சந்தோஷமா கண்ணுமணிக்கு...
லாஃபிரா மனசு குளிர இங்கு.....
சந்தோஷமா கண்ணுமணிக்கு...
லாஃபிரா மனசு குளிர இங்கு.....
காதிகுத்தி வெச்ச திந்த நலங்கு,
இது நலங்கு என்னும், நலங்கு என்னும் சடங்கு.
எத்தணையோ வைபவங்கள் கண்ணம்மா - அது
அத்துணையும் உன்னுது போல் மின்னுமா, பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலு - அல்லாஹ்
தந்தானே தந்தானே லாஃபிரா மயிலு!
தந்தானே தந்தானே தந்தானக் குயிலு - அல்லாஹ்
தந்தானே தந்தானே லாஃபிரா மயிலு!
தூக்கிக் கொஞ்ச கண்ணு உன்னை தேனூறும்
பட்டுக், கன்னந் தொட்டு முத்தமிட்டேன் பல நூறு
கானச்சிட்டக் கொஞ்ச கொஞ்ச வாயூறும்
உதவி, செய்யும் மனசக் கண்டா பாலூறும்.
குணத்தில் சால்மை கொண்டது குருத்தில் தெரியும் பொண்ணுங்க
எங்க மனசு நிறைந்திடும், தங்க மகள் கண்ணுங்க.
பாலமுது கொண்டிருக்கும் வெள்ள மனசு செல்லங்க
சொல்லழகு கொண்டது, வேறு யாரு சொல்லுங்க?!
பச்ச மண்ணுத் தங்கத்த பொத்தி வெச்சேன் பாருங்க...
ஊராரின் கண்ணுப் படும் பொத்தி வெச்சேன் பாருங்க...
தந்தானே தந்தானே தந்தானக் குயிலு - அல்லாஹ்
தந்தானே தந்தானே லாஃபிரா மயிலு!
சந்தோஷமா கண்ணுமணிக்கு...
லாஃபிரா மனசு குளிர இங்கு.....
காதிகுத்தி வெச்ச திந்த நலங்கு,
இது நலங்கு என்னும் நலங்கு என்னும் சடங்கு.
எத்தணையோ வைபவங்கள் கண்ணம்மா - அது
அத்துணையும் உன்னுது போல் மின்னுமா, பதில் சொல்லம்மா
மாலை சூடும் மழலை விழி மானாகும்
இவள், மாதவத்தால் பெற்றெடுத்தத் தேனாகும்.
மாளிகையில் மல்லிகையின் பூவாசம்
நல்ல மன்றத்திலே மலர்களோடு கொண்டாட்டம்.
காஞ்சிபுர பட்டுடுத்தி கண்மணியக் கண்டுவிட,
நூறிரண்டு கண்களெல்லாம் சின்னப் பொண்ண வாழ்த்துமே...
பட்டுப் போன்ற மேடையிலே பார்த்திருக்கும் பாசமே,
தாய்ப்பாசம் பொங்கி விட முத்தமிட்டேன் முகத்திலே...
ஊரெல்லாம் உன்னச்சுற்றி வாழ்த்திடுமே நலங்குக்கு
என் உசிர பார்த்திடவே உருகிடுமே தாய் மனசு..
தந்தானே தந்தானே தந்தானக் குயிலு - அல்லாஹ்
தந்தானே தந்தானே லாஃபிரா மயிலு!
சந்தோஷமா கண்ணுமணிக்கு...
லாஃபிரா மனசு குளிர இங்கு.....
காதிகுத்தி வெச்ச திந்த நலங்கு,
இது நலங்கு என்னும் நலங்கு என்னும் சடங்கு.
எத்தணையோ வைபவங்கள் கண்ணம்மா - அது
அத்துணையும் உன்னுது போல் மின்னுமா, பதில் சொல்லம்மா
-சுமஜ்லா
ஒரிஜினல் பாடல் வரிகள் இதோ: படம்: பொற்காலம்.
தஞ்சாவூரு மண்ணு எடுத்து,
தாமிரபரணித் தண்ணிய விட்டு...
( தஞ்சாவூரு)
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை!
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை!
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா...!
(எத்தனையோ)
அது அத்தனையும் உன்னப்போல மின்னுமா?
பதில் சொல்லம்மா!
தந்தானே! தந்தானே! தந்தானக் குயிலே! சாமி
தந்தானே! தந்தானே! என்னோட மயிலே!
(தஞ்சாவூரு)
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு - பட்டுக்
கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு!
காது செஞ்ச மண்ணு அது மேலூரு - அவ
உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு!
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க!
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க!
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க!
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க!
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க!
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க!
(தந்தானே)
(தஞ்சாவூரு)
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு - நான்
தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு!
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு - அட
கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு!
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு!
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு!
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு!
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு!
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு!
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு!
(தந்தானே)
(தஞ்சாவூரு)
Tweet | ||||
No comments:
Post a Comment