“அம்மா, கம்ப்யூட்டர்னா என்னம்மா?”
“கம்ப்யூட்டர்னா, அதுல எல்லாமே செய்யலாம்...”
“எல்லாமேனா???”
“எல்லாமேனா, எல்லா வேலைகளையும் அது செய்யும்!”
உண்மையில் அம்மாவுக்கும் தெரியாது, ஆனா செவி வழி செய்திகள் மூலம், ஏதோ கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதை பத்து வயது மகளிடம் சொல்கிறாள்.
“கம்ப்யூட்டர் எவ்ளோமா இருக்கும்?”
“என்ன ஒரு ரெண்டு மூணு லட்சம் இருக்கும்!”
மகள் கண்களில், இரண்டு காலும், இரண்டு கையும் வைத்த மிஷின் விரிகிறது, கம்ப்யூட்டர் என்ற பெயரில். அது வீடு பெருக்கும், பாத்திரம் கழுவும் என்றெல்லாம் நினைக்கிறாள். பின்ன, அம்மா எல்லா வேலையும் செய்யும் என்கிறாளே?!
1989
“அம்மா, கம்ப்யூட்டர் ரோபோ ரெண்டும் ஒன்னு தானா?”
“இல்லைமா ரோபோ நமக்கு எல்லா வேலையும் சொன்னபடி செய்யும். கம்ப்யூட்டர் கணக்கு போடும்!”
“அப்ப கால்குலேட்டர்?”
“சும்மா தொணதொணனு கேள்வி கேட்காதே!”
கம்ப்யூட்டர் ஒரு ராட்சத கால்குலேட்டராக மனக்கண்ணில் தெரிகிறது. கால்குலேட்டரில் எட்டு இலக்கம் மட்டுமே தெரிகிறது, ஒரு வேளை கம்ப்யூட்டரில் இன்னும் ஜாஸ்தியா தெரியுமோ?
1992
“குழந்தைகளே, நம்ம பள்ளியில் இந்த வருடம் முதல் கம்ப்யூட்டர் க்ளாஸும் இருக்கிறது” டீச்சர்.
எல்லாரும் வரிசையில் நின்று லேபுக்கு போகிறார்கள். சில்லென்று ஏ.ஸி. இல்லாவிட்டால், கம்ப்யூட்டர் கெட்டு விடுமே?!
“பாருங்க இந்த ப்ரோக்ராமுக்கு பேர் லோகோ! ரைட் 40 க்ளாக்வைஸ் 90 (4) என்று கொடுத்தால், கட்டம் வரைகிறது”
எல்லாரும், பே என்று பார்க்கிறார்கள். இதே போல விதவிதமான கட்டளைக்கு, விதவிதமான வடிவம் வருகிறது, அந்த கருப்பு வெள்ளை திரையில்.
அவள் நோட்டில் தன்னுடைய உருவத்தை கார்டூன் போல வரைகிறாள். பின், அதில் வரும் கோடுகளுக்கேற்ப ஆங்கிள்ஸ் போட்டு ப்ரோக்ராம் உருவாக்கி, தோழியிடம் சொல்கிறாள்,
“பார், நான் இந்த இன்புட் எல்லாம் போட்டவுடன், என் உருவம் வரும், மிஸ்கிட்ட சொல்லாதே!”
வந்தது, கிறுக்கா முறுக்கா, எங்கேயோ தப்பு!
1994
அப்பா, இப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் வந்திருக்கு! தம்பியை அதில் சேர்த்தலாம்ப்பா...”
சேர்ந்து, படித்தான், பேஸிக், கோபால், ஃபோர்ட்ரான் எல்லாம்.
1997
“அக்கவுண்ட்ஸ் மெயிண்டைன் பண்ண ஒரு கம்ப்யூட்டர் வாங்கினால் நல்லா இருக்கும் அப்பா” தம்பி!
