Saturday, August 1, 2009

வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...

இது என் பெற்றோரின் 25ம் ஆண்டு திருமண வெள்ளி விழாவை முன்னிட்டு எழுதினேன். அவர்கள் திருமண நாள் ஜூலை பதினாலு, திங்கள் கிழமை, 1975

ஏதோ ஒரு வாழ்த்து நம் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.
இந்த திருமண நாளினிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
இரு மன ஆழத்திலே சில ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் சுவையாகும்; ஞாபகங்கள் இனிப்பாகும்;
ஞாபகங்கள் தேனூற்றும்; ஞாபகங்கள் நீரூற்றும்.

ஜூலை பதினாளில் கரம் பிடித்திட்ட ஞாபகமே
திங்கள் நிலவினிலே மணம் முடித்திட்ட ஞாபகமே
பலப்பல இடங்கள் ஒன்றாய் சுற்றி வந்தது ஞாபகமே
மலரும் நினைவுகள் மனதில் மலரும் ஞாபகம்
முத்துப்பிள்ளைகள் மூன்றும் தவழ்ந்த ஞாபகம் (ஏதோ)

துன்பம் வந்தாலும் துணை நின்றிட்ட ஞாபகமே
இன்பம் கண்டாலும் இணை சேர்ந்திட்ட ஞாபகமே
கரங்கள் கோர்த்து தடைகள் எல்லாம் தாண்டிய ஞாபகமே
வெள்ளி விழாவிலே இன்று பழைய ஞாபகம்
மறக்க முடியுமா என்றும் அந்த ஞாபகம்(ஏதோ)

சுமஜ்லா

ஒரிஜினல் பாடல் இதோ:

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

அம்மா கை கோர்த்து நடைபழகிய ஞாபகமே
தனியாய் நடைபழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்னக் குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகிதக் கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
கட்டபொம்மனின் கதையைக் கேட்ட ஞாபகம்
அட்டைக் கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

2 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

பாடல் வரிகள் அருமை.

SUMAZLA/சுமஜ்லா said...

மிக்க நன்றி ஜமால்!