ரியாஜுடன் பெண்வஞ்சியென நல் விண்ணொளியாய்
யாஸுமீன் தீபம்..
அதே தினம் பொன்வண்டுவொரு வெண்மல்லிகையை
நோக்கித்தான் போகும்...
தேன் வாழ்த்துக்களும்...
பாட்டுக்களும்...
உம் உறவால் தானே!
வாழ்ந்திடுவீர் சேர்ந்திடுவீர்...
நல் மனதால் தானே தான்...
கனவுகள் சுகம் அதில் இணைந்தீரே
கலர் பூக்களோடு கிரீடம்..
உம்வாழ்க்கைக்கு இது துவக்கம்...
இரவுகள் மின்ன மங்கை தன்னை மறப்பாள்
அதை நினைத்து வாட இன்றே...
அவள் இடையோரம் கரம்கோர்க்கும்.
தந்தையும் பூத்தூவ, இனி வீட்டிலேயே நீ ராஜா,
மகராணி உனைப்பார்த்தால், மனமேடைக்குள்ளே நீரூற்றும்.
ரியாஜுடன் பெண்வஞ்சியென நல் விண்ணொளியாய்
யாஸுமீன் தீபம்..
அதே தினம் பொன்வண்டுவொரு வெண்மல்லிகையை
நோக்கித்தான் போகும்...
திருமணம் முடித்ததும் பெண்ணைத் தேடி
உன்னாசை விழியால் பெண்ணின், மனம் அளப்பாயே
அது புதுமை.
மலர்மனம் மணந்திடும் நினைவுகள்
மன்னாவிருந்து எண்ணி நீ திளைப்பாயே
அது இனிமை.
யாஸ்மீனும் மடிசேர அங்கு எல்லையேதும் கிடையாதே,
மாதர்மனம் பூப்போல மலராமல் தேனும் கிடைக்காதே.
ரியாஜுடன் பெண்வஞ்சியென நல் விண்ணொளியாய்
யாஸுமீன் தீபம்..
அதே தினம் பொன்வண்டுவொரு வெண்மல்லிகையை
நோக்கித்தான் போகும்...
-சுமஜ்லா
ஒரிஜினல் பாட்டு இதோ:
வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சினேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!
தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!
Tweet | ||||
2 comments:
அருமை வாழ்த்துக்கள்...
நன்றி யாதவன்!
Post a Comment