Sunday, August 2, 2009

நலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...

என் அன்பு மகளின் (6 வயதில்) காதுகுத்து நலங்கின் போது, நான் எழுதிய பாடல்.

தென்றல் தேரினிலே மன்றம் வாழ்த்துகின்ற கண்மணி லாபு கண்மணி
கன்றுக்குட்டி போல காலைச் சுற்றி வரும் கண்மணி லாபு கண்மணி

(தென்றல்)

நல்ல நலங்கினிலே, நல்லோர்கள் போற்ற
வண்ண வானவில்லை, வானோர்கள் வாழ்த்த..

(தென்றல்)

ராஜ நடைபோட, நாங்கள் அதைப் பார்க்க
அன்பு சிறைபோட, பாசம் புதிதாக

தீபங்கள் ஒளி தீபங்கள், கண்ணே உன் முகமாகும்
முத்தங்கள், அதன் சத்தங்கள், முகத்தில் அது பதிவாகும்.

உன்மழலைப் பேச்சினிலே என் மனதைக் கொள்ளையிட்டு
இளவரசியாகிவிட்ட கண்மணி லாபு கண்மணி..
அழகான உன் வாழ்வில் வசந்தங்கள் வாழ்த்திடுமே
கண்மணி லாபு கண்மணி..

தென்றல்)

மஜ்ஹர் மகளாக, சுஹைனா உயிராக,
மாமா மஹபூபும், சுரைஜு அஹமதும்

ஆபாமா, உடன் கண்ணபா கண்ணே உனை கொஞ்சிட,
வெண்ணிலா இனி உன்னிலா வா வா என பொட்டிட,

பிள்ளையில்லா இல்லத்திலே உன் காலை எடுத்துவெச்சு,
துள்ளி விளையாடிவரும் கண்மணி லாபு கண்மணி..
எல்லையில்லா பாசத்தினால் அள்ளி அள்ளி அணைத்திட்டோம்
கண்மணி லாபு கண்மணி

(தென்றல்)

-சுமஜ்லா


ஒரிஜினல் பாட்டு இதோ:

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி

(ஊரைத்............)

பச்சைக் கொழந்தையின்னு பாலூத்தி வளத்தேன்
பாலைக் குடுச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடி

(ஊரைத்...........)

ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்

சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ

என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்டக் காயத்துல தேள்வந்து கொட்டுதடி
கண்மணி என் கண்மணி

(ஊரைத்.............)

நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளைக் கரை சேத்து ஆடும் இந்தத் தோணி

சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்

பணங்காசைக் கண்டுபுட்டா புலி கூட புல்லைத் தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாடாப் போனதடி
கண்மணி என் கண்மணி

(ஊரைத்..............)

No comments: