Sunday, August 2, 2009

திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....

மணமகன்:ரியாஜ்; மணமகள்:யாஸ்மின். மணமாதம்: ஜூலை, 2001

ஜூலை மாதத்தில் ஓர் இன்ப நேரத்தில்
பொன்னூஞ்சல் ஆட்டத்தின் விழா விழா
யாஸ்மின் மனமோ வான் வெள்ளி நிலவாய்
பல நேரம் சொல்லுது ரியாஜ் ரியாஜ்
விழா விழா தேன் மலரே
அங்கே அங்கே பூமணமே

இதயம் மலருது நிறைவாய் - அன்பு
வாழ்த்துக்கு எல்லைகளும் இல்லையோ இல்லையோ

மன்றத்தில் இருமனம் சேர - இன்ப
சுகத்தில் முடிவே இல்லையோ இல்லையோ

தேனான வாழ்த்தினை திருநாளில் வான்கூட
பொன்மழை தூவித் தூவி வாழ்த்தாதோ
யாஸ்மீனின் நேசம் அங்கு பேசாதோ?

இதயம் பரிமாற நெஞ்சங்கள் தடுமாற
விழிகள் கண்மூடித் தூங்காதோ
இமைகள் ஒரு நாளும் மூடாதோ?

ஜூலை மாதத்தில் ஓர் இன்ப நேரத்தில்
பொன்னூஞ்சல் ஆட்டத்தின் விழா விழா
யாஸ்மின் மனமோ வான் வெள்ளி நிலவாய்
பல நேரம் சொல்லுது ரியாஜ் ரியாஜ்

யாஸ்மீனும் தன்னைத் தானே சிரித்தாள் - அவள்
எப்படி ரியாஜ் முகம் வரைந்தாள் வரைந்தாள்
தூக்கத்தில் மன்னன் பார்த்து எழுந்து- இன்ப
கனவினை எண்ணி உள்ளம் களித்தாள் களித்தாள்

ஹேய் எல்லாரும் துணை நல்லோரும்
தேன் வாழ்த்துக்கள் சேர்த்திடும் நாளோ?

பூமஞ்ச வாசத்தில் பொன்னூஞ்சல் ஆடட்டும்
இள நெஞ்சம் ஏக்கங்கள் புரியாதோ
பொன்மகள் யாஸ்மீனும் நாணத்தில் கால்சோர
தள்ளாட்டம் அதைச்சொல்லும் தெரியாதோ
தாழம்பூ மனமங்கு மணக்காதோ

ஜூலை மாதத்தில் ஓர் இன்ப நேரத்தில்
பொன்னூஞ்சல் ஆட்டத்தின் விழா விழா
யாஸ்மின் மனமோ வான் வெள்ளி நிலவாய்
பல நேரம் சொல்லுது ரியாஜ் ரியாஜ்
விழா விழா பூமணமே
தினம் தினம் சுகம் தருமே!

-சுமஜ்லா


ஒரிஜினல் பாட்டு இதோ:

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
என் காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமா
இல்லை இல்லை கை சுடுமா?


இதயம் திருடுதல் முறையா - அந்த
களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா?

முத்தத்தில் கசையடி நூறு - அந்த
முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா?

நீ கொண்ட காதலை நிஜமென்று நான் வாழ
தற்கொலை செய்யச் சொன்னால் செய்வாயா?
தப்பித்து நாடு தாண்டிச் செல்வாயா?

இதய மலையேறி நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா?
குமரி நீ சொல்லி மறுப்பேனா?

- ஏப்ரல் மாதத்தில்...

மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் - ஹையோ
எப்படி என்னைக் கண்டு பிடிப்பாய்? பிடிப்பாய்?

மேகத்தின் மின்னல் டார்ச் அடித்து அந்த
வானத்தில் உன்னைக் கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்

ஹே கிள்ளாதே
என்னைக் கொல்லாதே..
உன் பார்வையில் பூத்தது நானா?

சுடுவேளை கேட்டாலும் மழை வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சம் அடையாது புரியாதா?
கண்ணாடி மறையாது தெரியாதே?
கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு
உன் காதல் அது சொல்லும் தெரியாதா?
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா?


ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
உன் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமே
தினம் தினம் சுகம் தருமே!

2 comments:

கவிக்கிழவன் said...

அருமை வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

நல்லா எழுதியிருக்கீங்க


வாழ்த்துகள் அவங்களுக்கும்.