“என்னடா விலை”
“மொதோ மாதிரியெல்லாம் இல்லைப்பா, இப்ப விலை குறைஞ்சிருச்சு. 40,000 தான்”
வாங்கியே விட்டார்கள். பெண்டியம், 4 ஜி.பி.ஹார்டு டிஸ்க், 16 எம்.பி.ரேம், ப்ளாப்பி டிரைவ், கருப்பு வெள்ளை மானிட்டர், ஸ்டெபிலைசர் எல்லாம் சேர்த்து 40,000 ருபாய்.
டேவ், கோப்மேன் முதலான கேம்ஸ். cd.. போன்ற கட்டளைகள் அந்த கேம்ஸுக்கு தேவையானது, தம்பியிடம் கேட்டு நோட்டில் எழுதி வைத்து, அதை பார்த்து இயக்கி விளையாடுவார்கள்.
1998
“இங்க பாருங்க, இது விண்டோஸ் 95! இதுல, மவுஸ் இருந்தாலே போதும். கீ போர்டு வேண்டியதில்லை.”
“அய்! பெயிண்ட் பிரஷ் சூப்பரா இருக்கே”
“அம்மா, எப்பப்பாரு கேம்ஸ் விளையாடுறாங்கன்னு, எல்லா கேம்ஸையும் டிலிட் பண்ண சொல்லிட்டாங்க. பெயிண்ட் பிரஷ்லயாவது எதாவது வரையலாம்”
1999
“அக்கா, பிரவுசிங் செண்டர் போயிட்டு வந்தேன், உனக்கு ஒரு ஈமெயில் ஐடி கிரியேட் பண்ணி தரட்டுமா?”
“அப்டீனா?”
“அப்டீனா, அது ஒரு அட்ரஸ் மாதிரி, யார் வேணாலும் மெயில் அனுப்பலாம்”
2000
“டேய், இது என் ப்ரெண்டோட ஈமெயில், நீ போய் பிரவுசிங் செண்டர்ல ஒரு மெயில் அனுப்பிட்டு வாடா”
“தோ அக்கா, உனக்கு பதில் மெயில் வந்திருக்கு... அதை அப்படியே எழுதிட்டு வந்தேன்”
2001
“வா, நாம் பிரவுஸிங் செண்டர் போய், பாஸ்மதி அரிசி சப்ளையர்ஸ் அட்ரஸ் பார்த்திட்டு வரலாம்”
பிரவுஸிங் செண்டர் இன்சார்ஜ் தம்பியிடம், “தம்பி எப்படி அட்ரஸ் பார்க்கிறது?”
“கூக்ளில தேடுங்க”
“எப்படி?”
“தோ, இதான் கூக்ளி...இதுல என்ன வேணுமோ, அதை அடிங்க!”
“என்ன இது ரைஸ்னு அடிச்சா, என்ன என்னமோ வருது?”
“என்னப்பா நாங்க எதிர்பார்க்கற அட்ரஸே வர மாட்டேங்குது?”
“என்ன இது ஒரு மண்ணும் புரியல”
“வெளிநாட்டு செய்தியா இருக்கே! கூக்ளி சரியா சொல்ல மாட்டேங்குதே?!”
“இப்படித்தான் பார்க்கனுமா? வேற எதாச்சும் வழி இருக்கா?”
“சே! வாங்க போகலாம். ஒரு மண்ணும் புரியல. 50 ருபா வேஸ்ட். எல்லாம் உங்களால தான். எதா இருந்தாலும், தெரிஞ்சிக்கிட்டு வரணும்.”
“நாம ஒரு சிஸ்டம் வாங்கணும்”
வாங்கியாச்சு. பெண்டியம் 3, 40 ஜி.பி. ஹார்டு டிஸ்க், கலர் மானிட்டர், 128 எம்.பி.ரேம், சி.டி.டிரைவ், மோடம்!
2002
“டயல் அப் கனெக்ஷன் வந்திருச்சு பாரு! 50 மணி நேரத்துக்கு 150 ருபா, இதே 100 மணி நேரம் வாங்கினா 250 ருபா! விண்டோஸ் 98 நல்லா இருக்கு! செலிரான் போட்டதுல இருந்து ஸ்பீடா இருக்கு!”
“அது மட்டுமா? போன் பில் வேற இருக்கே. சண்டே, மூணு நேஷனல் ஹாலிடே மட்டும் பாதி காசு போனுக்கு, அப்புறம் அவர்ஸ் குறையாது. ஃப்ரீ”
2003
“மாசம் 400 கட்டிட்டா, எவ்ளோ நேரம் வேணா ஒர்க் பண்ணிக்கலாம், போனுக்கு காசு இல்ல. ஆனா, இத்தினி மணிக்கு இவ்ளோனு டயல் அப் அக்கவுண்ட் வாங்கணும்”
2004
“பிராட்பேண்ட் வந்திருச்சு... செம்ம பாஸ்ட் அக்கா! நாங்க வாங்க போறோம். நீயும் வாங்கீரு, என்ன?”
2005
“ஏங்க ஷேர் மார்கட்டெல்லாம் பார்க்கலாம் வீட்டுல ப்ராட்பேண்ட் இருந்தா...”
வாங்கியாச்சு.
2006
“பரவாயில்லையே, உங்க பையன் குட்டி கம்ப்யூட்டர் மேதையா இருக்கானே! இவ்ளோ தெரிஞ்சு வெச்சிருக்கானே?!”
“நா ஒர்க் பண்றப்ப என் மடியில உட்கார்ந்து பார்த்துக்கிட்டே இருப்பான். அப்படியே கத்துக்கிட்டான்”
2007
“ஏங்க சிஸ்டம் டெட் ஸ்லோ! அதான் எல்லாம் ஃபார்மட் பண்ணி ரீ இன்ஸ்டால் பண்ணினேன்.”
“80 ஜி.பி. ஹார்டு டிஸ்க் பற்ற மாட்டேங்குது. அப்புறம், 17 இன்ச் மானிட்டர் ஒன்னு ஆர்டர் கொடுத்திட்டேன்ங்க, பிரிண்டர் ரிப்பேர் பண்ண சொன்னா, இன்க்ஜெட் எல்லாம் யூஸ் அண்ட் த்ரோ மாதிரி, அதுவும் கேனானுக்கு ஹெட் தான் முக்கியம்ங்கறான். அதான் ஒரு எச்.பி. தர சொல்லியிருக்கிறேன்.”
“தம்பி, ஏண்டா போன் பில் வேஸ்ட் பண்ற, யாஹூல வா!”
2008
“ஏங்க, போட்டோ ஷாப்ல, உங்களுக்கு விசிட்டிங் கார்டு டிசைன் பண்ணேன், நல்லா இருக்கா பாருங்க. அப்புறம், பவர்பாயிண்ட்ல பையனோட யூ.கே.ஜி லெசன்ஸ் எல்லாம் விசுவலா குரலோட வர்ர மாதிரி புரோகிராம் பண்ணியிருக்கேன் பாருங்க!”
“போன வாரம், கோரல் டிராவில எனக்கு ஒரு லோகோ பண்ணி கொடுத்தியே, அதுல கொஞ்சம் மாற்றம் இருக்கு!”
“ஸ்டாக் மெயிண்டெயின் பண்ண, எக்ஸெல் ஸ்ப்ரெட் ஷீட்ல ஒரு சின்ன ப்ரோக்ராம் பண்ணி கொடுத்தியே, எனக்கு முக்கால் வாசி வேலை மிச்சம்.”
“உங்க அக்கவுண்ட்ஸ் எல்லாம் முடிச்சாச்சு! பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டியது தான் பாக்கி!”
“அப்படியே அத, டி.வி.டி.ல ரைட் பண்ணிரு! நாலு நாளா நீ ஊருக்கு போயிட்ட. பாரு மெயிலெல்லாம் மலையாட்டம் குமிஞ்சி கடக்குது”
2009
“கூகுள் குரோம் இன்ஸ்டால் பண்ணிட்டேன், ஆனா என்னோட சாய்ஸ் எக்ஸ்ப்ளோரர் தான்!”
“ஏங்க போட்டோஸ் எல்லாம் மூவி மேக்கரில எவ்ளோ அழகா பேக் கிரவுண்ட் பாட்டு அனிமேசனோட, பண்ணிட்டேன் பாருங்க...”
“ஏங்க, நான் முதன்முதலா டிசைன் பண்ணின ப்ளாகர் டெம்ப்லேட் நல்லா இருக்கா?”
“ஆமா, இவ்ளோ நேரம் இதுக்கு வேஸ்ட் பண்ற!”
“என்னங்க பண்ணறது, 2 ஜி.பி. ரேமே ஸ்லோவா இருக்கு! ஆனா, என் ப்ளாக எவ்ளோ பேர் படிக்கிறாங்க! டெம்ப்ளேட்டுக்காக கொஞ்சம் டைம் ஒதுக்கினா என்னங்க?!”
“ஆமா, நேத்து கூட ரெண்டு பேர் எங்கிட்ட கேட்டாங்க, அது என்னங்க, சுமஜ்லா டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் காமுன்னு பேர் இவ்ளோ நீளமா இருக்குனு?!”
-சுமஜ்லா.
.
இதன் தொடர் பதிவு : 2025ல் கம்ப்யூட்டர்
.
Tweet | ||||
21 comments:
Excellent! fantastic!!
It is no wonder that you are writing a book on computer.
unable to understand why you have not been selected for blogger of the week in any tamil aggregators yet.
it may be possible you might have refused the offer.
it is a shame for thirattis to have ignored you for so long.
http://www.ismyblogworking.com/sumazla.blogspot.com
1986-லயிருந்து 2009 வரைக்கும் உங்க முன்னால
இருந்துக்கிட்டே (இருந்துகொண்டே) உங்க நடவடிக்கைகளை
எல்லாம் நேராவே (நேராகவே) பார்த்தமாதிரி இருந்துச்சி,
உங்க 'ப்ளாஷ்பேக்'கப் படிக்கிறப்ப!
இதுக்குத் தலைப்பு...
'கம்ப்யூடர்னா என்னங்க?'வா?
ரொம்ப லொள்ளுதான்.
Supper if you have any idea to write about computer more.how computer will be in 2025, If you write It will be very interesting. Yathavan From Sri Lanka
அருமை,
நண்பர் கவிக்கிழவன் சொல்வது போல் எதிர்காலத்தையும் சேர்த்திருந்தால், இன்னும் அசத்தலாய் இருந்திருக்கும்.
வாழ்த்துக்கள்.
Dont worry Sai! This is jujubi matter called padhivulaga arasiyal. Let it go its way and i go mine.
i saw the link, you gave. everything is ok, except my blog takes a bit longer time to load. thats why, i changed my default template to rose. readers can avail of other two templates, if they wish.
//'கம்ப்யூடர்னா என்னங்க?'வா?
ரொம்ப லொள்ளுதான்.//
இந்த கேள்விதானே ஆரம்பம்! அதான்!
நிஜமாவே, முதல் பிரவுசிங் போய் நானும் அவரும் கேணயாட்டம் முழிச்சது இன்னிக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும். இந்த லூசுங்க வந்து நம்ம உயிர எடுக்குதேன்னு பிரவுசிங் செண்டர் பையன் தலைதலையா அடிச்சிக்கிட்டான்.
யாதவன் & பீர்,
இது ஒரிஜினல் அனுபவம், கூட்டவோ குறைக்கவோ இல்லை. ஸ்கூல் சம்பவம் நான் 9த் படிக்கும் போது நடந்தது.
நீங்க சொன்ன மாதிரி ஒரு நாள் எழுதிப்பார்க்கிறேன். நல்லா வந்தா ப்ளாக்ல இல்லாட்டி ரிசைக்கிள் பின்ல!
அருமையான பதிவு
1989 லே ஆரம்பிச்சி 2009 வரை கடந்த 20 வருடங்களில் அதன் முன்னேற்றத்தை பிரிச்சி மேஞ்சிருக்கீங்க
தெளிவான விளக்கம்
தொடருங்க
வாழ்த்துக்கள்
ரொம்பவும் வித்தியாசமான பதிவு
பலருக்கு இப்படி பட்ட விபரங்கள் தெரிந்துருக்கும், இருப்பினும் இதை அருமையாக அளித்துள்ளீர்கள்.
ரொம்ப அழகாக அந்த நாட்களுக்குள் சற்று சென்று வர இயன்றது, குறிப்பா 11ஆவது படிக்கையில் முதல் கம்புயூட்டர் அதில் பேசிக்கில் புரோகிராம் எழுதி ...
ஹூம் ... மிக்க நன்றி.
நல்ல பயனுள்ள இடுகை.
//
அப்பா, இப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் வந்திருக்கு! தம்பியை அதில் சேர்த்தலாம்ப்பா...”
சேர்ந்து, படித்தான், பேஸிக், கோபால், ஃபோர்ட்ரான் எல்லாம்.
//
1994-க்கு முன்பே அதெல்லாம் கம்ப்யூட்டர் சென்டர்கள் நிறுத்தி விட்டனவே?
அம்மாவிடம் கேட்டான் பையன்,"சும்ஜ்லா அக்கா,நல்லா எழுதுராங்கம்மா?"
அம்மா சொன்னால்,"அவங்களுக்கு கம்பியூட்டர் மூளைப்பா"
எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சிக்கோ,நீ எந்த எட்டில் அப்ப இருந்தே(உல்டா) தெரிஞ்ச்சிக்கோ...
நான் இருந்தது ..1999
நன்றி அஃப்ஸர்! 10த்தோட என் ஸ்கூல் லைஃப் முடிந்தது, அப்புறம் எல்லாம் செல்ஃப் இண்ட்ரஸ்ட்ல கரெஸ், கரெஸ். அதனால், 9த் மட்டும் கம்ப்யூட்டர் க்ளாஸ் எனக்கு! 10த் பப்ளிக்ங்கறதுனால, நோ கம்ப்யூட்டர்.
ஜோ, தெரியலயே, டாஸும், இதெல்லாமும் தான் படித்ததா சொல்வான், அப்புறம் லோட்டஸ் & வோர்டு ஸ்டார். தமிழ்நாடு இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (TIT) ல் தான் இதெல்லாம் படித்தான். மெட்ரோ பாலிடன் அளவுக்கு எங்க ஊர் பாஸ்ட் கிடையாது.
பீஸ் ட்ரைன் என்ன சொல்ல வரீங்க?
புரியலயே? ஒரு வேளை கம்ப்யூட்டர் மூளைக்கு இன்புட் கொடுப்பது மட்டுமே புரியும். புதுசா எதுவும் புரியாதோ?! :-)
Good post
சாதரணமா நடந்த பல விஷயங்களை இவ்வளவு சுவாரசியமா மாத்தி எழுத உங்களால மட்டும்தான் முடியுது சகோதரி.
intresting sumazla
நல்லா இருக்குங்க!! பிரமிக்க வைக்கும் முன்னேற்றம் டெக்னாலஜி மட்டும் அல்ல, அதை கற்றுக் கொள்ள தாங்கள் மேற்க்கொண்ட முயற்சியும், ஆர்வமும் தான். வாழ்த்துக்கள்.
நன்றி பொன்மலர், நவாஸ், தாழ் & ஷஃபி!
நவாஸ், எல்லாவற்றையும் விட, எங்கள் (நான் மற்றும் மச்சான்) பர்ஸ்ட் பிரவுசிங் அனுபவம் மறக்கவே முடியாது.
ஷபி, இன்னும் நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆர்வம் நிறைய நிறைய கடலளவு இருக்கு! எல்லாம் சுயமா, நெட் மூலம், புத்தகங்கள் மூலம் கத்துக்கிட்டது தான். அதனால் தான், என் ப்ரொஃபைலில் ஸ்டூடண்ட் என்று போட்டிருப்பேன்,(B.Ed & M.A படிப்பதாலும்...)
இப்படி பட்ட விபரங்கள் அருமையாக அளித்துள்ளீர்கள்.உங்களது முயற்சி வியப்பாக உள்ளது,, கணிப்பொறித்துறையில் மேலும் அதிகமாக கற்றுக்கொண்டே இருங்கள்..
அருமையான தொகுப்பு சுமஜ்லா..!
Post a Comment