Sunday, August 23, 2009

நல்ல ஓட்டா? கள்ள ஓட்டா?

இடைத்தேர்தல் கூட முடிந்து விட்டதே, இப்ப என்ன இப்படி ஒரு தலைப்பு என்று நீங்கள் குழம்புவது புரிகிறது. இது பதிவுலகம் சார்ந்தது தான், ஆனால், புதியவர்களுக்கு...மற்றும் பதிவுலகம் சாராதவர்களுக்கு....

என் ப்ளாகை அதிகமாக படிப்பவர்கள், பதிவர்கள் அல்லாத அவுட் சைடர்ஸ் தான். அவர்களுக்கு தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் ஓட்டு சம்பந்தமாக ஏதும் தெரிந்திருக்க வாய்பில்லை. அது பற்றி சொல்ல வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசையின் விளைவு தான் இப்பதிவு.

ஓட்டளிப்பதால் என்ன லாபம் என்று பார்த்தால், நல்ல இடுகை பல பேரை சென்றடையும். அதன் மூலம் பலர் பயனடைவார்கள். நல்ல விஷயத்தை நாலு பேருக்கு தெரிவித்த திருப்தி! பதிவருக்கு நிறைய பேஜ் வியூஸ் கிடைக்கும். பொதுவா பேஜ் வியூஸ் அதிகரிப்பதால், எந்த பலனும் தமிழ் பதிவுலகில் இல்லை என்பது வேறு விஷயம்.

எப்படி ஓட்டு போடுவது?

தமிழ்மணம்:

தமிழ்மணம் ஓட்டு பற்றி, எனக்கே சில நாட்கள் முன்பு வரை குழப்பம் இருந்தது. எனக்கு நானே நெகடிவ் ஓட்டு போட்டிருக்கிறேன், அது பற்றி தெரியாமலே! இது பற்றி விழிப்புணர்வூட்டிய நண்பர் பீர் அவர்களுக்கு நன்றி!

தமிழ்மணம் ஓட்டு பட்டை உங்கள் பார்வைக்கு தெரியாவிட்டால், இடுகையின் தலைப்பை ஒரு முறை அழுத்துங்கள். அதாவது, இங்கே, ‘நல்ல ஓட்டா? கள்ள ஓட்டா?’ என்று இருப்பதை க்ளிக் செய்யுங்கள். ஒரு சிலர் ஓட்டுப் பட்டையை மேலே அளித்திருப்பார்கள். சிலர் பதிவுக்குக் கீழே! இங்கே பதிவுக்கு கீழேயும் மேலேயும், இரு இடத்திலும் பார்க்கலாம்.

இதில், ஹேண்ட்ஸ் அப் சிம்பள் பாஸிட்டிவ் ஓட்டாம். ஹேண்ட்ஸ் டவுன் சிம்பள் நெகட்டிவ் ஓட்டாம். அதனால், தரமற்ற இடுகைக்கு ஓட்டுக்கள் கூடுவதை தவிர்க்கலாம். இதில் ஹேண்ட்ஸ் அப் ஐ அழுத்தியவுடன், கீழ் காணும் பக்கம் விரியும்.

இதில் OpenID என்ற இடத்தில், உங்கள் யாஹு ஐடி கொடுங்கள். உதாரணமாக, xyz@yahoo.com பின் Verify என்று இருப்பதை அழுத்துங்கள். இப்போ, உங்கள் யாஹூ சைட்டுக்கு இது அழைத்து செல்லும்.
இங்கே உங்கள் யாஹூ யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்டு கொடுத்து, Sign In பண்ணுங்கள். இப்போ இது போன்ற விண்டோ திறக்கும்,
இதில் Continue கொடுத்தால், வேலை முடிந்தது. உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டு விட்டு கீழ் கண்ட பக்கம் காட்டும்.
இந்த ஸ்டெப்ஸ் எல்லாம் ஒரே ஒரு முறை மட்டுமே கேட்கும். அடுத்த சில வாரங்களுக்கு, நீங்கள் ஹேண்ட்ஸ் அப் சிம்பளை அழுத்தினால் மட்டும் போதும். வேறெதுவும் செய்ய தேவையில்லை. மேலே காணும் விண்டோ தோன்றி, உங்கள் ஓட்டுக்கு நன்றி சொல்லும்.

சரி, எனக்கு யாஹூ ஐடி இல்லை, ஆனால் நான் ப்ளாகர், இப்போ என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இப்போ, OpenID என்ற இடத்தில், உங்க ப்ளாகின் முகவரி கொடுங்கள், உதாரணமாக http://sumazla.blogspot.com/ என்று கொடுத்தால், ப்ளாகரின் இந்த பக்கம் திறக்கும்,
இதில், உங்க ப்ளாகருக்கு உபயோகப்படுத்தும், கூகுள் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வோர்டு கொடுத்து சைன் இன் பண்ணுங்கள்.
இப்போ, மேற்கண்டவாறு தமிழ்மணம் ஓட்டுக்கு ஒவ்வொரு முறையும் இந்த ஐடியை உபயோகப்படுத்துவதா? என்று கேட்கும். Yes Always என்று கொடுத்து விட்டால், மீண்டும் மீண்டும் நீங்கள் யூசர் ஐடி பாஸ்வோர்டு தர தேவையில்லை. அதுவே நினைவில் கொள்ளும்.

இப்போ, உங்க ஓட்டுக்கு நன்றி சொல்லும் பக்கத்தைப் பார்க்கலாம். ஒருமுறை ஓட்டு போட்டு விட்டு, மீண்டும் போட முயன்றால், ‘மன்னிக்கவும் உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுவிட்டது’ என்ற செய்தியை தரும்.

தமிழ்மணத்தில் யார் நமக்கு ஓட்டளித்துள்ளார்கள் என்று பார்க்க முடியாது.

தமிழிஷ்:

தமிழ்மணத்துக்கு அடுத்தபடியாக வாசகர்கள் அதிகம் நாடுவது தமிழிஷ். இதில் யார் ஓட்டளித்துள்ளார்கள் என்று யாவரும் பார்க்க முடியும். அதோடு, இதில் நெகடிவ் ஓட்டு கிடையாது.

இதில் ஓட்டளிக்க, இடுகைக்கு கீழாக, தமிழிஷ் பட்டையில், Vote என்று இருப்பதை அழுத்துங்கள். கீழ்காணும் பக்கம் தனி விண்டோவில் திறக்கும்.
ஏற்கனவே உங்களுக்கு கணக்கு இருந்தால், இதில் யூஸர் நேம், பாஸ்வோர்டு கொடுத்து, ரிமெம்பர் கொடுத்து விட்டால், அது நினைவில் கொள்ளும், இனி ஒவ்வொரு முறையும் கேட்காது.

கணக்கு இல்லாதவர்கள், New user? Click here to register என்பதை அழுத்துங்கள். இப்போ கீழ்காணும் பக்கத்தில், உங்கள் விவரங்களை கொடுத்து அக்செப்ட் கொடுங்கள்.

கொடுத்தபின், உங்கள் ப்ரொஃபைலுக்கான பக்கத்தை காட்டும். வேண்டிய மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
இப்போ, மீண்டும், உங்கள் விருப்பமான இடுகை பக்கத்தில், vote என்று இருப்பதை அழுத்துங்கள்! தமிழிஷில் அதன் பக்கம் திறக்கும். இங்கே Vote என்று வந்தால், அதை அழுத்த வேண்டும். அல்லது Voted என்று வந்தால், உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.
இதே பக்கத்தில், Who Voted என்பதை அழுத்தி, ஓட்டு போட்டவர்கள் விவரத்தை அறியலாம்.

இதிலும் நிறைய கள்ள ஓட்டுகள் போடுகிறார்கள். ஏன், இப்போ நான் உங்களுக்கு விளக்குவதற்காக, என் கணவர் பெயரில் ஒரு ஐடி கிரியேட் செய்தேன். இனி, என் கணவரை அந்த பெயரில் தனியாக ஓட்டு போட செய்யலாம்.

ஆனால், தமிழிஷை பொறுத்தவரை, ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒவ்வொரு மதிப்பு உண்டு. மானாவாரியாக எல்லாருக்கும் ஓட்டு போடுபவருக்கும், ஒவ்வொரு இடுகையையும் படித்து ஓட்டு போடுபவருக்கும் அது தனி அளவு கோல் வைத்திருக்கிறது.

கிட்டதட்ட தமிழிஷ் முறையில்தான் தமிழ்10, உலவு, தமிழர்ஸ், நம்குரல், நியூஸ்பானை, வலைப்பூக்கள் போன்ற மற்ற திரட்டிகளிலும் இடுகையை இணைக்கும் மற்றும் ஓட்டு போடும் முறையாகும்.

இந்த இடுகையை பலரும் அறிய செய்யுங்கள். மேலும் சந்தேகம் இருந்தால், பின்னூட்டத்தில் கேட்கலாம்.

-சுமஜ்லா.
.
.

13 comments:

அதிரை அபூபக்கர் said...

எனக்கும் ரொம்ப நாள் சந்தேகம்.. இப்பொழுது clear ஆனது.. ரொம்ப நன்றி...

பீர் | Peer said...

:)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எனக்கும் சில சந்தேகங்கள் இருந்தன. இந்தப் பதிவினால்
அவை தீர்ந்தன. நன்றி!

நட்புடன் ஜமால் said...

பலருக்கு இந்த சந்தேகங்கள் இன்னும் இருக்கு - என்னிடம் பலர் கேட்டார்கள் - சொல்லித்தர தெரியவில்லி - இனி கவலையில்லை உங்கள் இந்த இடுக்கையின் சுட்டியை கொடுத்து விடலாம். மிக்க நன்றிங்கோ.

சீமான்கனி said...

நான் நல்ல ஓட்டுதான் போட்டு இருக்கேன்...அக்கா....
ஒரு குட்டி வேண்டுகோள் என் ப்ளோக்ல புகையின் சாபம் Comments பாருங்க ப்ளீஸ்....

கிளியனூர் இஸ்மத் said...

பதிவர்களுக்கே தெரியாத சந்தேகங்களை தீர்த்து வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

வாழ்க்கை அளிக்கும் மன குழப்பங்களில் இருந்து எப்படி ஆறுதல் பெறுவது?

எழுதி பாரங்களை குறைக்க முயற்சிக்கலாமே?

வடிகால் இல்லாத எண்ணங்களை எழுத்தாக நமக்கு முடியுமா?

வலை உலகம் ஒன்று உள்ளது?

கண்டுபிடித்து உள்ளே வந்தாலும் படிக்கும் அளவிற்க்கு திறமை உண்டா?

நண்பர், நீங்க பின்னி பெடல் எடுக்குறீங்க?

மற்றவர்கள் படிக்கும் அளவிற்கு நம்மால் எழுத முடியுமா?

இடுகையில் இணையுங்கள். ஒவ்வொன்றும் நட்சத்திர பதிவு.

நம்மைப்பற்றி சுய புராணத்தை விட்டு வௌியே வர முடியுமா?

உங்கள் சேரன் கடிதம் படித்தது என் பொன்னான நேரம்.

நாளுக்கு நாள் குறீயிடு ஏறுகின்றதே ஆனால் பதில்கள் வருவதில்லையே?

நல்ல விசயங்கள் குழு மனப்பான்மை தாண்டி வைத்து வாழும் பொதுக்கருத்துகளை மீறி மெதுவாகத்தான் மேலோங்கும்?


மூன்று மாதங்கள் எனக்கு வயது இந்த பதிவுலகத்தில்.


ஆனால் திரு வீ.ஆர். சுப்பையா அவர்கள் இடுகைக்கு உண்டான ஆயுள் அதன் அவஸ்யம் குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தார். அது தான் என்னைப் போன்றவர்களுக்கு அரிச்சுவடி.


அதற்குப்பிறகு இன்று என்னை நீங்கள் முதல் வகுப்புக்கு இட்டுச் சென்று உள்ளீர்கள்.


திருப்பூர் சமூக மக்கள் உடன் பழகி பாதி அறிவுகளை பெற்றவன் இன்று இடுகை வாயிலாக பகிரும் அளவுக்கு பரம சுகங்களையும் பெற்றவன்.


நீங்கள் கொடுத்துள்ள தொழில் நுட்ப அறிவு நிச்சயம் அடுத்த ஆண்டுகளில் நல்ல அனுபவங்களை எனக்கு அளிக்கும் என்பதோடு, மார்க்கத்தின் வாயிலாக வாழ்ந்து கொண்டுருக்கும் உங்களைப் போன்றவர்கள் கூட இந்த அளவிற்கு சுய திறமையை வளர்த்துக்கொள்ள முடிகின்றது என்றால் நிச்சயம்


" தீதும் நன்றும் பிறர் தர வரா?" .


இறப்புக்கு பின்னாலும் அந்த நல்ல உலகத்திற்கு அழைத்துச் செல்ல உதவக்கூடிய உங்களால் ஆன சமூக ஏற்றத்துக்கு உதவக்குடிய கருத்து சுதந்திரத்திற்கு உங்களால் ஆன பங்களிப்புகளை உவகையுடன் வரவேற்கின்றேன்.


தேவியர் இல்லம். திருப்பூர்.

texlords@gmail.com

http://texlords.wordpress.com

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல விளக்கம்.

Jaleela Kamal said...

சூப்பர் விளக்கம் சுஹைனா.

நான் தமிலிஷ் இப்பதான் இனைந்துள்ளேன் சுஹைனா, பழைய பதிவுகள் (நல்ல பயனுள்ள குறீப்புகள் )நிறைய இருக்கு அதையும் இப்ப பப்லிஷ் செய்யலாமா? இரண்டு முன்று செய்தேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

தேங்க்ஸ்ங்க எல்லாருக்கும்...

2 மாதமாக கேன்சரினால் அவதிப்பட்டு வந்த என் பெரியம்மா(பெரியப்பா மனைவி) நேற்று வஃபாத் ஆகி விட்டார். அதனால், நேற்றும் இன்றும், அதிகமாக நெட் பக்கம் வரமுடியவில்லை.

SUMAZLA/சுமஜ்லா said...

நண்பர் ஜோதிஜி, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. என்னைப் பற்றி சொல்கிறீர்களா? இல்லை உங்களைப் பற்றி சொல்கிறீர்களா? சற்று புரியும்படி சொல்லக்கூடாதா? சேரன் கடிதம் என்று தாங்கள் எதை சொல்கிறீர்கள்?

இப்னு அப்துல் ரஜாக் said...

45:26
"அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை" எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

62:8
"நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்" (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
THE QURAN
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவங்களைப் பொறுத்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்

Asiya Omar said...

சுஹைனா நான் தமிலிஷில் முன்பே இணைந்திருக்கிறேன்,ஆனால் பாஸ்வேர்ட் மற்ந்துவிட்டு திரும்ப forgotten கேட்டல் மெயில் மூலம் வந்த லின்க்கை கிளிக் செய்தாலும் எரர் வருகிறது.என்னால் ஓட்டே போட முடியலை,மெயில் அனுப்பி கேட்டல் இது தொடர்பாக அவர்களாகவே தொடர்பு கொள்வதாய் மெயில் வந்திருக்கிறது.