Sunday, August 2, 2009

நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டு

என் மகள் லாஃபிராவுக்கு, அவளுடைய 6 வயதில் நடந்த காது குத்து நலங்கின் போது நான் எழுதிய பாடல்.

தாயின் உயிர் பாட்டு உன் வாழ்வில் சேரும்,
சேரும் நாளின்று நல்ல சுற்றங்கள் பாராட்டும்.

என் லாஃபிரா கண்மணியை பலர் போற்றிடும் மலர் தினமே,
தேன் பூஞ்சிட்டுப் பாடிடவே, கலர் பூமழை பொழிந்திடுமே...

வாசல் வந்து வழிகாட்டும், வாசகங்கள் உனைச்சேரும்,
வானகத்தின் மீன் கூட்டம் வையம் வந்து தேனூற்றும்.

தாயின் உயிர் பாட்டு உன் வாழ்வில் சேரும்,
சேரும் நாளின்று நல்ல சுற்றங்கள் பாராட்டும்.

பாடும் மயில் கூட்டம், இள வரசியைப் பாடிடுமே
புஷ்ப மலர்தோட்டம், தேன் துளிகளைத் தூவிடுமே,
பலப்பல இதயம் ஒன்றாய் லாஃபுக் கண்ணுனை வாழ்த்திடுமே,
மனதின் கனவுகள் கண்முன் மலரும் நாளிது...
குட்டிப் பொண்ணென நீயும் மகிழும் நாளிது...

தாயின் உயிர் பாட்டு உன் வாழ்வில் சேரும்,
சேரும் நாளின்று நல்ல சுற்றங்கள் பாராட்டும்.

அன்பு நினைவாகி, அகம் மகிழ்ந்திடும் ஆசையிலே,
பண்பு கொண்டே நீ, உயிர் பாசத்தின் வாசலிலே..
நலங்கின் நாளில், மனங்கள் சேர்ந்து, வாழ்த்துமுன் பாதையிலே
முல்லை மல்லியும், அங்கு வீசும் பூமணம்,
வாழ்த்துக் கோடிகள் வந்து சொல்லும் வானகம்...

தாயின் உயிர் பாட்டு உன் வாழ்வில் சேரும்,
சேரும் நாளின்று நல்ல சுற்றங்கள் பாராட்டும்.

என் லாஃபிரா கண்மணியை பலர் போற்றிடும் மலர் தினமே,
தேன் பூஞ்சிட்டுப் பாடிடவே, கலர் பூமழை பொழிந்திடுமே...

வாசல் வந்து வழிகாட்டும், வாசகங்கள் உனைச்சேரும்,
வானகத்தின் மீன் கூட்டம் வையம் வந்து தேனூற்றும்.

தாயின் உயிர் பாட்டு உன் வாழ்வில் சேரும்,
சேரும் நாளின்று நல்ல சுற்றங்கள் பாராட்டும்.

-சுமஜ்லா

ஒரிஜினல் பாடல் இதோ:

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

அம்மா கை கோர்த்து நடைபழகிய ஞாபகமே
தனியாய் நடைபழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்னக் குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகிதக் கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
கட்டபொம்மனின் கதையைக் கேட்ட ஞாபகம்
அட்டைக் கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

No comments: