Monday, August 17, 2009

குழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...

சின்னஞ்சிறு கண்மணியாய், மண்ணில் உதித்த பொன்மகளுக்கு, அவளுடைய குழந்தை பருவத்திலே, நான் எழுதிய பாடல்!


கொஞ்சும் எங்க லாஃபிராமா
முத்துகுட்டி தங்கமே
கொஞ்சி கொஞ்சி பேசும் போது
ஆசை மனங்கள் ஏங்குமே!
உன்னை சுற்றி நாங்கள் இன்று வாழ்த்தவே,
கண்ணை மூடி கனவில் நீயும் தூங்குவாய்!

(கொஞ்சும் எங்க லாஃபிராமா)

வெண்ணிலவும் பொன்னிநதியும்
லாஃபிராகண்மணியை
தென்றலுடன் இன்று ரசிக்கும்
லாஃபிரா பொன்மயிலை,

மல்லிகையும் மங்களங்களும்
பொங்கிடும் வசந்தமும்
அல்லிமலர் ஜாதிமலரும்
தாமரை குமுதமும்,

லாஃபிராமா அருகில் வந்தால் மலரும்
பொன்மணியின் சிரிப்போ அழகாய் மிளிரும்..

கனிமொழி மழலையில் கரும்பதன் சுவையினில்
கருத்தினை கவர்ந்திடும் லாஃபிராமா கண்மணிதான்..

(கொஞ்சும் எங்க லாஃபிராமா)

முத்துமணி ரத்தினங்களை
மிஞ்சிடும் எழிலுடன்,
கொத்துமலர் அற்புதங்களை
சூடிய வடிவுடன்,

பால்வடியும் முகவெழிலும்
பாசத்தின் உருவமும்
சுத்திவர செய்யும் விழியும்
சுந்தர மொழிகளும்

அத்தனையும் ஆண்டவனும் அவளிடம் கொடுத்தான்!
இத்துணையும் சேர்த்தே தங்கமகள் பிறந்தாள்!!

இதம் தரும் சிரிப்பினில், சுகம் தரும் குறும்பினில்,
நிலவெழில் மிஞ்சிவிடும் லாஃபிராமா பொன்மணி தான்!!

(கொஞ்சும் எங்க லாஃபிராமா)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாட்டு இதோ:

மண்ணில் இந்தக் காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த காதலன்றி)

வெண்ணிலவும் பொன்னி நதியும்
கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்
பெண்மயின் சுகமன்றி

சந்தனமும் சங்கத்தமிழும்
பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம்
தந்திடும் குமுதமும்

கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த காதலன்றி)

முத்துமணி ரத்தினங்களும்
கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும்
குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும்
வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும்
சுந்தர மொழிகளும்

எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி

முடிமுதல் அடிவைர முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவளல்லவா

(மண்ணில் இந்த காதலன்றி)

7 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தாய்

நல்லதாய்

SUFFIX said...

அட அந்த ஒரிஜினல் மெட்டையும், உங்க பாட்டையும் ஹம்மிங் செஞ்சு பார்த்தேன், நல்லா இருக்குங்க!! சூப்பரு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அந்தப் மெட்டுக்கு உங்கப் பாட்டும்
உங்கப் பாட்டுக்கு அந்தப் மெட்டும்
பொருத்தம்!

வார்த்தைகளும் கவனமாகக்
கோர்த்திருக்கீங்க!

SUMAZLA/சுமஜ்லா said...

தேங்க்ஸ், ஜமால், ஷஃபி & நிஜாம் அண்ணா.

ஜமால், சிலேடை நல்லா இருக்கு!

Colvin said...

அறிவியல் கதை என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது நண்பரே. மிக்க நன்றி

அன்புடன்
கொல்வின்
இலங்கை

சீமான்கனி said...

ரெம்ப நல்லாக்கு....
நீங்க குழந்தை பருவத்திலே இவ்ளோ
எழுதுவிகளா ???
ஹி..ஹி.....ஹி....

SUMAZLA/சுமஜ்லா said...

//நீங்க குழந்தை பருவத்திலே இவ்ளோ
எழுதுவிகளா ???//

இப்படியும் ஒரு அர்த்தம் வருவதால், வரியை சற்று மாற்றி விட்டேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி!