Sunday, August 2, 2009

விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலா

ஜூனியர் ரெட் க்ராஸ் ஃபங்க்‌ஷனுக்காக நான் எழுதித் தந்த பாடல்.

இன்று நல்ல பொன்விழா
இன்று நல்ல பொன்விழா
இன்று நல்ல பொன்விழா
இன்று நல்ல பொன்விழா

பாடும் இந்த நாளிலே
பாவை எங்கள் வாழ்விலே

இன்று நல்ல பொன்விழா
இன்று நல்ல பொன்விழா

கரங்கள் கோர்த்து நாம்
.......கவிதை செய்குவோம்
வளங்கள் காணவே
நலங்கள் நாடவே

ஒருமைப் பாட்டுடன்
........ஒளியாய் திகழுவோம்
வளங்கள் காணவே
நலங்கள் நாடவே

உலகத்தை காப்பது நம் கடமை
உயிர், மரம் செடிகொடிகளும் நம் உடமை
மனிதர்கள் யாவரும் புரிந்திடணும்
இதை, உணர்ந்தே வாழ்வில் உயர்ந்திடணும்

இதை அறிந்தால்.....எண்ணம்
உயர்ந்தல்......திண்ணம்
தோழீ என்றும் ஜெயமிருக்கு! - எந்தன்
தோழீ என்றும் ஜெயமிருக்கு!!

இன்று நல்ல பொன்விழா
இன்று நல்ல பொன்விழா

புதுமை படைத்திட
.........புவியில் வந்திட்டோம்
வளமை பாரதம்
.........வசந்தம் பொங்கட்டும்...

சேவை புரிந்திட
.........பாதை அமைக்கட்டும்
பாதை தெரிந்திட
........பாலை செழிக்கட்டும்...

உருவத்தில் நாங்களும் சிறியவர்தான்
நல், உள்ளத்தில் வானுயர் பெரியவராம்.
JRC குடும்பத்தின் உறுப்பினராம்
புது பாரதம் படைத்திடும் பொறுப்பினராம்.

வருங்.....காலம்
செங்.....கரும்பாய்
மனத் திரையில் உருக் கொள்ளாதா
மதி நிலவாய் மனம் துள்ளாதா?!

இன்று நல்ல பொன்விழா
இன்று நல்ல பொன்விழா
பாடும் இந்த நாளிலே பாவை எங்கள் வாழ்விலே
இன்று நல்ல பொன்விழா
இன்று நல்ல பொன்விழா

ஒரிஜினல் பாட்டு இதோ: படம்: வருஷமெல்லாம் வசந்தம்

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான்
வானில் பறக்கிறேன்
உன்னால் தானய்யா..
உன்னால் தானைய்யா

இரவாய் இருந்த நான்
பகலாய் மாறினேன்
உன்னால் தானைய்யா..
உன்னால் தானைய்யா

எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அது உனக்கென தருவது வரம் எனக்கு

நீ மறந்தால் என்ன
மறுத்தான் என்ன
நீதான் எந்தன் ஒளிவிளக்கு-என்றும்
நீதான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன்
குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன்
நிழலாய் வருகிறாய்

தாகம் என்கிறேன்
நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன்
தாயாய் வருகிறாய்

உருவத்தை காட்டிடும் கண்ணாடி
என் உள்ளத்தை காட்டிட கூடாதா?
பூவிடம் கதை சொல்லும் பூங்காற்று
என் காதலை உன்னிடம் சொல்லாதோ

உன்னை சேறும் அந்த திருநாள்
வெகு விரைவில் வந்து சேராதா?
என் காதல் கரை ஏறாதா?

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா...

No comments: