண்ண வைக்கிறாங்களே)

“சார்...சார் பார்த்து, ஜம்ப் பண்ண வேகத்துல மூக்கு நீட்டி பாறைக்கே வந்திட்டீங்க.”

“என்னம்மா கதை தலைப்பை, ‘100% தள்ளுபடி’னு வெச்சிருக்கீங்க?”

“எல்லாம் நந்தவேரன் சார் கொடுத்த ஐடியா தான். அவர் தான் மக்களை ஈர்க்கற மாதிரி வைக்க சொன்னார்”

கதையில முதல் வரி படிக்கிறார்.

‘கறுக் முறுக்’

“என்னம்மா இது?”

“அது வந்து, க்ரிஸ்ப்பா...சின்னதா இருக்கனும்னு, நந்...”

“சரி சரி புரியுது...புரியுது...”

அப்ப வேகமா காத்து அடிக்குது...கதையில இருந்த மண்ணு அவர் கண்ண பதம் பார்க்க,

“சார், கோச்சுக்காதிங்க, கொஞ்சமாவது எர்த் வேண்டாமா? அதான் மண்ண தூவி கொண்டு வந்தன்”

எப்படி கோபிப்பார்? அவர் தான் எப்ப சுமஜ்லா திரும்புவாங்க, முதுகுல வீச்சரிவாள் இல்லைனு உறுதி செஞ்சுக்கலாம்னு காத்திருக்காரே?!

“கப்பாத்துங்க...காப்பாத்துங்க”

“அய்யைய்யோ, யாரோ மூக்கு நீட்டி பாறையில இருந்து விழுந்துட்டாங்க போல இருக்கே?”

அப்புறம் தான் தெரிந்தது, நந்தவேரன், நொந்தவேரனா அங்க ஆஜராகி இருப்பது..

“நான் தாங்க சார்! ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு அந்த கதையில இருந்த டயலாக்க சொன்னேன்”

“கவலைப்படாதிங்க நந்தவேரன், அந்த ஒரு டயலாக்கையும் எப்படியாவது கஷ்டப்பட்டு தூக்கிடறேன்”

கதையை படிக்க ஆரம்பித்தவர், ஆச்...ஆச்...ஆச்...

“சார், இவர், சீரகம் மட்டும் தான் போட சொன்னார், நான் தான் கூடவே கொஞ்சம் மிளகும் போட்டா காரசாரமா இருக்குமேனு...”

நந்தவேரன் முறைக்க, பேச்சை மாத்துகிறார் சுமஜ்லா.

“இப்ப நான் ஒரு மேஜிக் பண்ண போறேன் பாருங்க...”

“இதுனால எனக்கு என்ன பிரயோசனம்னா,

1.அலெக்ஸா ரேங்கிங் ஏழு லட்சத்தி சொச்சத்துல இருந்து ஆறு லட்சத்தி சொச்சம் வந்திருச்சு.
2.ஃபாலோவர்ஸ் ஆறு ஏழு பேர் ஒரே நாளுல கூடியிருக்காங்க.
3.சுமஜ்லாவுக்கு வாசகர்கள் எல்லாம் சேர்ந்து, பிளேடரசி விருதுகொடுத்துக்காங்க.
4.பதிவ படிக்காமயே ஓட்டு போட ஆரம்பிச்சிருக்காங்க.
5.பின்னூட்டம் போடறதுக்கு பதில், பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடறாங்க.
6.ஸ்மைலியைய மட்டும் பின்னூட்டத்தில் போடறதுன்னு ஏகப்பட்ட பேர் முடிவே எடுத்திட்டாங்க.
7.அப்புறம்...

“நிறுத்துங்க...நிறுத்துங்க...ஒரு எடத்துலயாவது லிஸ்ட் வரிசையா எழுதி கேட்டலாக் பண்ணுங்கன்னு கேட்டந்தான், அதுக்காக இப்படியா?” நந்தவேரன்.

அப்பத்தான் துண்டு பேப்பரை சுமஜ்லா ஒரு எலைய வெச்சு மறைச்சுட்டு இருக்கறத பார்க்குறார்.

“என்னங்க அது”

வாங்கி பார்த்தவர் ஏந்தாம்பார்த்தமோன்னு ஆயிருச்சு!

“சார்...சார்...உங்கள பத்தி எழுதி வெச்சிருக்கேன்னு நெனச்சுக்காதிங்க. நீங்க தான, எலை மறையா ஒரு சின்ன கெட்ட வார்த்தையாவது எழுதி வெச்சுக்கணும்னு சொன்னிங்க...அதான் இப்ப தான் நெனப்பு வந்துச்சு. கதைய ஜ்யோவ் சார் படிச்சிட்டு இருந்தாரா...அதான் துண்டு பேப்பர்ல எழுதி, வெட்டி ஒட்டிக்கலாம்னு...”

அதுக்குள்ள கதையை படிச்சு முடிச்ச ஜ்யோவ் சார், தலை சுத்தி, கீழ விழ,

“பார்த்திங்களா?...இதுக்கு தான் ஓவர் டோஸ் கூடாதுங்கறது...”

அதுக்குள்ள ஒரு பெரிய ரசிகனுங்க கூட்டமே கூடிடுச்சு. ஒரு வழியா சோடா கொடுத்து அவரை எழுப்ப, இன்னும் அதிர்ச்சி விலகாம அலங்க மலங்க பார்க்கறார். சுமஜ்லா, அவரை கூலாக்க, உடனே நுங்கு சீவி கொண்டு வந்து கொடுக்கிறார்.

அதுக்குள்ள, ஸ்க்ரிப்ட்டை எடுத்து, ஒரு வாசகர் சத்தமா படிக்க ஆரம்பிக்க, மனசொடிஞ்சு போன ஒரு பெருங்கூட்டமே, மூக்கு நீட்டி பாறைக்கு போய், தண்ணீரில் குதிச்சிடுச்சு!

சுமஜ்லா, “காப்பாத்துங்க...காப்பாத்துங்க...”

நந்தவேரன்,சூழ்நிலை புரியாதவராய், “அதிசயமா...ஆயிரத்து சொச்ச வார்த்தை கதையில ஒரே ஒரு அடுக்கு தொடர் எழுதிட்டு, திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டிருக்காதிங்க மேடம்!”

ஆற்றிலிருந்து வாசகர்கள் எல்லாரும் கோரஸாக,

“நாங்க சாவப்போறம்னு நெனச்சிங்களா? உங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்கறதுன்னு தெரியாம நீந்தி அக்கரைக்கு போக முடிவு பண்ணிட்டோம்”

“நான் பாட்டுக்கும் எம்போக்குல ப்ளாக் வளத்திக்கிட்டு இருந்தேன், இப்ப பார்த்திங்களா, என்ன ஆச்சுன்னு?”

அப்போ, கொலை வெறியோட, ஆளுக்கொரு கல்லை எடுத்து சுமஜ்லா மீது வீச, அது வந்து சுமஜ்லா மண்டையில ‘நச்’னு விழுந்தது.

“பார்த்தீங்களா ஒரு வழியா நீங்க சொன்ன மாதிரி ‘நச்’னு கதைய முடிச்சிட்டேன்! ”

(இது ஜஸ்ட் காமடி தான். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல; என்னையறியாமல் புண்படுத்தி இருந்தால் சொல்லுங்க, எடுத்திடறேன், ... தலையை அல்லங்க, கதையை...)

-சுமஜ்லா.
.
.

20 comments:

நந்தவேரன் said...

ஹாஹாஹா...! சுமஜ்லா, மூணு மணி நேரத்துல பதில்கதை எப்டீங்க எழுதுனீங்க?

நல்லவேளை! இன்னும் கொஞ்சம் ஸ்பூன் ஃபீட் பன்ணியிருப்பேன்! நல்லா கெளப்புறாங்கையா, பீதிய...!

- நந்தவேரன்.

Jawahar said...

உங்களுக்கு காமெடி இவ்வளவு நல்லா வரும்ன்னு எனக்கு இன்னைக்குதான் தெரியும்!

http://kgjawarlal.wordpress.com

Thamiz Priyan said...

இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தி தான் எல்லார் உடம்பையும் இங்க புண்ணாக்கி ரணகளமா வச்சு இருக்காங்க... ;-))

சென்ஷி said...

:-)))))

SUMAZLA/சுமஜ்லா said...

//ஹாஹாஹா...! சுமஜ்லா, மூணு மணி நேரத்துல பதில்கதை எப்டீங்க எழுதுனீங்க?//

மொத்தத்துல இத கதைனு ஒத்துகிட்டதுக்கு டேங்க்சு! (காமடி, கீமடி பண்ணலையே)

மூணு மணி நேரமா? முதல் ரெண்டு மணி நேரம், நான் வேற வேலையில பிஸியா இருந்தேனுங்க.

நமக்கு கவிதையோ கதையோ, டைப் அடிக்கும் நேரம் தானுங்க. அதிலும், நான் டைப் ஹையர் என்பதால், ரொம்ப ஃபாஸ்ட்! பொதுவா, திங்க்கிங் எல்லாம் கிச்சன்ல இருக்கும் போது தான்!(இல்லாட்டி நேரம்?...)

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஜவஹர், எனக்கு காமடி வரும்...ஆனா வராது...

SUMAZLA/சுமஜ்லா said...

அய்யய்யோ, இந்த அநியாயத்த கேக்க ஆளில்லையா? தமிழும், சென்ஷியும், என் பதிவை படிச்சிட்டு, அநியாயமா ஓட்டு போடாம போறாங்கைய்யா...போச்சே போச்சே, இப்படியெல்லாம் எழுதி, எனக்கு வர்ர ஓட்டு இப்படியெல்லாம் லாஸ் ஆகுதே! நான் என்ன செய்வேன்?

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. காமெடிலையும் கலக்குறீங்களே.

SUFFIX said...

நல்ல சிரி கதை!! ஹா..ஹா!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அடடா, நல்ல கதையை...
இப்படி இரண்டே தினங்களில் முடித்து
விட்டீர்களே... இன்னும் கொஞ்சம்
இழுழுழுழுத்திருக்கலாமே...

SUMAZLA/சுமஜ்லா said...

இன்னும் சீவப்படாத நுங்கு படிச்சாத்தான் இத முழுசா ரசிக்க முடியும்.

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா,
அந்த கதையின் கீழும், இங்கும் எழுதியிருக்கும் ஆசைகள், விரைவில் நிறைவேறும்.

Jaleela Kamal said...

என்ன சுஹைனா இப்படி ஒரு கலக்கலான காமடி பதிவு.

கூடிய விரைவில் உங்கள் எண்ணங்கள் நிறைவேர வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//கூடிய விரைவில் உங்கள் எண்ணங்கள் நிறைவேர வாழ்த்துக்கள்.//

ஜலீலாக்கா, எந்த எண்ணம்? மண்டையில ஆளுக்கொரு கல்ல தூக்கி நச்சுனு போடறதா?

த. ஜார்ஜ் said...

பரிசு கிடைக்காத ஏமாற்றத்தை கூட நகைச்சுவையில் நனைத்து துடைத்துக் கொள்ளும் முயற்சியா. நல்லது. உங்கள் திறமை இன்னும் அதிகமாய் வெளிப்பட்டிருக்கிறது.

நந்தவேரன் said...

ஹலோ சுமஜ்லா, என்ன இன்னோரு “விமரிசனக் கதை” எழுதட்டுமா? அதுக்கு நீங்க ஒரு “எசப்பாட்டுக் கதை” எழுதுங்க! எல்லாரும் உங்களைப் பாராட்டுவாங்க! என்னவோ போங்க, எனக்கு துக்கத்துல தொண்டையை அடைக்குதுங்க! :-)

SUMAZLA/சுமஜ்லா said...

நந்தவேரன், அடுத்தவங்களை சிரிக்க வைக்கறது சாதாரண விஷயமில்லை. அர்த்த ராத்திரி, ரெண்டு மணிக்கு உங்க் விமர்சனம் படித்து சிரித்த சிரிப்பு சத்தத்துல, தூங்கிக் கொண்டிருந்த என் கணவரே பயந்து போய், அலறி அடிச்சு எழுந்திருச்சுட்டார்னா பாருங்களேன்...

ஆனா, உங்களுக்கு மட்டும் துக்கம் இல்லைங்க, எனக்கும் தான்,
அந்த 7 பாயிண்ட்னால, எனக்கு எத்துணை பின்னூட்டம், எத்துணை ஓட்டுக்கள் மிஸ்ஸாயிருச்சுனு எனக்கு தானே தெரியும்! :-)

//ஹலோ சுமஜ்லா, என்ன இன்னோரு “விமரிசனக் கதை” எழுதட்டுமா? //

இதுக்கான பதிலை என் அடுத்த பதிவில் பாருங்கள்.

ஊர்சுற்றி said...

என் வயித்துக்கு நல்ல பயிற்சி. :)))

nila said...

ஹா ஹா ஹா... என்னால இன்னும் சிரிப்பை அடக்க முடியலை... ஆரம்பத்துலயே எச்சரித்து இருந்ததால் மானிட்டரை விட்டு கொஞ்சம் தள்ளியே இருந்தேன்... அப்பப்பா... என்னவொரு நகைச்சுவை உணர்வு... அசத்துகிறீர்கள் போங்கள்.... நந்தவேரனின் அறிவுரைகளை நாங்களும் பின்பற்றலாம்போலிருக்கிறதே... வாழ்த்துக்கள் சுமல்ஜா...

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி நிலா, ஊர்சுற்றி!

//நந்தவேரனின் அறிவுரைகளை நாங்களும் பின்பற்றலாம்போலிருக்கிறதே...//

சீக்கிரம் நீங்களும் சீரகம் மிளகு போட்டு கதை எழுதிட்டு சொல்லுங்க, வந்து படிச்சி பார்க்கிறேன்.