Tuesday, August 18, 2009

திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்


18.8.2000

உயிரில் கலந்து உணர்வில் நிறைந்த இனியவனுக்கு,

உன் இதய ரோஜாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

WISHING YOU A VERY HAPPY BIRTHDAY .

நூறாண்டு நீ வாழ நாயகனை இறைஞ்சுகிறேன், இந்நாளில்...

நானென்ற சொல்லில் நான் உன்னைக் காண்கிறேன்!
நீயென்ற சொல்லில் நான் என்னைக் காண்கின்றேன்!!
நாம் என்ற சொல்லில் நம் லாஃப்கிளியை காண்கிறேன்!!!

இன்ப இல்லறம் பூத்துக் குலுங்க, நாம் இருவரும் கைகோர்த்து, குட்டிக் கையை நடுவில் சேர்த்து நடப்போம் நூறாண்டு! இணைந்த கைகள் என்றும் பிரிக்காமல், முகத்தில் முகம் பார்ப்போம். ....... சத்தத்தில் முத்தெடுப்போம்.

ஐந்தாண்டு கழிந்தது நாம் இணைந்து, ஆயினும் ஒவ்வொரு நாளும் புதுமையாய் உணர்கிறேன். ..........(புது உலகை எனக்கு காட்டிய உத்தமனே! )உனக்கு 34 ஆண்டுகள் முடிந்தாலும் எனக்கு நீ சிறு குழந்தை தான். ................

எட்டாத சிகரங்களை எட்டிப் பிடிப்போம்!
திகட்டாத சுகத்தில் திளைத்து மகிழ்வோம்!!

நோய் நொடிகள் உன்னைக் கண்டு பயந்தோட ஆண்டவனிடம் இருகரமேந்தி வேண்டுகிறேன்.

உன் வலது கரம் சரியாகும், நிச்சயமாக! இறைவன் மேல் ஆணையாக!! இன்னும் ஒரு வருடம் மட்டும் பொறுத்திரு!!!

அப்புறம், எப்படி என் கிஃப்ட்? பேண்ட் சர்ட் பிடித்ததா? எப்படி? நன்றாக ஏமாற்றி விட்டேன், சஸ்பென்ஸாக வைத்து?

வீட்டுக்கு வந்ததும், இந்த லெட்டர் படித்ததற்கு அடையாளமாக....................................................................
..................................................................................
- சுஹைன்

(இன்று என்னவருக்கு பிறந்தநாள். ஒன்பது வருடங்களுக்கு முன், பிறந்த நாளுக்கு முதல் நாள், நான் எழுதி, அவருடைய கடை அட்ரஸுக்கு போஸ்ட் செய்தது இந்த கடிதம். இன்றும் பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன். ஒரு சில பர்ஸனல் வரிகளை மட்டும் நீக்கிவிட்டு, இங்கே தந்திருக்கிறேன்.)

-சுமஜ்லா.

21 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

மச்சானுக்கு அன்புடன் வாழ்த்துகள்.

சரண் said...

நோய் நொடிகள் உன்னைக் கண்டு பயந்தோட ஆண்டவனிடம் இருகரமேந்தி வேண்டுகிறேன்.

////////

nice

ஷ‌ஃபிக்ஸ் said...

அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்கள் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் என்றென்றும் நிலைக்கட்டுமாக!!

Jaleela said...

சகோதரர் மஜ்ஹருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், சுஹைனா. என்றும் உங்க‌ள் வாழ்வில் வ‌ச‌ந்த‌ங்க‌ள் வீசீட‌ என் துஆக்க‌ள்.

கவிக்கிழவன் said...

நானாக்கு அல்லது காக்காக்கு ( இலங்கையில் முஸ்லி;ம் சகோதரர் அல்லது அண்ணாவை இப்படித்தான் அழைப்பார்கள்) பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இலங்கையில் இருந்து யாதவன்

SUMAZLA/சுமஜ்லா said...

உங்கள் எல்லார் வாழ்த்துக்கும் நன்றி! பொதுவா நான் பிறந்தநாள் எல்லாம் கொண்டாடுவது இல்லை. 2 ரக் அத் தொழுது துவா செய்து, எதாவது சதகா கொடுப்பதோடு சரி.
-மஜ்ஹர்

Mrs.Menagasathia said...

சகோதரர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

NIZAMUDEEN said...

அன்பு மச்சான் மஜ்ஹர் அவர்களுக்கு எனது
மனங்கனிந்த இனிய பிறந்த நன்னாள்
வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.
நீடூழி நலமுடன் வளமுடன்
வாழ இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

பிரியமுடன்...வசந்த் said...

மச்சான் மஜ்ஹர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லா வளங்களும் பெற்று நீடூழி பல்லாண்டு வாழ்க‌

nila said...

வாழ்த்துக்கள் :)

Biruntha said...

அன்புச் சகோதரருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
பிருந்தா

Muniappan Pakkangal said...

Maapillaikku Maamaavin pirantha naal vaazhthukkal mahale.

அரங்கப்பெருமாள் said...

வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்.


"தன்னை நாடியவர்க்கு அவன் ஞானத்தைக் கொடுக்கிறான்;(இத்தகு) ஞானம் எவருக்கு கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லாத நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார் (2:269)"

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

வால்பையன் said...

தலைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

:-)

மச்சானுக்கான வாழ்த்துக்களில் நானும் இணைந்து கொள்கின்றேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

மஹ்ஜர் மச்சானுக்கு மனமார்ந்த இனிய பிறந்த நான் வாழ்த்துக்கள்.

seemangani said...

ஆஹா அக்கா உங்கள் கையெழுத்து நல்லாக்கு.... பர்ஸனல் வரி ஒன்று தப்பித்து கவிதையாய் ஒட்டிகொண்டிருகிறது ....
மச்சானுக்கு மனமார்ந்த இனிய பிறந்த நான் வாழ்த்துக்கள்....

அரங்கப்பெருமாள் said...
This comment has been removed by the author.
SUMAZLA/சுமஜ்லா said...

எனக்கு வாழ்த்து தந்த எல்லாருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி!
-மஜ்ஹர்.