Sunday, August 2, 2009

திருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...

மணமகள் சஹானா, மணமகன் ரகீப்.

இவர்தம் திருமணத்துக்கு நான் எழுதிய பாடல். இதில் வரும் மற்ற பெயர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்கள்.

இருமணம் கூடும் திருநாளில் இரு இதயங்கள் மகிழ்கிறது
எங்க சஹானாவும் ரகீபும் சேரும் நாளில் காதல் தெரிகிறது.

பேபிமா மனமும் வாழ்த்துக்கள் தூவி, ஆசிகள் தருகின்றார்
அன்பு அபுதாஹிர் ஹாஜி வானில் இருந்தே பூமழை பொழிகின்றார்.

சாஹீ தாவும் அன்சாரீயும் ஆஸ்மியும் போற்றுகின்றார்
வாழ்க வாழ்க இனிதாய் வாழ்க என்றவர் வாழ்த்துகின்றார்.

இருமணம் கூடும் திருநாளில் இரு இதயங்கள் மகிழ்கிறது
எங்க சஹானாவும் ரகீபும் சேரும் நாளில் காதல் தெரிகிறது.

அமிதலி ராஹினா உசைனலி பாத்திமா வாழ்த்திடவே வருக
அன்பு ஜாஹிதா ஹாஜி தாஜ்மைதீனும் போற்றிடவே வருக.

அன்புடன் தஹ்சின் பண்புடன் ரிஃபத்தும் இன்புறவே வருக
வாழும் நாளில் வளங்கள் பெற்று மணம் பெறவே வருக.

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாட்டு இதோ.

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்

மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக

மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

No comments: